Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளிகள் படைப்பு
#81
இந்த மனிதா கள்
மீண்டும் வருகிறாh கள்


இருள் மண்டிய
பதுங்கு குழிகளிலிருந்து
துயரமும் நிராசையும் நிறைந்த
அகதிவாழ்வின் முடிவிலிருந்து
தாய் மடியாய் விரிந்திருந்த
வனத்திலிருந்து
வருகிறார்கள்!


நகரின் மீது
மகா மூர்க்கன் படையெடுத்த போது
துயரமும் வலியும்
நிறைந்த இதயத்தைக் காவியபடி
எனது மக்கள் வெளியேறினர்


கோபம்
கொழுந்து விட்டெரிந்தது
நிராசையாய்
நெஞ்சு துடித்தது
ஆயினும் பின்வாங்க நேரிட்டது


மகாமூர்க்கர்களும் துன்மார்க்கர்களும்
எப்போதும் மக்களைக் குறிவைத்தே போரைத்
தொடுக்கிறார்கள்
நியாயவான்கள் கிளர்ந்தெழுந்து
துன்மார்க்கரை எதிர்க்கையில்
துன்மார்க்கர்கள் மூர்க்கத்தனமான
படையெடுப்புக்களை
மக்களின் மீதே நிகழ்த்தி விடுகின்றனர்


மக்கள் எதிர்த்துப் போரிடுகிறார்கள்
முடியாத போது பின்வாங்குகிறார்கள்
பின்வாங்கும் மக்கள் அநேகமாக வனத்தில்தான்
தஞ்சமடைகிறார்கள்


அங்கிருந்து தம்மைத் தயார்ப்படுத்தி
மீண்டும் போரிடுகிறார்கள்
போரிட்டு, வெற்றி வீரர்களாக
மறுபடியும் தமது இடங்களுக்கும்
வாழ்வுக்கும் திரும்புகிறார்கள்


சரித்திரம் இப்படித்தான் எப்பொழுதும்
தன்னை எழுதிச் செல்கின்றது
வனம்
இவர்களை
வரவேற்றது
போஸித்தது
பாதுகாத்தது
இப்போது விடை தருகிறது.


நகர நிர்மாணங்கள்
நிகழ்ந்தே யிருக்கும்.


இனியும்
அந்நியர் படைகள்
பொற் கொள்ளையிடா
எல்லைக் காவலொடு
ஊர்களை ஆக்கிடுவோம்


என்றும் இனி
வீழ்தல் இல்லை


என்ற வொரு சத்திய வொலி
எங்கணு மொலிக்க
போர்ப்பறை, முரசம், முழவு
சங்கொடு
வீரக் கதைகளுடனும்
வீரர் நினைவொடும்
போர்க்கலை பயின்று
ஊர்களிருக்கும்.


என் மனிதர்கள்
நகர் மீள்கிறார்கள்.

-கருணாகரன்
Reply
#82
காற்றிலுலவி அலைகிறது
ஒரு பறவை
கூடிழந்து தனித்திருத்தல் எத்தனை நாளைக்கு
வசந்தப் பொழுதுகளில்
கூடிமகிழ்ந்திருந்து சுகித்திருந்த நாட்களையும்
என் கிராமத்து பால்ய நினைவுகளையும்
எத்தனை காலத்திற்கு மன இடுக்கில்
நிறுத்தி வைத்திட முடியும்?
அந்த அத்தியாயங்களை புரட்டிப் பார்க்க
மனம் அவாவுகின்றது.


புூபாளங்களோடு துயில் கலைந்த
என் வாழ்வில்
இப்போதெல்லாம் பரிபுூரண மௌனமே
எனக்குத் திருப்தியைத் தருகிறது.
நான் சுவாசிக்கும் ஒவ வொரு கணத்திலும்
ஏதோ ஒரு ஆறுதல் வார்த்தைக்காக
மனம் ஏங்கி குமைகிறது.


உறவுகள் தூரங்களானதால் எனதாவியும்
என்னுள் பொருமியழிகின்றது
மலரும் சுடுவதெங்ஙனம்?
நிலவும் தகிப்பதெதனால்?


காற்றிலெழுதிப் போகிறேன் கதையை!
காற்றே! எடுத்துச் செல்
என் ஜீவ உணர்வின் கனதிகளை;
கீற்று முகில்களே!
என் எண்ணங்களின் வீச்சினை எழுதிச்செல்லுங்கள்


தனிமர தனிக்கிளையொன்றில்
ஒற்றைக் குரலோசையோடு வாழ்ந்திட
முற்படும் நிதமும்
கட்டற்ற ஒரு மகிழ்ச்சிப் பறப்பிற்கான,
சிறகினைத் தேடி;
காற்றிலுலவி அலைகிறது, ஒரு பறவை

-இத்தாவில் க.சிவராசா
Reply
#83
உதடுகளால் பேசிமுடிக்காதவற்றை
உருக்கு உதடுகள் பேசி முடிக்கின்றன


இனிமேல் வண்ணத்துப் புூச்சி
நிறங்களுடன் வருமாம்


பறவைகளின் சிறகுகள் வேர்க்கின்றன
சித்திரை மாதத்திலும் தாழமுக்கம்


உதடுகள் பேசிப் பேசி தேய்ந்து போனது
கனவுகளில்


புூக்களில் அச்சமில்லாமல்
அமர்கின்றன வண்டுகள்
போர்நிறுத்தம் என்கிறது காற்று
இப்போதும் குடிசைக்கு வாருங்கள்


வானம் கூரை
நிலம் புல்விரிப்பு
இருக்கை மண்புற்று
காற்றுக்கு தடையில்லை
நிலவுக்கு சுதந்திரம்.

- சத்தியமலரவன்
Reply
#84
எனக்கு ஆத்திரமோ கவலையோ பீறிடவில்லை.
எம் உயிரிலே புதைந்துள்ள
எம் "செல்வங்களின் துயிலிடத்தை"
நாம் பிரிந்தபோதே
அதை மனதிலே தாங்கி வந்தேன்.
அவை உம் கையினில் வீழும் போதினில் எதுவுமே நடக்கலாம்
அதில் ஆச்சரியம் கிடையாது.
உங்கள் வரலாறே கூறும்
நீவிர் யாரென்று.
அதைவிடவும் பல தடவை
புரிய வைத்துள்ளீர் அவ வப்போது.
அதனாலெனக்கிப்போ ஆத்திரமெழவில்லை.
அவற்றை நான் என்
மனதிற் தாங்கியுள்ளேன்.
உம்மால் சிதைக்க முடிந்தது
அந்த வளாகங்களை மட்டுமே.
மற்றப்படிக்கு
அவர்களதும் எங்களதும் உணர்வுகள் பிணைந்தேயுள்ளன.
இன்னும் வீச்சாக..
பு. சிந்துஜன்
Reply
#85
ஓ.
இப்பொழுதெல்லாம்
வானை உரசுமளவிற்கு
வெண் பட்சிகளின் சிறகசைப்பு..
வெகு வெகு தொலைவிலே
எப்போதும் உலாவும் காற்றோடு
இணைந்து,
வெண்முகில் பொதி அசைந்து வருகின்றது
சொரியும் மலர்களோடு...


கந்தக மழை பொழிந்து
சேறாய்ப் போன பெருவீதிகளும்
பச்சை உதிர்ந்த விருட்சங்கள்
மூடுண்ட தெருக்கள் வெளித் தெரியத் தொடங்கின.


மண்ணின் ஒவ வொரு துகள்களின்
உயிர்ப்புக்குள்ளும்
எத்தனை எத்தனை கனவுகள்.
ஆசைகள்லு}.. எதிர்பார்க்கைகள்.


வெள்ளியென உடைந்து தெறிக்கும் பட்சிகள்;
எங்கள் கைகளில் சேருமா?
பட்சிகள் கீதம் கேட்குமா?


அந்த-
ஆடி விழுகின்ற புூக்கள் வாசமுள்ளவைதானா? அன்றேல்
வெறும் காகிதப் புூக்கள்தானா?


மிதந்து வரும் மேகம்
இருளென வந்து தகன வெளியிலேயே
கலைந்து போயிடுமா?


அந்தக் 'கலங்கரைவிளக்கு' களுக்கு
நெய் ஊற்றிக் கொள்வோம்
எப்போதும் போலவே


வெள்ளை ரோஜா செடிகளுக்கும் நீர் ஊற்றுவோம்
இனிவரும் சூரியப் பொழுதுகளில்
எங்கள் வீட்டு வாசல்கள் தோறும்
சந்தோசப் புூக்களின் வாசம் வியாபிக்கட்டும்
மாவிலை தோரணங்களோடு.


இத்தாவில்
க.சிவராஜா.
Reply
#86
வாருங்கள்
அவர்களின் மீது கற்களை எறிவோம்.
ஒரு பலஸ்தீனக் குழந்தையின்
புரட்சி முகத்தை பயங்கரவாதம் என்கிறார்கள்
என்றும்
இரும்பு விலங்குகள்
வலிமையானவையென்று
அவனுக்குத் தெரியும் எனினும்
கற்களையேனவன் கையில்
எடுத்தான்?
துயரம் வந்து- அவன் தொண்டையை அடைத்த போது.
தாயை எதிரிகள் இழுத்துப் போயினர்
தந்தையின் உயிரை
அவர்கள் பறிக்கையில்
புதரின் மறைவில்
திகைத்தபடியிருந்தான்.
அப்போதவன்
கண்களில் கண்ணீரை விடவும்
பயமே அதிகமாய் உருகி வழிந்தது- உனது இழப்பின்
துயரம்
"மலைகளுக்கும் கூன
விழவைக்கும் துயரம்"
எனது ஈழத்தெருக்களில்
சாவு வந்தபோது
குண்டுகளால் தேவாலயங்கள்
சரிந்த போது, சல்லடை
யிடப்பட்ட பிணங்கள்
கடலில் மிதந்த போது-
தெருக்களில் வைத்து
இழுத்துச் சென்ற போது-
யுத்தம் ஊர்களுக்குள் வந்த
போது, பிணவாடையும், இரத்த
நெடியுமாக எமது வாழ்வு
கழிந்த போது-எம்
குழந்தைகளின் அழுகை
வானைக்குடைந்ததுலு}லு}
சிறைச் சுவர்களும் நடுங்க கொடுக்குகளினால் நகங்கள்
பிடுங்கிய போது
பெற்றோல் நிரப்பிய
பொலித்தீன் பைகளுக்குள்-
எம்
மூச்சு முட்டியபோது,
தலைகீழாய் தொங்கிய
உடலில்- உயிரசைய
மின்சாரம் பாய்ச்சிய போது
விழி குத்திய அதேபுள்ளியில்
மரணங்கள் வந்த போது-
நாங்கள்
அடைந்த துயரம் போல
உனது துயரம் - ஓ
உனது வாழ்வு மலையைச்
சரித்து
அதனின்று ஒரு கல்லை
நீ எடுத்தாய்லு}..
துப்பாக்கி கிடைக்காதபோது
கற்களை எடுக்கலாம்- என
அறிவுறுத்திய குழந்தையே-
உனது
பலஸ்தீன மண்ணில் வைத்து
-நீ
சுடப்பட்டாய்லு}லு}
புரட்சி புூக்கின்ற போது
இரும்புக்கரங்களால்
சூரியனை
மறைக்க அவர்கள்
நினைத்தனர்- ஆதலால்
உன்னை அவர்கள்- உனது
மண்ணில் வைத்தே சுட்டுக்
கொன்றனர்
ஈழமண்ணில் நாங்கள்
சுடப்படுவது போல
உன்னை அவர்கள் சுட்டுக் கொன்றனர்- எனினும்
உனது கனவை- ஒரு போதும்
சாவு எடுத்துச் செல்லாது
மரணத்தின் போது உனது
கடைசிப்புன்னகையில்
அவர்கள் தோற்றனர்-நீ
புரட்சி புூத்த மண்ணின்
குறியீடாய்
நிலவுக்கடுத்தாற் போல
தெரியும்
புரட்சியின் குழந்தை
மண்ணின் குழந்தை


முல்லைக் கமல்
Reply
#87
போகட்டும் விட்டுவிடு
என்று யாரும் சொல்லலாம்.
பிள்ளையை இழந்தவனின்
துயரத்தீயை
அவளது தீராத தாகத்தை
களத்திலே வீழ்ந்தவனின்
ஒளிரும் கனவுகளை
அவன் வாழத்துடித்த மீதி
வாழ்க்கையை
அவனைப் பிரிந்த சோதரரின்
பெருந்துயரத்தை
துயர் வளையங்களுள் சுழலும்
அவர்களது மங்காத நினைவுகளை
எல்லாவற்றையும்
போகட்டும் விட்டுவிடு என்று
எப்படி இருப்பது?
ஊரெல்லாம் இன்னும் பரவியிருக்கு
நோயும் பிணியும்
பசியும் பட்டினியும்
பிரிவும் இழப்பும்
குருதியும் கண்ணீரும்
துயரமும் வேதனையும்
எல்லாம் யாரையாவது
ஆட்டிப்படைக்கட்டும்
என்றெப்படி இருப்பது?
நாம் போராடுகிறோம்
மரணத்தை மோதி மோதி
நொருக்கியபடி
அச்சத்தை தீயிட்டு எரித்தபடி
தடைகளை, நொறுக்கி எறிந்தபடி
புதிய வாழ்க்கையின் பிறப்புக்காக
நாம் போராடுகின்றோம்.
அமைதிக்காக, சமாதானத்துக்காக
நீதிக்காகவும்,
அன்புக்காகவும்
நாம் போராடுகின்றோம்
அடிமைச் சீவியம்
அகதி வாழ்க்கை
மரண முற்றம்
துயர ஞாபகங்கள்
எதுவும் வேண்டாம்


என்றபோதும்
சுழல் வளையங்கள் எதுவும்
நீங்கவில்லை.
சிலர் இருக்கிறார்கள்
சிலர் போய்விட்டார்கள்
சிலர் போகத்துடிக்கிறார்கள்.
எல்லாவற்றிலும்
யாருக்குப் பங்கு
யாருக்கு இல்லை
யாருக்குப் பொறுப்பு
யாருக்கு நிராகரிப்பு
யாருக்கு வாழ்க்கை
யாருக்கு மரணம்
யாருக்கு இழப்பு
யாருக்கு அமைதி?
போகட்டும் விட்டுவிடு என்று
யாரால் இருக்கமுடியும்
இப்போதும், இனியும்?
-கருணாகரன்.
Reply
#88
மனிதப் புதையல்கள்.
அகழ்ந்தெடுக்கப்பட்டதாய்
செய்திகள் வரும்.
இவள் என்றும் போலவே
கதறிப் புலம்புவாள்.
ஒட்டிய வயிறுகொண்ட
குழந்தைகள் தடுமாறும்.


நகர்க்கிணற்றில்
தெருப்புதரில்,
மலக்குழியிலென
மனிதக் கூடுகள்
மீளும் போதெல்லாம்
இவள் ஓடுவாள்.


அடையாளம் இருக்காது.
அவளவன் தானென
இனங்காட்ட
எதைக் காண்பிப்பாள்
நாளையும்
இதயத்தில் இடியிறங்க
செய்திகள் வரும்.
அதிலும் இவள் துணைவன்
இல்லாதிருக்கலாம்.

க.வாமகாந்
Reply
#89
சூரியன் மேற்கிளம்பிக் கொண்டிருந்த
ஒரு காலையில்
கடுஞ் சமருக்குப் பிறகு
மீட்கப்பட்ட ஊருக்கு
ஆவல் பொங்கியெழ விரைந்தேன்.
பத்தைகளில் சிக்குண்டு
முடங்கிக் கிடந்த தெருவழியே.


பாழடைந்து
நாறிக்கிடந்த ஊரின்
பயங்கர நிசப்தத்துள்
நுழைய நுழைய நெஞ்சிறுகிற்று.


கண்ணிவெடியில் கால்கள் இடற
குப்புற நான் விழுந்து
சிதறிச் சாவுறக் கூடுமென்று
அடிக்கடி திடுக்கிட்டேன்.


எறிகணைகள் குதறிக்குழிந்த தெருவிலிருந்து
நடுங்கும் கண்களால் இறங்கி
நடந்தேன்
பாழ்வெளியெங்கும் நடந்தேன்.


இடிபாடுகளுள் நெரிபடும்
கடவுளாரின் சிதைந்த படங்கள்
முறிந்த தென்னைகள்
தறியுண்ட பனைகள்
பட்ட மரங்கள்
முட்கம்பி வேலிகள்
மண் அணைகள்
வெடித்துச் சிதறிய காப்பரண்கள்.
விகாரித்து நாறிக் கிடக்கும்
பிணங்களைக் குதறும் காக்கைகள்
இரத்தம் தோய்ந்த இராணுவச் சீருடைகளில்
கத்தை கத்தையாய் கூலிக்காசுகள்
இளம் பெண்களின் ஒளிப்படங்கள்
(இராணுவத்தினரின் காதலிகளினதாய்
அல்லது மனைவியர்களினதாய்
அல்லது பிள்ளைகளினதாய் இருக்கலாம்)
அஞ்சலிடப்படாத வேற்றுமொழிக் கடிதங்கள்
(காதலியருக்கு
அல்லது உறவினருக்கு
இராணுவத்தினர் எழுதியவை)
விலங்கிடப்பட்ட எலும்புக் கூடுகளினதும்
நொறுங்குண்ட மண்டையோடுகளினதும்
அருகருகே உக்கிய நிலையில்
சேட்டுகள், சாறங்கள்.
சேலைகள், சட்டைகள்
ஜீன்சுகள், பெனியன்கள்
(காணாமற் போனோரது ஞாபகங்கள்)
வெடித்த ரவைகளின் கோதுகள்
வெடிக்காத ரவைகள்


இடிந்த கட்டிடங்களில்
உடைந்து கிடந்த எழுத்துக்களை
சல்லடையாக்கியிருந்தன
துப்பாக்கிச் சன்னங்கள்


கறள் கட்டிய முட்கம்பி வேலியில்
குப்புறக் கொழுவுண்டு கிடந்த
எலும்புக் கூடொன்றில்
தூங்கிக் கொண்டிருந்தது
வெள்ளிக் குருசு.


நிழல் உதிர்த்த
முறியுண்ட மரங்கள் மீதும்
இடிபாடுகளின் மேலும்
என் தலையிலும்
அவ வப்போது
உதிர்ந்து உலர்ந்து
கருகியழிந்தன


கிளைகளும்
கூடுகளும்
குஞ்சுகளும் தேடி
தவித்தலையும் பறவைகளின்
அவலக் குரல்கள்


திடீரென
இடிபாடுகளின் இடுக்குகளினூடே
கிளம்பியெழும் ஓலம்
கரிய புகை போலே
வெளியெங்கும் நிறைவதைப் பார்த்தேன்.


தீயெழுந்தோடி
திக்கெங்கும் கருகியுதிர்ந்த சாம்பலுள்
மூடுண்டு கிடந்த
மாபெரும் துயர் கண்டு
திகைத்தேன்
திகிலடைந்தேன்.


உச்சியில் மோதி
உள்ளிறங்கும் வெக்கையுடன்
ஒதுங்க நிழல் தேடியலைகையில்
உள்ளொலித்தது
உலகெங்கிலும்
மீட்கப்பட வேண்டிய ஊர்கள் பல
மீதமிருக்கின்றன வென்று.


அமரதாஸ்
Reply
#90
சி ங்களக் கிராமமொன்றின் சிறுதெருவில்
காலாற உலவுவதாகக் கனவுவந்தது
விழித்தும் துரத்துகிறது என்னை.
பலிக்காத பகற்கனவெனினும்
பழைய நினைவுகளைக் கிளறி
வேடிக்கை பார்க்கிறது சனியன்,
அது என் சிங்கள நண்பனின் சிற்றூர்.
நான் அதிகம் களைப்பாறிய நிழல்
தமிழனெனத் தள்ளாது
தூக்கி ஓக்களையில் வைத்த ஊh .
அத்தனை அழகளையும் கொட்டி
எவன் படைத்தான் அந்த ஊரை?
சொர்க்கத்தில் வெட்டிய துண்டொன்றை
சுமந்த வந்து அங்கே போட்டவன் எவன
மனித உழைப்பதிகமின்றி
அதிசயமாய் அதன் அழகு நிகழ்ந்திருக்கலாம்.
எந்த ஒப்பனையுமின்றி
கிணற்றடி வாழையின் மதர்மதப்பாய்
ஓரமாய் கிடக்கும் ஊர்.
தினமும் மழைசிணுங்கும் மலைச்சாரலில்
காற்றில் சேலையுடுத்துவதாய்
மேகம் மிதந்து செல்லும்.
மேலே பார்த்து அதிசயத்தபடி
எந்த அவசரமுமற்று நகர்ந்து போகும் நதி.
ஊர்முழுதும் ஓடும் வாய்க்காலெங்கும்
ஜென்மமெடுத்ததே குளிப்பதற்கென்பதாய்
பாவாடை மேலேற்றிக் கட்டிய தாமரைகள்
கூச்சமற்றுக் குளித்தெழும்.
கிராமத்தை ஊடறுத்து கிழக்கு மேற்காக
புகைவண்டிப் பாதைபோகிறது.
தார்வீதியும் தண்டவாளமும்
அருகருகாய் இருப்பதால்
றெயில் பயணிகள் பஸ்சுக்கும்
பஸ் பயணிகள் றெயிலுக்குமாக
கைகளை ஆட்டியபடி இவ வுூர் கடப்பார்.
விரைவு வண்டி தரித்தேகா ஸ்டேசனொன்றும்
அங்குண்டு.
ஆற்றுக்கு மேலான பாலத்தேறி
அக்கரை போகவேண்டும் அதற்கு.
மாலைச் சூரியன் மலையில் இறங்குவதை
இந்தப் பாலத்தில் நின்று பார்க்கவேண்டும்
பிறவி பலன் பெறும்.
மாலையும்,
மாலைச் சூரியனும்,
பச்சை போh த்திய வயல்களும்.
ஈரலிப்பான இதமான காற்றும்.
உள்ளே உள்ள ஊர்களிலிருந்து ஓடிவரும்
வண்டிற் பாதைகளும்
என்னை விட்டுப் போவாயா நீயென
வாரிச்சுருட்டி தன்னுள் வைத்துக்கொள்ளும்.
அத்தனை அழகும் சேர்ந்து
எம்மைப் பித்தனாக்கிவிட்டுப் புன்னகைக்கும்,
விரலுக்கேற்ற வீக்கமாய்
ஒரு சின்ன பஸ்ரான்ட்,
அஞ்சாறு கடைகள்,
ஆண்களும் பெண்களுக்குமான
இரண்டு பாடசாலைகள்,
ஊரின் நடுவில் சடைவிh}த்த அரசமரம்
சின்ன விகாரை,
போகும் ஒவ வொரு தடவையும்
அங்கேயே தங்கிவிடச்சொல்லும் மனது,
தங்கிப் பிரியும் ஒவ வொரு முறையும்
வலிசுமந்து வெளியேறும் இதயம்.
வெள்ளைத் தட்டேந்திய சிறுமிகள்
புூசைக்குப் போவர்.
கூட்டியள்ளிக் கொஞ்சவேண்டும் போல
அத்தனையும் அழகுப் பொம்மைகள்.
மெல்லக் காற்றுலவுவது போல
புூமிக்கு நோகாமல் நடந்து
எவரையும் இறாஞ்சிக் கொண்டு போவர் இளம் பெண்கள்.
வரட்சியில்லாத அந்த வனப்பு
ஈரப்பலாக்காய்க்கு எவர் கொடுத்த வரம்?
முப்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு பௌர்ணமி நாளில்
அந்தக் கிராமத்தில் இருந்தேன் கடைசியாக.
என் சிங்களத்தோழன் சந்தகிரி வீட்டில்
இறுதியாகத் தமிழனுக்கு விருந்து நடந்தது.
இலங்கைத் தேசியம்.
இனங்களை மீறிய வர்க்க உறவு.
இரு இனங்களையும் இணைத்த பாட்டாளிகளின் புரட்சி
இப்படி என்னனென்னவோ எல்லாம் பேசியபடி
அந்த கிராமத்தின் தெருவில் உலவினோம்.
வயலில் நடந்தோம்.
ஜில்லென வந்து தழுவும்
மலைச்சாரற்காற்றை அளைந்தபடி
மலைகளை அகற்றிய மூடக்கிழவனைப் பற்றி
பேசியதாயும் நினைவு.
சந்தக}ரியின் தங்கைதான் பராமா}த்தாள்.
குளிக்க ஆற்றுக்குப் போனபோதும்
குளித்து திரும்பியபோதும்
அவளும் கூடவே வந்தாள்.
வழமை போல் அன்றும் பிரியும் போது
மீண்டும் சந்திப்போமெனச் சொல்லிக் கொண்டோம்.
பஸ்ரான்ட் வரை வந்து
வழியனுப்பி வைத்தனர் சந்தகிரியும் தங்கையும்.
எல்லாம் நேற்றுப போல் நிழலாட
முப்பது வருடங்களை விழுங்கிவிட்டதா காலம்?
இன்று கனவிலேன் வந்தது அந்தக் கிராமம்!
சந்தகிரியை மீண்டும் சந்திக்கவில்லையே
எங்கிருக்கிறாய் நண்பா?
அந்த ஊரில்அதேவீட்டிற்தானா?
பன்னிரண்டு முறை இடம்பெயர்ந்து
இப்போ வன்னியிலிருக்கிறேன் நான்.
இடையில் நடந்ததனைத்தையும்
மறந்து விடுவோம்.
நீ இப்போதும் Nஐ-வி-பியின் செயற்குழுவிலெனில்
இன்றைய கனவை நான் சபிக்கிறேன்.
நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு
இப்போதுதான் அதிகமுண்டு.
அதே ஊரில்
அதே ஆற்றின் மேற் போட்ட பாலத்தில்
அதே ஜில்லெனக் காற்றுத் தவழும் வயல்களில்
சந்திக்க முடியும் தோழனே.
உன்தங்கைக்குச் சொல்க
எனக்கு மூன்று பிள்ளைகள் என்று.
கனவின் மீதியெழுதும் காலம் வந்துள்ளது
கைவிட்டு விடாதீர்.
நல்ல நண்பர்களாக,
நல்ல அயலவராக
ஒன்றெனில் ஓடிவரும் உறவினராக
அருகருகாய் வாழமுடியும்.
உங்கள் கைகளிற்தான் எல்லாமும்.
புதுவை இரத்திiதுரை
Reply
#91
இப்போது
என்னால் ஊர்தி நகர்வுகளை
உணர முடிகின்றது.
உறைந்து போனதெல்லாம்
மீண்டும் உடுக்கெடுத்து ஆடுவதாக
அந்த உடுக்கொலிகள்
உரத்துவென் செவிப்பறைக்கு
உணர்வுூட்டுகின்றன.


நான் எட்டிப் பாh க்கிறேன்.
ஏற்ற, இறக்கங்களைத் தவிர
எதுவுமே தெரியவில்லை.
மீண்டும் யாழ் வரவுக்கான
கொட்டெழுத்துடன்
இந்த அரைவட்டப் பலகைகள்
ஆரவாரிக்கின்றன.


அவலக் குரல்களுக்கெல்லாம்
அடைக்கல மளித்தபடி யாரோ தொலைவில்
அழைத்து வரப்படுகின்றனர்.
அடைக்கப்பட்ட பாதைகளெல்லாம்
அலகு விரித்துச் சிரிக்க
என் அக்கா மகள் ஊர்தியிலே
ஆனந்தமாய்ப் போகின்றாள்.


அவள் மட்டுமா போகின்றாள்.
பக்கத்து வீட்டார்,
படித்த சுற்றம், இன்னும் எத்தனை எத்தனை
உறவுகளெல்லாம்
ஏறியிறங்கிப் போகையில்
நான்.?


இப்போதும்
தோண்டப் படுகிறேன்.
படுவேன்,
பட்டேன்.
மனிதங்களே!
ஒன்றை உணரவும், புரியவும்
கற்றுக் கொள்ளுங்கள்
என்னை ஒரு முறை திறவுங்கள்
நான் அவர்களிடம்
சொல்ல வேண்டும்
எதை ?
'எனக்கு நடந்தவைகளை'
'காலங் கடந்து விட்டதேலு}'
கடந்தாலென்ன
காரணங்களும் பறந்தாபோய்விடும்

நா.கானகன்
Reply
#92
இது அவநம்பிக்கையல்ல
பட்ட வலிகளை ஆற்றுப்படுத்த
வருகின்றன புதிய மருந்துகள்.
கானலையே கண்முன் கண்டவர்க்குக்
குளிர்ந்த நீர்ச்சுனையில்
நின்றாடும் குதூகலம் பிறக்கின்றது.
கல்லும் முள்ளும்
பள்ளமும் திட்டியுமாய்
ஓடிக் களைத்துச்
செத்தபின் கூடச்
சாகவிடா மனிதரின்
முயற்சியால் ஓடித்திரியும்
ஊர்திகளுக்கும்
புதிய அணிகலன்கள் புூட்டப்பட்டுள்ளன.
மகிழ்ச்சிதான் இல்லையென்றில்லை
ஆறிய காயம் வடுவாகிப்போயுள்ளது
எவ வகைச் சிகிச்சைகளாலும்
குணப்படுத்த முடியாதபடி
ஆழப்பதிந்துள்ளது அடையாளம்
படத்துள் சிரிக்கும்
போராளித் தங்கைக்கும்
ஒரு காலை இழந்து
மரக்காலணிந்துள்ள
ஒன்றுவிட்ட தம்பிக்கும்
எல்லைக்குப் போய்
மீண்டு வராத பெரியப்பாவிற்கும்
நிரப்பீடு எது?
இழந்து வந்த என்னூர் திரும்பலாம்.
இடிந்த வீட்டைத்
திருத்தியும் கட்டலாம்
சிதைந்த என் மனதை
சிதறிப்போன உறவுகளை
கழிந்த துயர்மிகு வாழ்வை
யார் சுகப்படுத்துவார்?
துயரம் என்னோடு மட்டும்
முடியட்டும்.
ஈடாடிப்போன வாழ்வும்
நம்பிக்கெட்ட மடைத்தனமும்
என் சந்ததிக்கினி வேண்டாம்.
நம்பிக்கையுள்ள காற்றை மட்டுமே
எனது பிள்ளை சுவாசிக்கட்டும்
எங்கள் கால்களால்
மட்டுமே நாம் நடப்போம்.
எமது மனச்சான்றின்படி....

அம்புலி
Reply
#93
ஆ.ந. பொற்கோ
அவர்கள் வருவார்கள்
எங்களின் விடுதலை சுமந்து
அவர்கள் வருவார்கள்
புூ விதழ் மெல்ல விரிந்து
புன்னகை உதட்டில் புூக்க
கண்களில் ஒளிதெறித்து
கதைகள் பல பேச
உள்ளத்தின் வெள்ளை
நிலாமுகத்தில் ஓவியம் தீட்ட
அவர்கள் வருவார்கள்.


பொய்முகங்கள் திரை கிழித்து
பொடிப்பொடியாகும்.
காட்டாக்காலியாகி
எங்கும் நுழைந்த மாடுகள்
பட்டியோடு தூரதேசம் போகும்.
கட்டாக்காலிகளோடு வந்தவர்கள்
அதற்கு முன்னே
பெட்டி படுக்கையோடு புறப்படுவர்.
அம்மணமாய் சந்திகளில் தொங்கும்
அம்மணிகள் படம் இருந்த சுவடழிந்து போகும்.
கசிப்பும் சிட்டுக்குருவிகளைப் புசிப்பதும்
நசிந்து நாராகிக் க}ழிந்து கிடக்கும்.


அர்ப்பணமானவர்கள் கல்லறைகள் துளிர்க்கும்.
வெள்ளைச் சீருடைகள்
உள்ளத்தில் உவகை பொங்க வரும்.
கள்ளமில்லாப் பிஞ்சுகள்
மெல்லப் பாட்டிசைத்துப் போகும்.
இரவுகளும் பகலாகி
இனி எங்கள் காலமென
இரை மீட்கும்.
Reply
#94
ஆ.ந. பொற்கோ
அவர்கள் வருவார்கள்
எங்களின் விடுதலை சுமந்து
அவர்கள் வருவார்கள்
புூ விதழ் மெல்ல விரிந்து
புன்னகை உதட்டில் புூக்க
கண்களில் ஒளிதெறித்து
கதைகள் பல பேச
உள்ளத்தின் வெள்ளை
நிலாமுகத்தில் ஓவியம் தீட்ட
அவர்கள் வருவார்கள்.


பொய்முகங்கள் திரை கிழித்து
பொடிப்பொடியாகும்.
காட்டாக்காலியாகி
எங்கும் நுழைந்த மாடுகள்
பட்டியோடு தூரதேசம் போகும்.
கட்டாக்காலிகளோடு வந்தவர்கள்
அதற்கு முன்னே
பெட்டி படுக்கையோடு புறப்படுவர்.
அம்மணமாய் சந்திகளில் தொங்கும்
அம்மணிகள் படம் இருந்த சுவடழிந்து போகும்.
கசிப்பும் சிட்டுக்குருவிகளைப் புசிப்பதும்
நசிந்து நாராகிக் க}ழிந்து கிடக்கும்.


அர்ப்பணமானவர்கள் கல்லறைகள் துளிர்க்கும்.
வெள்ளைச் சீருடைகள்
உள்ளத்தில் உவகை பொங்க வரும்.
கள்ளமில்லாப் பிஞ்சுகள்
மெல்லப் பாட்டிசைத்துப் போகும்.
இரவுகளும் பகலாகி
இனி எங்கள் காலமென
இரை மீட்கும்.
Reply
#95
ஆகா!
எத்தனை அழகு
அற்புதப் பின்னல்கள்
என்று
அங்காந்து இருந்தது
அது.


கூட்டின் ஓரமாய்
இருந்த சிலந்தி(யோ)
குதித்தது கீழே
அதனை
பற்றிச் சென றது மேலே


இப்போது அது
அழகிய கூட்டினுள்
உயிருக்காய்
போராடியபடி.
புூரணி அக்கா
புது வீடு கட்டினாள்.
புது விழா
வந்தது.
Reply
#96
தோரணம் பற்பல
தொங்கவும் விட்டாள்,
ஊh கூடி வந்தது,
உவகை கொண்டது.
சோக்கான வீடு!
சொh க்கம் போலென்றது,
"வீதித்தோரணம்
வீடு குடியை
பொ}ய விழாப்போல்
காட்டுது"
என்றது கூட்டம்,
விருந்து முடிந்தது
வெற்றிலை மென்றது
ஏப்பம் விட்டது
வெளியே சென்றது,
வீதியின் ஓரமாய்
நின்றன பிள்ளைகள்
இளங்குருத்திழந்து.
Reply
#97
மீட்கப்பட்டுக்
கொண்டேயிருக்கும்
அந்த
அவல நாட்கள்

என் நகரம்
அழகை இழந்து போயுள்ளது
என் நகரத்தின் மீது
கரிய புகை படிந்து போயுள்ளது


இறக்கை அசைக்காத கா}ய பறவை
என் நகரத்தின் மேல்
சுற்றி சுழன்று
தனது எச்சங்களால்
தன் நகரத்தின் செழிப்பினையும்
எனது மக்களின் மகிழ்வையும்
எப்போதாவது அறிந்திருக்குமா?


என் நகரத்தில்
இனி எத்தனை புூஞ்சோலைகளை
எத்தனை மின் கம்பங்களை
எத தனை கட்டிடங்களை
எத்தனை வாகனங்களை
கொண்டு வந்து நிறுத்தினாலும்
கொலையாளிகளின் கூh}ய வாளில்
இருந்து சொட்டிய குருதியின் வெடிலும்
அவனின் முள் பதித்த சப்பாத்துக்களின் கீழ்
உயிh பிh}ந்து போன
எம் குழந்தைகளின் இறுகிய அவலக்குரல்களும்
எம் உணா வலைகளில் இருந்து
இல்லாமல் போய்விடக் கூடுமா.
தானா.விஸ்ணு
Reply
#98
மு.சங்கர்
புதரும் சருகும் இதமான பஞ்சு மெத்தை
கொடும்பனியே சுகமான போர்வை
தாலாட்டும் கீதங்களாய் நுளம்புகளின் கச்சேரி
வெறும்காலில் விசுக்கென விசமம் செய்யும் முட்களின் பாதணிகள்.
அடிக்கட்டைகளின் ஆவேசத்தால் அடிவாங்கி பெயர்ந்து
போகும் கால் நகங்கள்
குடம்பிகளின் கும்மாளத்துடன் குளத்து நீர் குடிப்பதற்கு
உண்டிக்கு உணவாக உலர் உணவுப்பொதிகள்
காய்ந்து போன மண்டையில் மழைபட்டால் சளி
பிடித்து சதிராட்டம்.
வெய்யிலின் கோரத்தால் வேர்த்துப்போயே தோள்காயும்
உடலைச் சுற்றியே உருமறைப்பு உடைகள்
பாம்புகளோடு பம்பலடித்து அட்டைகளோடு அரட்டையிட்டு
காட்டு விலங்குகளோடு கதை பேசி
உறங்காத கண்மணிகளாய் உலாவரும் நிழல்மனிதர்களின் ஊசிமுனைக்
கண்களில்
இருளிலும் தெரிவது எதிரியின் பாசறை அதனைச் சுற்றியோ முட்கம்பி
சுருள் வேலிகள்.
கையினால் உழுது பார்த்து மூச்சடக்கி முன்னேறுவார்
கூலிக்கு வந்தொன்று தேடொளியை கொண்டு
விழி பிதுங்க
பார்த்து நிற்க, புல்லசைவும் புலிவருகையினை சொல்லி நிற்க
கையிருக்கும் சுடுகருவி
கக்கி நிற்கும் குண்டுகளை.
இவற்றிற்கெல்லாம் கண்ணில் மண்தூவி கச்சிதமாய் தகவல்தேடி
தளம் வருவார்
கண்டவற்றை கச்சிதமாய் சொல்வார் திட்டமது திரண்டுவிட
பாதை காட்டியாய் முன்னே செல்வார்
சந்ததி வாழ்விற்காய் வேதனைகளை விலையாக்கி வெற்றியின்
உச்சத்தில் வேவுப்புலிவீரர்களாய் வீழ்ந்த எம் வெள்ளியின்
நாயகர்களை என்றும் நாம் மறவோம்.
Reply
#99
இன்னும்
மழையே தூறவில்லை
நீ ஒழுக்குச்சட்டிக்கு
ஓடித்திரிகிறாய்,
-புதுவைஇரத்தினதுரை

மீண்டும் வெள்ளைப்புூ சூடிக்கொண்டு
வீசுகிறது காற்று,
வானத்திலேறி வன்னிவரை வந்துபோகிறது
அலகில் ஒலிவ இலை தாங்கிய தூதுப்புறா
சாளரங்களைத் திறக்கும் போதெல்லாம்
சந்தனம் புூசிய, சமாதான வாசம் வருகிறது
இரவு முழுதும் கண்ணீh வாழ்வு
கழிந்தது போன்ற கனவு.
நிவாரணவரிசையில் நின்றுகளைத்த கால்களுக்கு
கட்டாய ஓய்வென்ற சட்டமே வருகிறதாம்.
வார் அறுந்த செருப்பாய்க்
கிடக்கும் தெருக்களுக்கு
இனித் தார் புூசப்படுமாம்.
கோயிலெங்கும் மகேஸ்வரபுூசைக் கோலாகலம்
ஆமிக்காரர்களுக்கும் சாமிகும்பிடும்
விடுமுறையாம்
போராளிகளும் இனிப் புூப்பறிக்கப்போகலாம்
நெருஞ்சிப் பற்றைக்கு முள்ளகன்று போனதாம்
சந்தோச மேகங்கள் தலைதடவிப் போகிறது.
ஆண்டவரே! இனியேனும் அமைதியைத்தாரும்.
கூண்டுதிறந்து பறக்கும் குதூகலம் அருள்வீர்
இனியாயினும் எமக்கு இரக்கமாயிருப்பீர்.
கண்டிவீதி ஏறிவரும் கனரக வாகனங்களில்
மாவும், சீனியுமாம்.
அட் கொக்காவிலில் பெற்றோல் செற்றாம்.
பங்குனிமாதம் மின்சாரமும்
சித்திரைமாதம் யாழ்தேவியும் வருகிறதாம்.
காவலரணிலிருக்கும் பிள்ளைகளுக்கு
புனர்வாழ்வு அமைச்சு புறியாணி அனுப்புமாம்
இவைகளுக்காகத்தானே போராடினோம்
இனியென்ன ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு
அரிசி, பருப புவாங்க ஆயத்தமாகுவோம்.
துயிலுமில்லங்களில் இனிச் சோககீதமில்லை,
பாட்டும், கூத்துமாகப் பகலிரவு கழியும்,
போர்க்களப் புரவிகளை அவிழ்த்து விடுவோம்
எங்கேனும் போய்ப் புல்மேயட்டும்.
அட பைத்தியக்காரா களே!
இத்தனை அவசரம்தான் எதற்கு?
அஸ்ரா மாஐரினுக்காகவா ஆரம்பித்த
போராட்டமிது?
ஆவலாதிப் பேய்களாக ஏனிந்தப் பறந்தடிப்பு?
நிதானம் தளராமல் நினைத்துப் பார்
முன்னைய அனுபவங்களில் முகம்கழுவிக் கொள்,
நல்லது நடக்குமென நம்புவோம்,
அதற்காக அவசரப்படல் ஆகாது.
வாசல் வரும் காற றை வரவேற்பதென்பதும்
பாதம் கழுவுவதும் ஒன்றல்ல,
கைகுலுக்குவது நாகரிகம்
கமக்கட்டில்சால்வை வைப்பது அடிமைத்தனம்.
பெரிதாக நம்பிவிடாதே
அம்மணி அரங்குவிட்டு இறங்கவில்லை.
இப்போதும் அவரேதான் ஆட்டநாயகி.
தோற றுப போனாரெனும் கூற்றென்னவோ
உண்மையெனினும்
இன்றும் நாகாஸ்த்திரங்கள் இருப்பது
நாயகி கையிற்தான்,
எய்யார் எமக்கென பதற்கு என்ன உத்தரவாதம்,
ஐயா நல்லவராகவே இருக்கட்டும்
அஸ்கிரிய பீடம் அனுமதிக்க வேண்டுமே.
வன னிக்கு, வந்துபோகும் வைத்தியர்
மனிதாபிமானிதான்
இருந்துமென்ன
கண டி மல்வத்தபீடம்தானே கட்டளையிடுவது
இன்னும் மழையே தூறவில்லை
நீ ஒழுக்குச் சட்டிக்கு ஓடித்திரிகிறாய்,
இன்னும்காற்றே வீசத்தொடங்கவில்லை
நீ பட்டமேற்ற நூல்தேடித் திரிகிறாய்.
எத்தனை தடைவைகள் ஏமாற்றப்பட்டாய்
பட்டும் பட்டுமேன் உனக்குப் புத்திவரவில்லை?
விடுதலை அவாவிய குருவியே!
தீனிபொறுக்குவதற்காகவா உனக்குச்
சிறகுமுளைத்தது?
சூரியனைத் தொட்டுவரப் புறப்பட்ட நீ
அரிசிக்கும் பருப்புக்குமேன் அவசரப்படுகின்றாய்,
அவர்கள் கவனமாகக் காலெடுத்து
வைக்கின்றனர்
நீ வேகமெடுத்து விழுந்தெழும்பப் போகிறாய்.
கானல் நீரில் வாய்நனைக்க நினைக்கிறாய்
கவனம் மீண்டும் கண்ணீரைக் குடிக்கவேண்டிவரும்
விடுதலை பெறுவதென்பது
பேரம்பேசும் வியாபாரமல்ல.. அது எமக்குரிய
இயல்பின் இருப்பு
தானமாகத் தருவதற்கு விடுதலை
சாப்பாட்டுப் பார்சலல்ல, தொடுத்த அம்புக்கேற்ற இலக்கும்
கொடுத்த விலைகளுக்கேற்ற தீர்வுமே
மேசைக்குப் போகும்போது முன்மொழிய வேண்டும்
அலரிமாளிகையை நாங்கள் கேட்கப்போவதில்லை.
பெரகராவில் ஊர்வலம் போகும்
பெரியயானையை இரவலாகவும் நாங்கள் கேட்கப்போவதில்லை.
எமக்கான கூடு எமக்கு
எமக்கான பாசம நமக்கு
இவைதவிர எமக்கு எதுவுமே வேண்டாம்
ஆகாயம் புூச்சொரியும் அழகைப் பார்த்தபடி
தாயாளின் மடியுறங்கும் சந்தோசம் வேண்டும்
மாரிமழையில் நனைந்தபடி எம் ஊரிற்திரியும்
மகிழ்வொன்றே போதும் நமக்கு
குனியவும் ந}மிரவும் யாரும் கட்டளையிடாத
ஒரு வாழ்வுபோதும் நமக்கு.
தருவாரெனில் சந்தோசம்
பாதிவழியில் பழையபடி முருங்கையேறில்
வேதாளம் பாதாளத்துக்குத்தான் போகும்.
சின்ன மாங்கனித் தீவை
பாதி பாதியெனப் பங்கிடுவதே நல்லது
நீதியும் அதுதான்
மேசையில் பேசி தீர்வென்ன வரும்?
சரி; பேச்சுவார்த்தையின் பின்னே என்ன
தருவார்கள்?
திம்புவில் தொடங்கி சுயாட்சிவரை போகுமா?
இது விட்டுக்கொடுக்கும் இறுதிவிடயமல்ல.
பள்ளியே இதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
சம்மதிக்குமா சிங்கள அரியணைகள்?
தமிழரென்றாலே இழிபிறவிகளென்ற
எகத்தாளம் அவர்களுக்கு.


தமிழர் வந்தேறு குடிகளென வகைப்படுத்தி
சின்ன நெஞ்சிலேயே நஞ்சூட்டப்பட்டுள்ளது.
நூலின் நீளமறியாது பட்டத்துக்கு வால்கட்டமுடியாது
அடித்த நோவுக்கு எண்ணை புூசுவெது இருக்கட்டும்
எமக்கு இனிமேல் அடிக்கமாட்டோமென்று
உத்தரவாதம் தரட்டும்
தருவார்களா சங்கமித்தையின் வெள்ளரசு விழுதுகள்
இரத்தத்தில் விழுத்தும் யுத்தத்தை விரட்டுவோம்
யாருக்குத்தான போரின்மீது காதல் வரும்?
சாந்தியும் சமாதானமுமே நந்தவனமானது.
விரும்புகிறோம்
எம்மை யுத்தத்துக்கு அழைத்தது யார்?
எம்மை ரத்தத்தில் கிடத்தியது யார்?
அல்லிவேர்கூட விடாது அறுத்தெடுத்தது யார்?
இன்று வெள்ளைக் கொடிபற்றி விரிவுரை செய்பவர்கள்
கண்டிவீதி கற்பழிக்கப்பட்டபோது
கதைக்கவில்லையே
'சத்nஐய' கிளிநொச்சி புகுந்தபோது
இவர்களை பேச்சிழந்து ஊமையிருந்தனர்.
சரி; பழையனகழித்து புதியன வகுப்போம்
கடந்த காலத்தைக் கனவாய் மறந்து
வருங்காலத்தை வடம்பிடித்திழுக்க வருக
வன்னி வரவேற கக் காத்திருக்கிறது,
ஆத்ம சுத்தியோடு மேசையில் அமருவோம்.
ஏமாற்றுவதற்கானது இந்த நாடகமெனில்
ஏமாறப்போவது நாமல்ல
போரும், பேச்சும் எமக்கு விடுதலைக்கானதே
பேசலாம் வருக.
Reply
சுகமான சுமைகளென....
ஓ. எம் அன்பு உறவுகளே.
போரின் முழுச் சுமையும்
முதுகேற்று
காப்பரண் வேலியிற் காவலிருக்கும்
எம்மவர்க்குப் பலம்சேர்க்கும்
ஈரமுள்ள இயதங்களே
இளங்காலையொன்றின்
இனிமையை இரசிக்கமுடியாது
இயங்கும் என்
கால்களுக்கும் கைகளுக்கும்
உயிர்ப்புூட்ட
உதிரத்தைச் சுரந்தியங்கும்
இதயவறையின் மூலையொன்றில்
உங்கள் வலியை உணர்கின்றேன்.


எமக்குத் தெரியும்
கஞ்சிக்கும் வழியில்லாக் காலத்திலும்
எமது உணவுக்காய்
உமது உணவைத் தந்தது,
பேரினவாதப் பெருங்கரங்கள்
பொருள் மறித்துக்
குரல்வளை நசிக்கையிலும்
குருதிசிந்தத் தயாராகவிருக்கும்
எமது மருந்துக்காய்
அரிசிக்கான உங்கள் பணத்தில்
சிறிதளவு அறவிடப்படுவது,
நைந்து நைந்து
முள்வேலிபட்டுக் கிழிந்து
பின் தைத்துக்
கவசமாய் நாமணிந்துள்ள உடையின்
ஒவ வொரு அங்குலமும்
உங்கள் உழைப்பின் உப்பென்பது
நன்றாய்த் தெரியும் எமக்கு.


போரின் பெரும்பாரம்
இழப்பின் கொடுந்துயரம்
பிரிவின் பெருவலி
எல்லாம் உம்தலையில்
உம் முதுகில்.
எமது துப்பாக்கியிலிருந்து
பகைகொல்லப்புறப்படும்
ஒவ வொரு ரவையும்
உங்கள் நாணயக் காசுகளே.
ஏழைக் குடிலெனிலும்
எம்மைப் போலொரு பிள்ளையை
விடுதலைக்காய்
உவந்தளித்த பெருமை
உங்களுக்குரியது.
நாங்கள் உங்கள் பிள்ளைகள்.
உங்கள் உழைப்பில்லு} உணவில்லு} உடையில்
உங்கள் வறுமையில், வலியில், துயரில்
என்றுமே எங்களுக்குப் பங்குண்டு
விடுதலைக் கனவின் விலையாக
உவந்தளிக்கும்
எங்கள் உயிரின் உழைப்பில்
நாளை மலரும் குழந்தையொன்றுக்கு
இனிய வாழ்வைப் பரிசளிப்போம்.
அதுவரை
எமது தோளிலும்
உமது தோளிலும்
சுமக்கும் சிலுவையின் வலிகளைச்
சுகமெனவே எண்ணியிருப்போம்.
-அம்புலி
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)