Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறுமணம் செய்யும் சுனாமி விதவைகள்
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>மறுமணம் செய்யும் சுனாமி ஆண் விதவைகளும்,
ஆண் துணையின்றித் துன்பப்படும் பெண் விதவைகளும்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050730163432tsunami-widows.gif' border='0' alt='user posted image'>

நான்கு குழந்தைகளின் (சுனாமியில் விவையான) தந்தையை மணந்த பெண்
கிழக்கு மாகாணத்தில் சுனாமியின் தாக்கத்திற்கு இலக்காகி மனைவியை இழந்த ஆண்களில் அநேகமானோர் தற்போது மறு மணம் செய்து வருகின்றனர். இப்படியான மறு மணங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் தான் பரவலாக நடை பெற்று வருகின்றன.

இம் மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்ப்பட்ட பிரதேசங்களிலொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை.

இப் பிரதேசத்தில் சுனாமியில் மனைவியை இழந்த அநேகமான ஆண்கள் மறுமணம் செய்துள்ளார்கள். தமது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதியே இந்த முடிவிற்கு வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மறுமணம் செய்யும் ஆண்களைப் பொறுத்த வரை கன்னிப் பெண்களையே நாடுவதாகவும், சுனாமி விதவைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதாக இல்லை என சுனாமி விதவைகளின் நலன்களில் அக்கறை கொண்ட பெண்கள் ஆதங்கப்படுகின்றார்கள்

இதனை முழுமையாக ஏற்க முடியாது என மறுமணம் புரிந்துள்ள ஆண்களில் சிலர் கூறுகின்றார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்கனவே கணவனை விட்டு பிரிந்த பெண்களைக் கூட தாம் திருமணம் செய்துள்ளதாக இவர்கள் குறிப்பிடுகின்றார்கள்

தந்தையின் திருணமத்தை பிள்ளைகள் முழு மனதுடன் ஆதரித்தும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஒரு சில ஆண்களைப் பொறுத்த வரை மறுமணத்தை நினைத்துக் கூட பார்க்காதவர்களாக இருக்கின்றார்கள்.

சுனாமி பெண் விதவைகளைப் பொறுத்த வரை இது வரை எந்தவொரு பெண்னும் மறுமணம் செய்யவில்லை. தமது பிள்ளைகளின் எதிர்காலமே தமது இலக்கு என்று கூறும் இவர்கள் மறுமணம் வேண்டாம் என்கின்றார்கள்.

இது தொடர்பாக மட்டக்களப்பு செய்தியாளர் இரா.உதயகுமார் வழங்கும் பெட்டக நிகழ்ச்சி இன்றைய http://www.bbc.co.uk/tamil/ நிகழ்ச்சியில் கேட்கலாம்.</span>
Reply
#2
Quote:சுனாமியில் மனைவியை இழந்த அநேகமான ஆண்கள் மறுமணம் செய்துள்ளார்கள். தமது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதியே இந்த முடிவிற்கு வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.


Quote:சுனாமி பெண் விதவைகளைப் பொறுத்த வரை இது வரை எந்தவொரு பெண்னும் மறுமணம் செய்யவில்லை. தமது பிள்ளைகளின் எதிர்காலமே தமது இலக்கு என்று கூறும் இவர்கள் மறுமணம் வேண்டாம் என்கின்றார்கள்.


உண்மையில் ஒரு குழந்தையின் எதிர்காலம் தாயின்(அம்மா)கையில் தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது இல்லையா?
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)