Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாஜி சிபிஐ அதிகாரியின் வீடியோ
#1
ராஜீவ் கொலை: மாஜி சிபிஐ அதிகாரியின் வீடியோ

ஜூலை 29, 2005

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை குறித்த வீடியோ படத்தை மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார்.


ஒரு மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் ராஜீவ் காந்தி கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டது, தணு மற்றும் சிவராசன் ஆகியோர் இலங்கையில் பயிற்சி பெறுவது மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பேட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தணு என்ற பெண் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியது.

ராஜீவ் காந்தி கொலை குறித்து பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணி குற்றப்பத்திரிகை என்ற படத்தை தயாரித்தார். ஆனால் இந்தப் படத்திற்கு இதுவரை சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை.

இந் நிலையில் சிபிஐயின் முன்னாள் எஸ்.பி. ரகோத்தமன், ராஜீவ் காந்தி கொலை குறித்து ஒரு வீடியோ படத்தை தயாரித்துள்ளார். இதற்கு மத்திய சென்சார் போர்டும், சிபிஐயும் அனுமதி வழங்கியுள்ளது.

சிபிஐயில் எஸ்பியாக இருந்த ரகோத்தமன் கடந்த மார்ச் மாதம் தான் ஓய்வு பெற்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவரும் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தார்.

இந்த வீடியோ படம் சென்னையில் வெளியிடப்பட்டது.விசிடியாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் 60 நிமிடம் ஓடுகிறது. இதில் பெண் மனித வெடிகுண்டு தணு, இலங்கையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவது,

பெங்களூரில் சிவராசன் தற்கொலை செய்து கொண்டது, பிபிசி தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ராஜீவ் கொலை குறித்து பேட்டியளித்தது, ராஜீவ் காந்தி கடைசியாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தது, போரூரில் நடந்த கூட்டத்தில் ராஜீவ் பேசுவது, ஸ்ரீபெரும்புதூருக்கு வருவது மற்றும் குண்டு வெடிப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து ரகோத்தமன் கூறுகையில், நான் சிபிஐயில் 36 வருடங்கள் பணிபுரிந்துள்ளேன். ராஜீவ் கொலை வழக்குக்காகவே 10 வருடங்கள் செலவழித்துள்ளேன். 4 மாதங்களாக மிகவும் கஷ்டப்பட்டு சுமார் ரூ. 4 லட்சம் செலவழித்து இந்த டாக்குமெண்டரி படத்தை தயாரித்துள்ளேன்.

எனக்கு முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் உட்பட எனது மூத்த பல அதிகாரிகள் இந்தப் படத்தை தயாரிக்க மிகவும் உறுதுணையாக இருந்தனர் என்றார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இதேல்லாம் பழைய குட்டையை திரும்ப கிளரத்தான்.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகளைப் பற்றியோ ஈழத்தமிழர்களைப் பற்றியோ பேசவே சுதந்திரம் இல்லை,
அதில சீபிஐன்ட பிரச்சாரப் படம் வேற,தமிழ் நாட்டுத்தமிழருக்கு சூடு,சுரணை இருந்தால் தானே,
அவர்கள் என்றும் கொத்தடிமைகளாகத்தான் இருப்பார்கள் போலும்.
Reply
#4
so sweet Arrow <img src='http://img287.imageshack.us/img287/8379/mouse8cf.gif' border='0' alt='user posted image'>

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)