07-29-2005, 12:24 AM
வவுனியா: விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவை அலுவலகம் மீது தாக்குதல்!
[வெள்ளிக்கிழமை, 29 யூலை 2005, 05:14 ஈழம்] [வவுனியா நிருபர்]
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவை காரியாலயத்தின் மீது இனந் தெரியாதவர்கள் கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாக வவுனியா மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மோட்டர் சைக்கிளில் வந்தவர்களே முதலில் இரண்டு கைக்குண்டுகளை வீசியதாகவும் பின்னர் துப்பாக்கிப் பிரியோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக வவுனியா மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தமேந்திரா தெரிவித்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற சமயம் விடுதலை புலிகளின் நான்கு உறுப்பினர்கள் காரியாலயத்தில் இருந்தபோதும், எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிர்வாக சேவைக காரியாலயத்திற்கு அருகாமையில் 400 மீட்டர் தொலைவில் சிறிலங்கா இராணுவத்தினரின் சோதனைச் சாவடி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>