Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செல்போன் `ரிங்டோன்' களை பயன்படுத்தி தீவிரவாதிகள் புது வித தா
#1
சில நாட்களுக்கு முன் மும்பை செல்போன்களில் நடிகை மல்லிகா ஷெகாவத்தின் செக்ஸ் காட்சிகள் செல் போன் எஸ்.எம்.எஸ். மூலம் பரவியது. சில நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோ காட்சிகளும் வெளியானது.

இதைப் பார்த்த நடிகை மல்லிகா அதிர்ச்சி அடைந்தார். டெக்ஸ் காட்சியில் வரும் உடல் தன்னுடையது அல்ல. தனது முகத்தை காட்டி விட்டு வேறு பெண்ணின் உடலுடன் கிராபிக்ஸ் முறையில் இணைந்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று மல்லிகா குற்றம் சாட்டினார்.

இதில் உடல் யாருடையது என்று கண்டு பிடிக்க முடியாமல் மும்பை போலீசார் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதே போல் செல் போன்களால் அசாம் போலீசாருக்கு புதிய தலைவலி ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு பிரச் சினை செக்ஸ் காட்சிகளால் அல்ல. பழைய இந்திப் பாடல்கள் மூலம் உருவாகி உள்ளது.

கடந்த மாதம் அசாமில் போலீசாருக்கும் உல்பா தீவிர வாதிகளுக்கும் நடந்த சண் டையில் உத்பல்தாஸ் என்ற தீவிரவாதி சுட்டுக் கொÖல்லப்பட்டான். இவன் தீவிரவாத இயக்கத்துக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுப்பவன். அவன் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து போலீசார் செல்போனை கைப்பற்றினார்கள்.

அந்த செல் போனில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பழைய இந்திப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

`தமëமரோ தம்' போன்ற புகழ் பெற்ற பாடல்களும் அடங்கி இருந்தது. ஒவ்வொரு பாடலையும் தீவிரவாதிகள் சந்தேக பாஷையாக பயன் படுத்தியதை போலீசாÖர் கண்டு பிடித்து உள்ளனர்.

ஒரு தீவிரவாதி தனது கூட்டாளிக்கு `போலீஸ் நடமாட்டம் இருக்கிறது உஷாராக இரு' என தகவல் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு என ஒரு பாடலை பயன்படுத்துகிறார்கள்.

எதிரி வருகிறான் அவனை தாக்கு என்பதற்கு மற்றொரு பாடல் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாடலை குறிப்பிட்ட ஒரு செல்லில் இருந்து கூட்டாளியின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி விடுகிறார்கள். இதனால் தீவிரவாதிகளுக்கு வேலை சுலபமாக போய்விடுகிறது. அவர்கள் பேசிக் கொள்ளாமலே காரியத்தை சாதித்து விடுகிறார்கள்.

செல்போன் ரிங்டோன்களில் பாடல்களை பயன்படுத்தி சமீபகாலமாக அசாம் தீவிரவாதிகள் பல அசம்பாவிதங்களில் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதை தடுக்க அசாம் போலீசார் மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
ஆஹா.. நல்லா தான் இருக்கு
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)