07-20-2005, 03:20 AM
தாக்குதலை நடத்த சிங்கள இராணுவத்துக்கு தயா சந்தகிரி உத்தரவு!
[புதன்கிழமை, 20 யூலை 2005, 01:03 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி] www.puthinam.com
சிங்கள இராணுவ வீரர்கள் தேவைகளைப் பொறுத்து ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று சிறிலங்கா இராணுவத்தின் முப்படைகளின் தளபதியான தயா சந்தகிரி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
இராணுவத்தினரை சினமூட்டும் நடவடிக்கைகள் நடைபெறும் போதிலும் அரச பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவ வீரர்கள் தொடர்ந்தும் வீணாக உயிரிழக்க இடமளிக்கப் போவதில்லை.
எமது வீரர்களின் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கு இனி இடமளிக்கப் போவதில்லை.
தேவைகளைப் பொறுத்து ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு நாம் அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
சுயபாதுகாப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது. பொலிசிலும் இராணுவத்திலும் உள்ள அனைத்து தர வீரர்களுக்கும் மிக விழிப்புடனும் மிகப் பொறுமையுடனும் கடமையாற்றுமாறு கடந்த வெள்ளிக்கிழமை திருமலைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தான் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>