Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் பதற்றம்
#1
படைக் காவலரணுக்குள் கைக்குண்டு வீச்சு: திருமலையில் பதற்றம்
றுசவைவநn டில நுடடயடயn றுநனநௌனயலஇ 13 துரடல 2005

திருமலையில் இருந்து கண்டி வீதியில் 3 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள காந்தி நகரில் அண்மைக்காலமாக சாதாரண பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிங்கள இராணுவம் நேற்று நிரந்தர காவலரண் ஒன்றை அமைத்தது. இதனையடுத்து இன்று காலை இக் காவலரண்மீது கைக்குண்டு வீசப்பட்டது. இதன்போது இரு சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த படையினர் தற்போது திருமலை பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைக்குண்டுத் தாக்குதலையடுத்து அப்பகுதிகளில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகின்றது.

பாடசாலை வாசல்களுக்கு முன்னால் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த இருநாட்களில் படையினர் மீது கைக்குண்டு வீசும் சம்பவங்கள் பல நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
sankathi.net
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)