Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்கொலைகளை தடுக்க வழி என்ன?
#1
<b>தற்கொலைகளை தடுக்க மாற்றுவழிகள் என்ன...?</b>

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான், தனக்கு பிரச்சினையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு துணிந்து விடுகின்றனர்.

இந்த தற்கொலைகள் செயலை தடுக்க மாற்று வழிதான் என்ன?
ஆலோசனைகள் மற்றும் அனுபவரீதியாக தெரிந்தவற்றை பகிரலாம்

(சென்றகிழமை ஐரோப்பா தேசத்தில் மூன்று குழந்தைகளின் தாயார் தற்தொலை செய்துகொண்டதால்... அது போன்ற நிகழ்வுகள் மேலும் இடம்பெறாமல் தடுக்க... விடை காண... இக்கருத்தினை பகர்கிறேன்.)
Reply
#2
நல்ல விடயம் தொடக்கியிருக்கீங்க அக்காஃ எதையும் செய்யமுதல் சற்று சிந்திச்சால். நல்லம். அதை கடைப்பிடித்தா அந்த நிமிசம் வருகிற எண்ணத்தை தவிர்த்துக்கலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
மாற்றுவழி நீங்களும் தற்கொலை செய்யலாம்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#4
நல்ல ஐடியா.. பேஸ் பேஸ் சாத்திரியாரே <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
தங்கள் கருத்துக்கு நன்றி தமிழினி.

மேலும் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படும்போது... தனிமையில் தள்ளப்பட்டு தவிக்கும் போது இப்படியான தற்கொலை முயற்சிகள் தூண்டப்படுவதற்கு ஏதுவாக அமைந்து விடுகிறது.
நட்பு, கலந்துரையாடல் நல்ல தீர்வைக் கொடுக்கும் என்றும் நினைக்கின்றேன்.
Reply
#6
தற்கொலை செய்ய நினைப்பவர் எவருமே தங்கள் தீர்மானத்தை வெளியே சொல்லி ஆலோசனை கேட்பதில்லை. தங்கள் பிரச்சனையை உள் மனதுக்குள் புூட்டி வைத்து வேதனைப்பட்டு அதன் சுமை மனத்தை அழுத்தும் பாரம் தாங்க முடியாதவர்களே தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதில மற்றவர்கள் பெரிதாக செய்வதற்கு ஒன்றுமேயில்லை. (ஏனெனில் தற்கொலை செய்து ஒருவர் இறந்தபிறகுதான் அவர் தற்கொலை முடிவில் இருந்தார் என்று உங்களுக்குத் தெரியவருகிநது)

!
Reply
#7
இதுக்குப் போய் பெரிசாய் ஏன் யோசிக்கிறீங்க. பேசாமல் தற்கொலை செய்ய எண்ணுவோரை நீங்களே கொலை செய்து விடுங்க. பிறகு தற்கொலையாவது செய்வதாவது. :roll: :roll: :roll: :roll:
Reply
#8
பிறப்பு எமது முடிவல்ல. இறப்பதையாவது தெரிந்து கொள்ளும் உரிமை எமக்கு இருக்க வேண்டும். அதே வேளை, தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க வழிதெரியாமல், மனமுடைந்து, தற்கொலை செய்யக்கூடிய ஒருவரை காப்பாற்றி ,அவரது பிரச்சினையை தீர்ப்பதன் மூலம் அவரையும், அவர் சார்ந்தவர்களையும், மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிநடத்தி செல்லலாம்.

உளவியலாளரின் கருத்துப்படி தற்கொலை செய்பவர்கள், தாம் தற்கொலை செய்யப்போவதாக ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் தெரிவித்த பின்பு தற்கொலை செய்வது அதிகம். ஆகவே யாராவது வாழ்க்கையின் பாரம் தாங்காமல் தற்கொலை செய்யப்போவதாக கூறினால், அதை சாதாரணமாக எடுக்கவேண்டாம்.

பலவருடங்களுக்கு முதல் பல்கலைக்கழக மாணவியாக இருந்த ஒருவர் இவ்வாறான தற்கொலை மனப்பான்மையில் இருந்தார். மனம்திறந்து கதைப்பதற்கும், அவரது பிரச்சினைக்கு தீர்வுகாண உண்மையாக முயற்சித்ததன் மூலமும் அவரை அந்த மனநிலையிலிருந்து மாற்றி மகிழ்ச்சியான ஒரு வாழ்விற்கு வழிநடத்தி செல்ல முடிந்தது. இந்த பெண் ஏற்கனவே ஒரு முறை மண்ணெண்ணை குடித்து தற்கொலை செய்ய முயன்று ஒரு கிழமையாக நினைவின்றி மருத்துவமனையில் இருந்தவர் என்பது பலவருடங்களின் பின்னர்தான் அறியக்கிடைத்தது.
''
'' [.423]
Reply
#9
மனிதன் ஒரு சமூகப் பிராணி..... ஒவ்வொரு தனி மனிதனும் உறவு நிலைக்கப்பால்.... இன்னொரு தனி மனிதன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அன்பும் கருணையும் ஆதரவும் அளிப்பவனாக இருக்க வேண்டும்...இதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படை....இவை இழக்கப்படுதலே...தனி மனித மன விரக்தியின் பாலான தற்கொலைகளுக்கு முக்கிய காரணம்...!

தற்கொலைக்கான காரணிகளில் பாரம்பரியமும் உள்ளடக்கப்படுகிறது.... அது மூளை சார்ந்த உளவியல் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது... ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனுடைய மன வலிமை என்பது மாறுபடுகிறது...மற்றவர்களின் மனவோட்டங்களை அவதானித்து அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பழகும் நிலை அவசர உலகம் என்ற தொனியில் கைவிடப்பட்டுவருகிறது...!

தற்கொலை அதிகரிப்பென்பது இன்று உலகளாவிய பிரச்சனை... இதற்கான தனி நபர், சமூக மற்றும் உடற்கூற்றுக் காரணிகளில் பின்வருவன பிரதானமானவை....

1. பாரம்பரிய மற்றும் மூளைசார் நோய்கள் தொடர்பிலான உளவியல் பிரச்சனைகள்,உளப்பலவீனம்..!

2. கடும் நோய்த்தாக்கமும் தாங்க முடியாத உள உடல் வலிகள்

3. சமூகவிரோத சிந்தனைகளும் செயற்பாடுகளும்

4. வேலையில்லாப் பிரச்சனை

5. சமூத்தினால் தனிமைப்படுத்தப்படல்

6. திருமணம் செய்யாது தனித்திருத்தல்

7. பெற்றோருடன் அல்லது துணையுடன் அல்லது நம்பிக்கைகுரியவர்களுடன் எழும் மனத்தாக்கம் தரவல்ல பிரச்சனைகள்

8. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் எழுதும் உயர் மன அழுத்தம்

9. தற்கொலைக்கு மற்றவர்களால் தூண்டப்படல்

10. சமூகத்திடம் அல்லது தாம் சார்ந்தோரிடமிருந்து அன்பு, கருணை, ஆதரவு கிடைக்காத நிலையில் எழும் விரக்தி.

(ஆதாரம் - http://www.samaritans.org/know/information...cide_sheet.shtm )

இதில் ஒரு விடயத்தை கவனித்தால் தற்கொலைக்கான தூண்டுதலில் குறித்த தனி நபரைவிட அந்த நபர் சார்ந்த சமூகத்தின் ஆதிக்கமே அதிகம் என்பது தெளிவு...! எனவே சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இயன்றவரை மற்றவர்களின் மீது அன்பும் கருணையும் ஆதரவும் அளிப்பவர்களாக மனித நேயத்துடன் பழக வேண்டும்...இதை, சுயநலத்தையே முதன்மைப்படுத்தும் தமிழ் சமூகம் முக்கியமாக கருத்தில் கொள்வது சிறந்தது...! :twisted: Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
தன்னம்பிக்கை இழந்தவர்களே தற்கொலைக்குத் துணிகிறார்கள்

குழந்தைப் பருவம் தொடக்கம் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கவேண்டும். சிறுவயதில் அவர்கள் செய்யும் காரியங்களில் பிழையிருப்பினும், அவர்களால் முடியாது, அவர்களுக்கு தெரியாது விளங்காது என அவர்களை ஊக்குவிக்காது தாழ்வுமனப்பான்மையை திணிப்பதன் விளைவு வளர்ந்தபின் தற்கொலையில் முடிகிறது

குழந்தைகளை திட்டவும் கூடாது அடிக்கவும் கூடாது Idea
எதையிழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது Idea
Reply
#11
Quote:குழந்தைகளை திட்டவும் கூடாது அடிக்கவும் கூடாது -

எங்கைய்யா 1984ம் ஆண்டுக்கு பிறகு யாழ்ப்பாணத்திலை பிள்ளையளை யார்தான் அடிச்சு வளத்திருக்கினம் கையை ஓங்கினாலே காணும் அடுத்தநாள் பெடியன் மிஸ்சிங்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
MUGATHTHAR Wrote:
Quote:குழந்தைகளை திட்டவும் கூடாது அடிக்கவும் கூடாது -

எங்கைய்யா 1984ம் ஆண்டுக்கு பிறகு யாழ்ப்பாணத்திலை பிள்ளையளை யார்தான் அடிச்சு வளத்திருக்கினம் கையை ஓங்கினாலே காணும் அடுத்தநாள் பெடியன் மிஸ்சிங்


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#13
என்ன வெண்ணிலா யோசனையை பார்த்தால் நீங்களும் மிஸ்சிங் போலை கிடக்கு
அப்பு ஆச்சியை தவிக்க விடாதையம்மா .அவை உங்களுடைய நல்லதுக்குதான் சொல்லுகினம் பிள்ளை.
குருவியாரின் ஆழ்ந்த கருத்துக்கள் நிதர்சனமானவை. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியமிருந்தால் அவன் சரித்திரமாகிவிடுவான். தைரியமில்லாவிட்டால் அவன் தரித்திரமாகிவிடுவான்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#14
depression என்று சொல்லப்படுகின்ற மனஅழுத்த நோயினால் பாதிக்கப்படுவோர் அதிகம் பேர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் எண்ணகொண்டவராய் உள்ளனர். இந்த மனஅழுத்த நோய் 10 பேரில் ஒருவருக்கு இருப்பதாக கணிப்பீடுகள் சொல்கின்றன. பொருளாதார சமூக காரணிகளும் உடல் கூற்று பரம்பரை அலகு காரணிகளும் நிர்ணயிக்கின்றன.சராசரி வாழ்வு உள்ளவர்கள் கூட ஏதாவது சிறிது வீதம் உள பிறழ் வடைந்தவர்களாக காணப்படுவார்கள் இதில் படித்தவர்கள் பெரும் கல்விமான்கள் பெரும் தலைவர்கள், அறிஞர்கள் விதிவிலக்காக மாட்டார்கள் .கல்வி பொருளாதர ரீதியில் முன்னேற்றமடைந்தாலும் உளரீதியாக ஆரோக்கியமடைந்தவர்களாக இல்லாவிட்டால் அந்த சமூகம் முன்னேற்றகரமானது கொள்ள முடியாது. so call படித்தவர்கள் கூட உயர்வு மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை தன்னைப்பற்றி தவறான பிரமை போன்ற உளநோய்களால் பீடிக்கப்பட்டு பலர் உள்ளனர். இந்த சந்தரப்பத்தில் ஒன்று நினைவுக்கு வருகிறது ஜெயகாந்தன் கதையில் வரும் ஒரு ஆசிரிய பாத்திரம் தன்னை பல பெணகள் தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொணடு ஒருவருக்கு சொல்லுவார் --என்னை six girl love பண்றாங்க சார் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை யென்று--------ஆனால் அவரை உண்மையில் யாரும் அவரை லவ் பண்றமுயற்ச்சியில் ஈடுபடவில்லை அவராக கற்பனை செய்து கொணடது இப்படி பல வகையான வித்தியாசமான சின்ன சின்ன உளப்பிறழ்வுகளுடன் சராசரி மனிதரகள் கூட வாழ்ந்து வருகிறார்கள்.உளபிறழ்வு முற்றிய நிலைய அடைந்தவர்கள் மனஅழுத்தம் முற்றிய நிலையை அடைந்தவர்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தையுடையவராகிறார்கள்
Reply
#15
தற்கொலை என்ற எண்ணம் அனைத்து மனித உள்ளத்திலும் என்றோ ஒரு நாளாவாது உதிக்கும் என உளவியளாளார்கள் கூறுகிறார்கள்.....அதற்காக அவர்கள் தற்கொலை செய்வார்கள் என்றில்லை ஆனால் அனைத்து மனித உள்ளத்திலும் உருவாகக் கூடி எண்ணம் தற்கொலை என்பது...நிச்சயமாக ஒருவர் தற்கொலை செய்யப் போகிறார் என்றால் அதற்குரிய அறிகுறிகளை அவர் அவரை அறியாமலே வெளிப்படுத்துவார் எனவும் அதை உன்னிப்பாக் கவனித்தால் நிச்சயமாக அந்த அறிகுறிகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் உளவியளாளர்கள் கூறுகிறார்கள்.....என்ன பிரச்சனை என்றால் கூடுதலான தற்கொலையாளர்களை நாம் இலகுவில் அடையாளம் காண்பதில்லை காரணம் எமக்கு நெருங்கியவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை தான்...அது தான் எமக்கு நெருங்கியவர்கள் தற்கொலை செய்யும் போது எமக்கு அளவிட முடியாத வியப்பைக் கொடுக்கிறது....என்னடா இது இவளா..இவனா இப்படி செய்தது என நினைக்கின்றோம்....
தற்கொலை என்பது திட்டமிட்டு செய்யப்படும் செயல்....
இதைத் தடுப்பது என்பது இலகுவானது அல்ல...ஒருவர் ஒரு முறை தற்கொலை செய்து தோற்றுவிட்டால் அவர் நிச்சயமாக இன்னுமொருமுறை அதை நிறைவேற்றியே தீருவார்..அதனால் ஒன்று அந்த நபர் தற்கொலை செய்ய தூண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்கவேண்டும் தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்...அல்லது மனம் திறந்து உளவியளாளர்களிடம் பேச வேண்டும்.....
" "
" "

Reply
#16
shanmuhi Wrote:தங்கள் கருத்துக்கு நன்றி தமிழினி.

மேலும் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படும்போது... தனிமையில் தள்ளப்பட்டு தவிக்கும் போது இப்படியான தற்கொலை முயற்சிகள் தூண்டப்படுவதற்கு ஏதுவாக அமைந்து விடுகிறது.
நட்பு, கலந்துரையாடல் நல்ல தீர்வைக் கொடுக்கும் என்றும் நினைக்கின்றேன்.

தனிமை தான் இதற்கு சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அதை தவிர்த்தாலே தற்கொலையை தடுப்பது போல் தான்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#17
தனிமை தான் இதற்கு சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுக்கிறதா இல்லை இந்த எண்ணம் வந்ததால் தனிமையை நாடுகிறார்களா?...அதனால் தனிமையைத் தவிர்ப்பதில் மட்டும் தற்கொலையை நிறுத்த முடியாது என நினைக்கிறேன் மதன் அண்ணா......
" "
" "

Reply
#18
மழலை சொல்லுறதுதான் சரி

!
Reply
#19
kuruvikal Wrote:மனிதன் ஒரு சமூகப் பிராணி..... ஒவ்வொரு தனி மனிதனும் உறவு நிலைக்கப்பால்.... இன்னொரு தனி மனிதன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அன்பும் கருணையும் ஆதரவும் அளிப்பவனாக இருக்க வேண்டும்...இதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படை....இவை இழக்கப்படுதலே...தனி மனித மன விரக்தியின் பாலான தற்கொலைகளுக்கு முக்கிய காரணம்...!

தற்கொலைக்கான காரணிகளில் பாரம்பரியமும் உள்ளடக்கப்படுகிறது.... அது மூளை சார்ந்த உளவியல் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது... ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனுடைய மன வலிமை என்பது மாறுபடுகிறது...மற்றவர்களின் மனவோட்டங்களை அவதானித்து அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பழகும் நிலை அவசர உலகம் என்ற தொனியில் கைவிடப்பட்டுவருகிறது...!

தற்கொலை அதிகரிப்பென்பது இன்று உலகளாவிய பிரச்சனை... இதற்கான தனி நபர், சமூக மற்றும் உடற்கூற்றுக் காரணிகளில் பின்வருவன பிரதானமானவை....

1. பாரம்பரிய மற்றும் மூளைசார் நோய்கள் தொடர்பிலான உளவியல் பிரச்சனைகள்,உளப்பலவீனம்..!

2. கடும் நோய்த்தாக்கமும் தாங்க முடியாத உள உடல் வலிகள்

3. சமூகவிரோத சிந்தனைகளும் செயற்பாடுகளும்

4. வேலையில்லாப் பிரச்சனை

5. சமூத்தினால் தனிமைப்படுத்தப்படல்

6. திருமணம் செய்யாது தனித்திருத்தல்

7. பெற்றோருடன் அல்லது துணையுடன் அல்லது நம்பிக்கைகுரியவர்களுடன் எழும் மனத்தாக்கம் தரவல்ல பிரச்சனைகள்

8. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் எழுதும் உயர் மன அழுத்தம்

9. தற்கொலைக்கு மற்றவர்களால் தூண்டப்படல்

10. சமூகத்திடம் அல்லது தாம் சார்ந்தோரிடமிருந்து அன்பு, கருணை, ஆதரவு கிடைக்காத நிலையில் எழும் விரக்தி.

(ஆதாரம் - http://www.samaritans.org/know/information...cide_sheet.shtm )

இதில் ஒரு விடயத்தை கவனித்தால் தற்கொலைக்கான தூண்டுதலில் குறித்த தனி நபரைவிட அந்த நபர் சார்ந்த சமூகத்தின் ஆதிக்கமே அதிகம் என்பது தெளிவு...! எனவே சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இயன்றவரை மற்றவர்களின் மீது அன்பும் கருணையும் ஆதரவும் அளிப்பவர்களாக மனித நேயத்துடன் பழக வேண்டும்...இதை, சுயநலத்தையே முதன்மைப்படுத்தும் தமிழ் சமூகம் முக்கியமாக கருத்தில் கொள்வது சிறந்தது...! :twisted: Confusedhock: Idea


தற்கொலையை தூண்டும் காரணிகள் பற்றி விளக்கமாக சொன்ன குருவியண்ணா தற்கொலை செய்ய இலகுவான வழிமுறைகளையும் சொன்னால் வசதியாக இருக்குமே. அதற்காக முயலின் தற்கொலை முயற்சியை பார்க்க சொல்லுறேல்லை. சரியாண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
----------
Reply
#20
Quote:தற்கொலையை தூண்டும் காரணிகள் பற்றி விளக்கமாக சொன்ன குருவியண்ணா தற்கொலை செய்ய இலகுவான வழிமுறைகளையும் சொன்னால் வசதியாக இருக்குமே. அதற்காக முயலின் தற்கொலை முயற்சியை பார்க்க சொல்லுறேல்லை. சரியாண்ணா
என்ன தங்கையே.. உதுகள் எல்லாம் எதுக்கு ஆஆஆஆஆ? :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)