Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெஞ்சம் மறக்குமா
#1
எம் தமிழீழ எழுச்சிபாடல் வரிகளை இங்கே எழுதலாம். அந்த பாடலின் வரலாறையும் மறவாமல் தெரிந்தால் எழுதுங்கள்.

முதல் பாடலாக எனை மிகவும் கவர்ந்த என்று சொல்வது தவறு....என்னை என்னாக்கிய ஒரு பாடல். எழுத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.




நெஞ்சம் மறக்குமா * 3

வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை நெஞ்சம் மறக்குமா


குமரப்பா
புலேந்தி
அப்துல்லா
ரகு
நளன்
பழனி
மிரேஸ்
ரெஜினால்
தவக்குமார்
அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்

அன்பழகன்
கரன்
ஆனந்தகுமார்...


எங்கள் தலைவர்கள்
எங்கல் வீரர்கள் இவர்கள் அல்லவா
கண்கள் மூடி
எங்கள் புலிகள் மாண்ட
கதையை சொல்லவா?

தங்க தமிழ் ஈழ விடுலைகாண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள, இந்திய அரசின் சதியால்
நஞ்சை குடித்தாரே

வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...


ஈழதமிழன் தமிழீழ கடலில்
போனால் பிடிப்பானாம்
இந்திய உதவி கொண்டே
தமிழனின் வாழ்வை முடிப்பானாம்

ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே

ஆழகடலில் போன புலிகளை
பிடித்து சென்றாரே
அழகும், இளமையும்
பொங்கும் வயதில் துடிக்க கொன்றாரே

வல்வெட்டி துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
12 புலிகள் ஒன்றாய் படுத்ததை
நெஞ்சம் மறக்குமா....
படுத்ததை...நெஞ்சம் மறக்குமா...
[b][size=15]
..


Reply
#2
நல்ல முயற்சி தூயா தொடருங்கோ எனக்கு தெரிஞ்ச பாடல் வரிகளை நானும் எழத முயற்சிக்கிறேன்
. .
.
Reply
#3
என்ன ஒருவருமே பாட்டு எழுதவில்லை? தெரியாதா?
[b][size=15]
..


Reply
#4
தூயா சிறந்த முயற்சி.
நேரமின்மை காரணமாக அடுத்த கிழமை நானும் பாட்டு எழுதவாறன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#5
¦¾Ã¢Ôõ «Éø þòÄ ±Ö¾ ±ýÉÌ ¼Á¢ø ¸ºðÁ þÕÌ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
ஓஓஓஓ..
மெதுவாய் மெதுவாய் துடி இருதயமே
தூங்கும் என் தோழன் தூங்கட்டும்
சுகமாய் சுகதாய் தொடு மழைத்துளியே
குமரவேல் அமைதியாய் உறங்கட்டும்
காங்கேசன்கடற்தாயே இதமாகத் தாலாட்டு
என் தோழன் தூங்கட்டும் கனவுகள் வாழட்டும்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே
நட்பின் பொருளும் நீயே
நீ காலம் வளர்த்த தீயே
முதலாய் மனதில் வந்தாய்
உன் முடிவில் பாடம் தந்தாய்
நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே
கரை தேடி வருகின்ற அலைகள்
கால் சோர்ந்த ஓய்வதுமில்லை
உனைத்தேடி அழுகின்ற மனதில்
சிறு சோர்வு வந்ததுமில்லை
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே

ஒற்றைப்பனை மர நிழலில்
நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்
ஒரு குவளைத் தேனீர் தன்னை
சண்டை போட்டே இருவரும் குடித்தோம்
ஒற்றைப்பனை மர நிழலில்
நாம் இருவரும் ஒன்றாய் அமர்ந்தோம்
ஒரு குவளைத் தேனீர் தன்னை
சண்டை போட்டே இருவரும் குடித்தோம்
மிதிவண்டிப் பயணத்தில் கதை நூறு சொன்னாயே
ஆகாயம் அது தாண்டிப் பல கனவு காண்பாயே
தலைவலி காய்ச்சல் எதுவந்த போதும்
முதல்வரும் மாத்திரை நீ தானே
தலைவனின் பிள்ளை தளர்வதே இல்லை
செயல் மொழி சொன்னதும் நீ தானே


மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்
இரகசிய அழுகைகள் பார்த்தேன்
ஊரவர் பசியை அறிந்து-நீ
உண்ண மறந்தாய் வேர்த்தேன்
மழை ஒழுகும் வீடுகள் நினைவில்-உன்
இரகசிய அழுகைகள் பார்த்தேன்
ஊரவர் பசியை அறிந்து-நீ
உண்ண மறந்தாய் வேர்த்தேன்
என் மக்கள் என் மக்கள்
மனப்பாடம் செய்வாயே
எம் மக்கள் உயிர்காத்து
உன்னுயிரை மாய்த்தாயே
அசைகின்ற காற்றும் விழுகின்ற மழையும்
இருக்கின்ற வரையும் நீ வாழ்வாய்
நமக்கொரு நாடும் இனிதொரு மொழியும்
மீட்கின்ற வரையும் நாம் ஓயோம்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே
நட்பின் பொருளும் நீயே
நீ காலம் வளர்த்த தீயே
முதலாய் மனதில் வந்தாய்
உன் முடிவில் பாடம் தந்தாய்
கரை தேடி வருகின்ற அலைகள்
கால் சோர்ந்த ஓய்வதுமில்லை
உனைத்தேடி அழுகின்ற மனதில்
சிறு சோர்வு வந்ததுமில்லை
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்
விடிவினைத்தேடிடும் எங்களின் பயணமும்
நினைவுகள் துணையுடன் தொடரும்

நெஞ்சம் முழுதும் நீயே
என் நினைவும் கனவும் நீயே
கண்ணில் காட்சி நீயே
என் கால்கள் உன்வழியே


[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#7
கடற்கரும்புலிகள்-7
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#8
மாவீரர் நினைவாக என் மனம்கவர்ந்த பாடல்.

<img src='http://img144.imageshack.us/img144/8626/g3bp.jpg' border='0' alt='user posted image'>

மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.
(மானம் ஒன்றே)

உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா??
அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில் ஆட்சி விடுப்போமா??
(மானம் ஒன்றே)

பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார் பகையாளர்
எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.
(மானம் ஒன்றே)

களத்தில் வீழும் வேங்கைகள் ..... கல்லில் உறைவார் கலையாக..
அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக...
(மானம் ஒன்றே)

தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன.. தலைவன் ...... தப்பாது..
நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்
(மானம் ஒன்றே)

* ஒரு சில வார்த்தைகள் தப்பாக இருந்தால் திருத்தி விடவும் :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை

பாடும்பறைவகள் வாருங்கள்
புலி வீரன் திலீபனைப் பாடுங்கள்
யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம்
காலங்கள் பாடுங்கள்
(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது
நீதிக்கு சோதனை தந்தது
நாங்கள் சிந்திய ரத்தங்கள்
காய்ந்திடும் முன்னரே கால்களில்
வீழ் எனச் சொன்னது
வேங்கைகள் இதை தாங்குமா
குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?
வீரன் திலீபன் வாதாடினான்
பசி தீயில் குதித்து போராடினான்


வாயில் ஒருதுளி நீரதும் இன்றி வாசலில் பிள்ளை கிடந்தான்
நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது ஆணவத்தோடு நடந்தான்
சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது
பார்த்து மகிழ்ந்தது ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம்

அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் - எங்கள்
மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்
துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது
நெஞ்சினில் ரத்தம் வழிந்தது உந்தன் ஒப்பந்தம் இங்கு கிழிந்தது
(பாடும்பறைவகள்.................
----------
Reply
#10
தீயினில் எரியாத தீபங்களே

தீயினில் எரியாத தீபங்களே - நம்
தேசத்தில் உருவான ராகங்களே
தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்
தரணியில் காவிய வடிவெடுத்தீர்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே
தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே
தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே
புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்
பாதகர் உயிர்களை முடித்தீரே
இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்
இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!

இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்
இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்
விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்
ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்

மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#11
ஈழம் அமைப்பதற்கே இலங்கைத் தீவைப் படைத்து வைத்தேன் !

வானில் இருந்து கொண்டே வரலாற்றை எழுதி வைத்தேன் !

கார்த்திகைப் புூக்களையே கதை சொல்ல அனுப்பி வைத்தேன் !

காத்திருக்க நேரமில்லை கடமை செய்ய எழுந்திடுவீர் !


தர்மம் அழிவெய்தும் காலத்தில் நான் பிறக்கின்றேன் !

ஒவ்வொரு தேசத்திலும் விடுதலைக்காய் நான் புூக்கின்றேன் !

உலகம் வாழ்வதற்கே உன்னுயிராய் நான் தவழ்கின்றேன் !

மண்ணாய் மானிடமாய் மாவீரர் துயிடமாய் வாழ்கின்றேன் !

ஓம் ! ஓம் ! ஓம் !



மண்ணுக்கு விடிவுதர மண்ணுக்குள் துயில்பவரே !

மண்மீட்டு வெற்றிதர மாவீரர் ஆனவரே !

கண்ணுக்குள் தெரிகின்ற தமிழீழம் காத்தவரே !

காலத்தால் அழியாத கதையெழுதிப் போனவரே !



தன்னுயிரை மதிக்காது மன்னுயிரை வாழவைத்தான் !

இன்னுயிரை தந்துவிட்டே இமைமூடித் து}ங்குகிறான் !

அண்ணன்தம்பி தோழருடன் வானுலகில் நடக்கின்றான் !

ஈழம்வெல்ல வேண்டுமென்றே இமைதிறந்து பார்க்கின்றான் !



கல்லறையின் புூக்களெல்லாம் காற்றினிலே கலகலக்கும் !

கண்ணீரின் துளிபட்டே மறுபடியும் சிலுசிலுக்கும் !

அன்னைதந்தை உறவெல்லாம் அழுதபடி காத்திருக்கும் !

மாவீரன் வருவதற்கே வழிநெடுக சுடரேற்றும் !



வீசுகின்ற காற்றினிலே உம்மூச்சே பாட்டிசைக்கும் !

ஈரமுள்ள மழைத்துளியில் உம்நெஞ்சே கரைந்திருக்கும் !

ஆசைமுகக் குழந்தையிலே உன்முகமே மறைந்திருக்கும் !

பேசுகின்ற மழலையிலே உன்தமிழே நிறைந்திருக்கும் !



சங்காரம் செய்யவந்த சங்கரனே நீ வாழ்க !

சங்கரிலே தொடங்கிவந்த சரித்திரமே நீ வாழ்க !

அண்ணனிலே அடியெடுத்த அருமைத்தம்பி மாவீரா !

வண்ணநிலா ஒளிவீச வந்திடுவாய் முதல் வணக்கம்!
Reply
#12
<img src='http://img357.imageshack.us/img357/8158/paddu8ns.gif' border='0' alt='user posted image'>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#13
[b]தளராத துணிவோடு களமாடினாய்

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ இந்தி
அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது
தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது
தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய்
தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது (2)
கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது (2)
இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது
உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

சிங்களத்துப் படைகளோடு போராடினாய் (2)
வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் (2)
பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் (2)
இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் (2)

தளராத துணிவோடு களமாடினாய்
இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்
அழகான திருமேனி தணலானதோ
இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#14
<b>நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு
அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு

ஆஆஆஆஆ

வலையை வீசடா கடல் அழகைப் பாரடா
கடற் புலிகள் தந்த வாழ்க்கை என்று வாழ்த்துப்பாடடா

நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று


காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
நாங்கள் கரை ஏறுமட்டும் பாத்திருப்பார் பெண்கள்
வேங்கைகளை நம்பி இங்கு தூங்குதவர் கண்கள்

இந்த ஊரறியாதெங்கள் வேதனை
நாங்கள் உண்பதற்க எத்தனை சோதனை சோதனை


நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று


பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை
பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதைய்யா ஏன்திரும்பவில்லை
சிங்களத்துப் பேய்களினால் பிள்ளை உயிர்போச்சு
சந்ததிக்கு வாய்த்த உடல் மீனிற்கு இரையாச்சு

இது சோகங்கள் தாங்கிய தேகங்கள்
இன்று சொந்தங்கள் தந்தார் சந்தோசங்கள்


நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று


அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
அச்சமின்றி கடலில் ஏறி வாழவைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்
போரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்த உலகில்

நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள்
பிரபாகரன் காலத்தை பாடுங்கள் பாடுங்கள்


நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்ப நிலை ஆச்சு
அலைமீது ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு
நீலக்கடல் ஏறி வந்து மேனி தொடும் காற்று
வான் மீதுநிலா பால் சொரியும் நேரம் வலை ஏற்று</b>


கடலிலே காவியம் படைப்போம் பாடற் தொகுதியில் உள்ள பாடல்.

பாடலைக் கேட்பதற்கு கீழுள்ள இணைப்பிற்கு செல்லவும், அதில் மூன்றாவது தெரிவு.

http://www.eelasongs.com/songs/kadalilaeka...iyampadaippoam/
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#15
அருவி அருமை. தொடருங்கள்.. "தளராத துணிவோடு" என்னை இன்றும் அழ வைக்கும் பாடல்... உணர்ச்சிகள் ஆறாக ஓடும்...
[b][size=15]
..


Reply
#16
<b>சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு
முட்டும் பகையைத் தட்டிக்காட்டு
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
எங்கே தலைவா தடைகள்காட்டு
ஆணைபோட்டு வழியைக்காட்டு
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு
முட்டும் பகையைத் தட்டிக்காட்டு
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
எங்கே தலைவா தடைகள்காட்டு
ஆணைபோட்டு வழியைக்காட்டு
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு
அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு
எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு
புயலாய்ப் படைகள் விரையட்டும்
துகளாய்த் தடைகள் சிதறட்டும்
இடரும் துயரும் முடியட்டும்
தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)

ஈகத்தில் பூரித்து வாழும் தென் தமிழீழம்
உயிரெங்கள் தமிழென்று வாழ்வோம் வாழ்வே பொற்காலம்
காடென்ன கடலென்ன எங்கள் பயணம் உயிரோட்டம்
கனவுக்குள் உணர்வுக்குள் தேச உறுதிக்கொடியேற்றும்
உரிமைமைதானே உயிரிலும் மேன்மை சொல்லிச் சொல்லி வளர்த்தாயே
ஓய்வு என்பது எங்களின் வாழ்வில் இறந்த பிறகு என்றாயே
விரையும் நெஞ்சில் பயமில்லை பிரிவு என்றும் தடையில்லை
விடியும் வரையும் ஓய்வில்லை எங்கும் நாம் செல்வோம்

(சொட்டும் விரலால்.....)

தேசத்தை நேசிக்கும் காற்றை நாங்கள் சுவாசிப்போம்
வீரத்தை பூசிக்கும் உயிராய் நாங்கள் சீவிப்போம்
காலத்தின் ஆழத்தில் நின்று வாழ்வைத் தியானிப்போம்
கல்லறை வீரரை நெஞ்சில் தாங்கிப் பயணிப்போம்
உந்தன் வாழ்வின் காலத்தில் தலைவா எங்கள் விடுதலை வரவேண்டும்
உன்னைப்போல தலைமை எங்கள் வாழ்வில் வருமா நீ வேண்டும்
எத்தனை குண்டுகள் கொட்டட்டும் எத்தனை உயிர்களைக் கொல்லட்டும்
எப்படி வந்தும் முட்டட்டும் எதிலும் நாம் வெல்வோம்

சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு
முட்டும் பகையைத் தட்டிக்காட்டு
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
எங்கே தலைவா தடைகள்காட்டு
ஆணைபோட்டு வழியைக்காட்டு
எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்
அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு
அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு
எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு
புயலாய்ப் படைகள் விரையட்டும்
துகளாய்த் தடைகள் சிதறட்டும்
இடரும் துயரும் முடியட்டும்
தேசம் விடியட்டும்

(சொட்டும் விரலால்.....)</b>


இசைத்தட்டு - வெல்லும் வரை செல்வோம்
பாடலாசிரியர் - கலைப்பருதி
பாடலிசை - இசைப்பிரியன்
பாடியவர் - ரி. எல். மகாராஜன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#17
<b>கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்
எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்
மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்
இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்
காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்
காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை
நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்
காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்
ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்</b>

பாடல் இசைத்தட்டு: வரும்பகை திரும்பும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#18
<b>கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
பள்ளிக்கூடங்கள் அகதியானது
படிக்கும் பாடங்கள் அழுகையானது
அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்
அகதி முகாமில் அழுகின்ற விளக்கில் படிக்கிறோம்
ஆளுவோரின் கத்தி
கீறக்குருதி வரும் துடிக்கிறோம்
ஆளுவோரின் கத்தி
கீறக்குருதி வரும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன
உப்பு நீரினால் விழிகள் நனைந்தன
குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன
உப்பு நீரினால் விழிகள் நனைந்தன
வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்
வானத்தில் விளக்கு வருமென்று நினைத்து நடக்கிறோம்
வாசலில் வெடிக்கும் குண்டு
ஆசைகள் கருகும் துடிக்கிறோம்
வாசலில் வெடிக்கும் குண்டு
ஆசைகள் கருகும் துடிக்கிறோம்

கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்
வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்
திட்டமிட்டுப்பல சதிகள் தீட்டினர்
வெட்டி வீழ்த்திட வழிகள் காட்டினர்
கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே
கனவுகள் கிழிந்து தரையினில் கிடந்து துடிக்குதே
எதிர்காலத்தின் கழுத்தை
பேரினவாதம் நெரிக்குதே
எதிர்காலத்தின் கழுத்தை
பேரினவாதம் நெரிக்குதே

கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்

புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன
செத்தவர் முகமே அருகில் தெரிந்தன
புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன
செத்தவர் முகமே அருகில் தெரிந்தன
போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்
போருக்கு படிப்பா படித்திட போற கேள்விகள்
பதில் ஊருக்கு தெரிந்தால்
இனியும் அணுகுமா தோல்விகள்
பதில் ஊருக்கு தெரிந்தால்
இனியும் அணுகுமா தோல்விகள்

கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்
கல்வியும் எங்கள் மூலதனம்
அதில் கத்தி வைக்கிறது ஆளும் மனம்</b>

பாடல் இசைத்தட்டு: விடியலைத்தேடும் பறவைகள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#19
<b>நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே
நெருப்பாகும் - எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே
மூத்தமகன் கிட்டு அவன் தோழர்
குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன்
றொகானுடன் நாயகன் தூயவன்
நல்லவன் அமுதனும் இந்திய துரோகத்தால்
கனலான செய்தியில்
நெஞ்சிலே ரத்தம் கொட்டும்
நினைவே நெருப்பாகும் - எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே
எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்
நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

உலக கடற்பரப்பில் இந்தியப் பேயாட்சி
உண்மையைத் தின்னுமா? உலகம் மௌனமாகுமா?(2)
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தாயகப் பயணத்திலே தம்பி கிட்டு தோழருடன்
தியாக வேள்வியிலே தணலாகப் போகையிலும்(2)
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

வானும் கடற்பரப்பும் உலகமதும் உள்ளவரை
தாயகத் தாகம் தணிவதில்லை எந்த
தடையிலும் பயணம் நிற்பதில்லை(2)

எங்கள் தம்பி கிட்டு தோழர் மீது ஆணையம்மா
எங்கள் தம்பி கிட்டு தோழர் தேசம் நாளைம்மா

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்
நினைவே நெருப்பாகும் - எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே</b>

பாடல் இசைத்தட்டு: அழியாத சுவடுகள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#20
அருவி Wrote:கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்
நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)
கடலம்மா.....
.

பாடல் வந்தகாலப்பகுதியில் இப்பாடலைக் கேட்கும்போ உண்மையில் எனக்கு மனது கனப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)