07-05-2005, 02:48 AM
<b>போர்நிறுத்தக் காலம் !!</b>
மூன்றாண்டு முடிந்திருக்கும் போர்நிறுத்தக் காலம்:
முடிவிலாது தொடர்வதுவோ முறைகேட்டின்; காலம்....
தான்தோன்றித் தனமான சதிகளின் பொற்காலம்...
தமிழனுக்கு என்றுவரும் நல்லதொரு காலம்?...
சண்டைதனை நிறுத்திடலாம் என்பதொரு சாக்கில்,
சமாதானம் கொண்டுவந்தார் தென்னிலங்கை நாட்டில்!
இன்றுவரை மாற்றமில்லை சிங்களனின் போக்கில் -
எந்தவொரு பயனுமில்லை அமைதியென்ற பேச்சில்!
அமைதியெனும் பேர்தனிலே ஒப்பந்தம் செய்தார்:
அருந்தமிழர் அழியத்தான் தீப்பந்தம் செய்தார்!
மமதையுடன் நமக்கெதிராய்ச் சதிவலைகள் நெய்தார்:
மாமடையர் ஒருபோதும் அமைதிநிலை எய்தார்!
சாவடிகள் அமைக்கின்றார், காவல்என்ற பேரில்:
சதிசெய்து மிரட்டுகின்றார் தமிழர்தமை நேரில்:
நாவடக்கம் அற்றகுலம் நாம்பிறந்த ஊரில்
நமையடக்க வந்ததுபார்! தமிழ்க்குலம் கண்ணீரில்!
இடையிடையே படையினர்தம் கைவரிசை கண்டோம்:
எழுத்துலக மறவர்தமை இழந்து தவிக்கின்றோம்:
உடைமைமீட்க வழிகளின்றி உள்ளமெலாம் வெந்தோம்:
உமிகளைப்போய் நெல்மணிகள் எனநினைத்துக் கொண்டோம்!
நமதில்லம் காணியெலாம் இன்னொருவன் பேட்டை -
நம்வீட்டு முற்றத்தே அந்நியனின் கோட்டை -
எமைவளர்த்த பூமியெங்கும் எமதர்மன் மேடை -
எமதுதமிழ்த் திண்ணைகளில் காடையனின் வாடை!
வெட்டவெளிப் பொட்டலிலும் வெறியர்களின் கொட்டம்:
வீதிதொறும் தீதுதரும் சிப்பாய்கள் வட்டம்:
மட்டரகப் பிக்குகளின் மழுங்குமதிச் சட்டம்:
மனிதநேயப் படுகொலையின் உச்சநிலைக் கட்டம்!
இதன்பெயர்தான் அமைதியென்று எப்படிநாம் சொல்வோம்?
இதுதொடர்ந்தால் நம்குறையை யாரிடம்போய்ச் சொல்வோம்?
மதம்பிடித்த மதவெறியை எங்ஙனம்யாம் வெல்வோம்?
மானமோடு சுதந்திரத்தின் தடத்தில்என்று செல்வோம்?...
சீர்திருத்தம் என்பதெலாம் சிங்களர்க்குத் தானோ?
செந்தமிழன் காலமெல்லாம் கொத்தடிமை தானோ?
போர்நிறுத்தம் என்பதெலாம் கண்துடைப்பு தானோ?
பொறுமைகாக்கும் தமிழன், இனி பொங்கியெழத் தானோ?
வெங்கொடுமை விட்டுவிட்டுத் தொடருகின்ற தம்மா!
விதவிதமாய்ச் சூழ்ச்சிகளும் படருகின்ற தம்மா!
அங்குமிங்கும் தமிழ்உயிர்கள் நித்தம் வீழுதம்மா!
அமைதியெனும் சொல் இருந்து என்ன வாழுதம்மா?;
தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)