Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலியும் அமெரிக்காவும்....!
#1
புலிகள் மீதான தடையை நீட்டித்தது அமெரிக்கா

வாஷிங்டன்:
விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட 25 அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.

1997ம் ஆண்டில் இந்த அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்கா அறிவித்து, இந்த இயக்கங்களுக்கு அமெரிக்காவில் வசிக்கும் யாரும் எந்தவித உதவிகளையும் செய்யக் கூடாது என தடை விதித்தது. இந்தத் தடை 1999ம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. இந்த தடை இன்றுடன் (அக்டோபர் 3) காலவதியாகிறது.

இதையடுத்து இந்தத் தடையை அமெரிக்கா நேற்று மீண்டும் நீட்டித்தது.

எல்.டி.டி.ஈ தவிர பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ், காஷ்மீரில் இயங்கி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்ஏதொய்பா, ஜெய்ஷ்ஏமுகம்மத் ஆகிய அமைப்புகள் உள்பட 25 அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அறிவித்து தடையை நீட்டித்துள்ளது.

:evil: :twisted: :roll: :twisted: :evil:
----------------------------------------------------
தகவல் பிரதி எடுக்கப்பட்ட இடம் தற்ஸ் தமிழ் டொட் கொம்....உதவி சுரதாவின் பொங்குதமிழ்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)