Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?:
#1
அரசுக்கு விடுதலைப் புலிகளின் 2 வார கெடு ஏன்?: தமிழ்ச்செல்வன் விளக்கம்
சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 2 வார காலக்கெடு விதித்துள்ளது ஏன் என்பது குறித்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.


கிளிநொச்சியில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர், சிறிலங்காவிற்கான நோர்வே பிரதித் தூதுவர் ஆகியோரை இன்று தமிழ்ச்செல்வன் சந்தித்தார்.

இச்சந்திப்புக்குப் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630010.JPG' border='0' alt='user posted image'>


கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரையும் அனுசரணையாளர்கள் என்ற வகையில் நோர்வேயின் சிறிலங்காவிற்கான பதில் தூதரையும் சந்தித்தோம்.

அண்மையில் போராளிகள், பொறுப்பாளர்கள் பயண ஒழுங்குக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூறி எமது போராளிகளைச் சதிவலைக்குள் சிக்கவைத்து கொல்வதற்கு எடுத்த முயற்சி தொடர்பாகத்தான் தான் இன்றைய சந்திப்பில் விவாதித்தோம்.

இது தொடர்பாக எமது தலைமைப் பீடத்தின் இறுக்கமான நிலைப்பாட்டையும் அதிருப்தியையும் தெரிவித்திருக்கிறோம்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் தொடருமானால் தொடர்ந்து இந்த போர் நிறுத்தச் சூழலை தக்க வைப்பதோ யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு ஏற்ப நாம் நடந்து கொள்வதோ சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறும்.

<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630006.JPG' border='0' alt='user posted image'>

எமது தலைமைப் பீடம் எடுத்திருக்கின்ற இறுக்கமான உறுதியான நிலைப்பாட்டை இன்றைய சந்திப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

எமது போராளிகள், பொறுப்பாளர்கள் பயணம் செய்கின்ற போது இராணுவ புலனாய்வு அமைப்பும் அவர்களின் துணையோடு இயங்கும் ஆயுதக்குழுக்களும் இணைந்து கொலை வெறித் தாக்குதல்களை செய்யப் போகிறார்கள் என்று ஏற்கனவே எமது புலனாய்வு அமைப்பு மூலம் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலை கண்காணிப்புக்குழுவினரிடம் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் எமது போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டு, பாதுகாப்பு சரியாக உறுதிப்படுத்தப்பட்டு அதன் பின்னர் கண்காணிப்புக்குழு, படைத்தரப்பு, அரசுத்தரப்பு ஆகியோரது முழு உத்தரவாதம் பெறப்பட்டது. இதன் பின்னர்தான் எங்கள் போராளிகளின் பயணம் நடந்தது.

பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் எச்சரிக்கப்பட்ட நிலையிலும் எமது போராளிகள் பயணம் செய்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தாக்குதல் நெருக்கடி நிலைகளை உருவாக்கும் தாக்குதலாக அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து எமது நிலையை நாம் இன்று விளக்கியிருக்கிறோம்.

சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிற எமது போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு வார காலம் நாம் கால அவகாசம் கொடுத்து இருக்கிறோம்.


<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630007.JPG' border='0' alt='user posted image'>

இனியும் உயிராபத்துகள் ஏற்படாது என்று சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் இருவார காலத்துக்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி எமது போராளிகள் எமது தாயகப் பிரதேசத்தில் எந்தவித ஆபத்துக்களும் இன்றி சுதந்திரமாக நடமாடலாம். அதை உத்தரவாதப்படுத்த வேண்டியது சிறிலங்கா படைத்தரப்பாகும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட இரண்டு தரப்பு என்ற வகையில் சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் படைத்தரப்பும் சிறிலங்கா அரசும்தான் போராளிகளின் பாதுகாப்ப்பை உத்தரவாதம் செய்யவேண்டும்.

எமது போராளிகள் பயணம் செய்கின்றபோது கண்காணிப்புக்குழுவும் இராணுவமும் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவித உயிராபத்துக்களும் ஏற்படாத உத்தரவாதம் எமக்கு தரவேண்டும்.

மாதாந்தம் இரு பயண ஒழுங்குகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630008.JPG' border='0' alt='user posted image'>

எமது போராளிகள், பொறுப்பாளர்கள் பயணம் செய்து எமது தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளாவிட்டால் நாம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை போணுவது சிக்கலாக இருக்கும்.

சிறிலங்கா படைத்தரப்போ அரசாங்கமோ இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையின் படி பயண ஒழுங்குகளை செய்யத் தவறினால், எமது போக்குவரத்துக்களை முடக்குமானால் எமது போராகளிளோ, பொறுப்பாளர்களோ வழமை போல அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் எமது போக்குவரத்துக்களை எப்படி முன்னெடுத்தோமோ அந்த நடைமுறைக்குள் இறங்குவதை தவிரவேறு வழியில்லை.

ஆகவே சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பேணவேண்டும். அமைதிவழியில் பிரச்சனை தீர்வு காணவேண்டும் என்ற அர்பணிப்பு இருக்குமானால் யுத்த நிறுத்த உடன்பாட்டில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.

இதில் இழுத்தடிப்புக்களை செய்து நிலைமைகளை மோசமடைய செய்வார்களானால் தொடர்ந்து பொறுமை காத்துக் கொண்டிருக்க முடியாது.

இன்றைய சந்திப்பில் எமது போராளிகளுக்கான பாதுகாப்பான பயணத்துக்குரிய பரிந்துரைகளையும் செய்திருக்கிறோம்.

<img src='http://www.eelampage.com/d/p/2005JUNE/20050630009.JPG' border='0' alt='user posted image'>

கேள்வி: போராளிகள் பயண ஒழுங்கிற்கு மட்டும்தான் இந்த கால அவகாசமா? அல்லது யுத்த நிறுத்த உடன்பாட்டை பேணுவதற்கான கால அவகாசத்தையும் விடுத்துள்ளீர்களா?

பதில்: போராளிகளின் பயண ஒழுங்குதான் இன்றைய சந்திப்பில் முக்கியமாக பேசப்பட்டது. போராளிகள் கொல்லப்படுகின்ற போது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் அற்ற விடயமாக உள்ளது.

எங்களுடைய போராளிகளின் பயணம் முடக்கப்படுகின்றபோது இராணுவத்தினுடைய போக்குவரத்தையும் முடக்கும் வழிவகையை கையாள நாம் நிர்பந்திக்கப்படுவோம். அப்படியானால் யுத்த நிறுத்த உடன்படிக்கை சீர்குலைவுக்கு உட்படும். அதேபோன்று யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்ட நடைமுறைகளை உறுதியாக வலியுறுத்தியுள்ளோம்.

யுத்த நிறுத்த உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்பு நிலையைக்கொண்டு வருவதற்கு உரிய நடைமுறைகள் தொடர்பாகவும் வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கு அரசும் படைத்தரப்பும் தீர்க்கமான முடிவு எடுக்க முயலவேண்டும். மக்கள் கொந்தளிப்பான நிலைக்குள் தள்ளப்பட்டு உள்ளார்கள். ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள்,வெகுஜனப் போராட்டங்கள் மூலம் தீர்வைத் தேடி முயற்சி செய்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையையும் இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

கேள்வி: இரண்டு வார கால அவகாசம் என்பது இன்றிலிருந்தா?

பதில்: இன்றிலிருந்து இரண்டு வார கால அவகாசம் கொடுத்து இருக்கின்றோம். இரண்டு வார கால அவகாசத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் சிறிலங்கா அரசு.

யுத்த நிறுத்த உடன்பாட்டை பேணுவதற்கு சிறிலங்கா அரசு தயாராக இருக்கிறதா? என்பதை அவர்கள் அறிவிக்க வேண்டும்.

நாம் புதிய கோரிக்கையை முன்வைக்கவில்லை. யுத்த நிறுத்த உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையையும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பேணப்பட்டு வந்த நடைமுறைகளையும் செய்யுமாறுதான் கேட்டுக்கொள்கிறோம்.

இராணுவப் பயணத்தை முடக்க நேரிடும்

கேள்வி: வாய்மொழி உத்தரவதாமா? எழுத்துப்பூர்வமான உத்தரவாதமா? எதைக் கேட்டுள்ளீர்கள்?

பதில்: இருவகையிலான உத்தரவையும் கேட்டு இருக்கிறோம். ஆகவே இது தொடர்பாக இரண்டு வார காலத்துக்குள் பதில் தரவேண்டும்.

இல்லாவிட்டால் நாம் வழமைபோன்று போக்குவரத்து ஒழுங்குகளை செய்யவேண்டும். பயணம் செய்கின்ற போது படைத்தரப்பு இடைமறித்து நெருக்கடிகளை கொடுக்குமாக இருந்தால் இராணுவத்தினரின் போக்குவரத்துக்களை முடக்கும் நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்படுவோம்.

இந்த நிலைமையை சுட்டிக்காட்டியுள்ளோம். இரண்டு வார காலத்துக்குள் இதற்கான முடிவை தருமாறு கூறியுள்ளோம். சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை பேணுவதா? இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

கேள்வி: யுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் இரண்டு வார காலம்தான் தற்போதும் கொடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: அப்படியும் நினைக்கலாம். எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு காலத்துக்குள் அதற்கான முடிவை கேட்டு இருக்கிறோம். இல்லாவிட்டால் எமது உறுதியான நிலைப்பாட்டை இரண்டு வார காலத்துக்குள் தெரிவிப்போம்.

நடைமுறைகளை நாம் விளக்கி கூறியுள்ளோம். எமது போராளிகள் முடங்கி இருக்க முடியாது. எமது போராகளிகள் சுதந்திரமாக நடமாட வேண்டும். எமது தளபதிகள், பொறுப்பாளர்கள் எமது தலைமைப்பீடத்துடன் அடிக்கடி கலந்துரையாட வேண்டும். ஒழுங்குபடுத்தல்களை செய்யவேண்டும். அல்லாவிட்டால் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உள்ள விடயங்களை பேணுவது எமக்கு சிக்கலாக இருக்கும்.

நாம் சுயமாக எமது பயணத்தை மேற்கொள்வது தவிர்க்கமுடியாது என்பதை இன்றைய சந்திப்பில் விளக்கியுள்ளோம்.

இரண்டு தேசங்கள்-இரண்டு அதிகார மையங்கள்

கேள்வி: பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்டதன் மூலம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசு ஏற்றிருப்பதாக அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது தொடர்பாக?

பதில்: அவர்கள் சொல்வதில் உண்மையிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் என்பது இன்று இருக்கின்ற அரசாங்கம் என்பதை நாம் நிராகரிக்க முடியாது.

ஆனால் இங்கு இரண்டு தேசங்கள் உள்ளன. ஆகவே தமிழர்களுடைய தேசம், தமிழர்களுடைய பிரதிநிதிகள் யார் என்பதை அரசு ஏற்றால் சரி.

இரண்டு தேசங்களில் உள்ள அதிகார மையங்களை ஏற்றுக் கொண்டதினால்தான் பொதுக்கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ஆகவே இரண்டு அதிகார மையங்கள் இருக்கிறது என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன். இதில் தவறு இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.

பொதுக்கட்டமைப்பை விரைந்து செயல்படுத்துக

கேள்வி: பொதுக்கட்டமைப்பு தொடர்பான வேலைத் திட்டங்கள் எப்போது தொடங்கும்?

பதில்: அது பற்றியும் இன்று சுட்டிக்காட்டினோம். முக்கியமாக கண்காணிப்புக்குழுத் தலைவரையும் நோர்வே அனுசரணையாளர்களையும் அழைத்ததன் நோக்கம் இன்றுள்ள பாராதூரமான நிலைமைகளை விளக்குவதற்காகத்தான்.

ஆகவே இன்றுள்ள நிலைமைகள் சீர் செய்யப்படாவிட்டால் எல்லாமே சீர்குலையும் என்பதுதான் இன்றுள்ள யதார்த்த நிலைமை. அதை இன்று நாம் வெளிப்படுத்தியதோடு பொதுக்கட்டமைப்பு நடைமுறைக்கு விரைவாக கொண்டு வரவேண்டும். ஒப்பம் இடுவதோ இணக்கப்பாட்டை தெரியப்படுத்துவதோ முக்கியமில்லை. இதை மக்கள் ஒரு போதும் நம்பப் போவதில்லை. மிகவிரைவில் பொதுக்கட்டமைப்பு வேலைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான சூழலை சிறிலங்கா அரசு விரைந்து உருவாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

கேள்வி: பொதுக்கட்டமைப்பு அங்கத்தவர் பெயர் விபரம் தெரியப்படுத்துள்ளீர்களா?

பதில்: விரைவில் கையளிக்கவுள்ளோம். ஓரிரு தினங்களில் எமது தாயகத்தின் மீள்கட்டுமானத்திற்கான நிதியத்தின் காப்பாளாராக செயற்பட போகின்ற உலக வங்கியோடு பேசவிருக்கிறோம். அப்பேச்சு முடிந்தபின் எமது நிலைப்பாட்டை அனுசரணையாளர்களுக்கு தெரிவிக்கவுள்ளோம்.

நிலைமைகள் சீரடைகின்ற போது முஸ்லிம்களுடன் பேச்சு

கேள்வி: பொதுக்கட்டமைப்பு தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுக்கள் நடத்தும் திட்டம் உள்ளதா?

பதில்: தற்போது உள்ள நிலைமைகளில் யுத்த நிறுத்த உடன்படிக்கையே நெருக்கடி நிலை அடைந்து செல்கிறது. கள நிலைமைகள் மோசம் அடைந்து செல்கின்றன. சிறிலங்கா அரசும் படைகளும் நெருக்கடி நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றனர். அவற்றுக்குள் தீர்வு காணவேண்டும்.

நிலைமைகள் சீரடைகின்ற போது முஸ்லிம் சமூகத்துடன் நாம் பேசுவோம். எமது தாயகப் பிரதேசத்தில் என்ன வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் முஸ்லிம் சமூகத்தை இணைத்து கொள்வதும் இணைந்து கொள்வதும் யதார்த்தம்.

கால ஓட்டத்தில் வேலை திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்ற போது முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை செய்வோம்.

கேள்வி: இராணுவத்தினரை தம்முடன் இணைந்து பணியாற்ற ஜே.வி.பி. அழைப்பு விடுத்திருப்பது தொடர்பாக?

பதில்: அது தொடர்பாக நீங்கள் ஜே.வி.பியை தான் கேட்கவேண்டும். சிறிலங்கா இராணுவம் எடுக்கிற முடிவில் சிறிலங்காவில் ஏற்படப்போகின்ற அரசியல் மாற்றங்களும் அடங்கியுள்ளன.





நன்றி புதினம்
----------
Reply
#2
இது குறித்து தலைநகரில் என்ன செய்தி அடிபடுகிறது..தெரிந்தவர்கள் எழுதுங்களேன்...மீண்டும் ஓர் யுத்தம் வெடிக்குமா....என்ன வகையான அறிகுறிகளை தென்னிலங்கை வெளிக்காட்டுகிறது..இவ்வறிவிப்புத் தொடர்பாக மக்கள் என்ன கருதுகிறார்கள்... என்பன குறித்து சொல்லுங்களேன்...!

தாயக மக்களின் உறவுகளின் நலனை நோக்கியதாக எதுவும் செய்யப்பட வேண்டும்..! மீண்டும் யுத்தமும் அழிவும் அதன் மீது சர்வதேச அழுத்தங்களும்.... சந்தர்ப்பவாத சிங்கள முஸ்லீம் தமிழ் ஆயுதக் குழு அரசியலும் வளர்வது அவசியமா...??! சிந்திக்க வேண்டிய நேரம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
மீண்டும் ஒரு யுத்தம் தமிழர் தரப்பால் ஆரம்பிக்கப்பட்டால் அது தமிழர் மீது கடுமையான சர்வதேச அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும். அதுதவிர வட கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்கனவே யுத்தத்தினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு இன்னும் அதிலிருந்து மீளவில்லை. இந்நிலையில் இன்னொரு யுத்தம் அவர்களை முழுமையா அழித்துவிடும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
அது சரி தான் மதன் ஆனால் நாங்கள் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். இப்போது சண்டையின்றி சமாதானத்தின் பெயரால் சிறிலங்கா அரசு போராளிகளை இலக்டகு வைப்பது என்பது பொறுமையை இழக்க வைக்கிறதல்லவா? அண்மையில் பொருமத்தப்பட்ட கன்னிவெடி வாகனத்தல் சரியான இடத்தில் வெடித்திருக்குமானால் நிலமை என்னவாகியிருக்கும்? 40 போராளிகளை இழக்க வேண்டிய சுூழ் நிலை வந்திருக்கும். இதை தான் திரு. தமிழ்ச் செல்வன் அவர்கள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சொல்லி இருக்கிறார். சமாதானத்தின் காரண கர்த்தாக்களே போராளிகள் என்பதால் அவர்களை இழந்து ஒரு சமாதான பேச்சு தேவையா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது!

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் தற்போது நடப்பது ராஜதந்திர யுத்தம் தமிழர் தரப்பால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் அது நிச்சயம் நமக்கு சர்வதேச அளவில் பாதிப்பாகவே முடியும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
ராஜதந்திரம் என்பது ,எப்படி எப்போது நமது இலக்கை அடைவத்ற்கான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவது என்பது ஆகும்,அது போரால் தான் ஆகும் என்றால் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.போர் வேண்டாம் எண்டால் நாம் ஆயுதங்களைத் தூக்கியிருக்ககூடாது.ஆயுதப் போராலேயே எமக்கு விமோசனம் என்றபடியால் தான் நாம் ஆயுதம் தரித்தோம்.அதுவே மாவிரரின் கனவும், அதற்காகவே அவர்கள் விதை ஆகினர்.சிறிலன்கா அரசு தனது ஆயுதப்படைகளைப் பலப்படுத்திவிட்டு நிச்சயமாக போரை ஆரம்பிக்கும்,அதுவரை நாம் பொறுத்திருப்பதா அல்லது எமக்கு வாய்ப்பான தருணத்தில் ஆரம்பிப்பதா என்பதை தேசியத்தலைவர் தீர்மானிப்பார்.
ஆயுதப்போர் எமது அரசியலின் தீர்மான உந்துசக்தி,அதுவே எமது பலம்,அதுவே எமக்கு சர்வதேச அங்கிகாரத்தைப் பெற்றுத்தந்தது.ஆயுதப்போராட்டமே பேச்சுவார்த்தைகளின் அடித்தளம். நாம் போராடப் பயந்து வாழாதிருந்தோமாகில் இந்த சர்வதேசங்களாலேயே நசுக்கப்படுவோம்.போர் முடிந்து இன்னொரு பேச்சுவார்த்தையும் வரும்,ஆனால் நாம் நசுக்கப்பட்டால் எமக்கு விமோசனமே கிடையாது.
Reply
#7
என்னவோ இன்னொரு போர் வந்து வட கிழக்கு மக்கள் மீண்டும் வேதனைப்படாமல் பிரைச்சனை சுமூகமாக தீரும் என நம்புகின்றேன். அப்படியல்லாம்ம்ல் இதற்கு மேல் மீண்டும் யுத்தத்தை தவிர வேறு வழியில்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது தான் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
எமது போராட்டம் சர்வதேச உலகில் தெரியவந்து இப்போ எல்லா நாடுகளும் எமது பக்கம் பார்வையை திருப்பியுள்ளார்கள் எமது போராட்டம் நியாயமானதுதான் என அவர்கள் உணர்ந்துள்ளார்கள் இதுவே எமக்கு கிடைத்த ஒரு வெற்றி எனக் கொள்ளலாம் அந்த சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே பொதுகட்டமைப்புக்கு கூட அரசாங்கம் வந்தது இன்னிலையில் தெற்கில் இருக்கும் இனவாத மதவாத கட்சிகள் நாட்டில் யுத்தம் ஏற்பட்ட வேண்டுமென துடியாத் துடிக்கிறார்கள் இப்போ யார் முதலில் யுத்தத்தை ஆரம்பிப்பிறார்களோ அவர்களுக்கு உலக அரங்கில் சாதகமான அனுகுமுறைகள் இருக்கமாட்டாது ஆனபடியால் எமது தலைவர் அவசரப்படாமல் நல்லமுடிவையே எடுப்பார் இராணுவம் யுத்தத்தை ஆரம்பிக்குமேயானால் அதுவே எமக்கு பெரிய வெற்றியாக இருக்கும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
மதன் உங்கள் கவலை புரிகிறது போர் வேண்டும் போர் தான் முடிவு என்று வெற்று வோட்டை நாம் முன் வைக்கமுடியாது அது சரியுமல்ல. ஏனெனில் போரினால் பாதிக்கப்படபோவது நமும் இல்ல போரடப்போவதம் நாமல்ல. இங்கிரக்கும் சிலர் தமது பணங்கள் அங்கே ஆயுதம் ஏந்துவதாய் நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் மக்கள் நிலை பற்றி அறியாமல் கதைக்கின்றனர். எனது கருத்து என்ன என்றால், போர் என்பது தமிழர் விரும்பி ஏற்றதல்ல நெஞ்சில் தீயை வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்கு எங்கள் மக்கள் இருக்க முடியும்? இன்றும் அதே சுூழ்நிலைதான் தமிழர்கள் போரை ஆரம்பி மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் ஆனால் சிங்கள தேசம் போரை திணித்தால் போரை தவிர வேறு வழி தமிழர்களுக்கு இல்லை. இதை விட இதுவரை அனுபவித்த போரின் கோரங்களை விட இனி என்னத்தை எம்மக்கள் அனுபவிக்கபோகிறார்கள்? செல்லடிக்கும் இப்போ புலிகளிடம் பதில் இருக்கு விமானத்தாக்குதலை எதிர் கொள்ளும் பலமும் அவர்களிடம் இருக்கிறது.. இப்படியோரு போர் மூண்டால் பொருளாதார தடையை அரசு விதிக்கலாமே! தவிர மற்ற எந்த விதத்திலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் மக்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மற்றை வடகிழக்கு பிரதேச மக்கள் பாடு.... அதே பழைய பாஸ் முறை அதே விசாரனை.. அதே கைதுகள் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை..

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
இலங்கை அரசின்மீது போடப்படும் அழுத்தம் தான் ! இவ்விபரீத விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில்தான் புலிகள் காய்களை நகர்த்துகிறார்கள். இலங்கை அரசு கட்டாயம் புலிகளின் பாதுகாப்புற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய அழுத்தும் இலங்கை அரசிற்கே. மீறியும் புலிகளை சீண்டுவார்கள் எனின் புலிகளின் அடிஉதைக்கு இலங்கை அரசு வேண்டப்போகிறது. இதை உலகநாடுகள் கண்டு கொள்ளப்போவதில்லை.
Reply
#11
kuruvikal Wrote:இது குறித்து தலைநகரில் என்ன செய்தி அடிபடுகிறது..தெரிந்தவர்கள் எழுதுங்களேன்...மீண்டும் ஓர் யுத்தம் வெடிக்குமா....என்ன வகையான அறிகுறிகளை தென்னிலங்கை வெளிக்காட்டுகிறது..இவ்வறிவிப்புத் தொடர்பாக மக்கள் என்ன கருதுகிறார்கள்... என்பன குறித்து சொல்லுங்களேன்...!


தற்போதைக்கு வெடிக்காது என நம்பத்தகுந்தவர்களின் வாயிலாக கேள்விப்பட்டேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#12
vennila Wrote:
kuruvikal Wrote:இது குறித்து தலைநகரில் என்ன செய்தி அடிபடுகிறது..தெரிந்தவர்கள் எழுதுங்களேன்...மீண்டும் ஓர் யுத்தம் வெடிக்குமா....என்ன வகையான அறிகுறிகளை தென்னிலங்கை வெளிக்காட்டுகிறது..இவ்வறிவிப்புத் தொடர்பாக மக்கள் என்ன கருதுகிறார்கள்... என்பன குறித்து சொல்லுங்களேன்...!

தற்போதைக்கு வெடிக்காது என நம்பத்தகுந்தவர்களின் வாயிலாக கேள்விப்பட்டேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தகவலுக்கு நன்றி சுட்டி..! சந்தோசமா இருக்கு...! யுத்தத்தால் பட்டது போதும்..அதுவும் தலைநகரில்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
http://www.newkerala.com/news.php?action=f...ullnews&id=4211
Reply
#14
இக் கவிதை இங்கே தரப்படுகிறது,மேலுள்ள கேள்விக்கு விடை பகர்வதால்.

மாலிகா கவிதை





திசைவழி தவறா நடத்தலிற்தான்
சேரிடமடையும் விரைவிருக்கிறது.
பாலையும் சோலையும் இடைவரும் நாளில்
பாலையிற் தளர்ந்தும்
சோலையிற் கிளாந்தும் தடுமாறல்
பயணத்துக்காகாது
இலக்கின் தலைமேலுள்ள குறியில்
விழியகலக்கூடாது.
நடத்தல்
மீண்டும் நடத்தல்
தொடர்ந்தும் தொடர்ந்தும் நடத்தலெனும்
பிரயத்தனமே வெற்றிதரும்.
வெய்யிலடிக்கும்போது நட
மழைபொழியும் நாளில் நட
பனியும் புயலும் தின்னும்
இரவோ பகலோநட.
நடந்தபின் கொஞ்சம் ஓய்வெடு
நடக்கமுன் இளைப்பாறாதே.
நடை பயணத்துக்கு வேண்டியது
உடற்பலமல்ல
நம்பிக்கை பலம்.
வழிநெடுகிலும் பார்த்தபடி போ.
உனக்கு முந்திய யாத்திரியரின்
எலும்புக்கூடுகள் கிடைக்கும்
பயணவழிக் குறிப்புகள் கிட்டும்
முன்னோடிகளின் காற்தடங்கள் அகப்படும்
எல்லாவ்றறையும் கடந்துபோ
அவை வழிகாட்டும் உனக்கு.
இடையில் விழுந்தாலும் தகைமையுடைச் சாவுவரும்.
நாளைய பயணிக்கு
நீயும் திசைசொல்லியாய்க் கிடக்கும்
தவம் பலித்த ஒருவனாக
உன் தடமிருக்கும் மண்ணில்.
போதாதா உனக்கு
தொடர்ந்து நட.



- உருவாக்கம்: மாலிகா
http://www.erimalai.info/2005/april/poems/malika.htm
Reply
#15
நல்லதோர் கவிதை. அற்ப சலுகைகளுக்காக போராட்டத்தின் இலக்கை மறக்கக் கூடாது.

போரை ஆரம்பிக்கவேண்டிய தேவை உடனடியாக இல்லாவிடினும், சிங்கள அரசு, மற்றும் இராணுவத்தின் போக்கில் புலிகள் பலவீனமாக உள்ளார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் தோன்றி உள்ளதாகத் தெரிகின்றது. அந்த நினைப்பைப் போக்கத்தான் தற்போது கிழக்கில் கொலைகள் நடக்கின்றன. இவை மற்றைய பகுதிகளுக்கும் விரிவடைந்தால் போர் நிறுத்தம் என்பது நகைப்புக்குரியதாகவிடும். சிங்கள அரசும் இராணுவமும் இதனை உணர்ந்து, துரோகிகள் மூலம் நடாத்தும் நிழல் யுத்தத்தைக் கைவிட்டால்தான் சமாதானம் மீண்டும் துளிர்க்கும்.
<b> . .</b>
Reply
#16
சர்வதேசத்தின் கரிசனையும் அதனுடான எமது இணைந்த செய்யற்பாடும் இந்த மூன்றுவரிடத்தில் எம் மக்களது வாழ்வின் அமைதி,பாதுகாப்பு,முன்னேற்ரம் என்பவற்றில் ஒரு அடியைத்தானும் முன்னேறுவிக்கவில்லை.இனியும் முன்னேறுவதற்கான அரசியல் விதி இல்லை என்பது திட்டவட்டமாக நிருபனமாகுமென்றால் பெரும் தியாகங்களுக்கோ அல்லது சர்வதேசத்தின் கவலைகளுக்கோ
அன்சி யதார்த்தத்தை புலிகள் புறந்தள்ள முடியாது.யுத்தத்தை புறக்கணிக்க இயலாது.
ஏனெனில் விலைகொடுத்த மக்களின் குரல்களுக்கே புலிகள் முதலில் பதில் சொல்ல வேண்டிவரும்.

மேல உள்ளதை புலத்தில இருந்து ஒருத்தரும் சொல்லேல்ல,
புலிகளின் குரல் சொல்லுது, தளம்பல் நிலையில் உள்ளோருக்கும் ,சாமாதான சரணகதி பாடுவோருக்கும் இது சமர்ப்பணம்.
Reply
#17
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/07/cartoon_01_07_2005.jpg' border='0' alt='user posted image'>

காலக் கெடு நியாயமானதே

இலகுவில் யுத்தம் வெடிக்காது - அச்சம் தவிர்க்க
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)