Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம்
#1
<b>இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம்
ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும்</b>

இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்படி அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும்.

<i>ராணுவ மந்திரி</i>

இந்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி அமெரிக்கா சென்று இருக்கிறார். வாஷிங்டன் நகரில் உள்ள, அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகத்தில், அமெரிக்க ராணுவ மந்திரி டோனால்டு ரம்ஸ்பீல்டை, பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.

இருவரும், இரு நாட்டு ராணுவ உறவு பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு பலப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

<i>ஒப்பந்தம் கையெழுத்து</i>

இதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ``இந்தியா - அமெரிக்கா ராணுவ உறவு" ஒப்பந்தத்தில் இருநாட்டு ராணுவ மந்திரிகளும் கையெழுத்திட்டனர்.

இதன்படி இரு நாடுகளும் ஏவுகணை தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். அதி நவீன அமெரிக்க தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கும்.

ராணுவ தளவாட மற்றும் கருவிகள் கூட்டு உற்பத்தியும் செயல்படுத்தப்படும். ராணுவ தளவாட சோதனை மதிப்பீடு ஆகியவையும் கூட்டாக செய்யப்படும்.

ராணுவ தளவாட கொள்முதல் செய்யவும், இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. ராணுவ வளர்ச்சி, ஆராய்ச்சி, கடற்படை விமானிகளுக்கு பயிற்சி ஆகியவையும் நடைமுறைப்படுத்தப் படும்.

<i>தீவிரவாதம்</i>

தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் கூட்டாக சேர்ந்து செயல்படவும், தரை வழியாகவும், வான் வழியாகவும், கடல் வழியாகவும் தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவும், இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இநத ஒப்பந்தம் பற்றி ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவுடன் நாங்கள் செய்து கொண்ட ராணுவ ஒப் பந்தத்தையும், ரஷிய உறவையும் இணைத்து பேசக் கூடாது.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்று தெரிவித்து இருக்கிறோம்.

இந்த ஒப்பந்தத்தால் இருநாடுகளும் பலன்பெறும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

<i>மன்மோகன்சிங் பயணம்</i>

பிரதமர் மன்மோகன்சிங் வருகிற ஜுலை 18-ந் தேதி அமெ ரிக்காவுக்கு 3 நாள் பயணமாக செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி புஷ் உடன் பேச்சு நடத்துகிறார்.

அவரது பயணத்துக்கு முன்னதாக இந்தியா - அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செய்தி: தினத்தந்தி
Reply
#2
அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள்@ இந்து சமுத்திர பகுதியில் வான், கடல், தரை மார்க்கமான வியாபாரத்தினைப் பாதுகாத்தல் என்பவைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்தியாவானது இந்து சமுத்திரத்தில், இலங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியிருப்பது போல் தெரிகிறது.

சுதந்திர இலங்கையில் இந்தியா இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்வதாயின், அது இலங்கை அரசின் சம்மமதத்துடன்தான் மேற்கொள்ள முடியும். இந்தநிலையில் இந்திய - இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று விரைவில் கைச்சாத்திடப்பட சாத்தியங்கள் உண்டு.

இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டால், இந்தியப் படையானது பயங்கரவாதத்தினை ஒழிப்பது என்ற போர்வையில இலங்கையுள் நுழைந்து, இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியும்.

எவ்வாறாயினும், பொதுக் கட்டமைப்பு ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், போரானது தமிழ்த் தேசத்தால் ஆரம்பிக்கப்படுவதே, இந்தியா, சிறீ லங்கா அரசுகளுக்கு சாதக வாய்ப்புக்களை அதிகரிக்கும்.

இந்நிலையில் தமிழ்த் தேசமானது புத்திசாதுரியமாக காய் நகர்த்துவது அவசியம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)