Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் பலம் எந்த நிலையிலுள்ளது?
#1
* படைத்தரப்பினரும் இனவாதிகளும் பரப்பும் தகவல்களில் உண்மையுள்ளதா?

சுதந்திரக் கட்சி - ஜே.வி.பி. கூட்டணி முறிவடைந்துவிட்டதால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு, சிறுபான்மை அரசாக மாறிவிட்டது. எதிர்க்கட்சிகளின் துணையின்றி ஆட்சி செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு ஜனாதிபதி சந்திரிகா தள்ளப்பட்டு விட்டார். இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்பில் ஸ்திரமற்றதொரு நிலைமையை உருவாக்கியுள்ளது.

இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்த காலம் முதல், ஜே.வி.பி. இனவாதத்தையே கக்கி வந்தது. காலத்திற்கு காலம் இலங்கையில் இனவாதங்கள் வெவ்வேறு முகங்களில் வெளிப்பட்டன. இந்த இனவாதம் இம்முறை ஜே.வி.பி.யின் முகத்தின் மூலம் வெளிப்பட்டது. எனினும், இனவாதத்தில் தோல்வி கண்டுள்ள ஜே.வி.பி., நாட்டைக் குழப்பும் வகையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடுமென எச்சரிக்கப்படுகிறது.

நாட்டில் இருமுறை மிக மோசமான ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ஜே.வி.பி.யிடமிருந்து ஆயுதங்கள் களையப்படவில்லை. அடையாள ஆயுதக் கையளிப்பே நடைபெற்றது. இன்றும் ஜே.வி.பி.செல்வாக்குச் செலுத்துமளவிற்கு ஆயுதப் படைகளின் கட்டமைப்பில் ஓட்டைகளுள்ளன. ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் மக்களை அடக்கி ஆளும் நோக்கத்தைக் கொண்டிருந்தது மட்டுமல்லாது, விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்து விட வேண்டுமென்பதில் ஜே.வி.பி. ஆர்வம் காட்டியது.

ஜனாதிபதி சந்திரிகா கூட புலிகளைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில் நீண்டகாலமாக முனைப்புக் காட்டி வருபவர். 1994 இல் முதன் முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அவரது செயற்பாடுகள் விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில் தீவிரமாயிருந்தது. இன்றும் கூட, போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் புலிகளுக்கெதிரான நிழல் யுத்தம் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசியுடனேயே நடைபெறுகின்றதென்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

அதேநேரம், புலிகளுக்கிடையிலான கருணாவின் கிளர்ச்சி புலிகளை நன்கு பலவீனப்படுத்திவிட்டதாகவும் சாதாரண பொதுக் கட்டமைப்பு விடயத்திலேயே தீவிர ஆர்வம் காட்டும் புலிகள், போர் ஒன்றுக்கு முகங்கொடுப்பதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் படைத்தரப்பு கூறி வருகின்றது.

புலிகள் பலம்மிக்கவர்களென்றால், 25 வருடங்களாக நடைபெறும் இந்தப் போரில் வெற்றி கண்டு அவர்களால் ஏன் இன்னமும் இலக்கை அடைய முடியவில்லையென இராணுவத்தரப்பு கேள்வியெழுப்புகிறது. படையினரிலும் பார்க்க பலம் குறைந்தே அவர்கள் காணப்படுவதாகவும் கருணாவின் கிளர்ச்சி அவர்களை மேலும் பலவீனமடையச் செய்துவிட்டதால் மீண்டுமொரு போருக்கு அவர்களால் உடனடியாகச் செல்ல முடியாதென்றும் படைத்தரப்பு கூறுகின்றது.

போர்நிறுத்த உடன்பாட்டின் மூலம் போர்நிறுத்தப்பட்டதே தவிர இன்றுவரை சமாதானத்தை உருவாக்கும் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. யுத்தமுமின்றி சமாதானப் பேச்சுகளுமின்றி தற்போதுள்ள சூழ்நிலையொன்றையே அரசு விரும்புகிறது. தமிழ் மக்கள் தான் தங்கள் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தில் குதித்தவர்களென்பதால், போருமற்ற சமாதானமுமற்ற இவ்வாறான சூழல் தொடர்ந்துமிருப்பதை விரும்பவில்லை.

ஆனாலும், அவர்கள் மீண்டுமொரு போருக்கு அவசரம் காட்டாத போதிலும் போருக்கானதொரு சூழல் மிக வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சாதாரண பொதுக்கட்டமைப்புக்காக ஒரு ஆட்சியே கவிழும் நிலை உருவாகியுள்ளதால் இனப்பிரச்சினைக்கு இனிவரும் காலங்களில் சமாதானப் பேச்சுக்களூடாக தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.

அதேநேரம், மீண்டுமொரு போருக்கான சூழ்நிலைகள் மிக வேகமாக உருவாகி வருகின்றன. கிழக்கில் இடம்பெறும் நிழல் யுத்தம் ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதுடன் தற்போதைய போர் நிறுத்த காலத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை தொடர்வதில் படைத்தரப்பு ஆர்வம் காட்டி வருவதாக புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன், புலிகள் பலவீனமாக இருக்கின்றார்களென்பது, படையினர் தங்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் பிரசாரமென்பதும் நன்கு தெரியும்.

வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளூடாக தங்கள் போராளிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு அரசு உத்தரவாதமளிக்கத் தவறினால் தங்களது தரைப் படை, கடற்படை, வான் படையைப் பயன்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்குமென புலிகள் பகிரங்கமாகக் கூறுமளவிற்கு பலமடைந்திருப்பதையே இது காட்டுகிறது.

1995 இல் இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றியதும், புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் கதி அதோ கதிதானென அரசும் படைத்தரப்பும் பிரசாரங்கள் செய்தன. ஆனால், நடந்ததோ வேறு கதை. புலிகள் பற்றி தப்புக் கணக்கு போடப்பட்டதை 1995 இற்குப் பின்னர் தான் அரசும், படையினரும் சிங்கள மக்களும் உணர்ந்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாடு வீழும்வரை புலிகளின் பெரும்பலம் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டிருந்தது. அப்போது குடாநாட்டைச் சுற்றி வளைத்து படையினர் இருந்தனர். ஆனால், குடாநாட்டை படையினர் கைப்பற்றியதும், உள்ளேயிருந்த புலிகள் வெளியே வர வெளியே இருந்த படையினர் உள்ளே சென்று முடங்கினர். குடாநாட்டை புலிகள் சுற்றி வளைத்தனர்.

1995 இல் குடாநாட்டு வீழ்ச்சியுடன் புலிகள் பலவீனமடையவுமில்லை, மிக நீண்டகாலப் போரினால் களைப்படையவுமில்லை என்பது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் புலிகள் எழுச்சி பெற்றனர் என்றால் கூட அது மிகையல்ல.

1996 இல் முல்லைத்தீவு படைத்தளத்தை கைப்பற்றினர். 1997 இல், வன்னியை இரண்டாக ஊடறுக்க மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குரு படை நடவடிக்கையை ஒரு வருட காலத்திற்குள் மேல் சளைக்காது சமரிட்டு 1998 இல் அதனை முறியடித்தனர். அந்தாண்டு பிற்பகுதியில், கிளிநொச்சி நகரை படையினர் வசமிருந்து கைப்பற்றினர்.

ஜெயசிக்குரு படை நடவடிக்கை மூலம் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட பெரும் பகுதியை 1999 இல் ஓயாத அலைகள் படை நடவடிக்கை மூலம் மீட்டு ஓமந்தை வரை சென்றனர். 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற்றி உலகையே அதிசயிக்க வைத்தனர்.

1991 இல் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்ற புலிகள் மிகக் கடும் முயற்சியை மேற்கொண்ட போதும் ஆனையிறவு படைத்தள முற்றுகையை படையினர் முறியடித்து புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தனர். ஆனாலும், அந்தப் படைத்தளத்தையே மீண்டும் முற்றுகையிட்டு 2000 ஆம் ஆண்டில் அதனைக் கைப்பற்றியதன் மூலம், புலிகள் தோற்கடிக்கப்பட முடியாததொரு அமைப்பென்பதை பறைசாற்றினர்.

ஆனையிறவு படைத்தள வீழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. 1991 இல் யாழ்ப்பாணக் குடாநாடு புலிகள் வசமிருந்தபோது, அதன் நுழைவாயிலான ஆனையிறவை புலிகளால் கைப்பற்ற முடியவில்லை. குடாநாடு தங்கள் வசமில்லாதபோதும், ஆனையிறவு முற்றுகையை அன்று படையினரால் முறியடிக்க முடிந்தது.

ஆனால், யாழ்ப்பாணக் குடாநாடு தங்கள் வசமில்லாத போது ஆனையிறவை புலிகளால் பிடிக்க முடிந்தது. குடாநாடு தங்கள் வசமிருந்தபோதும் படையினரால் ஆனையிறவுப் படைத்தளத்தைத் தக்க வைக்க முடியவில்லை. இவ்வாறு போரியல் வரலாற்றிலேயே புலிகளின் ஆனையிறவுச் சமர் வியத்தகு சாதனைகள் படைத்தன.

ஆனையிறவை கைப்பற்றிய புலிகள் யாழ்.குடாநாட்டினுள் புகுந்து யாழ் நகர நுழைவாசல் வரை சென்றனர். ஆனாலும் சில மாற்றங்களால் குடாநாட்டின் பல பகுதிகளைப் புலிகள் பின்னர் கைவிட நேர்ந்தது. இவ்வேளையில் தான் 2000 ஆம் ஆண்டு பிற்பகுதியில், ஆனையிறவை மீளக் கைப்பற்றுவதற்காக தென்மராட்சியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட `அக்கினிச் சுவாலை' படையெடுப்பை, படையினருக்கு மிகப் பெரும் இழப்பையேற்படுத்தி புலிகள் முறியடித்தனர்.

இதன் பின்னர் தான் புலிகளின் பலம் பற்றிய உண்மை நிலையை படைத்தரப்பும் அரசும் அறிந்து கொண்டன. புலிகள் பலவீனமடைந்துள்ளார்களெனத் தாங்கள் போட்டது தப்புக் கணக்கென்பதையும் அப்போது அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

புலிகளின் பலத்தின் அடிப்படையில் தான் பின்னர் போர்நிறுத்த உடன்பாடே உருவானது. இலங்கையில் இரு தேசங்களிருப்பதை இந்த உடன்பாடு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் எல்லையிடப்பட்ட போது இந்த உடன்பாட்டின் மூலம் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களும் எல்லையிடப்பட்டன.

1980 களின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சியை முறியடித்து அவர்களை ஆயுதபலத்தின் மூலம் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸா வெற்றி கண்டபோது 1995 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றி தானும் பெரும் வீராங்கனையென ஜனாதிபதி சந்திரிகா நிரூபிக்க முயன்றார்.

அதேநேரம் வடக்கு, கிழக்கு யுத்தத்தில் கிழக்கை தங்கள் வசம் வைத்திருந்தால் போதும் வடக்கை பின்னர் பார்த்துக் கொள்ளலாமெனப் போர்த் தந்திரம் வகுத்துச் செயற்பட்டவர்கள் முன்னைய ஐ.தே.க ஆட்சியாளர்கள். ஆனால், கிழக்கைக் கைவிட்டாலும் பரவாயில்லை வடக்கை தம் வசம் வைத்திருக்க வேண்டுமெனச் செயற்பட்டவர் ஜனாதிபதி சந்திரிகா.

ஆனாலும், வடக்கு-கிழக்கிலிருந்து முற்றாக படையினரை வெளியேற்றி தமிழர்களின் தாயகப் பகுதியை முற்று முழுதாகத் தம் வசம் வைத்திருக்க வேண்டுமென்பதில் இன்றும் புலிகள் குறியாகவுள்ளனர். இந்த நிலையில் தான், இனவாதம் பேசி புலிகளைப் போருக்கழைத்தவாறு ஆட்சியில் பங்கெடுத்த ஜே.வி.பி. அரசிலிருந்து விலகிக் கொள்ள, அடுத்து என்னவென்றதொரு கேள்வி எழுந்துள்ளது.

இந்த இனவாத செயற்பாட்டால் மீண்டுமொரு போருக்கான அடித்தளமிடப்பட்டு விட்டது. ஆனாலும், வான்படை, கடற்படை, தரைப்படை பலத்தின் மூலம் தங்கள் சக்தியை விடுதலைப்புலிகள் மீண்டும் வெளிப்படுத்துவரென்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. கருணாவின் பிளவு புலிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி விட்டதாகத் தெற்கில் பிரசாரங்கள் செய்யப்படும் நிலையில் தான் புலிகளின் விமானப் படைப்பலம் பற்றி அரசு அலறியடிக்கிறது. அண்டை நாடுகளும் உதவிக்கு ஓடோடி வருகின்றன.

சாதாரண பொதுக் கட்டமைப்பானது நாட்டின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டி விட்டது. இதற்கே இந்த நிலைமையென்றால் இனப் பிரச்சினைத் தீர்வு, சமாதான வழியில் கிடைக்குமென்பதை நினைத்துப் பார்க்கத் தேவையில்லை. சுமார் 25 வருட காலப் போரால் ஏற்பட்ட அழிவுகளையும் இழப்புகளையும் புரிந்து கொள்ளும் நிலையில் இனவாதிகளில்லை.

அரசிலிருந்து விலகியதன் மூலம் ஜே.வி.பி. தோல்வி கண்டாலும் இனவாதத்தை அவர்கள் மிக மோசமாக வளர்த்துள்ளனர். அவர்களுக்குப் பின்னால் அணி திரள மிகப் பெரும் கூட்டமுள்ளது. அதன் பார்வையெல்லாம் தமிழ் மக்கள் மீதே திரும்பியுள்ளது. அதேநேரம், சிறுபான்மை அரசைக் கொண்டு நடத்துவதில் ஜனாதிபதி பெரும் நெருக்கடியை எதிர்கொள்வார். மீண்டுமொரு தேர்தலென்பது நிச்சயமாகிவிட்டது.

வரப்போகும் தேர்தலில் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகளவில் பெற்றால் அது சிறுபான்மை மக்களுக்கே பெரும் பாதிப்பாகும். தனது 2 ஆவது பதவிக் காலத்தின் முடிவிலிருப்பதால் ஜனாதிபதி சந்திரிகா சில துணிச்சலான முடிவுகளை எடுக்கலாம். ஆனால், அது பெரும் பயன்களைத் தராது. ஆட்சிக் கவிழ்ப்புக்கான காரணமென்ன என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், அடுத்து என்ன என்பதையும் அவர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
thinikkural
Reply
#2
நன்றி adsharan,

புலிகளின் பலம் தமிழருக்கு தெரியும். அதனால் தான் தலைவனின் முடிவே தமிழரின் முடிவு என்று அமைதி காக்கிறார்கள்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
உரசிப்பாருங்க அப்ப தெரியும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலம் என்னெண்டு.. Idea
[b]

,,,,.
Reply
#4
தகவலுக்கு நன்றி. வெல்ல பிறந்தவர்கள் நாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)