06-12-2005, 10:29 PM
ஒப்பந்தத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு: 15 ஆம் திகதி ஆலோசனைக் கூட்டம்
[ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2005, 16:39 ஈழம்] [புதினம் நிருபர்]
இந்தியா-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.
இந்த இராணுவ ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 15 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழினத்திற்கு எதிராக சிறிலங்கா அரசோடு பாதுகாப்பு ஒப்பந்தம் போட இந்திய அரசு முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அத்தகைய முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இதுகுறித்து தமிழகத்தில் தமிழ் தேசிய அமைப்புகளை கலந்து பேசி தமிழக மக்கள் சார்பில் எதிர்ப்பை தெரிவிக்க ஜூன் 15 ஆம் நாள் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றார் அவர்.