KULAKADDAN Wrote:poonai_kuddy Wrote:[
. உங்கட மதம் இந்துமதமெண்டுறீங்கள் அதான் தமிழற்ற மதமெண்டுறதுக்கு என்ன ஆதாரம் வச்சிருக்குிறீங்கள் சொல்லுங்கக்கா
பூனைக்குட்டி எனக்கு சில விசயம் விளங்கேல்ல விளக்கம் சொல்லுவீங்களோ?......
தமிழர் எண்டா ஆர்? நீங்கள் உங்களை தமிழர் எண்டு சொல்ல என்ன ஆதாரம் வச்சிருக்கிறியள். தமிழ் பேசுறதால தான் எண்டா.....? யாராவது வெள்ளையர் தமிழ் படிச்சு பேச வெளிக்கிட்டால் அவையும் தமிழரோ?
<img src='http://www.harappa.com/post/gif/ceylontam.jpg' border='0' alt='user posted image'>
<b>1920ல் இலங்கைத்தமிழ் பெண்</b>
<img src='http://www.thehindu.com/thehindu/mp/2004/07/08/images/2004070801660201.jpg' border='0' alt='user posted image'>
<b>இன்றைய (அதிகம் கலப்படைந்து வெளிறிய) தமிழ்நாட்டு தமிழ் பெண்</b>
18ம் நூந்நாண்டுக்கு முதல் தமிழரின் சேரநாடு என அறியப்பட்ட பிரதேசமமும் சேரநாட்டு மக்களும் 18ம் நூற்றாண்டின் பிறகு கேரள நாட்டின் மலையாளிகள் என அறியப்பட்டனர்.
தமிழ்நாடு என்றளைக்கப்படும் இந்தியாவின் முன்னாள் மதராசி பட்டணத்தில் பல்வேறு இன குடிமக்களும் குடியேறி தமிழ் பேசி தமிழராயினர். வட இந்தியாவிலிருந்து முகம்மதிய காலத்தில் வந்து குடியேறிய வட இந்திய பிராமணர் தமிழராயினர். இதே போல தெலுங்கர் கன்னடர் போன்றவர்களும் தமிழராயினர்.
இலங்கையில் பல தமிழர் சிங்களவர் ஆயினர். நீலப்பெருமாளின் வழி வந்த ஜெயவாத்தனே தமிழருக்கெதிரான துவேஷமிக்க சிறிலங்கா ஜனாதிபதியாக இரு;ந்தார். இலங்கை தமிழர் மலையாளிகள் போர்த்துக்கேயர் வட இந்தியருடைய கலப்பால் உருவான மக்கள். ஆனால் தமிழ் பேசும் மக்கள்.
ஆங்கிலேயரை ஆளும் பிரித்தானிய மாகாராணியின் தாயார் ஸ்காட்லாந்தக்காரி. தந்தையாரோ ஜேர்மானிய வழி வந்தவர். ஆக, ஆங்கிலம் பேசுபவர்களை ஆங்கிலம் பேசி ஆங்கிலேய நாட்டில் ஆள்வதால் அவர்கள் ஆங்கிலேயர் ஆனார்கள். தூய ஆங்கிலோ செக்சன் இனத்தை சேர்ந்தவர்களை தேடிப்பிடிப்பதே கடினம். கடைசியாக தனது தூய இனத்தை தேடியவன் பெயர் ஹிட்லர். தூய ஆரியக் குழந்தைகள் வேண்டுமென்று பொன்ளிற கூந்தலும் நீல நிறக்கண்களும் கொண்ட சுகதேகிகளான பெண்களை இமய மலைக்கு தூய ஆரிய ஆண்களுடன் இணைந்து பிள்ளை பெற்று வருமாறு அனுப்பினான் என வரலாறு.
தமிழ் ஒரு மொழி. அந்த மொழியை பெசுபவனுக்கு கறுப்பு தோலானால் என்ன, வெள்ளை தொலானால் என்ன அவனோ அவளோ தமிழர். மனிதர்கள் ஆபிரிக்காவில் கென்யா பகுதியில் தோன்றி உலகமெங்கும் பரவினர் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தமிழர் ஆப்கானிஸ்தானில் காணப்படும் ஹரப்பா மொகஞ்ஞதாரோ பள்ளத்தாக்கு நாகரிகத்தில் தோன்றி தென்னிந்தியாவரை பரவினர் என சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.