Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகச் செய்திகள்
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/09/canadian_amb_meet_04.jpg' border='0' alt='user posted image'>

இலங்கைக்கான கனடியத்தூதுவர் வன்னி விஜயம்...புலிகளுடன் பேச்சு...!

Our Thanks to Tamilnet.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:இலங்கைக்கான கனடியத்தூதுவர் வன்னி விஜயம்...புலிகளுடன் பேச்சு...!

Thanks Tamilnet.com

kuruvikal Wrote:பாத்தியளே ரணிலாருக்கு நன்கொடையாயில்ல கடனாத்தானாம் காசு தாரதெண்டு சொல்லியிருக்கு அத்தோட வட்டியும் முதலுமா கொடுக்கவேணுமாம்....அதுக்க காசு தாரத்துக்கு பல நிபந்தனைகளுமாம்...... இப்படிச் சொல்லுறா அம்மா!

அப்ப இனி சிறிலங்கா ஆருக்குச் சொந்தம்......?!

Tokyo donors' conference will not benefit Sri Lanka' -PA

[TamilNet, June 10, 2003 20:06 GMT]
Sri Lanka's main opposition People's Alliance (PA) led by President Ms Chandrika Kumaratunge Tuesday said ninety percent of aid pledged at the Tokyo donors' conference are loans and not grants. "Majority of the aid given at the donors' conference are on various interest rates with several conditions attached," said People's Alliance media spokesman Mr.Sarath Amunugama at a press briefing held Tuesday at the office of the Leader of the Opposition.

எல்லாம் சரி.. குருவிகாள்.. எல்லாரும் வந்து போறினம்.. அங்காங்கே இரகசியமா உதவியளும் செய்யிறினம்.. ஒண்டும் எதிர்பார்காமலோ.. உதவிசெய்யினம்..?

சரி அதையும் விடுவம்.. கடனாகத் தந்த காசு.. எடுத்து கட்டி செலவுசெய்து முடிக்கிறம்.. பிறகு யார் கட்டுறது.. யார வித்துக் கட்டுறது..?

அப்ப இனி ......? ஆருக்குச் சொந்தம்......?!
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<img src='http://www.thinakural.com/2003/September/19/pre-rani.jpg' border='0' alt='user posted image'>
கிழக்கும் மேற்கும் சந்தித்தால் இப்படித்தானோ?

கடன் பிரச்சனை முடிந்தாலும் இவர்கள் பிரச்சனை முடியாது
Reply
Thanks
http://www.thinakural.com/2003/September/1...19/pre-rani.jpg
Reply
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் மீளக்குடியமர்வு விவசாயம் வர்த்தகம் போன்றவற்றிக்கு விடுதலைப்புலிகள் அனுமதி.

இன்று ஏறாவுூரில் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிங்களுக்கும் இடையிலே விசேட சந்திப்பு ஒன்று ஏறாவுூர் விடுதலைப்புலிகளின் காரியாலயத்தில் நடைபெற்றது. இன்று பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான மேற்படி சந்திப்பில் குடும்பிமலைக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. ஜெயா அவர்களுடன் முஸ்லிம்களின் சார்பில் ஏறாவுூர் முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதி எஸ்.எ.ஆர்.எஸ் மௌலானா தலைமை தாங்கினார்.

சுமார் 1.00 மணி நேரம் சுமுகமாக நடைபெற்ற மேற்படி சந்திப்பில் உறுகாமம் பகுதியில் முஸ்லிம்களின் மீளகுடியமர்வு மற்றும் வர்த்தகம், விவசாயம் போன்றவற்றில் முஸ்லிகள் சுகந்திரமான முறையில் மேற்கொள்ளுவதற்கு விடுதலைப்புலிகன் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளையில் மேற்படி விடயம் தொடர்பாக எதிர் வரும் 28ம் திகதி இலுப்பையடிச்சேனை வித்தியாலயத்தில் மட்டு அம்பாறை மாவட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளர் திரு. நிஷாம் அவர்களின் தலைமையில் நடைபொறும் எனவும் திர்மாணிக்கப்பட்டது.

மேற்படி சந்திப்பில் சிறப்பு தளபதி ரமேஸ், அவர்களுடன் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கொளசல்யன், மற்றும் நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஜெயா, மற்று பிரதேச நிதிப்பொறுப்பாளர் வினோ ஆகியோர் விடுதலைப்புலிகளின் சார்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s2.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s3.jpg' border='0' alt='user posted image'>

மட்டக்களப்பு செங்கலடியில் இன்று பிற்பகல் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லீம் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மட்டு அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் முஸ்லீம் பிரதிநிதிகளை வரவேற்பதையும் சந்திப்பில் கலந்து கொண்ட விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஸ் தலைமையிலான குழுவினரையும் முஸ்லீம் பிரதிநிதிகளையும் படத்தில் காணலாம்.Thnks paadumeen
Reply
விடுதலைப்புலிகளின் தளபதிகள் காத்தான்குடிக்கு நேரடியாக விஜயம். முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்வார்கள்.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விஷேட தளபதி த.ரமேஸ் தலைமையிலான பத்து தளபதிகள் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி காத்தான்குடிக்குச் சென்று மக்களிடம் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவைக் கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த 1990 ஆண்டிற்குப் பின் விடுதலைப்புலிகளின் தளபதிகள் உத்தியோகபுூர்வமாக முஸ்லிம் கிராமத்திற்கு நேரடியாகச் செல்வது இதுவே முதல் தடவையாகும்.

நேற்றுக்காலை விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி த.ரமேஷ், அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், நகரப்பகுதிப் பொறுப்பாளர் சேனாதிராசா ஆகியோருக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளான ஏ.எல்.அப்துல்கபுர், யுூ.எல்.முவின், ஏ.எல்.எம்.அலியார், சாந்தி முகைதீன், எம்.எல்.விலால்காஜியார், எம்.எல்.லத்தீப், ஏ.சீ.எம்.றபீக், கிலு}ல்அலி ஆகியோர் அடங்கிய குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு விடுதலைப்புலிகளின் மட்டு நகர் ஞானசூரியம் சதுக்க வீதி அலுவலகத்தில் இடம்பெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுகளைத் தொடர்ந்து பேணும் நோக்கில் காத்தான்குடியில் நேரடியாக விடுதலைப்புலிகளின் தளபதிகள் சென்று முஸ்லிம் மக்களுடன் உரையாடுவது எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இணைப்பாளராக நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சேனாதிராசா நியமிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் காத்தான்குடிப் பகுதி விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபடுவது தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளதாகவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதேவேளை தமிழ் பகுதகளில் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிய முழுப் பாதுகாப்பும் அனுமதியும் விடுதலைப்புலிகளால் நேற்றைய சந்திப்பின் போது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான சந்திப்புக்களை பிரத்தியேகமாக தொடர்ந்து இடம்பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003i-1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-2i.jpg' border='0' alt='user posted image'>
நேற்று இருதயபுரத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் சிறப்பு தளபதி ரமேஸ், அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் ஆகியோர் கலந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கைலாகு கொடுத்து வரவேற்பதைப் படத்தில் கணலாம்.
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-3i.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-1i.jpg' border='0' alt='user posted image'>
நேற்று இருதயபுரத்தில் நடைபெற்ற சந்திப்பில் இருதரப்பினரும் கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட படம். தகவல் பாடுமீன்.
Reply
வவுனியாவில் பொங்கு தமிழ் இளைஞர்கள் குதூகலம்.....!

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/09/Vavu_ponguThamil_1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/09/Vavu_ponguThamil_5_16697_435.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/09/Vavu_PonguThamil_4_16693_435.jpg' border='0' alt='user posted image'>

Images from tamilnet.com..our thanks to them.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>பள்ளிமுனையில் தேவாலயம் தகர்க்கப்பட்டதையடுத்து பதற்ற நிலையைத் தணிக்க கடும் முயற்சிகள்</b>

மன்னார் பள்ளிமுனை ஊசி மூக்கன் துறைப் பகுதியில் அமைந்திருந்த புனித அந்தோனியார் தேவாலயம் எருக்கலம்பிட்டிý பகுதியைச் சேர்ந்தவர்களினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு டைனமற் வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

எருக்கலம்பிட்டிý, பள்ளிமுனை பகுதியின் எல்லைப் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி கத்தோலிக்க மக்களினால் அமைக்கப்பட்ட இத்தேவாலயத்தை அகற்றுமாறு எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில் கிடுகால் அமைக்கப்பட்டிýருந்த இத் தேவாலயம் இரு தடவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதையடுத்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்லால் கட்டப்பட்டது.

இந்தத் தேவாலய அமைப்புப் பணிகளுக்கு எருக்கலம்பிட்டிý பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேவாலய கட்டிடம் டைனமற் வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை காலை கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் தேவாலயம் உடைக்கப்பட்டு இதன் பாகங்கள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டுக் கொண்டிýருப்பதை தடுத்து நிறுத்த முற்பட்ட போது இரு சாராருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் ஒரு தமிழ் இளைஞனும், இரு முஸ்லிம் இளைஞரும் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து பள்ளிமுனை மக்கள் தேவாலயம் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் மன்னார் அரச அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுக் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வீதி மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கத்தோலிக்க மக்கள் ஈடுபட்டிýருந்தனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் விஸ்வலிங்கம், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வண. இராயப்பு ஜோசப், பள்ளிமுனை பங்குத் தந்தை ஏ.ஞானப்பிரகாசம், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மிஸ்ஹின், விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் எஸ்.அருணோதயன் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அமைதியாகக் கலைந்து செல்லுமாறும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்காக நான்கு படகுகளில் மேற்படி குழுவினர் ஊசி மூக்கன் துறைப் பகுதிக்குச் சென்றனர்.

இங்கு விஜயம் மேற்கொண்ட உயர் மட்டக் குழுவினர் தேவாலயம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதையும், இதன் கட்டிýடப் பொருட்கள் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதையும் மற்றும் திருச்சொரூபங்கள் புதர்ப்பகுதிக்குள் தூக்கி வீசப்பட்டிýருப்பதையும் கண்டு கொண்டனர்.

இது ஒருபுறம் இருக்க, மன்னார் பகுதியில் ஏற்பட்ட பெரும் பதற்ற நிலையையடுத்து, நேற்று நண்பகலுடன் வர்த்தக நிலையங்களை மூýடுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.

கத்தோலிக்க மக்கள் மன்னார் பிரதான வீதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகனப் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன.

கத்தோலிக்கத் தேவாலயம் தகர்க்கப்பட்டதையடுத்து, மன்னார் மூýர் வீதி, உப்புக்குளம், பெரியகடை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த முஸ்லிம் பள்ளிவாசல்களைச் சுற்றி அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிகளவிலான கலகத்தடுப்புப் பொலிஸாரும், கடற்படையினரும் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவாலய உடைப்புச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பள்ளிமுனை மீனவர்களினால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணிவிற்குக் கொண்டு வருவதற்காக வன்னிப் புனர்வாழ்வு அமைச்சர் நூர்தீன் மர்சுர் விசேட ஹெலிகொப்டர் மூýலம் நேற்று மாலை மன்னாருக்குச் சென்றுள்ளார்.

மேலும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு பதற்றத்தைத் தணிவிற்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி தினக்குரல் பத்திரிகை
Reply
உதாலதான் சில முடிவுகளை புலியளும் 90இல எடுத்திருக்கினம் போல...முஸ்லீம் சகோதரர்களே எப்படி அல்லாவும் பிறையும் உங்களுக்கு முக்கியமோ...அதே போற்தான் மற்றெல்லாம் மற்றவர்களுக்கு...சகோதரத்துவம் காக்கத் தெரியாவிட்டால் காக்கை கூட உலகில் வாழ் முடியாது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://thatstamil.com/images14/billgraham-150.jpg' border='0' alt='user posted image'> <img src='http://thatstamil.com/images14/prabhakaran-200.jpg' border='0' alt='user posted image'>


பிரபாகரனை சந்திக்கிறார் கனடா வெளியுறவு அமைச்சர்

கொழும்பு:

இந்தியாவிலும் இலங்கையிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பில் கிரஹாம், விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வன்னிக் காட்டுப் பகுதியில் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

புலிகள் அமைப்புக்கு நெருக்கமான இலங்கையின் சுடர் ஒளி சஞ்சிகை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இப்போது ஐயர்லாந்து நாட்டில் உள்ள புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனும் இந்தச் சந்திப்பின்போது உடனிருப்பார் என்று தெரிகிறது.

வடகிழக்குப் பகுதியில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசு அளித்துள்ள வரைவுத் திட்டம் குறித்தும், அதில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித்தும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தமிழ்ச்செல்வன் ஐயர்லாந்து சென்றுள்ளார்.


இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்திக்கும் பில் கிரஹாம், பின்னர் பிரபாகரனையும் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது, தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்தே முக்கிய ஆலோசனை நடக்கும் என்று தெரிகிறது.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பைத் தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு இலங்கைப் பகுதிகளையும் பார்வையிட பில் கிரஹாம் திட்டமிட்டுள்ளர்.

கனடாவில் உள்ளது போல இலங்கையிலும் மாகாணங்ளுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று புலிகள் விரும்புகின்றனர். அதிகாரப் பகிர்வு, கூட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை கனடாவின் அரசியல் சட்டத்தை புலிகள் ஒரு மாதிரியாக முன் வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந் நிலையில் அந் நாட்டு அமைச்சரும் பிரபாகரனும் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையே ஐயர்லாந்தில் உள்ள தமிழ்ச் செல்வன் தலைமையிலான குழு விரைவில் நார்வே மற்றும் டென்மார்க் நாடுகளுக்கும் செல்லவுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய காரணமாக இருந்து நார்வே நாட்டுக்கு புலிகளின் கிழக்கு மண்டல கமாண்டர் கலோனர் கருணாவும் செல்ல இருக்கிறார்.

அங்கு நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேன் பீட்டர்சன் மற்றும் அமைதித் தூதர்களை தமிழ்ச் செல்வனும், கருணாவும் சந்திக்கவுள்ளனர்.

பிரபாகரனைச் சந்திக்க கனடா அமைச்சர் பில் கிரஹாம் வருகை தரும்போது இலங்கை வந்துவிட்டு தமிழ்ச்செல்வன் நார்வேக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

சமீப காலங்களில் நார்வே அமைதித் தூதர்களையும், சர்வதேச பத்திரிக்கையாளர்களையும் சந்தித்த பின்னர் வெளிநாட்டு அமைச்சர் ஒருவரை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

Our Thanks to thatstamil.com and surathas pongu tamil converter...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆக இனி வன்னியில் ஒரு விமானம் இறங்குதுறை அமைத்தால் வசதியாக இருக்கும். உலகத் தலைவர்கள் வந்து எமது தேசியத் தலைவரை சந்திப்பதற்கு வசதியாக இருக்கும். வருபவர்கள் நேர்மையாக எமது துன்பங்களை துயரங்களை அறிந்து அதற்கான மாற்று வழிகளில் ஈடுபட்டால் வாழ்த்துவோம். அதை விடுத்து வி.பு மேல் கறை புூசிக் கொண்டல்லவா திரிகின்றார்கள். ஏதோ வெளியுலகம் எமது மண்ணின் மீதும் தமது பார்வையைத் திருப்பியுள்ளது. தேசியத்தலைவரின் சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழருக்குக் கிடைத்த வெற்றி.

அன்புடன்
சீலன்
seelan
Reply
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/eia_18125_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/eia1_18129_435.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/eia2_18133_435.jpg' border='0' alt='user posted image'>
மீண்டும் பல்கலைக்கழக அனுமதியில் வெட்டு மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...!
------------------------------------------
Protests in Batticaloa over reduction in university admissions

[TamilNet, October 17, 2003 15:56 GMT]
The Alliance for the Promotion of Education (APE) in Batticaloa Friday held a protest to complain against the reduction in University admissions of students from the district, as the University Grants Commission (UGC) in recent years has been considering the Batticaloa district as comparatively advanced in education in the Northeast, sources said.

Students from schools, universities and other establishments joined the public in a protest from 7 a.m. to 3 p.m. at the Gandhi Square in Batticaloa town, carrying placards that criticized the Government of Sri Lanka and the UGC.

Thousands of signatures were collected and a memorandum with the signatures were handed over to the Government Agent in Batticaloa for sending to the GoSL and the UGC, sources said.

The APE said in a pamphlet that nearly 52 students in the district have been deprived University admission in each of the past few years as a result of the UGC's determination that the Batticaloa district is advanced in education.

According to the APE, this action by the UGC discriminated against the district, and the number of students deprived of their opportunities in the Batticaloa district would normally be broken down by stream as follows: Medicine-4, Engineering-4, Physical Sciences-6, Bio Sciences-4, Computer Science-1, Applied Science-1, Management Studies-9, Management-2, Business Studies-3, Law-1, Arts-14, Agricalture-3.
:evil: :!: Idea :!: :evil:
-------------------------------------------
Our Thanks to tamilnet.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/TNA-LTTE102203_1.jpg' border='0' alt='user posted image'>

ஈழத்தமிழர் இனப்பிரச்சனையின் இறுதித்தீர்வுக்கு முன்னோடியாக, இடை நிலைத்தீர்வாக, அமைக்கப்படக் கோரவுள்ள இடைக்கால நிர்வாகசபை பற்றி தமிழ் மக்களின் சார்பில் சிறிலங்கா ரணில் அரசுடன் பேச்சில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக்கிழக்கு இடைக்கால நிர்வாகசபை தொடர்பான இறுதி முன்மொழிவைப்பற்றி இதர தமிழ் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்...இது தொடர்பாக மலையகக் கட்சிப்பிரமுகர்களான சந்திரசேகரன் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளனர்...! புலிகள் இந்த தமது முன்னோடி நகலை சர்வதேச ஆலோசனையுடன் தயாரித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...!

தகவல் தமிழ்நெற்றில் இருந்து பெறப்பட்டது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
உதுக்கு மாற்றுத் திட்டம் தயாரிக்கவே ரணிலார் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் அடிக்கடி ஓடுறது.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)