Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
30 ஆம் திகதிக்குள் கையெழுத்திடா விட்டால் இராஜினாமா: ஜனாதிபதி
#1
உத்தேசப் பொதுக்கட்டமைப்பில் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திட முடியாது போனால் ஜனாதிபதிப் பதவியை இராஜினாமா செய்வதற்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளார்.


நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சுமார் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னரே ஜனாதிபதி இந்தத் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவின் நலனை கருத்திற்கொண்டுதான் இந்த பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திட தீர்மானித்ததாக ஜனாதிபதி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தன்னால் இந்த பொதுக்கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது போனால் தனக்கு இந்த காரியத்தை ஆற்றுவதற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள் யார் யாரென பெயர் விபரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் விளக்கத்தைக் கேட்டபின்னர் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர் சரத் அமுனுகமஇ இந்தப் பிரச்சனைத் தொடர்பாக ஜனாதிபதி தனித்து தீர்மானம் எடுக்கக் கூடாதென்றும் ஜனாதிபதியா முக்கியமா அல்லது கட்சியா என்பது பற்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையை கூட்டி முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு ஜனாதிபதியும் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த ஏனைய அமைச்சர்களும் இணக்ககம் தெரிவித்துள்ளனர்.

ஹம்சன்
Reply
#2
நன்றி ஹம்சன்.
ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. ஜனாதிபதி பதவியை விடுவா எண்டு.
Reply
#3
உதவி வழங்கும் நாடுகளின் காசுப்பொட்டலத்திற்கு என்ன சக்தி பாருங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)