06-11-2005, 09:00 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>அண்ணன்மார் கனவு,
அது நானாய்..</b>
தூயா</span>
[size=15]
முறத்தால் புலியை விரட்டிய தமிழ் பெண்ணில் வீரம் பற்றி, திருவிழாவில் நாடகம் போட்டு இருந்த்தார்கள். ஊர் மக்கள் அனைவரின் கவனங்களும் நாடகத்தில் இருந்த போது, என் மனது மட்டும் ஒரு இடத்தில் நிலை கொள்ளாது வாட்டியது.
இது இன்று புலி நாடகத்தை பார்த்து வந்ததல்ல, எப்பொழுதெல்லாம் புலத்தில் இருந்து தாயகத்திற்கு வருகிறேனோ, அப்பொழுதெல்லாம் வந்து ஆட்டி படைக்கும் நோய் இது.
சிறு வயதில் சுதந்திரமாய் கோவில் விளையாடும் என் வயது சிறுவர்களில் ஆரம்பித்து, இன்று கோவிலுக்கு பட்டுப்பாவாடை சரசரக்க வரும் அவர்களை பற்றியே என் எண்ணம் எல்லாம். என் காது படவே எத்தனை தரம் கூறி இருப்பார்கள். நான் வெளிநாட்டுகாரியாம். அவர்களுக்கு தான் ஊரில் அதிக உரிமை இருக்காம்.
அது எப்படி? இதே ஊரில் தானே நானும் பிறந்தேன். ஈழப்போராட்டத்தில் எங்கள் குடும்பத்தில் பங்களிப்பு இல்லாமாலா? எனை தூக்கி வளர்த்த என் மாமக்கள், அண்ணண்கள் மாவீரராகிய நேரங்கள். புலத்தில் இருந்து வந்து பார்த்தால் அப்பொழுதும் பபா என்று அழைப்பது போல் இருக்க நான் அழ, அண்ணாக்கள் எனை அணைக்க. சரி அதை விட்டாலும், புலத்தில் இருந்தால் எனக்கு உரிமை இல்லையா? நான் தமிழ் பெண் இல்லையா? ஈழத்தின் குழந்த்தை இல்லையா? இப்ப்படி எல்லம் சிறுவயதில் நினைப்பதுண்டு.
அண்ணண்களிடம் சொல்லி அழுத போது அவர்கள் சொன்ன பதில் "எங்கட பபா நிறைய படிச்சு, ஊருக்கு வந்த்து ஈழத்துக்கு சேவை செய்ய வேணும். அப்ப தான் அண்ணாக்களுக்கு சந்தோசம்".
நானும் இங்கு இருந்திருந்தால்...நினைவுகளே தேனாய் இனித்தது. அதற்க்கு காரணம் இல்லாமாலா?
சிறு வயதில் புலத்திற்கு போகலாம் என அப்பா சொன்ன போது, சந்தோசமாக தான் இருந்தது. அங்கு போன பின்னர் தான் புலத்தின் அருமை. :நிற்க: எதற்கு தேவையில்லாமல் ஒரு நாட்டில் பழி போட வேண்டும்.
எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என அம்மாவிடம் அழாதா நாட்கள் போன புதிதில் இல்லை என்றே கூறலாம்.
தாயகத்தில் அப்பா, அம்மா என இரு குடும்பங்களிற்கும் ஒரே ஒரு பெண்ணாய் பிறந்தது. அண்ணாக்களில் கைகளிலே த்வழ்ந்தவள் நான். கதைகளில் வரும் இளவரசி கூட என் அளவுக்கு வாழ்ந்திருப்பாளா என சந்தேகம் தான்.
அப்படி இருந்தா என்னை தனியே கொண்டு வந்து, என்னை கொடுமை செய்கிறார்கள் என தான் சிறு வயதில் நினைத்து இருந்தேன். அந்த அளவிற்கு என் பிறந்த மண்ணிலும், என் அண்ணன்களுடனும் அன்பை வைத்து இருந்தேன்.
காலப்போக்கில் கல்வி பாடம் படிப்பு என இவற்றில் இருந்து கொஞ்சம் விடு பட்ட போதும், தாயகத்திற்கு போகும் போதெல்லாம் என் வயதை ஒத்தவர்களுக்கு தாயகத்தில் கிடைக்கும் சுதந்திரம் எனக்கு புலத்தில் இல்லை என்றே தோன்றும்.
இதோ பல்கலைக்கழகமும் முடித்தாயிற்று, மேலும் படிக்கலாம் என முடிவு செய்த நேரத்தில் தான் ஊரில் தாத்தாவுக்கு உடல் சரியில்லை என தகவல்.
போட்டது போட்டபடி ஓடி வந்தால், 2 நாட்களில் தாத்தாவின் உடல் நலம் வியக்க தக்க வகையில் முன்னேற்றம்.
"பேத்தியை கண்டது தாத்தாவுக்கு சந்தோசத்திலே எல்லாம் சரியாகிவிட்டது" என அனைவரும் கூறும் போது மனதிற்குள் சந்தோசம் ஊடுறுவதை தவிர்க்க முடியவில்லை. பெருமையாக கூட இருந்தது.
வந்தது வந்தது தானே, கோவில் திருவிழாவை முடித்து போகலாம் என தாத்தா கூறியதின் பலன் தான் கோவில் திருவிழாவின்ல் இன்று நான்.
கண்களோ தமிழ் குறத்தியை பார்க்க, மனம் ஒரு உலகவுலா போய்வரும் போது பக்கத்தில் சில பெண்களின் பேச்சால் கவரப்பட்டு கவனத்தை அவர்கள் பேச்சில் திருப்பினேன்.
என்ன தான் சொல்கிறார்கள் என பார்க்கலாமே;
"என்னத்தை அக்கா சொல்லுறது. பெடியன் வீட்டில 50 பவுண் எல்லோ கேட்கினம். அம்மளாச்சி ஒரு வழி காட்டமாட்டாளா என்று தான் விரதம் வேண்டுதல் எல்லாம்" என கடவுளை பண்டை மாற்று முறைக்கு அழைக்கும் ஒருத்தி.
"என்ன ராதா சொல்லுறாய், உன்ட பெட்டைக்கு தானே வீடு, காணி என்று இருக்கு. பிறகென்ன 50 பவுண் கதை" என கூறி தன் 3 குமர்களின் மேல் பார்வையை செலுத்தினார்.
"பெடியன் லண்டனாம். வீடும் காணியும் அவர்களுக்கு இங்க எதுக்காம். லண்டனில தான் வீடு வேணுமாம். சரி அக்கா உந்த மனுசன் கோப்பிடுறாப்போல இருக்கு வாறன் " என கூறி அவர் நடந்த போது... என்னையும் மீறி என் தலை உயர்ந்தது.
தனியே யாரும் இல்லா நாட்டில் 18 வருட வாழ்க்கை. உறவுகளை பிரிந்து ஏங்கிய ஏக்கங்கள். தாதாவின் தவிப்பு அனைத்துக்கும் விடை இன்று கிடைத்தது போல் ஒரு திருப்ப்தி.
இவர்கள் கூறிய பெண்களை போல் இல்லாது என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமா நாளை நான் படித்த படிப்பின் மூலம் தாயகத்திற்கு எத்தனையோ சேவைகள் செய்யலாமே.
புலத்தில் வளர்ந்தால் என்ன? பிறந்தால் என்ன? நானும் தமிழ் தாயின் குழந்தை தான்.
இதை தானே என் அண்ணண்களும் எனக்காக வேண்டினார்கள். அவர்கள் கனவை நனவாக்கும் நேரம், கூட இருந்து பார்க்க அவர்கள் இல்லை. ஆனாலும் என்ன இப்பொழுதும் "பபா" என அவர்கள் எனை அழைப்பது போல் கேட்கிறதே. இதோ மீண்டும் 18 வருடங்களின் பின் மீண்டும் என் அண்ணண்களின் இளவரசியாய்...
முற்றும்.
முதன் முதலில் கதை எனும் பெயரில் ஏதோ ஒன்றை எழுதி இருக்கிறேன். யாழ் வந்த பின்னர் தான் உங்கள் அனைவரையும் பார்த்த பின்னர் நானும் எழுதினால் என்ன என நினைத்தேன். ஆகவே உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
ஆர்வம் இருந்த போதும், என் தமிழ் மேல் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். எனக்கு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் தந்த சியாம் அண்ணாவிற்கு இந்த சிறு கதையை சமர்ப்பிக்கிறேன்.
தவறுகள், பிழைகள் இருப்பின் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும். நன்றி.
தூயா

[b][size=15]
..
..

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->