06-08-2005, 07:03 PM
[size=18]அலைக்கழிக்கும் வண்டிற்கு........
எழுதியவர்: ஆ.ப.வசந்தன்
நன்றி: மரத்தடி
பிரியமானவளே!
நானெழுதிய முடங்கலுக்கு
நீயெழுதிய பதில்மடலில் பார்த்தேன்,
பயிர்ப்பும் படபடப்பும் நிரம்பிய
உன் பதிலை.
அரும்பாகி ஆழவேரோடும் நம் காதலில்
கரும்பாக நம் முதல் ஸ்பரிசம் - உன்
வலிந்த அதிரடி முத்தமாயிருக்க
வேட்கை கொண்டு, வெட்கம் கலைந்து
நானெழுதிய மடலுக்குப் பதில் வரைந்தாய்:
"பூக்கள் எப்போதும் வண்டைநாடிச் செல்வதில்லை."
பாரம்பரியத்திலிருந்து வெளிவரா உன்
பட்டிக்காட்டுத்தனம் என்னைப் பரவசப்படுத்தவில்லை.
பரந்துவிரிந்த உலகில்,
காதலில் மட்டுமல்ல, காமத்தில்கூட
உன் முன்முயல்வைக் காட்ட நீ முயற்சிக்கவில்லை.
நான் நன்றாகவே உணர்கிறேன்;
ஒவ்வொரு சந்திப்பிலும்
உன் நெஞ்சின் விம்மலை,
கைகளின் பிசைதலை,
உதட்டுச் சுழிப்புக்களை,
மயங்கும் கண்களின் படபடப்பை,
கால்கள் பிணைதலை,
அவற்றின் உரசலை.
உன் மேலுதட்டில் அரும்பும் வியர்வைத்துளிகளின்
அர்த்தம் கூடவா எனக்குப் புரியாமற் போய்விடும்?
இருந்தும்,
நீ ஏதுமின்றியே பிரிகிறாய்.
பத்தினியாய் இருப்பதாய்ப் பாசாங்கு காட்டி
பழமைவாத நினைப்பால்
உன்னைச் சமாளிப்பதாய் ஏமாற்றுகிறாய்.
அன்பே!
கவிஞரெல்லாம் காதலரை
மலரும் வண்டுமாகவே உவமானப்படுத்தினர்.
நானும் அதையே சொல்கிறேன்.
மலரும் வண்டுமாகவே இருப்போம்.
ஆனால்
நான் மலராகவும் -
நீ வண்டாகவும்.
திகைக்காதே!
அறிவியற்படி பார்த்தால்,
உறவில் சிநேகம் பேண
புதுமுறைப்படி பார்த்தால்
இது புரியும்.
நம் உறவின் முதிர்ச்சியில் -
அந்த இன்பத் திருநாளில் -
காமத்தின் சரசத்தில்,
உறவுணர்வின் உச்சத்தில்
தேன் வழங்குவது நானாகையாலும் - பூரண
திருப்தியின் மிச்சமாய் - அதைப்
பருகுவது நீ ஆகையாலும்
அன்பே என் உவமித்தல் தான்
அசலானது.
உலகின் கலவிகளெல்லாம்
இவ்வழி நடந்திட்டால்
உறவுகளில் தான் பேதமேது?
உணர்வுகளின் கொலைகளேது?
உற்பத்திகளில் களங்கமேது?
பாலியற் சேர்க்கை பற்றி
பலவிதமாய் அறிகிறோமே.
அனுமதியற்றவள் மேல் பலாத்காரப் புணர்தல்.
அனுமதிக்கப்பட்டவள் மேல் ஆவேசப்படர்தல்.
கட்டிய மனைவியானாலும் கட்டாயக் கலவி.
தான் விரும்பிய போதெல்லாம் - அவளின்
விருப்பமின்றியே பலாத்கார வன்முறை.
இவற்றிலெல்லாம் பெண்ணே உன்
உணர்வுகள் மதிக்கப்படவில்லை.
ஒரு வகையிற் பரிதாபம் தான்
இயற்கையின் நியதியில்,
உடலமைப்பு முறையில்.
பெண்ணே!
உன் மீதான கலவியென்பது
உன் அனுமதி இருந்தாலும் நடக்கும்.
இம்மியளவேனும்
இல்லாவிட்டாலும் நடக்கும்.
ஆனால்
ஆணுக்கு அப்படியில்லை.
அவன் உணர்வுகள் தூண்டப்படாமல்,
வேட்கையின் உச்சம் கொள்ளப்படாமல்
உறவு என்பது சாத்தியமில்லை.
ஆகவே,
கலவிக்கான துணையை
ஆண் நாடிச் செல்வதென்றால்,
ஒருபக்க விருப்பின்றி
உணர்வுக்கொலை நடக்கலாம்.
பெண் தேடிச் செல்வதென்றால்,
இருபக்க விருப்புடனும் - இன்ப
இமயத்தைத் தொடலாம்.
எனவே தான் அன்பே!
வண்டாக நீயிருந்து,
தேன் வேண்டும் போதெல்லாம்
பூ என்னைத் தேடி வா.
உன் அலைபாயும் கூந்தலில்
மலரென்னைச் சூடிக்கொள்.
பாவாடைப் பாயிலே என்
காம்பினை ஊன்றிக் கொள்.
இம்மடல் கிடைத்த பின்னும்
ஏனிந்தக் குழப்பம்?
உரிமையுள்ள நதியிறங்கி நீர்குடிக்க
தாகமுள்ள மானுக்கேன் தயக்கம்?
தணலெறிக்கும் தரிசுமீது பொழிய
மழை முகிலுக்கேன் மயக்கம்?
நதி இரந்து கேட்குமென்றோ,
தரிசுநிலம் தவம்பண்ணிக்
காத்திருக்குமென்றோ
காலம் கடத்தாதே.
வா!
வேட்கை தணியும் வரை என்னை
முத்தங்களால் ஒத்தியெடு.
உன் உணர்வு அடங்குமட்டும் - என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு.
ராட்சசி போல் என்
பாதாதி கேசமெல்லாம்
உன் பசிக்கு ஏற்றாற்போல்
புசித்து முடித்துவிடு.
நான் விரும்புவது இப்படித்தான்.
உன் முன்முயல்வான முத்தத்தில் தொடங்கி
காமத்தில் முக்தி அடையும்வரை
அன்பே!
நீதான் எல்லாம் ஆரம்பிக்க வேண்டும்.
எதிர்பாரா நேரமென்னை இழுத்தணைத்து, - நான்
சாப்பிடும் போது என் சதை கடித்து,
தூங்கும்போது என்மேற் படர்ந்து,
படிக்கும்போது என்மடி விழுந்து,
கோபத்தின் உச்சத்தில் நான் வசைபாடும்போதும்
வலிந்தஉன் முத்தத்தால் என் வாய் அடைத்து,
இப்படியிப்படியெல்லாம்
எதிர்பாரா வகையில் - உன்
சின்னச் சின்ன சில்மிசங்களால்
என்னை நீ தூண்ட,
உன்னை நான் ஆற்ற
அன்பே நம் காம எல்லை
ஆயுள் வரை நீளும்.
காதற் பாடத்தில் ஒருவேளை
நம் பேரும் சேரும்.
பரஸ்பர புரிதலால், - இரு
மனம் நிறை புணர்தலால்,
காதலும் காமமும் களங்கமின்றி வாழ
நானொரு வகை கண்டு
மடல் வரைந்தேன்.
அன்பே!
நான் மலராகவும் நீ வண்டாகவும்
காலமெல்லாம் இருப்போம்.
நீ விரும்பின் கலப்போம்.
பூவின் மென்மையுடன்
உன்னை ஸ்பரிசிப்பேன். நீ விரும்பின்
புயலின் வேகத்துடன்
உன்னைப் பூசிப்பேன்.
எதிலும்,
உன் உணர்வையே மதிப்பேன்.
எனக்குத் தெரியும்,
என் உணர்வையும் நீ மதிப்பாயென்று.
உணர்வுகள் ஊறினாலும்
இதழ் மூடிக் காத்திருப்பேன்,
உன் வேண்டுகைக்காய்.
ஆனாலும் வண்டே!
ஒரு வேண்டுதல்.
தேன் சுரந்து நிறைந்து என்
மகரந்தப்பை வெடிக்கவோ,
வீணே வழிந்து
நிலத்திற் சேரவோ
வகை செய்து விடாதே
எழுதியவர்: ஆ.ப.வசந்தன்
நன்றி: மரத்தடி
பிரியமானவளே!
நானெழுதிய முடங்கலுக்கு
நீயெழுதிய பதில்மடலில் பார்த்தேன்,
பயிர்ப்பும் படபடப்பும் நிரம்பிய
உன் பதிலை.
அரும்பாகி ஆழவேரோடும் நம் காதலில்
கரும்பாக நம் முதல் ஸ்பரிசம் - உன்
வலிந்த அதிரடி முத்தமாயிருக்க
வேட்கை கொண்டு, வெட்கம் கலைந்து
நானெழுதிய மடலுக்குப் பதில் வரைந்தாய்:
"பூக்கள் எப்போதும் வண்டைநாடிச் செல்வதில்லை."
பாரம்பரியத்திலிருந்து வெளிவரா உன்
பட்டிக்காட்டுத்தனம் என்னைப் பரவசப்படுத்தவில்லை.
பரந்துவிரிந்த உலகில்,
காதலில் மட்டுமல்ல, காமத்தில்கூட
உன் முன்முயல்வைக் காட்ட நீ முயற்சிக்கவில்லை.
நான் நன்றாகவே உணர்கிறேன்;
ஒவ்வொரு சந்திப்பிலும்
உன் நெஞ்சின் விம்மலை,
கைகளின் பிசைதலை,
உதட்டுச் சுழிப்புக்களை,
மயங்கும் கண்களின் படபடப்பை,
கால்கள் பிணைதலை,
அவற்றின் உரசலை.
உன் மேலுதட்டில் அரும்பும் வியர்வைத்துளிகளின்
அர்த்தம் கூடவா எனக்குப் புரியாமற் போய்விடும்?
இருந்தும்,
நீ ஏதுமின்றியே பிரிகிறாய்.
பத்தினியாய் இருப்பதாய்ப் பாசாங்கு காட்டி
பழமைவாத நினைப்பால்
உன்னைச் சமாளிப்பதாய் ஏமாற்றுகிறாய்.
அன்பே!
கவிஞரெல்லாம் காதலரை
மலரும் வண்டுமாகவே உவமானப்படுத்தினர்.
நானும் அதையே சொல்கிறேன்.
மலரும் வண்டுமாகவே இருப்போம்.
ஆனால்
நான் மலராகவும் -
நீ வண்டாகவும்.
திகைக்காதே!
அறிவியற்படி பார்த்தால்,
உறவில் சிநேகம் பேண
புதுமுறைப்படி பார்த்தால்
இது புரியும்.
நம் உறவின் முதிர்ச்சியில் -
அந்த இன்பத் திருநாளில் -
காமத்தின் சரசத்தில்,
உறவுணர்வின் உச்சத்தில்
தேன் வழங்குவது நானாகையாலும் - பூரண
திருப்தியின் மிச்சமாய் - அதைப்
பருகுவது நீ ஆகையாலும்
அன்பே என் உவமித்தல் தான்
அசலானது.
உலகின் கலவிகளெல்லாம்
இவ்வழி நடந்திட்டால்
உறவுகளில் தான் பேதமேது?
உணர்வுகளின் கொலைகளேது?
உற்பத்திகளில் களங்கமேது?
பாலியற் சேர்க்கை பற்றி
பலவிதமாய் அறிகிறோமே.
அனுமதியற்றவள் மேல் பலாத்காரப் புணர்தல்.
அனுமதிக்கப்பட்டவள் மேல் ஆவேசப்படர்தல்.
கட்டிய மனைவியானாலும் கட்டாயக் கலவி.
தான் விரும்பிய போதெல்லாம் - அவளின்
விருப்பமின்றியே பலாத்கார வன்முறை.
இவற்றிலெல்லாம் பெண்ணே உன்
உணர்வுகள் மதிக்கப்படவில்லை.
ஒரு வகையிற் பரிதாபம் தான்
இயற்கையின் நியதியில்,
உடலமைப்பு முறையில்.
பெண்ணே!
உன் மீதான கலவியென்பது
உன் அனுமதி இருந்தாலும் நடக்கும்.
இம்மியளவேனும்
இல்லாவிட்டாலும் நடக்கும்.
ஆனால்
ஆணுக்கு அப்படியில்லை.
அவன் உணர்வுகள் தூண்டப்படாமல்,
வேட்கையின் உச்சம் கொள்ளப்படாமல்
உறவு என்பது சாத்தியமில்லை.
ஆகவே,
கலவிக்கான துணையை
ஆண் நாடிச் செல்வதென்றால்,
ஒருபக்க விருப்பின்றி
உணர்வுக்கொலை நடக்கலாம்.
பெண் தேடிச் செல்வதென்றால்,
இருபக்க விருப்புடனும் - இன்ப
இமயத்தைத் தொடலாம்.
எனவே தான் அன்பே!
வண்டாக நீயிருந்து,
தேன் வேண்டும் போதெல்லாம்
பூ என்னைத் தேடி வா.
உன் அலைபாயும் கூந்தலில்
மலரென்னைச் சூடிக்கொள்.
பாவாடைப் பாயிலே என்
காம்பினை ஊன்றிக் கொள்.
இம்மடல் கிடைத்த பின்னும்
ஏனிந்தக் குழப்பம்?
உரிமையுள்ள நதியிறங்கி நீர்குடிக்க
தாகமுள்ள மானுக்கேன் தயக்கம்?
தணலெறிக்கும் தரிசுமீது பொழிய
மழை முகிலுக்கேன் மயக்கம்?
நதி இரந்து கேட்குமென்றோ,
தரிசுநிலம் தவம்பண்ணிக்
காத்திருக்குமென்றோ
காலம் கடத்தாதே.
வா!
வேட்கை தணியும் வரை என்னை
முத்தங்களால் ஒத்தியெடு.
உன் உணர்வு அடங்குமட்டும் - என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு.
ராட்சசி போல் என்
பாதாதி கேசமெல்லாம்
உன் பசிக்கு ஏற்றாற்போல்
புசித்து முடித்துவிடு.
நான் விரும்புவது இப்படித்தான்.
உன் முன்முயல்வான முத்தத்தில் தொடங்கி
காமத்தில் முக்தி அடையும்வரை
அன்பே!
நீதான் எல்லாம் ஆரம்பிக்க வேண்டும்.
எதிர்பாரா நேரமென்னை இழுத்தணைத்து, - நான்
சாப்பிடும் போது என் சதை கடித்து,
தூங்கும்போது என்மேற் படர்ந்து,
படிக்கும்போது என்மடி விழுந்து,
கோபத்தின் உச்சத்தில் நான் வசைபாடும்போதும்
வலிந்தஉன் முத்தத்தால் என் வாய் அடைத்து,
இப்படியிப்படியெல்லாம்
எதிர்பாரா வகையில் - உன்
சின்னச் சின்ன சில்மிசங்களால்
என்னை நீ தூண்ட,
உன்னை நான் ஆற்ற
அன்பே நம் காம எல்லை
ஆயுள் வரை நீளும்.
காதற் பாடத்தில் ஒருவேளை
நம் பேரும் சேரும்.
பரஸ்பர புரிதலால், - இரு
மனம் நிறை புணர்தலால்,
காதலும் காமமும் களங்கமின்றி வாழ
நானொரு வகை கண்டு
மடல் வரைந்தேன்.
அன்பே!
நான் மலராகவும் நீ வண்டாகவும்
காலமெல்லாம் இருப்போம்.
நீ விரும்பின் கலப்போம்.
பூவின் மென்மையுடன்
உன்னை ஸ்பரிசிப்பேன். நீ விரும்பின்
புயலின் வேகத்துடன்
உன்னைப் பூசிப்பேன்.
எதிலும்,
உன் உணர்வையே மதிப்பேன்.
எனக்குத் தெரியும்,
என் உணர்வையும் நீ மதிப்பாயென்று.
உணர்வுகள் ஊறினாலும்
இதழ் மூடிக் காத்திருப்பேன்,
உன் வேண்டுகைக்காய்.
ஆனாலும் வண்டே!
ஒரு வேண்டுதல்.
தேன் சுரந்து நிறைந்து என்
மகரந்தப்பை வெடிக்கவோ,
வீணே வழிந்து
நிலத்திற் சேரவோ
வகை செய்து விடாதே


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->