Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குதிரை-பாம்பு-நண்டு- வாத்து-முயலுக்கு திருமணம் உலக அமைதி வேண
#1
குதிரை-பாம்பு-நண்டு- வாத்து-முயலுக்கு திருமணம் உலக அமைதி வேண்டி சென்னையில் நடந்தது

முயல், நண்டு, எலி, வான்கோழி ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்தபோது எடுத்தபடம்.

சென்னை, செப். 29- குதிரை, கழுதை, பாம்பு, நண்டு, வாத்து, முயலுக்கு உலக அமைதி, மழைவேண்டி நேற்று சென்னையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருமணம்

உலக அமைதி, மக்கள் வளம்,நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் சென்னை கே.கே.நகர் மல்டி விநாயகர் கோவில் வளாகத்தில் நேற்று 18 வகை பட்சி மிருகாதி ஜுவராசிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சியும், 2 ஏழை ஜோடிகளுக்கு சீர்வரிசை தந்து திருமணம் மற்றும் 80 வயது முடிந்த முதியவர்ஜோடி ஒன்றுக்கு சதாபிஷேகமும் நடைபெற்றது. வாஸ்து நிபுணர் ஆர்.கே.பகவதிராஜ; இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பூனை-எலி

முதலில் சதாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2 ஏழை ஜோடி களுக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து குதிரை, கழுதை, மாடு, நாய், வாத்து, வான் கோழி, முயல், பாம்பு, பூனை, எலி, கவுதாரி, குரங்கு, மீன், நண்டு, காகம், உடும்பு, கிளி, பன்றி ஆகியவை ஜோடி ஜோடியாக மேடைக்கு கொண்டு வரப்பட்டன. பொழிச்சலூர் வாசுதேவன் மந்திரங்கள் ஓதி அவற்றிற்கு தாலி கட்டினார். அப்போது கெட்டிமேளம் முழங்கியது. அங்கு கூடியிருந்து ஆயிரக்காணவர்கள் மஞ்சள் அரிசி தூவி வாழ்த்தினார்கள்.

சண்டி ஹோமம்

முன்னதாக அதிகாலை 5.30 மணி அளவில் வாஸ்து, கணபதி, சண்டி ஹோமங்களும், கோமாதா பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை ஆகியவையும் நடைபெற்றன. இதற்காக சூரிய வடிவில் யாக சாலை அமைக்கப்பட்டது. 52 ஓதுவார்கள் அமர்ந்து மந்தி ரங்கள் ஓதினார்கள்.

இந்த விழாவில் சபாநாயகர் காளிமுத்து கலந்து கொண்டு உலக சமாதனம் வேண்டி 100 புறாக்களை பறக்கவிட்டார்.

வலம்புரிஜான் பேசும் போது, பூகம்பம் வருவதை கண்டுபிடிக்கும் கருவிகள் கூட இன்றைய தினம் தோல்வி அடைந்துவிட்டன. ஆனால் ஒருவகை நண்டு மட்டும் 18 மணி நேரத்துக்கு முன்பே பூகம்பம் வருவதை கண்டறிந்து கொள்கிறது. அத்தகைய நண்டை ஜப்பானில் தொட்டியில் வளர்க்கிறhர்கள் என்றார். திருவாடு துறை முத்துகுமாரதம்பிரான் சுவாமிகள், கருணாகரன் சுவாமிகள் மிருக திருமணம் பற்றி கூறும்போது, மிருக பட்சிகளை மனம் குளிர வைப்பதன் மூலம் நாட்டில் உணவு தானியம் பெருகும், மழை பெய்யும் இவை செழித்தால் மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்வார்கள். 2000ம் ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற நிகழ்ச்சி இப்போது தான் நடைபெறுகிறது என்றனர்.

முன்னதாக கே.மனோகரி, பி.ராதாபகவதி குத்துவிளக்கு ஏற்றி மணவிழாவை தொடங்கி வைத்தனர். சண்டி ஹேhமத்தை ஆர்.கே. பகவதிராஜ; தொடங்கி வைத்தார். மலர், செல்வசீமான், பரமானந்தம் ஆகியோர் வரவேற்றனர். பட அதிபர் பி.டி.செல் வகுமார் நன்றி கூறினார்.

விழா முடிந்ததும் 1000 பேருக்கு திருமண விருந்து பரிமாறப்பட்டது.

நன்றி: தினகரன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)