Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
உண்மைதான். பலநேரங்களில் பலரால் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இந்து மதத்தின் பல வக்கிரங்களை வெளிக்கொணர்வது அம் மதநம்பிக்கை சார்ந்தோரை தம் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தத் தூண்டும். பலவேளைகளில் தம்மீதே தமக்கு வெறுப்பைப உண்டுபண்ணும். அந்த வெறுப்பை மற்றவர்கள் மீதும் காண்பிக்கத் தோன்றும்.
சமஸ்கிருதம் என்கிற பெயரில் மறைக்கப்பட்ட இந்துமத புராண கதைகளின் வக்கிரங்களையும், அவற்றினால் தமிழர் நிலத்தில் உண்டான பண்பாட்டு மாற்றங்கள் பற்றியும், (மொழீச்சிதைவு உட்பட) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்து மதத்தில் மட்டுமல்ல மற்றைய மதங்களிலும் குறைபாடுகள் உள்ளனதான். ஆனாலும் தமிழர் மத்தியில் கலாச்சாரம் என்ற பெயரில் ஊடுருவி நிற்பவற்றில் பல தமிழர் பண்பாடு அல்ல இந்துமதக் கலாச்சார மூடவழக்குகளே. எனவே அவை களையப்படவேண்டுமென்றால் இவைபோன்றவை அம்பலப்படுத்தப்படவேண்டும்.
மற்றவரின் நம்பிக்கை என்பது சமூகத்தை சீரழிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாலும், அதுவே உண்மைநிலை என்பதாலும் அவர்கள் நம்பிக்கை மீது அவர்களே கேள்வி கேட்பதற்கான சூழலை நாம் உருவாக்கவேண்டும். தொடருங்கள் கிருபன்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எமது தமிழ் சமூகம் 70% இந்து சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் பல நல்ல சமூகவியல் விடயங்களைத் தனதாக்கி ஆண்டாண்டுகளாக கட்டுக்கோப்போடு வாழ்ந்தது...! வாழ்ந்தும் வருகிறது...! அதற்குள் மதவாதத்தை சமூக வர்க்க வாதத்தை எவரும் அனுமதித்தத்தில்லை...! (இந்தியாவில் இருப்பது போன்று)
ஜனநாயகம் உட்பட விடுதலைப் போராளிகள் கூட மக்களின் மதக் கோட்பாடுகளைக் கைவிடச் சொல்லவில்லை...அதற்கான மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை...! அவையும் கூட தமிழர் சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சமூகவியல் பண்பு என்றே கண்டார்கள்..! இப்போ பார்பர்ணிய எதிர்ப்பு என்ற போர்வையில் மக்களிடையே மதம் தொடர்பான தவறான சிந்தனைகளைப் பரப்பி அவர்களை தவறான நடத்தைகளின் பால் இட்டுச் சென்று சமூகச் சீரழிவை ஊக்கிவிக்க சிலர் முனைகின்றனர்...! இதைத்தான் தாயகத்தில் ஆக்கிரமிப்பாளனும் செய்கின்றான்..! ஒருவேளை இது எமது தேசிய விடுதலையின் பால் மக்களை மறைமுகமாக கருத்திழக்கச் செய்து மேற்குலக அநாகரிகங்களுக்குள் மயக்க வைக்க மேற்கொள்ளப்படும் அந்நிய உளவாளிகளின் முயற்சியாகக் கூட இது இருக்கலாம்...! இவர்களும் ஒரு வகையில் எதிரிகள் தான்.... துரோகிகள் தான்...!
மூடநம்பிக்கைகள் என்று ஒரு சிலரின் பார்வைக்குள் இருப்பவை இன்னொருவனின் பார்வைக்குள் அர்த்தமுள்ளதாக இருக்கலாம்...! அது அவரவர் பகுத்தாய்வு திறனைச்சார்ந்தது...! நிர்வாண ஓவியத்தை கலையாக ரசிக்கக் கூடிய ஓவியர்கள் மனிதரில் சிலரே.. அதை காமக் கண்ணோடு நோக்குபவர் பலர்...! அந்த வகையினதே இங்கு தரப்படும் ஒரு சமூகம் சார்ந்த அது தந்த அதற்கான படிமங்களும் அதைச் சிலர் தங்கள் வக்கிர சிந்தனைகளால் சித்தரித்துச் சிரிக்கின்ற கட்டுரைகளும்... இவை எவையும் வேதங்களிலோ...ஆகமங்களிலோ.... சொல்லப்படாத...தனிமனித வக்கிர சிந்தனைகள்... இதில் கருத்தெழுதும் பலருக்கு வேதமும் ஆகமும் மனித வாழ்வியலுக்கு என்ன சொல்கிறது என்ற அடிப்படை தெரிய... விளங்க வாய்ப்பில்லை...! இவர்கள் அறிந்ததெல்லாம் விலங்கு நடத்தையியல் மேற்குலக அநாகரிகம் மட்டுமே...! இவர்கள் தங்கள் பாணியில் வக்கிரங்களை விதைப்பதை இட்டு எவரும் ஆச்சரியப்படத் தேவையில்லை...!  hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
கிருபனண்ணா நீங்கள் இங்க எழுதியிருக்கிறத தான் நேற்று நானும் மற்றத் தலைப்புக்குள்ள எழுதினான். உண்மையச் சொன்னா குருவியண்ணாக்கு கோவம் வருது. என்ன செய்யிறது  தாயகத்தில மதரீதியான விசயத்தில புலியள் கைவக்காததுக்கு காரணமிருக்கண்ணா. ஆது என்ன காரணமெண்டு நான் சொல்லித்தான் நீங்கள் தெரிஞ்சு கொள்ளவேணுமெண்டில்ல  hock:
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
kuruvikal Wrote:எமது தமிழ் சமூகம் 70% இந்து சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் பல நல்ல சமூகவியல் விடயங்களைத் தனதாக்கி ஆண்டாண்டுகளாக கட்டுக்கோப்போடு வாழ்ந்தது...! வாழ்ந்தும் வருகிறது...! அதற்குள் மதவாதத்தை சமூக வர்க்க வாதத்தை எவரும் அனுமதித்தத்தில்லை...! (இந்தியாவில் இருப்பது போன்று)
ஜனநாயகம் உட்பட விடுதலைப் போராளிகள் கூட மக்களின் மதக் கோட்பாடுகளைக் கைவிடச் சொல்லவில்லை...அதற்கான மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை...! அவையும் கூட தமிழர் சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சமூகவியல் பண்பு என்றே கண்டார்கள்..! இப்போ பார்பர்ணிய எதிர்ப்பு என்ற போர்வையில் மக்களிடையே மதம் தொடர்பான தவறான சிந்தனைகளைப் பரப்பி அவர்களை தவறான நடத்தைகளின் பால் இட்டுச் சென்று சமூகச் சீரழிவை ஊக்கிவிக்க சிலர் முனைகின்றனர்...! :
மதங்கள் உலகில் சில குறிப்பிட்ட பாகங்களில் தோன்றி உலகம் முழுவதும் பரவின. கிறிஸ்துவ மதம் இசுலாமிய மதம் போல மத்திய கிழக்கில் தோன்றி உலகெங்கும் பரவியது. இந்து மதம் இந்தியாவில் பல பாகங்களிலும் தோன்றிய பல மதங்களின் தொகுப்பாகும். அதில் வடஇந்தியாவில் சமஸ்கிருதத்தோடு தோன்றிய இருக்கு வேதங்களின் படி அமைந்த மதங்களின் பங்கு கணிசமானது. ஆனால் தமிழரின் பூர்வீக மதங்களையும் இந்து மதம் உள்ளடக்கி இருக்கிறது.
இந்து மதம் போற்றத்தக்களவு நற்பண்புகளை ஊட்டி வளர்க்கிறது. குறைகளை பார்த்து நிவர்த்தி செய்ய வேண்டிய அதே வேளை நிறைகளை பார்த்து அவற்றை நாம் ஊக்குவிக்கவும் வேண்டும்.
மதங்கள் பிற்போக்கானவை. எல்லா மதங்களும் அப்படித்தான். மதங்களை முற்றாக அழித்து வெற்றி கண்ட நாடுகள் இருக்கின்றன. சீனா போன்ற நாடுகளின் இளைய தலைமுறையினர் மதங்களும் கடவுள் நம்பிக்கையும் இன்றி சிறப்பான ஆரோக்கியமான வாழ்வு வாழ்கிறார்கள்.
மதங்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழியாகும். தொலைக்காட்சியில் பைபிள் போதித்து கோடீஸ்வரரானவர்கள் இதற்கு உதாரணம்.
மதங்களை வைத்து மக்களை ஏமாற்றுவதற்கு தடை விதித்து அதே வேளை மக்களின் சிறந்த வாழ்ககைக்கு மதங்கள் காட்டும் வழிகளை பின்பற்றுவது சிறப்பாக அமையும்.
புத்தமதம் சொல்லித்தரும் பற்றில்லாமல் வாழும் வழியையும் இந்து மதம் சொல்லித்தரும் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழும் வழிகளையும் இசுலாம் காட்டும் ஒற்றுமையையும் கிறிஸ்தவம் சொல்லும் படி மற்றவரை நேசித்து வாழும் வழிகளையும் மக்கள் பின்பற்றி சிறப்புடன் வாழலாம். எத்தனையோ பக்தர்கள் இப்படி சிறப்பான வாழ்வு வாழ்கிறார்கள்.
ஆண் - பெண் உறவு என்று வரும்போது இந்து மதம் காட்டும் முழுமையான வாழ்வை வேறு எந்த மதமும் காட்டுவதில்லை.
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்த பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்க பாலியல் வக்கிரங்கள் பல கொண்ட, பலபிறப்பு வரலாற்றைக் கொண்டவையாகும். அவைகளைப் பார்ப்போம்.
1.சிவமகாபுராணத்தில் பார்வதியார் குளிக்க போன போது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையை விறாண்டி அதற்கு உயிர் கொடுத்து, அந்த பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு சென்றார். சிவபெருமான் வந்து உள்ளே போக முற்பட்ட போது மோதல் சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டி பொருத்தியதாக பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு இறைவியான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்கு துணிவுள்ளவர்கள் யார்? இவை ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது. எனவே கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையை பாதுகாக்க ஆண்கடவுள்களுடன் போராடவேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படி பாதுகாப்பை பெறமுடியும். ஏனெனின் அந்த தெய்வங்களே பல வக்கிரத்தில் பிறந்ததுடன் கற்பழிப்புகள் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்கள் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்கள் சரி பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் ரசிக்கின்றனவா அல்லவா. இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்கின்றது. கடவுள்கள் கற்பழிப்பு முதல் அவற்றின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பல இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.
2.ஒரு நாள் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அதன் நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் பெண் யானை புணர்வதை போன்று கீறியிருந்த காட்சியைக் கண்டு, அதுபோல் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதை கூறும் போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை ரசிக்கும் மனித பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புளுபிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயக சந்தையில் மூலதனமாக்கி கொடிகட்டி நிற்கின்றது.
3.பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்றுவடிவில் கர்ப்பபைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாக பிள்ளையார் வரலாறு. முட்டாள்களே நம்புங்கள்! இந்து புளுகு மூட்டை. இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்கு தெரிந்தது?
4.தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டி பொருத்தியதாக பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை. பிறப்புகள் வக்கிரம்பிடித்து கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா! என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு. இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது. யார் இந்த உரிமையை கொடுத்தது. எங்கு எப்போது இந்த பிறப்புகள் எல்லாம் நடந்தன.
5."பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"128
என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் பிள்ளையார் பிறப்பை சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று தேவாரம் மூலம் விளக்குகின்றார். இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்த திருஞானசம்பந்தப் பயல் உமாதேவியாரின் பெண் உறுப்புகளை தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தை கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்த திருஞானசம்பந்தன் சமணப் பெண்களை கற்பழிக்க அருள் கோரி "பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்ணற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா. இதை இறைவன் செய்தான் என்பதும், அதை கற்பனை பண்ணி பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்த தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்.
6.பார்வதி தன் உடல் அழுக்கை கழுவி அதை கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள ராட்சஷிமாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்ற கதை. எவ்வளவு அருவருப்பை தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஒரினச்சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது. ஒரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்கு புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்த பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்கமுடியாதவை.
7.ஒருநாள் பார்வதி தனது உடல் ஊத்தையை விராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அன்பு சொரிந்து உயிருட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையாராம்;. எப்படி சிவபெருமான் அந்த உத்தைக்கு தந்தையாக முடியும்;. ஒருபால் உறவில் குழந்தை பிறக்க அதிசயம் உலகின் அதிசயங்களாக பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை தோண்டி ரசித்து உண்ணும் பண்பு போல் அல்லவா இந்த பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றது.
8.பிரம்மாவை வர்த்த புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்தால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தை துடைக்க விஷ்ணு யானைத்தலையை வெட்டி ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்கு குழந்தை பிறந்ததை அறிந்து, அவரை பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனிதேவனும் ஒருவராம்;. சனி தான் பாத்தால் குழந்தைக்கு தீது உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவிர்தத்தாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க குழந்தையைப் பார்க்க குழந்தையின் தலை எரிந்து போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகள் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தை பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கு இந்த பிறப்பின் பல்வேறு கற்பனை பிதற்றல்கள்.
இந்த பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்க சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் பலவிதமான கொண்டட்டங்களை தோற்றுவித்துள்ளது. இந்த கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியை தீர்க்கும் கற்பழிப்புகளை செய்யும் ஊடாகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக்கலவரத்தின் ஊடகமாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்ற மணமகனும் மணமகளும் திருமணத்தின் பின் உடலுறவைக் குறித்து கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் அன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பை போல் வக்கரித்த நிகழ்கின்றது.
இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம், மனித பண்பாட்டையே வக்கரித்து கேலிசெய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி அசுரர்களை அழிக்க அழிக்க தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டு உறுஞ்சி எடுத்ததாக பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது. இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்த போது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்தவதே இந்தக் கதை. இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டி திட்டமிட்டு கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இந்தக் கோட்பாட்டில்தான்;. பெண்ணின் பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஓரே நோக்கம் என்பதை, இந்த சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும். பதம புராணம், ஸ்ரஸ்தி காண்டம் அத்தியாயம் 17 இல் பிரம்மா நடத்திய வேள்விக்கு சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். ரிஷி பத்தினிகள் இதைக் கண்டு சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதி படுத்தினராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர் எங்கள் ஆணாதிக்க பக்திமான்கள்.
இதையே லிங்கபுராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்த நேரம் வீடு திரும்பிய ரீஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழ கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்ற பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்த பிண்டத்தையே வழிபடும் மனம் கெட்டவர்கள் இந்துக்கள். கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீள் வக்கிரபுணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டு கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம், இந்துராஜ்சியத்தின் பொதுவான ஒழுக்கமாக சட்ட திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?
<b> . .</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இங்க நிறைய பெருசுங்க இருக்கிறாங்க..
இதெல்லாம் பெருசுங்க பக்கம்..
நான் போயிடுறேன்.. :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
சீக் இதென்ன கடவுள் விலங்க விடக் கேவலமா எல்லாம் நடக்குறார். உவ்வேக். உதுகளத்தான் எங்கட ஆக்கள் கும்புடுகினமோ. அதான் அவயும் அப்பிடி இருக்கினம் போல. :roll:
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
சன்டீவியில் ஒலிபரப்பாகும் விக்கரமாதித்தன் என்ற சிறுவர் கதையிலும் ஆஞ்சினியர் வரலாறும் போட்டனர்,அவர் பிறந்தது சிவனும் உமாதேவியாரும் குரங்காகி...மிஞ்சம் சொல்மாட்டன் தெய்வகுத்தமாகிடும்!
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது. இரண்டு ஆண் கடவுளுக்கிடையில் நடந்த ஆணாதிக்க ஓரினச் சேர்க்கையில் பிறந்த ஐயப்பனே, ஐயப்பன் ஆனான். கடவுகளின் ஓரினச் சேர்க்கை கூத்தை இன்றைய ஓரினச் சேர்க்கiயாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாக கொண்டாடலாம். ஆனால் அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம்.
பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கி கடும் தவமிருந்தால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டாராம். அவன், யார் தலையிலும் நான் கைவைத்தால், அவர்கள் எரிந்து சம்பல் ஆகவேண்டும் என வேண்டினானராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை வழங்கினாராம். உடனே வரம் பலிக்கின்றதா என்று சிவனின் தலையில் கைவைக்க போவதாக கூற, சிவன் ஒடத் தொடங்கினாராம். இதை தொடர்ந்து சிவன் அழிந்து விடுவாரா என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம். மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை, குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்க தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர் அற்ற நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர் உள்ளது, அதை உன் தலையில் வைத்துவிட்டு வா என்று கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான்.
மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே சிவனிடம் செல்ல, ஆணாதிக்க சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு புணர துடித்தாராம். உடனே மகாவிஷ்ணு மோகினி வேஷத்தில் ஒடத் தொடங்க, சிவன் துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால் கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஜயப்பன் ஆனான்.
இதையே வேறுவிதமாக கூறும் இந்துக் கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன். இது கேரளத்தில் நடந்த அருவருப்பான அற்புதம்.
ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஒரினப்புணர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும் சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபாடலாம். ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகள் ஈவிரக்கமற்ற வகையில் தோல்லுரித்து போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
இங்கு சிவனின் ஆணாதிக்க வெறி கேள்விக்கு இடமின்றி இந்த வழிபாடு அங்கீகரிக்கின்றது. ஒருபெண்ணை புணர்வதற்கு பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்த வழிபாட்டுக் கோட்பாடு நிஜவிளக்கத்தை கொடுக்கின்றது. அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்க பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக் கொண்டு வாழமுடியுமா?
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும். மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.
"ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"139
அதாவது ஒரு அழகிய பெண்ணின் பெண் உறுப்பை பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்கு சமமாவான் என்கிறது இந்து மதம். ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, ஆணாதிக்க கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும். விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை செபம் செய்யவேண்டும் என்ற இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன. இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கதினதும் தலைசிறந்த கொடூங்கோலாரவர்.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.
"சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப
ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்
மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"139
அதாவதுää சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண்விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான். பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகள் சாட்சிகள். இந்த ஆபாசமான கூத்துகளை பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மந்திரத்தில் ஆணாதிக்க வக்கிர மந்திரம் சொல்லி ஆபாசமாக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.
<b> . .</b>
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
[quote=hari]சன்டீவியில் ஒலிபரப்பாகும் விக்கரமாதித்தன் என்ற சிறுவர் ஜயப்பன் பிறந்த வரலாறு இப்படியென்றும் சொல்லினம்- விஸ்ணு பெண்வடிவம் எடுத்து சிவனோடை டூயட் பாடினதாலை ஜய்யபன் பிறந்தாக கூறுவர்
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
சிவனுக்கு சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்.
"... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம்ää தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139
என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.
இந்த மத சிவ பக்தர்கள் முதல் அனைத்து பக்தர் ஈறாக இதை எப்படி போற்றமுடிகின்றது. பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்க பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்தமாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்துமகிழ்ச்சியுண்டாக்கி பின் அவளின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி பூசிக்கவேண்டும். பின் அவளை புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவன். இதை பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.
புணர்வதற்கு அதுவும் வக்கரித்து செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்து புரவர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டை கிறுக்கர்களின் அறிவு உழறல்தான் என்பதை, இந்த கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றன வற்றின் தோற்றத்துக்கு இந்துமதம் மூலமாகின்றது அல்லவா. ஆடை கொடுத்து அதை விதவிதமாக அவித்துவிட்டு ரசித்த புணர்ருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும் போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.
<b> . .</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
[quote=stalin][quote=hari]சன்டீவியில் ஒலிபரப்பாகும் விக்கரமாதித்தன் என்ற சிறுவர் சிவன், ஜெமினி கனேசனையும் விட மோசமான ஆள்போலத்தான் தெரிகிறது!
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
கிருபன் இந்த தலைப்பில் நான் உங்களுடன் சற்று மாறுபடுகிறேன்.
மதங்கள் தோன்றியபோது மக்களை வழிப்படுத்தவதற்காக புராணங்களை உருவாக்கினார்கள். .மக்களை எளிதில் அடையக்கூடியவாறு(பாலுணர்வு விடயங்களை மக்கள் விரும்புவர்) என்பதால்அதில் கொஞ்சம் சேர்த்து கதைகளை உருவாக்கினார்கள் .ஒரு இராமாயணத்தில் சீதை இராவணனுடைய மகள் என்று எழுதப்பட்டிருக்கின்றது. இராமாயணத்தை கம்பர் மொழிபெயர்த்தபோது கொஞ்சம் வம்புசெய்ததாக பலர் கூறுகின்றனர்.
நீங்களஇ இந்துசமயத்தில் பிறப்புகளை ஆராய்கின்றீர்கள் இற்றைக்கு 2000 ஆணர்டுகளுக்கு முன் உருவான கிறிஸ்துவமதத்தில் கன்னிமரியாள் யேசுவை பெற்றதாக வரலாறு. இது உங்கள் கண்ணில் படவில்லையா?
இந்தசமயத்தில் பாலுறவு விடயங்களை மேலதிகமாக கையாள்வதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.
1. இன்றுபோல பண்டையகாலங்களில் உடலுறவு பற்றி பெண்களும் அறிந்தகொள்ள வசதிகள் இருக்கவில்லை. பூப்பெய்திய பெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே போவதானால் கோவில்களுக்குதான் போவார்கள். அதனால் அவர்கள் கோவில் சார்ந்தவையூடாக உடலுறவு விடயங்களை கொண்டுவர முயன்றிருக்கலாம். இந்தியாவில் பல கோவில்களின் கோபுரங்களிலும் தேர்களிலும் உடலுறவு காட்சிகள் செதுக்கப்பட்டிருப்பதை இதற்கு சான்றாக கொள்ளலாம்.
2. உடலுறவு ஒன்றும் அருவருக்கத்தக்கதல்ல என்பதை உணர்த்துவதற்காக கடவுள்களும் உடலுறவு கொண்டனர் என்று மக்களை உற்சாகப்படுத்த முயன்றிருக்கலாம்.
3. பண்டையகாலத்தில் போர் ஒரு முக்கியமானதாக எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது..எல்லா மத காப்பியங்களும் போரை மையமாக வைத்துதான் உருவாகியுள்ளது.
உங்களுடைய முழுக்கருத்துக்களையும் படித்துவிட்டு என்னுடைய மீதிக்கருத்தை
வைக்கின்றேன். இப்போது வேலையால் வந்தபடியால் முழுவதையும் படிக்கமுடியவில்லை.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வியாசன் உங்களிடம் இருந்து இது தொடர்பில் மேலும் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்...!
மனித நேய அடிப்படையில் கூட ஒரு மத நம்பிக்கையானவனின் உணர்வுகளை மதிக்கதெரியாத வக்கிர ஆதிக்க சக்திகள் இங்கு தமது நிலையை பலப்படுத்த அனுமதிப்பதானது மனித நேயத்துக்கு ஆபத்தானதாகும்...! என்ன இவர்கள் பெண் உரிமைக்கு ஏங்கும் பெண்களுக்காக குரல் கொடுப்பதாகச் சொல்வதும் வேடிக்கையானதாக இருக்கிறது...!
மூட நம்பிக்கைகளை வக்கிர விமர்சனங்கள் மூலமன்றி தெளிவான, சான்றுகளுடான விளக்கங்கள் மூலம் தெளிவுபடுத்துவதன் மூலமே மற்றவர்களின் மனம் புண்படாத வகையில் அவர்களைச் சிந்திக்க வைத்து சீர்வழிப்படுத்த முடியும்...!
அந்த வகையில் இவர்களின் வக்கிர ஆதிக்கத்துக்கு எதிராக கருத்துக்களை இங்கு வைத்து இந்து மத நம்பிக்கையுள்ள மனித உள்ளங்களைப் புண்படுத்தும் வகையில் வைக்கப்படும் கருத்துக்களுக்கு ஒரு மனித நேய அடிப்படையில் எமது எதிர்ப்பைத் தெருவிப்போம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
stalin Wrote:ஜயப்பன் பிறந்த வரலாறு இப்படியென்றும் சொல்லினம்- விஸ்ணு பெண்வடிவம் எடுத்து சிவனோடை டூயட் பாடினதாலை ஜய்யபன் பிறந்தாக கூறுவர்
உண்மையென புராணங்களில் சொல்லப்பட்டிருக்கே :roll:
----------
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
மக்களை வழிப்படுத்துவதற்காக புராணங்கள் உருவாக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மன்னிக்கவும் வியாசன் நீங்கள் சிறுபிள்ளைபோல் எழுதுகிறீர்கள். அதாவது பிள்ளைகள் அழும்போது தாய் ஒரு பிள்ளைக்கு அடிக்க, அந்தப்பிள்ளை உடன "அவனும் செய்தவன் அவன ஏன் அடிக்கேல" என்று மற்றை பிள்ளைய சுட்டுவது போன்று இருக்கிறது. அதுபோல கணினி மென்பொருள் பற்றி எழுதும் ஒருவரைப் பார்த்து "ஏன் உமக்கு கணினி வன்பொருள் இருக்கிறது தெரியேலயே?" என்று கேட்பது போல் உள்ளது. அவருக்கு அதுபற்றிய விடயம் தெரிந்திருக்கிறது அதனால் அதுபற்றி எழுதுகிறார். கிறிஸ்தவ மதத்திலும் குறைபாடுகள், வக்கிரங்கள், மக்களை ஏமாற்றும் புரட்டுக்கள் இருக்கின்றன. அவை பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் இணையுங்கள் அறிய ஆவலாக உள்ளோம்.
இங்கு கிருபன் இணைக்கின்ற கருத்துக்கள் "தந்தை பெரியாரின்" கருத்துக்கள். தந்தை பெரியார் ஆற்றிய உரைகள் இரண்டு பெரும் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் கிறிஸ்தவ மதம் பற்றியும் உள்ளது.
|