Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தகவல் தாருங்கள்
#1
வணக்கம்

நல்ல மனதுடனும் கொள்ளை ஆசையுடனும் அன்பு நண்பர் அஐPவன் அண்ணா எனக்கு அவருடைய குறும்படத்தொகுப்படங்கிய DVD அனுப்பி இருந்தார். எனது விருப்பின் பெயரில் அவர் அதை அனுப்பியிருந்தார். எனினும் எனக்கு அதை பார்க்கமுடியவில்லை. அத -R எப்படி நான் பாவிப்பது. எனது கணனியிலோ அல்லது DVD PLAYER இட்டு நோக்கினும் காணமுடியவில்லை.

நட்புடன் பரணீதரன்
[b] ?
Reply
#2
பரணீ
DVD-R 95% வீதமான DVD player களில் பிரச்சினை இல்லாமல் வேலை செய்யக்கூடியது. ஆனால் DVD+R 50 வீதமான DVD playr களில் பிரச்சினை கொடுப்பதாகவேயுள்ளது. DVD-R பிரச்சினை என்றால் நீங்கள் இன்னொரு DVD player முயற்சி பார்க்கவும்.

நீங்கள் நினைப்பது போல் தனிய DVD-r பிரச்சினை மட்டுமல்ல
இதைவிட வேறு பிரச்சினைகளும் இருக்கலாம
NTSC PAL SECAM என்று விடியோ களில் கேள்விப்பட்டிருப்பீர்கள்

அதே போல் DVD க்கு இன்னும் பிரத்தியோகமா 6 வித வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன

வலயங்கள்
1 அமெரிக்கா ,கனடா
2 ஐரோப்பா, ஜப்பான்
3 தென்கிழக்காசியா
4 லத்தீன்அமெரிக்கா, அவுஸ்திராலியா
5 ரஸ்சியா, ஏனையஆசியநாடுகள், ஆபிரிக்கா
6 சீனா

<img src='http://www.yarl.com/forum/files/regios_1_.gif' border='0' alt='user posted image'>
இவை வர்த்தகரீதியில் பிரிக்கப்பட்டவை இன்னொருடதில் வெளியாகும் DVD மற்றயவலயத்தில் பார்க்கமுடியாதவாறு.

எனவே அஜீவன் DVD யை தயாரிக்கும் போது எந்தவிதத்தில் கையாண்டார் என்பதில் கூட பிரச்சினை இருக்கலாம்.

சில DVD player எல்லா வலய DVD யும் சப்போட் பண்ணக்கூடியாது.

கணனி எனில் அதற்கேற்ற மென் பொருட்கள் நிறையவே உண்டு.
Reply
#3
நல்ல ஒரு தகவல்.எனது நண்பர் ஒருவர் அவுஸ்திரேலியா dvdயை வைத்துக்கொண்டு இயலாமல் என்னிடம் கேட்டார் நானும் தலையை குத்தியதுதான் மிச்சம்.
இது போன்ற தகவல்கள் சற்று இன்னும் விளக்கமாக தர முடிந்தால் நல்லது.

சிலவற்றிற்கு ஏதோ இலக்கங்கள் உள்ளது என்றும்; சொல்கிறார்கள் .அதற்கு ஏதும் கொன்வேட்டர்கள் இருக்கிறதா?
Reply
#4
இந்த வலயங்களை இலக்கமிட்டுத்தான் அழைப்பார்கள்.

இது பற்றிய மென்பொருட்கள் தேவையெனில் பொறுக்கியெடுத்து அனுப்பிவைக்கிறேன்.
இப்போது bus பிடிக்க வேண்டும்
.............................................
Reply
#5
தகவலிற்கு நன்றி இளங்கோ
[b] ?
Reply
#6
வணக்கம் இளங்கோ
தங்கள் விளக்கத்திற்கு நன்றி. அன்று நேரப்பற்றாக்குறையால் இதில் கவனம் செலுத்தவில்லை.
கணனியில் அந்த டீவிடியை பாவிப்தாயின் என்ன மென்பொருள் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என தகவல் தருவீர்களா ? இணையத்தில் தரவிறக்கம் செய்வதாயினும் பரவாயில்லை. தரவிறக்கம் செய்துகொள்கின்றேன்.

நட்புடன் பரணீதரன்
[b] ?
Reply
#7
மேலும் இங்கு எல்லாவகையான +R, -R, ALL DVD's வேலைசெய்யக்கூடிய DVD Player வந்திருக்கின்றது. விலைதான் பயங்கரம். அதனோடு ஓப்பிடுகையில் கணனியில் மென்பொருட்கள் பொருத்திக்கொள்வது இலகுவாயின் செய்துகொள்கின்றேன்.
[b] ?
Reply
#8
பரணி நான் கூறியவிடயம் தனியே DVD Region பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடியாதே அதாவது அஜீவன் DvD தயாரிக்கும்போது எல்லா வலயத்திற்கும் இயங்ககூடியவாறு செய்யாத பட்சத்தில் அது உங்கள் இடத்தில் இயங்க மறுக்கலாம்.

அதற்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைபற்றியே கூறினேன்.

அதற்கான மென் பொருளை இங்கிருந்து நீங்கள் இறக்கலாம்
[align=center:f768cb47fc]<img src='http://www.dvdidle.com/images/dvd-region-free.gif' border='0' alt='user posted image'>[/align:f768cb47fc]
Reply
#9
நன்றி இளங்கோ

அஐPவன் அண்ணாவிடம் கேட்டுப்பார்ப்போம் எல்லாவலயத்திலும் இயங்கக்கூடிய வகையிலா அதை பதிவுசெய்துள்ளதாக. நீங்கள் தந்த இணைப்பை பெற்றுக்கொண்டுள்ளேன். நன்றி
[b] ?
Reply
#10
Ilango Wrote:இந்த வலயங்களை இலக்கமிட்டுத்தான் அழைப்பார்கள்.

இது பற்றிய மென்பொருட்கள் தேவையெனில் பொறுக்கியெடுத்து அனுப்பிவைக்கிறேன்.
இப்போது bus பிடிக்க வேண்டும்
.............................................

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#11
நளாயினிக்கும் ஏதாவது உதவி வேண்டுமா?
முடிந்தால் செய்கிறேன். அல்லது தெரிந்தவர்கள் செய்வார்கள்.

இந்தப்பகுதியில் முடிந்தளவுக்கு மற்றவர்களுக்கு வீடியோத்துறை சம்பந்தமான தகவல்களை வழங்குவதாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.

நான் எழுதியதை மேற்கோள் காட்டி ஒரு சிரிப்புபடத்தை போட்டுள்ளீர்கள்.
நீங்கள் புதிதாக தகவல் தந்தமாதிரி தெரியவில்லை.
உங்கள் சந்தேகத்தை கேட்டமாதிரியும் தெரியவில்லை.
இந்ததகவல் மூலம் நீங்கள் பயன்பெற்றதாக தெரிவித்தமாதிரியும் தெரியவில்லை
Reply
#12
இளங்கோவிடம் கார் இல்லை என்ற விசயம் தெரிந்துவிட்டதே.. அதுதான் தகவல். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#13
Karavai Paranee Wrote:நன்றி இளங்கோ

அஐPவன் அண்ணாவிடம் கேட்டுப்பார்ப்போம் எல்லாவலயத்திலும் இயங்கக்கூடிய வகையிலா அதை பதிவுசெய்துள்ளதாக. நீங்கள் தந்த இணைப்பை பெற்றுக்கொண்டுள்ளேன். நன்றி

<img src='http://www.zdnet.co.uk/i/z/rv/2003/05/sony-dru-510a-300x200.jpg' border='0' alt='user posted image'>அன்புடன், பரணி மற்றும் இளங்கோ,

நான் DVDகளை உருவாக்கும் போது Sony DVD write ரில் பதிவு செய்தேன். அதில் +R மற்றும் -R ஆகிய 2 வகைகளையும் பதிவு செய்யலாம்.

ஆனால் தம்பி பரணிக்கு போகும் வரை இப்படியான ஒரு வலயப் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை.

என்னிடமிருக்கும் பழைய DVD recorderரில் +R மட்டுமே வேலை செய்கிறது. -R வேலை செய்வதில்லை. ஆனால் பின்னர் நான் வாங்கிய GRUNDIG Recorderரில் எதுவானாலும் வேலை செய்கிறது. எனவே நானும் இது பற்றி ஆரம்பத்தில் கண்டு கொள்ளவில்லை.

பரணி மூலமே இப்படியான குளறுபடி இருப்பதாக தெரிய வந்தது. அதன் பின் நானும் தேடத் தொடங்கினேன்.

ஒருவர் சொன்னார் நான் அனைத்து வலயங்களிலும் வேலை செய்யக் கூடிய மென் பொருளை தரவிறக்கம் செய்து பதிவு செய்திருந்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிக்காது என்றார்.

இப்போதைக்கு அதை நிர்வர்த்தி செய்ய எனது ஓய்வு முடிந்ததும் வழி கிடைக்கலாம்.பிரச்சனைகள் வந்தால்தான் கண்டுபிடிப்புகள் தொடங்குகிறது............

(அதற்கு முன் தம்பி பரணிக்கு VHS வழி எனது குறும்படங்கள் அனுப்பியுள்ளேன். பொறுத்ததற்கு நன்றி.)

அன்பு இளங்கோவின் தேடலுக்கும் நன்றி.

http://reviews.zdnet.co.uk/hardware/cddvdd...10004348,00.htm
Reply
#14
நன்றி நன்றி அஐPவன் அண்ணா !
தங்களிற்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டேன். தங்கள் தகவல்களிற்கும் தாங்கள் எனக்கு அனுப்பிய டீவிடிக்கும் நன்றிகள். வீஎச்எஸ் இன்னும் கையில் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் கண்குளிரப்பார்க்கின்றேன். இதுவரை ஒரு குறும்படம் பார்க்கவில்லை என்ற குறையை நீங்கள் நிவர்த்திசசெய்யவதை இட்டு மிக மிக சந்தோசம்.

அறியாத தகவல்கள் பல தந்த இளங்கோவிற்கும் நன்றி.
[b] ?
Reply
#15
<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin-->இந்த வலயங்களை இலக்கமிட்டுத்தான் அழைப்பார்கள்.

இது பற்றிய மென்பொருட்கள் தேவையெனில் பொறுக்கியெடுத்து அனுப்பிவைக்கிறேன்.
இப்போது bus பிடிக்க வேண்டும்  
.............................................<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

களநிர்வாகம் நாளயினியின் கருத்துக்களையும..; குருவியின் கருத்துக்களையும...; பொறுக்கி எடுத்து ..ஆய்வு செய்த பின்.; பொறுக்கி எடுத்து எச்சரிக்கையை நளாயினிக்கு கொடுத்த பின்னும்... அழகாக களநிர்வாக ஒத்தாசையுடன் பொறுக்கி எனும் பதத்தை கருத்து களமெங்கும் பொறிக்கிறீர்கள்.பொறுக்கி எடுத்த எச்சரிக்கை இதனால் பெருமை பெறுகிறது.பாரபட்சம் காட்டும் களநிர்வாகமும் இதனால் பெருமை கொள்கிறது என களநிர்வாகம் நினைத்துக்கொள்ளட்டும். :?: :!: :!:
Reply
#16
[size=18]Totel Training & Digital Solutions

http://www.digitalproducer.com/2003/10_oct...13/scri1014.htm

http://www.mail.lycos.com/frameset.nlshtml...l1ufxKxwKyyGY5e
Reply
#17
<img src='http://www.totaltraining.com/2003/images/product_headers/Header_CS.gif' border='0' alt='user posted image'>


http://www.mail.lycos.com/frameset.nlshtml...4tWr3iVhNNeZcX5
Reply
#18
நான் ஒளிப்பதிவுசெய்த சில காட்சிகளை CD யில் பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் 10-15 நிமிட காட்சிகளை மட்டுமே அதில் பதிவுசெய்யக்கூடியதாக இருந்தது. File Type இனை மாற்றியபோது படத்தின் தரம் படானாயிருந்தது. என்ன செய்யலாம் யாராவது உதவி செய்யுங்களே தயவு செய்து.
Reply
#19
உங்கள் கேள்வி என்னவென்று புரியவில்லை.

முதலில் என்ன type file ல் செய்தீர்கள் பின்பு எந்த type file ல் செய்தீர்கள்
என்ன CD சாதாரண சிடியா அல்லது DVDயா?

சாதரண CD எனில் 10-15 நிமிடம் சாதரணம்.

நீங்கள் முதலில் mpeg2 இல் (அதாவது dvd தரத்தில் முயற்சி செய்துள்ளீர்கள்.)
பின் mpeg1 முயற்சி செய்துள்ளீர்கள் (அதாவது vcd தரம்)

இதற்கு தீர்வுகாண்பதற்கு Divx இன் உதவியை நாடலாம்.
அதாவது கிட்டத்தட்ட dvd தரத்தில் சாதாரண சிடியில் உங்கள் படங்களை சேமித்து வைக்கலாம்.
ஆனால் இந்த CD எல்லா dvd player லும் ஓடாது. dvd player வாங்கும் போதோ Divx சப்போட் பண்ணக்கூடியதா என்று கேட்டு வாங்குங்கள்.

இது தான் உங்கள் பிரச்சினையாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதினேன்.
வேறு பிரச்சினை எனில் அதை விளக்காமாக எழுதுங்கள் உதவி செய்ய காத்திருக்கிறோம்
Reply
#20
மிக்க நன்றி இளங்கோ நீங்கள் எனது கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். (விளக்கமாக கேள்வி கேட்கும் ஆற்றல் குறைவு என்று வாத்தியாரிடம் அடிக்கடி ஆரம்பப்பள்ளியில் திட்டு வாங்கிய அனுபவம் எனக்கு நிறையவேயுண்டு. )

ஆனால் எனக்கு நீங்கள் குறிப்பிட்ட Divx பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. குறை நினைக்காது அது பற்றி சற்று எனக்கு தெளிவுபடுத்துவீர்களா?? அத்துடன் அதனை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னாலும் மிக்க உதவிகரமாயிருக்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)