Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்நியன்
#1
இன்று அந்நியன் இசை வெளியீடு

<img src='http://cinesouth.com/images/new/27042005-THN15image1.jpg' border='0' alt='user posted image'>

இதை படிக்கும் நேரம் 'அந்நியன்' ஆடியோ கேஸட் அல்லது சி.டி. உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் இல்லாமல் வரும் முதல் ஷங்கர் படம் 'அந்நியன்'.

ஹாரிஸ் ஜெயராஜ் அந்த குறைதெரியாத அளவிற்கு இசையமைத்திருக்கிறார். ஷங்கர் படங்களில் துரித இசைக்கு இணையாக மெலோடிகளும் இடம்பெறும்.

'வசீகரா...' என்ற எவர்கிரீன் மெலோடியுடன் தமிழ்சினிமாவுக்குள் மின்னலென நுழைந்தவர் ஹாரிஸ். பிறகு 'திருநெல்வேலி அல்வாடா..' என்று சாமியாட வைத்தவரும் இவரே. இந்த இரண்டு உச்சங்களும் அந்நியனில் உண்டு.

'குமாரி...', 'ஐயங்கார் வீட்டு அழகி...' இரண்டும் கர்நாடக ராகங்களை பயன்படுத்திப் போடப்பட்ட அழகான மெலோடிகள். 'ரண்டக்க.. ரண்டக்க..'என்றொரு படால். 'முதல்வன்' உப்புக்கருவாடு ஊற வச்ச சோறு...' மாதிரி இடைவேளைக்குப் பின் வருகிறது. உப்புக்கருவாடு போலவே ஆடவைக்கும் 'பீட்'.

'பாய்ஸ்' படத்தை பாய்க்காட் செய்த வைரமுத்து அந்நியனில் Pen பிடித்திருக்கிறார். நா. முத்துக்குமார், கபிலன் எழுதிய பாடல்களும் அந்நியனில் உண்டு.

ஒரு இசையமைப்பாளருக்கு, தனது டியூனை இயக்குனர் சரியான முறையில் படமாக்கும்போதே முழுத் திருப்தி கிடைக்கும். அந்த வகையில் ஹாரிஸ் ஜெயராஜ் பாக்கியசாலி. பணத்தையும் ஐடியாவையும் தண்ணீராக இறைத்து பாடல் காட்சிகளை எடுத்திருக்கிறார் ஷங்கர்.

புத்தாண்டு ரிலீஸ் ஆர்ப்பாட்டம் அமைதியான நிலையில் தீபாவளிக்குரிய அட்டகாசத்துடன் வந்திருக்கிறது 'அந்நியன்' ஆடியோ.

அந்நியோன்மான இசை!

Cine South
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
இந்த பாடல் அந்நியனிலா?

கண்ணும் கண்ணும் NOKIA, நீ கொள்ளை கொள்ளும் MAFIA
CAPPUCCINO காப்பியா? TOFEE அ? SOFIA a?

CYANIDE CYANIDE விழியால், மயக்கும் POETIC மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி..நீ..

APPLE LAPTOP பெண்ணே, மடியில் வச்சு உன்னை
விரல்கள் தேய கொஞ்சி நான் ரசிப்பேனே...

என்னை OCTOPUS விரல்களால் சுருட்டி விட்டாய்..
ஒரு ATOM BOMB உயிருக்குள் உருட்டி விட்டாய்.

நாடோடி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ஆஹா என்ன எருமையான ச்சீ அருமையான தமிழ் பாடல்.
தமில் வால்க :oops: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#4
அமாம் மதன் அப்பாடல் அன்னியனில்த்தான்.. கொஞ்சம்பொறுத்தீங்கள் எண்டால் யாழ்கள ரேடியோவில்(அதானப்பா கவிதைத்தோட்டத்தில) கேட்டால் ஒலிபரப்புவார்... Idea :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#6
<img src='http://www.cinesouth.com/images/new/anni08.jpg' border='0' alt='user posted image'>

முப்பது கோடி ரூபாய்..... ஒன்றரை வருட படப்பிடிப்பு..... நூற்றுக்கணக்கில் மனித உழைப்பு..... கிட்டத்தட்ட ஒரு திருவிழாபோல் தயாராகியிருக்கிறது 'அந்நியன்'.

"என் படங்களில் 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'முதல்வன்' முணுமே வெவ்வேறு பாணிப்படம். மூணுமே தனித்தனி முத்திரையுடன் இருக்கும். 'அந்நியன்' இவற்றைவிட இரண்டுபடி மேலே".

ஷங்கர் சொல்லும் போதே எதிர்பார்ப்பு ஸ்பீடா மீட்டர் எகிறுகிறது. அதை சற்றே அடக்கிவிட்டு அந்நியனை உற்றுப்பார்த்தால் 'பளிச்' சென்று தெரிகிறது இந்திய அரசின் முத்திரை போல மூன்று சிங்கங்கள். முதல் சிங்கம் ஷங்கர். அடுத்து விக்ரம். மூன்றாவது தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்!

"பல வெளிநாடுகளுக்கு போகிறோம். அங்குள்ள தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறோம். கூடவே நம் நாடு மட்டும் ஏன் இப்படி? என்ற ஆதங்கம் எழும். அதற்கான காரணத்தையும், தீர்வையும் சொல்கிறான் அந்நியன்"

எளிமையான விளக்கத்தில் வலிமையான கதைக்கரு. ஷங்கருக்கு கைவந்த கலை இது. அந்நியனும் இதே வெற்றிப்பாதையில் தான் பயணிக்கிறான். "எத்தனையோ அநியாயங்கள், அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகங்கள். கண்டும் காணாதது போல் இவற்றை கடந்து போகிறோம். ஏன் இப்படி? ஏன் இங்கு யாருமே ஒழுக்கமாக இல்லை?- ஆதங்கப்படுகிற ஒரு சராசரி மனிதன்தான் 'அந்நியன்'".

ஷங்கர் இப்படி சொன்னாலும், அந்நியனுக்கு அசாதாரணமான இன்னொரு முகம் உண்டு. "காதலுடன் சுற்றி வருகிற அதே ஆள் கண்ணில் கொலைவெறியுடன் துரத்தினால்...?" நடிப்பு என்பதை மீறி சதாவின் கண்கள் படபடக்கின்றன. விக்ரமின் வித்தியாசமான மிரட்டல் நடிப்பை அருகிலிருந்து பார்த்தவராயிற்றே!

கடந்த ஒன்றரை வருடங்களாக விக்ரமுக்கு அந்நியனை தவிர வேறு சிந்தனையில்லை. அவர் வேறு படங்களில் நடிக்கவுமில்லை. சரியாக சொன்னால் அடுத்தபடம் என்பதைப் பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. "நான் தேடிச் சென்று வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் ஷங்கர்சார்தான்". அடக்கமாகச் சொல்லும் விக்ரமின் ஆர்வத்துக்கு அற்புதமான தீனி கொடுத்திருக்கிறார் ஷங்கர்." 'சேது', 'பிதாமகனை'விட மூன்று மடங்கு பவர்புல்லான கேரக்டர் இது" என்று புல்லரிக்கிறார் விக்ரம். "இது போன்ற கேரக்டர் இனி விக்ரமுக்கு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்" என்று அதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறார் ஷங்கர்.

இந்த இருவரின் உழைப்பையும் பார்த்து வியக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். இன்றைய தேதியில் தமிழ்திரையுலகின் தைரியசாலி தயாரிப்பாளர் இவர்தான். "ஷங்கர் தனது 'காதல்' படத்தின் வேலையைக்கூட மறந்து 20 மணிநேரம் அந்நியனுக்காக உழைத்தார். விக்ரம் படத்துக்கு என்ன தேவையோ அதையெல்லாம் வலிந்து வலிந்து செய்து கொடுக்கிறார்" என சிலாகிக்கிறார்.

ஷங்கரின் வெற்றிக்கு முக்கியக் காரணம் படங்களில் காட்டப்படும் 'லேண்ட்ஸ்கேப்'. ஒருநாள் முதல்வன் என்ற ஹைடெக் கதையிலும் பருத்திக்காட்டையும் பாவாடைதாவணி பெண்ணையும் சாமர்த்தியமாக புகுத்தி கடைக்கோடி ரசிகனுக்கும் அந்நியத்தன்மை ஏற்படாத விதத்தில் திரைக்கதை அமைப்பதை பாராட்டியே ஆகவேண்டும். ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் சூப்பர்ஸ்டார் இயக்குனராக ஷங்கர் திகழ இதுவும் ஒரு காரணம். அந்நியனிலும் இதே சிரத்தையை எடுத்திருக்கிறார் இவர். கடைக்கோடி ரசிகனின் பல்ஸையும் தெரிந்து வைத்திருப்பது இவரது பலம்.

"ஹாலிவுட் படங்களில் வசனம் குறைவாகவும் பல விஷயங்களை காட்சி மூலமாகவும் உணர்த்துவது சகஜம். ஆனால் இங்கு பெரிய பட்ஜெட் படத்தில் அப்படி செய்வது கடினமானது. எல்லாவற்றையும் வசனத்தின் மூலமாகச் சொன்னால்தான் நமக்கு புரிகிறது. பிடிக்கிறது. இந்தப் படத்தில் வசனங்கள் போக, subtext ஆகவும் விஷயங்களை உணர்த்த முயற்சிக்கிறேன்" என்கிறார் ஷங்கர்.

ஷங்கரின் படங்களில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் நான்காவது சிங்கம் தொழில்நுட்பம். இதுவரை வந்த படங்களை விட அந்நியனில் இந்த சிங்கத்தின் கர்ஜனை அதிகம். முதலில் ஒளிப்பதிவு....

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படாத தொழில் நுட்பம் 'ப்ளேர் ஒயிட் க்ளேர்'. அந்நியனில் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி ஒரு முழுப்பாடலையே எடுத்திருக்கிறார்கள். அதே மாதிரி லென்ஸ்கள். காட்சி மற்றும் படத்தின் 'மூடு'க்கு ஏற்ப விதவிதமான லென்சுகளை பயன்படுத்தியுள்ளனர். "'ஜெனோலைட்' என்ற வித்தியாசமான லைட்டிங்கை வைத்து காட்சிகளை எடுத்தோம். இதுவரை தமிழ்ப்படங்களில் இந்த உத்தியை யாரும் பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்" என்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

இவையனைத்தையும் விட ரசிகர்களை மிரட்டப்போவது பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகள்தான். ஹாலிவுட் 'மேட்ரிக்ஸ்' படத்தில் பயன்படுத்தப்பட்ட 'டைம் ப்ரீஸ்' உத்தியை பயன்படுத்தி 'பாய்ஸ்' படத்தில் 'எகிறி குதித்தேன்' பாடல் காட்சியை எடுத்திருந்தார் ஷங்கர். அந்நியனில் அதே தொழில்நுட்பத்தை சண்டைக்காட்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார். "தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இதுவரை இந்திய சினிமாவிலேயே பயன்படுத்தப்படாத சண்டை உத்திகளை பயன் படுத்தியிருக்கிறேன். ஹாலிவுட்டுக்கு இணையானவையாக அவை இருக்கும்" என்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். அவர் வார்த்தை உண்மை என்பதை ஆமோதித்திருகிறது 'பிக் ப்ரீஸ்' கம்பெனி. லண்டனை சேர்ந்த இந்த கம்பெனிதான் 'அந்நியன்' சண்டைக்காட்சிகளுக்கு தொழில் நுட்ப உதவிகள் செய்தது. இப்போது வெளிநாட்டு கம்பெனிகளை அசத்த 'அந்நியன' சண்டை காட்சிகளை தனது 'டெமோ'வாக பயன்படுத்துகிறது 'பிக் ப்ரீஸ்'.

இது தவிர பாடல் காட்சிக்காக ஊர்களுக்கு வர்ணம் தீட்டியது, பல கிலோமீட்டர் தார் ரோட்டை பட்டுச்சேலையாக மாற்றியது, மலைகளில் படம் வரைந்தது என பிரமாண்டத்தின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கிறது.

அந்நியனை பொறுத்தவரை ஒரே ஒரு குறை ஏ.ஆர். ரஹ்மான்."ஆனால் எனக்கு என்ன தேவையோ அதைவிட அதிகமாகவே ஹாரீஸ் ஜெயராஜ் தந்திருக்கிறார்" என ஹாரிஸை புகழ்கிறார் ஷங்கர். அது உண்மை என்பதை நிரூபித்திருக்கிறது 'அந்நியன்' ஆடியோ கேஸட் விற்பனை.

இம்மாதம் 17ம்-தேதி 'அந்நியன்' ரிலீஸாகிறது. தமிழ், ஆந்திரா, வெளிநாடு என மொத்தம் மூந்நூறுக்கும் மேல் பிரிண்டுகள். படம் தந்த தைரியம்... எல்லா ஏரியாவிலும் சொந்தமாகவே படத்தை வெளியிடுகிறார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

ஷங்கருக்கு மட்டுமல்ல பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களின் மெகா கனவு 'அந்நியன்'. இதன் வெற்றி தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கே அச்சாரமாக அமையும்... அமைய வேண்டும்!

சினி சவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)