Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளைஞர்கள் மீது சிறிலங்கா வான்படையினர் துப்பாகிச் சூடு!
#1
திருமலை: இரு தமிழ் இளைஞர்கள் மீது சிறிலங்கா வான்படையினர் துப்பாகிச் சூடு!

[வெள்ளிக்கிழமை, 3 யூன் 2005, 19:19 ஈழம்] [ம.சேரமான்]

திருமலையில் சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழ் இளைஞர்கள் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சீனன்குடாவில் உள்ள மிட்சுபிசி சீமெந்து தொழிற்சாலை அருகே இன்று பிற்பகல் 1.50 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தது.

இதில் ரவி, சத்தியசீலன் என்ற இரு தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தவர் என்றும் கைக்குண்டை எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும் இதை தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் திருமலை வைத்தியசாலைக்கு விரைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களைச் சந்தித்தனர். ஆனால் இரு இளைஞர்களுக்கும் உடனடி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் நினைவிழந்த நிலையில் இருப்பதாகவும் இதனால் மேலதிக தகவல் எதுவும் பெற இயலவில்லை என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
puthinam
Reply
#2
ஓடி போய் பார்த்த கண்காணிப்பு குழுவுக்கு, அவையளுக்கு சிகிச்சை செய்ய வைக்க முடியாதா? :twisted:
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)