Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் நாட்காட்டி
#1
தமிழ் நாட்காட்டி

இணையத்தில் தமிழ் நாட்காட்டியை பார்க்க விரும்புவர்கள், இந்த இணைப்பில் பார்க்கலாம்

http://www.sysindia.com/tamil/cgi-bin/cale...ndar.cgi[/size]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
மதன் இது தமிழ்நாட்காட்டியல்ல

தமிழுடன் சம்பந்தமான எந்த குறிப்பும் இந்த நாட்காட்டியில் காணப்படவில்லையே?
<b>
?
- . - .</b>
Reply
#3
எல்லா மூட நம்பிக்கைகளும் இருக்கிறதே, அது தமிழுடன் சம்பந்தப்பட்டதுதானே?
Reply
#4
Quote:எல்லா மூட நம்பிக்கைகளும் இருக்கிறதே

²ý «ôÀÊ ¦ÂøÄ¡õ ¦º¡ø¸¢È£÷¸û! «Åü¨È¦ÂøÄ¡õ

Å¢Çí¸¢ì¦¸¡ûž¡É¡ø ¿¢¨È ¸Š¼ô À¼§ÅñÎõ,

«¾É¡ø ¯í¸û §º¡§ÀÈ¢ò¾Éò¨¾ Á¨ÈòÐ þôÀÊî

¦º¡ø¸¢È£÷¸û!!
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#5
Quote:எல்லா மூட நம்பிக்கைகளும் இருக்கிறதே, அது தமிழுடன் சம்பந்தப்பட்டதுதானே?
ஹரி தமிழுக்குப் பதில் தமிழர் என்று போட்டால்த்தான் அது பொருந்தும்.
<b>
?
- . - .</b>
Reply
#6
ஒரு வைத்தியர் கத்தியால அறுவைச் சிகிச்சை செய்யும்போது.. அறுவைச் சிகிச்சையைப்பற்றி அறியாதவனுக்கு கொலை செய்வதுபோலத்தான் தெரியும்.. தற்செயலாக நோயாளி மரணித்தால்.. கேட்கவே வேண்டாம்.. டொக்டர் அவனைப் பொறுத்தளவில கொலையாளிதான்.. அவன் மனது மாறவேண்டுமானால்.. அவனாகத் தேடிச் சென்றுதான் அவற்றைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#7
மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியாது!
(நக்கீரன் - கனடா)


சோதிடம் கோள்களை பிராமண, சத்திரிய, வைசிக, சூத்திர வர்ணம் என்றும், ஆண், பெண், அலி என்றும், நீர், நெருப்பு, பூமி (பிருதிவி) காற்று, வானம் (ஆகாசம்) என்றும், பகை (சத்துரு) மித்துரு (நட்பு) உச்சம், ஆட்சி, கேந்திரம் என்றும், யோகம் (யோகக்காரர்கள்) கண்டம் (மாரகாதிபதிகள்) ஆரோக்கணம் அவரோக்கணம் என்றும் பாகுபடுத்துகிறது.

கோள்களைப் போலலே இராசிகளையும் நீர், நெருப்பு, பூமி (பிருதிவி) காற்று, வானம் (ஆகாசம்) என்றும், ஆண் பெண் எனவும், பகல் இரவு எனவும், சரம், ஸ்திரம், உபயம் எனவும், உச்சம் நீச்சம் எனவும், திதி சூன்யம் எனவும் பிரிக்கிறது.

இவ்வாறு விதிக்கட்டுப்பாடின்றி மனம் போன போக்கில் பகுப்பதற்கும் பிரிப்பதற்கும் வானியல் அடிப்படையில் எதுவித முகாந்திரமும் இல்லை. வானியலின் படி கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் உயிரற்றவை, உணர்ச்சியற்றவை, அறிவற்றவை ஆகும்!

இந்திய சோதிடம் வானியலாளர்கள் கண்டுபிடித்த யுரேனியஸ், நெப்தியூன் புளுட்டோவை கணக்கில் எடுப்பது இல்லை. பின் சோதிடம் ~அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கொண்டது| என எப்படிக் கூறமுடியும்?

கடந்த ஆண்டுகளில் புதிதாக 28 பெருங்கோள்களும் 1,000க்கும் மேற்பட்ட குறுங்கோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சோதிடத்தில் சூரியனையும் சேர்த்து ஒன்பது கோள்கள் மட்டுமே உண்டு. இந்த ஒன்பது கோள்களை வைத்து சோதிடர்கள் நடத்தும் வியாபாரம் எப்படிச் சரியாகும்?

சோதிடத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உண்டு. ஆனால் வானியலில் 112 பெரிய சந்திரன்களும் 16 சிறிய சந்திரன்களும் ஆக மொத்தம் 128 வெண்ணிலவுகள் உண்டென்கிறது.

சோதிடர்கள் இந்த 128 நிலாக்களில் பூமியின் துணைக் கோளான நிலாவை மட்டும் வைத்துப் பலன் கூறிவிட்டு எஞ்சிய 127 நிலாக்களையும் தள்ளிவிடுகிறார்கள்.

~சாதகம் அறிவியல் ரீதியான ஆதாரங்களைக் கொண்டது| எனக் கூறும் கட்டுரையாளர் 128 நிலாக்களை தள்ளிவிடுவது அறிவியலா?

சென்ற மாத நடுப்பகுதியில் சனிக் கோளுக்கு ஏவப்பட்ட Cassini-Huygens விண்கலம் முறையே 194,000, 211,000 கிமீ உயரத்தில் இரண்டு புதிய நிலாக்கள் சனிக் கோளை வலம் வருவதைக் கண்டு பிடித்துள்ளது.

சோதிடம் பூமி என்னும் கோளைக் கணக்கில் எடுப்பதில்லை. அறிவியலில் ஞாயிறு ஒரு விண்மீன். நிலா ஒரு துணைக்கோள். இராகு கேது கற்பனைக் கோள்கள். பின் எப்படி சோதிடம் அறிவியலாகும்?

மேலும் ~ப+மி, கிரகங்கள், சூரியக் குடும்பம் எப்படி உருவானது? பரம்பொருளின் எண்ணத்தில் பிறந்த படைப்பு! எண்ணம் என்று ஆன்மீகம் கூறுவதும் அதிர்வு என்று அறிவியல் கூறுவதும் சரிசமம்தான். ஆன்மீகம், அறிவியல் இரண்டும் கூறுவது ஒரே கருத்துக்தான்! வார்த்தைகள் தான் வேறு!| என்கிறார்.

அண்ட ஆற்றல் கலவையின் (Primordial soup) வெட்பம் 25 கோடி பாரனைட் ஆக இருந்தபோது அது வெடித்துச் சிதறி சூரிய குடும்பங்கள், விண்மீன்கள் தோன்றின. அவை உயிரற்ற, அறிவற்ற திடப்பொருள் (matter) என்கிறது அறிவியல்.

ஒன்றும் இல்லாமை இல் (சூனியம்) இருந்து தோன்றுவதுதான் படைப்பு! என்றும் உள்ள பொருள் அல்லது சக்தி திரிபாக்கம் ஆவதுதான் உருமலர்ச்சி (பரிணாமம்)!

பரம்பொருளின் எண்ணத்தில் அண்டம் படைக்கப்பட்டது என ஆன்மீகம் கூறுவதும் அண்டம் வெடித்துச் சிதறி சூரிய குடும்பங்கள், விண்மீன்கள் தோன்றின என அறிவியல் கூறுவதும் எப்படி ஒன்றாகும்?

எனவே உயிரும் அறிவும் அற்ற அண்டமும் உயிரும் அறிவும் ஆனந்த குணமும் (சத்சித் ஆனந்தம்) உடைய பரம்பொருளும் ஒன்றாக முடியாது.

மேலும் ~சந்திரக் கதிர்களும் சூரியக் கதிர்களும் உயிரின இயல்புகளில் தாக்கம் செலுத்துகிறது என்கிறது அறிவியல்........கிரகங்களின் கதிர்களுக்கும் மனித வாழ்வுக்கும நெருங்கி தொர்பு இருக்கிறது என்று தீர்மானிக்கலாம். இதைத்தானே சாதகக்கணிதம் கூறுகிறது? கிரகங்கள், சூரியன் இவற்றின் கதிர் வீச்சு உயிரினங்களின் உடல்களில் தாக்கம் உண்டாக்கும். சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட நமக்கு அருகில் இருப்பவை. எனவே, மற்ற நட்சத்திரக் குடும்பக் கதிர்களின் ஆதிக்கத்தை விட, நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்களின் கதிர்களின் ஆதிக்கம் நம்மீது அதிக அளவில் இருக்கும்’ என்கிறார் கட்டுரையாளர்.

சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தில் இருக்கும் கிரகங்களின் கதிர்வீச்சின் தாக்கம் மனிதர்களின் பிறந்த நாள் நேரம் இவற்றின் அடிப்படையில் இருக்க முடியாது என அறிவியல் சொல்கிறது. எந்தத் தாக்கமும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

~ஒரு குழந்தை பிறக்கு போது, கிரகநிலை அமைப்புகள் எந்த வகையில் இணைந்துள்ளதோ அந்தக் கணக்குதான் ஜாதகமாகக் குறிப்பிடப்படுறது| என்கிறார் தினமலர் கட்டுரையாளர்.

பன்னிரண்டு இராசி மண்டலங்கள் சோதிடர்களால் விதிக் கட்டுப்பாடின்றி வகுக்கப்பட்டது. அதே போல் 12 வீடுகளும் வெறும் வான வெளியைப் பிரித்துக் கூறுவதுதான். இந்தப் 12 வீடுகளும் சாதகனது தலை முதல் கால் வரை உள்ள உறுப்புக்களைக் குறிக்கிறது என்பதும் கற்பனையே!

இராசி வீடுகளில் கிரகங்கள் சஞ்சரிப்பது என்பது வெறும் புலக் காட்சியே. இராசி மண்டலத்துக்கும் கோள்களுக்கும் இடையில் கோடான கோடி கிமீ தூர இடைவெளி இருக்கின்றன.

இந்த இராசிகள், வீடுகள், கோள்கள் இவற்றுக்கு கற்பிக்கப்படும் பலன்கள் எந்தவித விதிக்கட்டுப்பாடும் இன்றி சொல்லப்படும் புனைந்துரையே!

இதில் குழந்தை பிறந்த நாள் நேரம் இவற்றோடு கோள்களையும் இராசிகளையும் வீடுகளையும் தொடர்பு படுத்துவது வெறும் காட்சி அளவில் செய்யப்படுவதே.

வானிலுள்ள கோள்கள் இராசிகள் எல்லோர்க்கும் பொதுவானது. சோதிடம் சொல்வது போல் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அமைப்பு இல்லை.

இராசிகள், வீடுகள், கோள்கள் இவற்றைவிட மனிதர்கள் வாழும் சூழல் (நிலம், நீர், தட்பவெடப்பம், சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு முதலியன) கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே சோதிடத்துக்கும் அறிவியலுக்கும் முடிச்சுப் போடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வீண் வேலையாகும். இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாத இரு சமாந்திர கோடு;கள்!

மேலும் அவர் எழுதுகிறார் ~ஒரு குறிப்பிட்ட வகையில் கிரகங்கள் இணைந்துள்ள போது அவற்றின் மொத்தக் கதிர்வீச்சு அளவு ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும். எனவே அந்தக் கதிர் வீச்சு அளவின் ஆதிக்கம் அந்தக் குழந்தையின் வாழ்வில் ஆதிக்கத்தைச் செலுத்தும்.|

இந்த ~ஆதிக்கம்| பற்றி முன்னரே விரிவாக புள்ளி விபரத்தோடு எழுதியுள்ளேன்.

பூமிக்கும் கோள்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை கணக்கில் எடுத்தால் இந்த ஆதிக்கம் ஒரு கற்பனை என்பது தெரியவரும்.

பூமியில் இருந்து கோள்களின் (ஞாயிறு கோள் அல்ல) சராசரி கிமீ தூரம் -

சனி - 142.4 கோடி

வியாழன் - 77.8 கோடி

செவ்வாய் - 7.83 கோடி

ஞாயிறு - 14.96 கோடி

வெள்ளி - 4.14 கோடி

புதன் - 9.17 கோடி

சந்திரன் - 384,487 இலட்சம்

இவ்வளவு தொலைவில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு ஒன்று சேர்ந்து பூமியில் ஒரு நாட்டில், ஒரு ஊரில், ஒரு வீட்டில், ஓர் அறையில், நான்கு சுவர்களுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட நாளில் நேரத்தில் பிறந்த குழந்தையின் மீது வீசுமா? தாக்குமா? அதனால் குழந்தை பாதிக்கப்படுமா? அறிவியல் இல்லை என்கிறது.

அப்படியே அந்தக் கதிர்வீச்சு தாக்குவதற்கும் அந்தக் குழந்தையின் உடல்நலம், வளர்ச்சி, நுண்ணறிவு, கல்வி, வேலைவாய்ப்பு, வயது, ஆளுமை, வறுமை, செல்வம், கணவன்-மனைவி உறவு, மணவிலக்கு, கடன்தொல்லை, மலட்டுத்தன்மை, தேர்தலில் வெற்றி தோல்வி, மாமியார் மருமகள் சண்டை போன்றவற்றுக்கும் என்ன தொடர்பு?

ஒரு தனி மனிதனின் வாழ்வியல் கூறுகள், அவனின் பண்பு நலன்கள், கேடுகள் இவற்றுக்கு அவனது மரபியலும் (genetics) சூழ்நிலையும் (environment) காரணிகள் என்பதே உளவியல் சமூக இயல் ஆய்வுகளின் முடிவாகும்!

இறுதியாக கட்டுரையாளர் ~ஜாதகத்தில் இருக்கும் கிரக இணைப்புச் சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புக்களை சில பரிகாரங்களால் (கிரகக் கதிர் வீச்சு அளவுகளை மாற்றும் முறை) சரி செய்யலாம் என்கிறது இந்து ஆன்மீகம். மரபணுக்களில் இருக்கும் சில அம்சங்களை நீக்கியும் சில அம்சங்களைப் புதிதாகச் சேர்த்தும் சரி செய்யலாம் என்கிறது நவீன அறிவியல்.|

சனி தோசம் செவ்வாய் தோசம் உள்ள ஒருவன் எள்ளெண்ணெய் எரித்தல், நவக்கிரகங்களை சுற்றி வருதல், அர்ச்சனை செய்தல், அபிசேகம் செய்தல், காகத்துக்குப் படைத்தல் முதலான கிரக சாந்தி பரிகாரம் செய்தால் அந்தக் கோள்களின் கதிர் வீச்சு அளவுகளை மாற்றி விட முடியுமா? இதனைச் சான்றுகளோடு மெய்ப்பிக்க முடியுமா?

மரபணுப் பொறியியல் (genetical engineering ) ஆகிய அறிவியலும் சோதிடம் என்ற மூடநம்பிக்கையும் சரி சமமாக முடியாது. மரபணு வெட்டு ஒட்டு முறை நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. கிரக பரிகார தோசத்தையும் மரபணுப் பொறியியலையும் ஒன்றென்பது கோமாளித்தனமானது.

~சாதகம் என்பது கட்டுக்கதை அல்ல. அறிவியல் மதமான இந்து மதத்தின் அற்புதமான வாழ்க்கை வழிகாட்டி என்று எழுதுவது இப்போது இந்து சமயத்துக்கு உள்ள கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய்விடும்!|

இந்து மதம்தான் மனித குலத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதித்தது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி ஊற்ற வேண்டும் என்கிறது. இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றிக் கொன்றது. இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி பட்டம் சூட்டி அவர்களின் கற்பை காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது. இந்து மதம்தான் நந்தனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்து மதத்தில் மட்டுமல்ல வேறு எந்த மதத்திலும் அறிவியல் கிடையாது. கடவுள் ஆறு நாள்களில் அண்டத்தையும் உலகத்தையும் உயிரினங்களையும் படைத்து ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது கட்டுக் கதை. அது போலவே ஆதாமை மண்ணில் இருந்து (உடல் மட்டும்) படைத்து அவன் தூங்கும்போது அவனது விலா எலும்பை எடுத்து ஏவாளைப் படைத்தார் என்பதும் கட்டுக் கதையே!

மதங்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. கடவுள், படைப்பு, ஆன்மா, நரகம், சொர்க்கம், பாவம் புண்ணியம், தலைவிதி, ஊழ்வினை எல்லாம் மூடநம்பிக்கையே!

தீமித்தல், செடில் காவடி பறவைக் காவடி எடுத்தல், அலகு குத்துதல், வேப்பிலை அடித்தல் போன்றவை மூடநம்பிக்கையே!

சோதிடம் புரட்டு, பொய், பித்தலாட்டம் என பகுத்தறிவாளர்கள் மட்டும் அல்ல நோபெல் பசிசு பெற்ற உலகத்தின் தலைசிறந்த அறிவியலாளர்களும் அதையேதான் சொல்கிறார்கள். அதனை அடுத்த கிழமை பார்ப்போம்.
http://www.tamilnatham.com/astro/astrology20040907.htm
Reply
#8
உதாரணத்துக்கு அந்த நாட்காட்டியின் ராசிபலனில் ஒரு நாளில் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு பலன் தான் குறிப்பிட்டுள்ளனர்!, அப்படியானால் ஒரு விபத்தில் 50 பேர் உயிரிழந்தால் 50 பேரும் ஒரு ராசிக்காரராக இருப்பினமா? சுனாமியில் ஆயிரக்கானக்கான உயிர்கள் இறந்தன அந்த நாள் இராசி பலனை பாருங்கள்! அவர்கள் அனைவருக்கும் துன்பம்,சுகயீனம், கவலை என்றா இருந்தது? அதில் இத்தனை பேருக்கு சந்தோசம், மகிழ்சி, லாபம், நன்மை, வெற்றி என்று இருந்திருக்கும்?
Reply
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இந்து மதம்தான் மனித குலத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதித்தது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி ஊற்ற வேண்டும் என்கிறது. இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றிக் கொன்றது. இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி பட்டம் சூட்டி அவர்களின் கற்பை காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது. இந்து மதம்தான் நந்தனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி எந்த இந்து சமய நூல்கள் கூறுகின்றன என இந்த நக்கீரன் ஆதாரம் காட்டியிருந்தால் நியாயம்தான்.. சும்மா யாரும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
அது போக, கொழும்பில் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டி போகிற திசையில்.. காலி வீதியில்.. முன்னைய SHARAZ கடைக்கு அருகாமையில் காண்டம் எழுதுபவர்கள் என சிலர் உள்ளார்கள்.
நீங்கள் அங்கு சென்று உங்களது பெயரையோ வயதையோ பிறந்த திகதியையோ கூறவேண்டியதில்லை.
கட்டை விரல் ரேகை அடையாளத்தை கொடுத்தால் போதும். அவர்கள் எழுதுவது சரியோ பிழையோ ஆனால் நிச்சயமாக உங்களது பிறந்த திகதி, மாதம், வருடத்தை அந்த காண்டத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.. எதற்கும் நேரில் அறிந்து பாருங்கள்.. பிறகு மூடநம்பிக்கைகளைப்பற்றி இன்னும் ஒருபடி மேலேறி வாதிடலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#10
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கட்டை விரல் ரேகை அடையாளத்தை கொடுத்தால் போதும். அவர்கள் எழுதுவது சரியோ பிழையோ ஆனால் நிச்சயமாக உங்களது பிறந்த திகதி, மாதம், வருடத்தை அந்த காண்டத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.. எதற்கும் நேரில் அறிந்து பாருங்கள்.. பிறகு மூடநம்பிக்கைகளைப்பற்றி இன்னும் ஒருபடி மேலேறி வாதிடலாம்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மனிதர்களின் ஏடுகளையும் அடுக்கி வைத்துள்ளார். கின்னஸ் போகாதா பெரிய கெட்டிக்காரர் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#11
சீறிரமணன் எங்க போய்யிட்டீர்? தேவையில்லாமல் பெரிய ஆட்களிடம் வாய்யை கொடுத்துட்டன்! நீர் ஒரு கை தாரும் ஒரு மாதிரி சமாளிச்சிடலாம்! இல்லாட்டி நான் காலி
Reply
#12
வந்திட்டன் ஹரி
பயப்பிடாதையுங்கோ நான் இருக்கிறன்
<b>
?
- . - .</b>
Reply
#13
நன்றி சிறீரமணன்! நான் பயந்துகொண்டிருந்தனான், எனக்கு ஓட்டுடல சனி வீட்டுல நரி என்று நினைச்சு எங்கையாவது நல்ல சாத்திரியை பிடித்து தோஸம் கழிக்கலாம் என்று இருந்தனான், நல்ல காலம் நீங்கள் வந்தீங்கள்!
Reply
#14
hari Wrote:
Quote:நன்றி சிறீரமணன்! நான் பயந்துகொண்டிருந்தனான், எனக்கு ஓட்டுடல சனி வீட்டுல நரி என்று நினைச்சு எங்கையாவது நல்ல சாத்திரியை பிடித்து தோஸம் கழிக்கலாம் என்று இருந்தனான், நல்ல காலம் நீங்கள் வந்தீங்கள்
!
இதோ வந்திட்டன் ஹரி 5 வெத்திலை 2 பாக்கு 1 கோழி (உரிச்சதெண்டாலும் பரவாயில்லை) 1 போத்தல் சாராயம் எல்லாம் கொண்டு உடனை வாரும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#15
sathiri Wrote:
hari Wrote:
Quote:நன்றி சிறீரமணன்! நான் பயந்துகொண்டிருந்தனான், எனக்கு ஓட்டுடல சனி வீட்டுல நரி என்று நினைச்சு எங்கையாவது நல்ல சாத்திரியை பிடித்து தோஸம் கழிக்கலாம் என்று இருந்தனான், நல்ல காலம் நீங்கள் வந்தீங்கள்
!
இதோ வந்திட்டன் ஹரி 5 வெத்திலை 2 பாக்கு 1 கோழி (உரிச்சதெண்டாலும் பரவாயில்லை) 1 போத்தல் சாராயம் எல்லாம் கொண்டு உடனை வாரும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கடவுளுக்கு கொடுக்க ஏதாவது காணிக்கைகளும் கொண்டுவரவேண்டுமே?? :?
Reply
#16
hari Wrote:சீறிரமணன் எங்க போய்யிட்டீர்? தேவையில்லாமல் பெரிய ஆட்களிடம் வாய்யை கொடுத்துட்டன்! நீர் ஒரு கை தாரும் ஒரு மாதிரி சமாளிச்சிடலாம்! இல்லாட்டி நான் காலி

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#17
'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை" என்பது ஈசனுடைய விதி!
(நக்கீரன் - கனடா)

<b>
'சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே, தோத்திரச் சண்டையிலே
ஆதியிலே, அபிமானித்(து) அலைகின்ற உலகீர்!
அலைந்து அலைந்து வீணே நீ அழிதல் அழகல்ல"</b>

என சாதி, மதம், சமயம், சாத்திரம், தோத்திரம் போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி அலைந்து அலைந்து வீணே தமிழர்கள் அழிவதைக் கண்டு வடலூர் வள்ளலார் கழிவிரக்கப்படுகிறார். அவரது அறிவுரை இன்றுவரை யார் காதிலும் ஏறியதாகத் தெரியவில்லை.

<b>'கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக..."

'நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெல்லாம் பிள்ளைவிளையாட்டே.."

'ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்.."

'வேதநெறி ஆகமத்தின் நெறிபுராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே....."</b>

வள்ளலார் வேத, ஆகம, இதிகாச, புராணங்களை முற்றும் முழுதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதில் அடங்கியுள்ள சூதுகளைக் கண்டறிய வேண்டும் என்று அடித்துச் சொன்னார். ஆனால் அவரது அறிவுரைகள் காற்றோடு காற்றாய் கரைந்து போய்விட்டன.

மற்ற இனத்தவர்கள் விழுந்தால் எழும்பி விடுகிறார்கள். இரண்டாவது மகாயுத்தத்தில் பாரிய உயிர் இழப்புக்களையும் உடமை இழப்புக்களையும் சந்தித்த ஜெர்மனியரும் யப்பானியரும் மீண்டும் எழுச்சி பெற்று இமயம் போல் உலக அரங்கில் எழுந்து நிற்கிறார்கள்! உலகின் பணக்கார நாடுகளில் ஜெர்மனியும் யப்பானும் முன்வரிசையில் நிற்கின்றன! தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

ஆனால் தமிழர்கள் விழுந்தால் எழும்பவே மாட்டார்கள். அப்படித் தப்பித் தவறி எழும்பினாலும் மீண்டும் அதே இடத்தில் விழுந்து விடுகிறார்கன்!

தமிழ்ச் சாதியின் நாடியை நன்கு பிடித்துப் பார்த்தவர் பாரதியார். தமிழ்ச் சாதியைப் பீடித்திருந்த நோயை நுட்பமாகக் கண்டறிந்தவர். நோய்க்கு மருந்து சொன்னவர். தமிழ்ச் சாதியில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளைப் பார்த்துக் கடும் கோபப்பட்டவர்.

'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான். நாள்தோறம் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்" என்கிறார்கள். ஆமடா விதிவசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை" என்பது ஈசனுடைய விதி. தமிழ்நாட்டிலே சாத்திரங்களில்லை. உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வாழ்கிறார்கள்." (பாரதியார் கட்டுரைகள்)

<b>சோதிடமும் மதமும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. சோதிடர்கள் தோசம் இருக்கிறதாகச் சொல்லி கோயில்களில் சாந்தி செய்யுமாறு தோசகாரர்களை அங்கு அனுப்பி வைக்கிறார்கள். சோதிடர்கள் அனுப்பத் தவறியவர்களை கோயில்காரர்களே வானொலி, நாளிதழ்கள் வாயிலாக பயமுறுத்தி அழைக்கிறார்கள். கிரக தோசத்தால் இரண்டு பேர் காட்டிலும் மழை!</b>

மற்ற எந்த இனத்தவரையும்விட தமிழர்கள் சோதிட சாத்திரத்தின் மேல் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். திருமணம் மட்டுமல்ல மற்ற எந்த நல்ல காரியம் என்றாலும் பஞ்சாங்கம் பார்க்காமல் எதையும் செய்யும் துணிவு அவர்களிடம் இல்லை. கடை திறப்பு விழாவா? வீடு குடிபூரா? பிள்ளைக்கு சோறு ஊட்டலா? காது குத்தலா? எதற்கு எடுத்தாலும் இராகு காலம், அட்டமி நவமி, யம கண்டம், மரண யோகம் என நாளும் கோளும் பார்க்காமல் தமிழர்கள் அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டார்கள். பல்லி சொன்னால் போதும், எழுந்திருந்தவர் உட்கார்ந்து விடுவார். பூனை குறுக்கே போனால் சொல்லவே வேண்டாம். சகுனப் பிழை என்று சொல்லி பேசாமல் வீட்டில் இருந்து விடுவார்.

காலங்காலமாக சோதிடத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வளர்ந்து வருகிறதே ஒழிய குறைந்த பாட்டைக் காணோம்.

வணிக நோக்கோடு நடத்தப்படும் செய்தி ஏடுகள், கிழமை ஏடுகள் பாமர மக்களின் சோதிட மோகத்திற்கு நெய்யூற்றி அதனை மேலும் வளர்த்து வருகின்றன.

சோதிடம், இராசி பலன், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி, திருமணப் பொருத்தம், தோச சாந்தி, கேள்வி பதில் போன்றவற்றைத் தாங்கி வராத ஏடுகளே இன்று இல்லையென்று சொல்லிவிடலாம்.

கனடாவில் வெளிவரும் ஏடுகளில் 'இந்தவார இராசி பலன்" குறைந்தது இரண்டு பக்கங்களையாவது நிரப்பி விடுகிறது. அப்படி இடம் ஒதுக்காத ஏடுகளைப் பார்ப்பது மிக அரிது. 'முழக்கம்" 'உலகத் தமிழர்" போன்ற ஏடுகள் மட்டுமே இந்த விதிக்கு விலக்கு!

இணைய வலையம் வந்த பின்னர் சோதிடர்கள் வான வெளியிலும் கடை விரித்து விட்டார்கள். ஆயிரக்கணக்கான முழுநேர சோதிடர்கள் கவர்ச்சிகரமான முறையில் சாதகம் கணிப்பது, பலன் சொல்வது, பொருத்தம் பார்ப்பது, நினைத்த காரியம் சொல்வது, உடல்நலம், வேலை, வணிகம், பணம், பயணம் பற்றிய ஆலோசனை, தோசங்களுக்கு பரிகாரம், அதிட்டத்துக்கு தாயத்து, நவரத்தினக் கற்கள், மோதிரம், உருத்திராட்சம், யந்திரம் போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். அல்லது மந்திரம், யந்திரம், தந்திரம், விரதம், செபம், தவம், சாந்தி, அர்ச்சனை, எள்ளெண்ணெய் சட்டி எரித்தல், அபிசேகம் போன்றவற்றை செய்யுமாறு சொல்கிறார்கள்.

சோதிடத்தோடு தொடர்புடைய எண்சாத்திரம், நாடி சாத்திரம், Tarot வாசிப்பு, அருள்வாக்கு (clairvoyance) போன்ற மூட நம்பிக்கைகளை மூலதனமாக வைத்துக்கொண்டு வாணிகம் செய்யும் பேர்வழிகளுக்கும் குறைவில்லை.

நான் வேண்டும் என்றே ஒரு அருள்வாக்குச் சொல்லும் ஒருவரோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு எனது எதிர்காலம்பற்றிச் சொல்லுமாறு கேட்டேன். அவர் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. அடுத்த வினாடி அவரிடம் இருந்து பதில் வந்தது. 'வேலுப்பிள்ளை (எனது முதல் பெயர்) நீங்கள் நம்ப மாட்டீர்கள்! உங்களைப்பற்றி இரவு கனவு கண்டேன். விடிய உங்கள் மின்னஞ்சல் வருகிறது. உங்களுக்கு இன்று முதல் நல்ல காலம் பிறந்திருக்கிறது. உங்களது அதிட்ட எண் 1, 3, 13. எதற்கும் விபரமான பலன் சொல்வதற்கு 50 டொலர்கள் அனுப்பி வையுங்கள்......."" நான் பதில் அனுப்பவில்லை. ஆனால் அவர் என்னை விட்டபாடில்லை. அதிட்ட தேவதை வீட்டுக் கதவைத் தட்டுவதைத் தனது அகக் கண்ணால் பார்க்க முடிகிறது என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து வெட்டிக் கொள்ளப் பெரிய பாடாகிவிட்டது.

சாதகம் கணித்தல், பலன் சொல்லுதல், நாடி பார்த்தல் போன்றவற்றுக்கு 50 முதல் 250 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடுகிறார்கள். தொழில், நிதி, உடல்நலம் பற்றிய கேள்வி ஒவ்வொன்றுக்கும் 10இல் இருந்து 50 டொலர் அறவிடுகிறார்கள். ஸ்ரீலங்காவில் உள்ள ஒரு சிங்கள சோதிடர் சாதக பலன் சொல்ல ரூபா 4,750 கேட்கிறார்.

வட அமெரிக்காவில் சோதிடம் பலகோடி டொலர்கள் புரளும் வணிகமாக விளங்குகிறது. பத்தாயிரத்துக்கும் அதிகமான முழு நேர சோதிடர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆண்டில் 2.2 கோடி சோதிடப் புத்தகங்கள் விற்பனையாகிறது. 1997இல் Life சஞ்சிகை நடத்திய கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கர்களில் 47 விழுக்காட்டினர் சோதிடத்தை நம்புகிறார்களாம்.

அறிவியல்க் கண்டு பிடிப்பான கணனியின் வருகை சோதிடர்களின் உடல் உழைப்பைக் குறைத்து ஊதியத்தை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. சாதகம் கணிப்பது, பலன் சொல்வதற்கு ஏராளமான மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள் அனைவருமே சோதிடத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். சோதிடத்துக்கு அறிவை மயக்கும் ஆற்றல் (சக்தி) இருப்பதற்குக் காரணம் காலம் காலமாக தமிழர்களது மூளை சலவை செய்யப்பட்டு அதற்குள் மூட நம்பிக்கைகளை மதமும், மதகுருமாரும் திணித்து விட்டதே.

யாருடைய வாழ்க்கையில்தான் துன்பம் இல்லை? தொல்லை இல்லை? ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்பம் துன்பம், இடர் தளர், உயர்வு தாழ்வு, செல்வம் வறுமை, நன்மை தின்மை, ஏற்றம் இறக்கம் கலந்தே இருக்கிறது. இவை உலக நடை முறை.

'ஒரு வீட்டில் சாக்காட்டுப் பறையின் ஒலி. இன்னொரு வீட்டில் மணத்திற்குக் கொட்டும் மிகக் குளிர்ந்த முழவின் ஓசை. ஒரு வீட்டில் காதலரோடு பூ அணிந்த மகளிர். இன்னொரு வீட்டில் காதலர் பிரிவால் கண்களில் நீர் நிறைந்த மகளிர். இவ்வுலக இயற்கை இது. இதன் இயல்பு உணர்ந்தோர் இனிய காண்க" (புறம் 194) என்கிறார் பல்குடுக்கை நன்கணியார் என்ற சங்க காலப் புலவர்.

'நன்றும் தீதும் பிறர்தர வாரா, சாதல் புதுவதன்று. வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று" (புறம் 192) என்கிறார் இன்னொரு புகழ்பெற்ற சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருள் சேரும். இன்னொரு நேரம் அது போகும். ஒரு குறிப்பிட்ட காலம் உடல் நலம் இருக்கும். முதுமையில், அது கெடும். இது இயற்கை.

மனிதர்கள் சோதிடத்தை நம்புவதற்கு அவர்களது பலவீனமான மனமே காரணியாகும். பலவீனமான மனம் பரம்பரை பரம்பரையாக மூளையில் திணிக்கப்பட்ட பழக்க வழக்கங்களை, கட்டுக் கதைகளை அவற்றின் உண்மை பொய்யை ஆராயாது எளிதில் நம்பி விடுகிறது. மனிதர்கள்-

(1) உளவியல் அடிப்படையில் தங்களைப்பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். குறிப்பாகப் பெண்களுக்கு இந்த ஆசை இருக்கிறது.

(2) தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டி அறிய மிகவும் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு பிரம்மா அல்லது படைத்தவன் ஏதோ ஒரு 'பெரிய திட்டம்" (grand design) ஒன்;றை தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருப்பதாக நினைக்கிறார்கள்.

(3) 'அற்புதங்களை" அப்படியே நம்பி விடுகிறார்கள். அறிவியலை அப்படி நம்புவதில்லை. பிள்ளையார் பால் குடிக்கிறார், யேசுநாதர் அறையப்பட்ட சிலுவையில் இருந்து இரத்தம் வடிகிறது, சாயி பாபா படத்தில் இருந்து திருநீறு கொட்டுகிறது என்றால் வாயைப் பிளப்பார்கள். வானவியலாளர்கள் நெடுந்தொலைவில் உள்ள சூரிய மண்டலத்தை சுற்றி பூமியைப் போன்ற கிரகங்கள் வலம் வருகின்றன எனச் சொன்னால் அதையிட்டு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அறுபதினாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பூமிக்கு மிக அருகில் வந்த செவ்வாயை எத்தனை பேர் பார்த்தார்கள்?

(4) மனிதர்கள் தாங்கள் நினைத்தது நடப்பதை விரும்புகிறார்கள். காலையில் கண் விழித்தவுடன் 'இன்று நாள் நல்லாக இருக்காது, ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது" என்று நினைத்தால் அப்படி யே நடக்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள். சென்ற கிழமை சோதிடப் பலனைப் பார்த்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோதிடர் ஜெயவேல் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு. தனது சாவின் மூலம் சோதிடத்தை 'மெய்ப்பித்து" விட்டார்!

(5) மற்றவர்கள் சொல்வதை எளிதில் ஒப்புக் கொண்டுவிடுகிறார்கள். 'இன்று உனக்கு நேரம் சரியில்லை" என்று மற்றவர்கள் சொன்னால் அது சரி போலத் தோன்றும்.

(6) தங்களுக்குத் தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வுகளை (coincidences) நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். மற்றதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். குடை கொண்டு வராத நாட்களில் மழை பெய்தது நினைவில் நிற்கிறது. குடை கொண்டுவந்த நாட்களில் மழை பெய்தது மறந்து போய்விடுகிறது.

(7) ஒவ்வொருவரும் தங்கள் சிக்கல்கள் தங்கள் வாழ்க்கை நிலைமை தனித்துவமானது என்று நினைக்கிறார்கள்.

(8) மற்றவர்கள் கொடுக்கும் ஆரவாரமான வாக்குறுதிகளை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.

(9) சிக்கலான விடயங்களுக்கு சுலபமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாடங்களை பாடுபட்டுப் படித்துத் தேர்வு எழுதுவதற்குப் பதில் 'கொப்பி" அடித்துச் சித்திபெற முடியுமென்றால் அப்படிச் செய்ய விரும்புவார்கள்.

பின்;வரும் சோதிடப் பலனைப் படித்துப் பாருங்கள். அது உங்களுக்கு பொருந்தி வருவது போன்ற மயக்கம் ஏற்படும்.

'உங்கள் மனசு கள்ளமில்லாத வெள்ளை மனசு. ஆனால் யாரையும் நீங்கள் எளிதில் நம்பி விட மாட்டீர்கள்.

நண்பர்களோடு சேர்ந்து கும்மாளம் அடிப்பீர்கள். அதே நேரம் தனிமையில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கும்.

நீங்கள் முற்கோபக்காரர். ஆனால் அடுத்த கணம் 'ஐஸ்" மாதிரி குளிர்ந்து விடுவீர்கள்.

உங்களுக்கு எதையும் ஒளித்து வைக்கத் தெரியாது. அதே சமயம் எல்லா இரகசியங்கனையும் உங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

உங்கள் கை ஓட்டைக் கை. நீங்கள் எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும் கையில் நாலு காசு மிஞ்சாது.

நீங்கள் புதிதாகத் தொடங்கும் தொழிலில் நட்டம் அடைவீர்கள். ஆனால் இருக்கிற தொழில்களில் இரட்டிப்பு இலாபம் பெறுவீர்கள்.

உங்களது நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணம் உங்கள் மன நிலையைப் பாதிக்கும்.

உங்கள் மனைவியோடு சண்டை போடுவீர்கள். ஆனால் பின்னர் சமாதானம் ஆகிவிடுவீர்கள்.

பழைய கடன் திரும்பி வரும். ஆனால் கோட்டுப்படிகளில் ஏறி இறங்க வேண்டிவரும்.

உங்களுக்கு இனிப்புச் சாப்பாடு பிடிக்கும். பாலை சுடச் சுடக் குடிப்பீர்கள்.

கடந்த ஆறு மாதங்களாக உங்களது கிரகங்களின் நிலை சரியில்லை. அதனால் உங்களுக்கு ஒரே மன உளைச்சல். அலைச்சல். அடுத்த மாத நடுப்பகுதியில் நவநாயகர்களின் தலைவனான சூரியன் உச்சம் பெறுகிறார். அங்காரகன் (செவ்வாய்) ஆட்சி செய்கிறார். வியாழபகவான் கடக இராசி 5ஆம் பாகையில் பரம உச்சம் பெறுகிறார். சனியோ நீச்சம் அடைகிறார். உங்களுக்கு யோக காலம் பிறக்கிறது.

http://www.tamilnatham.com/astro/Astrology250903.htm
Reply
#18
Quote:படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள் அனைவருமே சோதிடத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். சோதிடத்துக்கு அறிவை மயக்கும் ஆற்றல் (சக்தி) இருப்பதற்குக் காரணம் காலம் காலமாக தமிழர்களது மூளை சலவை செய்யப்பட்டு அதற்குள் மூட நம்பிக்கைகளை மதமும், மதகுருமாரும் திணித்து விட்டதே.


மனிதர்கள் சோதிடத்தை நம்புவதற்கு அவர்களது பலவீனமான மனமே காரணியாகும். பலவீனமான மனம் பரம்பரை பரம்பரையாக மூளையில் திணிக்கப்பட்ட பழக்க வழக்கங்களை, கட்டுக் கதைகளை அவற்றின் உண்மை பொய்யை ஆராயாது எளிதில் நம்பி விடுகிறது. மனிதர்கள்-

தகவலுக்கு நன்றி மன்னா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#19
[quote]
வள்ளலார் வேத, ஆகம, இதிகாச, புராணங்களை முற்றும் முழுதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம்


ÅøÄÄ¡÷ ±øÄ¡§Á ¦À¡ö ±ýÚ ¦º¡øÄÅ¢ø¨Ä§Â!
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)