Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இறந்த பின்............- கமலஹாசனிடமிருந்து !
#1
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/kamal-200.jpg' border='0' alt='user posted image'>

<b>உங்களுக்கு ஒரு வேண்டுகோள்- கமலஹாசனிடமிருந்து</b>(ம்)!
சன் டிவியின் 'மே தின' சிறப்பு நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பேசியதைப் பார்த்திருப்பீர்கள்! இரண்டு வாரத்திற்கு முன் வந்த வந்த கல்கி பத்திரிகையில் அவரது பேட்டியையும் படித்திருப்பீர்கள்! இந்த இரண்டிலிருந்து மட்டுமல்ல; அண்மையில் அவர் கொடுத்த தெலுங்கு பத்திரிகைப் பேட்டியிலும் கூட, கமல் என்ற ஒரு கலைஞனின் மனதிற்குள்ளேயான தொழிலியல் நடைமுறை இயலாமைகளும் அவனது வாழ்வு மீதான அடக்குமுறைகளின் வீரியமும் வருத்தத்தின் விழிகளில் தொக்கி நின்றதை நம்மால் கண்டிருக்க முடியும். 'ஒரு சாதிக்கும் கலைஞனுக்கு சமுதாயத்தின் மரியாதைப் பங்களிப்பு இறப்புக்குப் பின் தானா இன்னும்' என்று இன்றும் வருத்தப்படவைக்கின்றன இவைகள்.

காந்தியைச் சுடச்சொல்லி ஆளனுப்பி காரியம் முடிந்தபின் அவருக்கு ஆங்காங்கு ஒரு சிலை வைத்துவிட்டோம். 'பாரதி' என்ற 'பா பைத்தியக்காரனுக்கு அன்று சாப்பாடு போடக்கூட விரும்பாமல் இறுதிக் காரியத்திலும் கூட இணைந்துகொள்ள அருவருத்து ஒதுங்கி நின்றுவிட்டு இன்று அவனைத் 'தேசியக்கவி' ஆக்கிவிட்டோம். அது யாரப்பா புதுமைப்பித்தனா? ரேஷன் கார்டு வைத்திருக்கிறாயா? இது யார் வலம்புரி ஜானா? உடம்புக்கு சரியில்லையின்னு ஆஸ்பத்திரிக்கி வரியேப்பா, கையில காசு வெச்சுருக்கியா? ஏய் தம்பி, குடும்பம் குட்டியெல்லாத்தையும் விட்டுபுட்டு வெள்ளக்காரனுக்கு குண்டு வெச்சி தூக்குல தொங்குறீயே? தேவையாவெ உனக்கு இது? பகத்சிங்காம் பகத்சிங்கு, பைத்தியசிங்கா நீ?

ஏம்பா முக்கோண வெண்தாடி நாதா, செவாலியேவெல்லாம் வாங்கியிருக்கியாமே, ஹிந்தி தெரியுமா உனக்கு? அது யாருப்பா அந்தப்பக்கம் மதிய உணவுத்திட்ட நாயகனா? வெட்டி வேலையப்பா உன்னது!

உங்களது கரங்கள் பெரியதாய் என்ன செய்துவிடப்போகின்றன? அடிக்கடி முதுகில் குத்தும் அல்லது ஒரே ஒருமுறை ஒருத்தருக்கு என, பல மலர் வளையங்கள் வைக்கும். உங்களது இதழ் எப்போது திறந்து மூடப்போகின்றன? மலர் வளையம் வைத்த கையோடு மைக் பிடிக்கும் உங்களுக்கு, இரண்டே இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசுவதற்கு திறந்து மூடும்.

ஆயிரம் மலர் வளையங்களை விட ஒரே ஒரு மலர்மாலையும் மனம் நிறைந்த பாராட்டும் சாதிக்கக்கூடியவை எத்தனை எத்தனை நண்பர்களே!

இறந்த பின் மட்டும் வெளியில் காட்டுவதற்கென உங்கள் கைகளும் வாயும் இருந்தால் இனிமேல் அவை இரண்டும், அவற்றுக்கு(ம்) பயன்படாமல் போகட்டும்!

கல்கி பேட்டியிலிருந்து....

"தனிப்பட்ட முறையில் பிராமணர்கள் பால் எந்தவித காழ்ப்பும் பெரியாருக்கு இல்லை"

"பகுத்தறிவுப்பாதையை பெரியார் மட்டும் தான் கொண்டு வரவேண்டுமென்பதில்லை. சுபிட்சமே கொண்டு வரும்"

"மேஜை மீது கிடக்கிற தண்ணீரை தள்ளிவிட்டால் மற்றொரு பக்கம் போய்விடும். அப்படித்தான் மும்பை முழுவதுமே இப்போது தாராவியாகிவிட்டது"

"ஆபத்தின் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு."

"வர்த்தகக் கோட்பாடுகளிலிருந்து தமிழ் சினிமாவின் திரைக்கதையை மீட்டெடுக்கவில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்! அதில் கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும்; கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும். நோ பெயின் நோ கெயின்! புத்தர் சொன்னதாக எடுத்துக்கொண்டாலும் சரி; ஆர்நால்டு சொன்னாலும் சரி. வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை! "

"இது ஒரு தொழிலாக வியாபாரமாக இருக்கும்போது, புரட்சிகளில் ஈடுபடும் தியாகம் என்னிடமில்லை."

"நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால் நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை புரிய கொஞ்சம் நேரம் ஆகும். நேர்மமயானவனா இல்லையா என்பதை அவன் வாழ்ந்துதான் காட்டவேண்டும். அது ஒரு பெரிய கொடுமை!"

"மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று கேட்காதே..அந்த மாற்றமாக நீயே மாறி விடு!
என்பார் காந்தி. நான் காந்தியின் மிகப்பெரிய ரசிகன். கொடுமை என்னவென்றால், காந்தியைப் பற்றி நான் தப்பாக படம் எடுத்தேன் என்கிறார்கள். காந்தியின் உருவத்தைச் சிதைக்கும் படமா ஹேராம்?"

"தமிழர்கள் எனக்கு கைதட்டாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி எதிர்பாராத நேரத்தில் அதுவும் பின்புரத்திலிருந்து பொறடியில் தட்டாமல் இருக்கலாம் இல்லையா? முதுகில் குத்துவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"

"அழும் கோழைத்தனம் எனக்கு இல்லை. ஆனால் சிரிக்கும் பக்குவத்தை மட்டும் நான் இழந்துவிட்டேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்'

"கலைஞன் என்பவன் சாந்தமான மனநிலையில் இருந்துகொண்டு செயல்படவேண்டும். வேலை செய்கிற உச்சகட்டத்தில் என்னைத் தொந்தரவு பண்ணிவிட்டு, ஓய்வு பெறும்போது நீங்கள் பாராட்டுவது எனக்கு வேண்டாம்."

கடைசி வரிகள் நமக்கு மிகவும் முக்கியம் நண்பர்களே! இனிமேலும் இறந்த காலத்திற்காய் ஏங்காதீர்! நிகழ்காலத்தின் சக சாதனையளர்களை போற்றுங்கள், மதியுங்கள்!

எம்.கே.குமார்

நன்றி: கல்கி!

posted by எம்.கே.குமார்
Reply
#2
அதுசரி இது எந்த படத்திலை வரபோற வசனம் எண்டு போடேல்லையே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#3
Quote:கடைசி வரிகள் நமக்கு மிகவும் முக்கியம் நண்பர்களே! இனிமேலும் இறந்த காலத்திற்காய் ஏங்காதீர்! நிகழ்காலத்தின் சக சாதனையளர்களை போற்றுங்கள், மதியுங்கள்!
Reply
#4
கலைகளின் கலைஞன். யதார்த்தத்திலும் கலைஞன். உலகை அறிந்த கலை.
அது உலகை ஆளத்தேவை இல்லை... உள்ளங்களை ஆளலாம்... ஆளும்... அதுவே உலகைநாம் ஆளுகின்றோம் ஆளவைப்போம் என்ற உண்மையான உணர்வுகளின் உண்மைக் கலை. :|
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#5
sathiri Wrote:அதுசரி இது எந்த படத்திலை வரபோற வசனம் எண்டு போடேல்லையே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் சாத்திரி உங்கள் சாத்திரத்திலை விளங்காததா ? சோளம்பொரியை எறிஞ்சு வெத்திலையிலை மைபோட்டு ஒருக்கா பாக்கிறதுதானே. விசியம் புரிஞ்சிடுமெல்லோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#6
aswini2005 Wrote:
sathiri Wrote:அதுசரி இது எந்த படத்திலை வரபோற வசனம் எண்டு போடேல்லையே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:ஏன் சாத்திரி உங்கள் சாத்திரத்திலை விளங்காததா ? சோளம்பொரியை எறிஞ்சு வெத்திலையிலை மைபோட்டு ஒருக்கா பாக்கிறதுதானே. விசியம் புரிஞ்சிடுமெல்லோ :
l ol:
என்ரை சாத்திரத்திலை எல்லாம்விழங்கும் ஆனா இது யார் புதுவில்லங்கம் எண்டு விழங்கேல்லை :roll:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)