04-16-2005, 12:02 PM
விண்வெளி விந்தைகளில் ஏப்ரல் மாதம்
இரவில் புறப்பட்ட மனித விண்வெளி பயணம் இருளிலேயே
முடிந்தது!முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன், 1961 ஏப்ரல் 12 அன்று யூரிஅலெக்ஸியெவிச் கஹாரின் எனும் ரஷ்யப் போர் விமானி விண்வெளிச் சாதனை படைத்த நாள்.
தொடர்ச்சியாக பல `ஸ்புட்னிக்' செயற்கை கோளை ஏவி வெற்றிப் பதக்கம் பெற்ற `வாஸ்டாக் - 1' விண்கலத்தில் பயணம். ரஷ்ய மொழியில் வாஸ்டாக் என்றால் கிழக்கு என்று பொருள்.
அன்று மொஸ்கோ நேரப்படி காலை 9.07 மணி. புவியை விட்டுப் புறப்பட்டார் கஹாரின். விண்வெளியில் இருந்தவாறு அவர் பேசிய முதல் விஞ்ஞான வசனம் - `ஆகாயம் கன்னங்கரேலென இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது" என்பதாகும்.
விண்ணில் 108 நிமிடங்கள் பறப்பதென்றால் சும்மாவா? நீங்கள் சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்வதற்குள் கஹாரின் பூமியை ஒரு முறை சுற்றி வந்து விட்டார். ஒரே நாளில் இரண்டு முறை சூரியோதயம் பார்த்த முதல் அதிசய மனிதரும் அவரே, ஏனென்றால் விண்கலங்கள் புவியை சுற்ற வெறும் ஒன்றரை மணி நேரங்களையே எடுத்துக் கொள்கின்றன.
இதில் இன்னொரு செய்தி என்ன தெரியுமா? அந்த விண்வெளி சாகசத்தின் போது அவருக்கு வயது வெறும் 27 தான். ஸ்மோலென்ஸ் நகர் அருகே குளூஷினே என்கிற கிராமத்தில் 1934 மார்ச் 9 அன்று பிறந்தவர் இவர் சாதாரண மரவேலை செய்பவரின் மகன்.
புவியை சுற்றித் திரும்பும் போது 13 ஆயிரம் அடி உயரத்தில் `பரசூட்' குடை விரிந்தது. முதன்மைக் குடை 8 ஆயிரம் அடி உயரத்தில் தான் விரிந்தது. சரதோவ் எனும் இடத்தருகே ஸ்மெலோவ்கா கிராமத்தில் தரையிறங்கினார் கஹாரின். அதைக் கவனித்த ஆயர் குலப் பெண்ணொருத்தி `என்னவோ ஆகாயத்திலிருந்து வர்றபோல இருக்கே?' என்றாள்.
உண்மையும் அதுதான். பிற்காலத்தில் கஹாரினுக்கு மேஜர் பதவி. ஆனால் 1968 மார்ச் 28 அன்று ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். விண்வெளி வரலாற்றில் புது யுகம் படைத்த பெருமை இவரது முதல் பயணத்திற்கு உண்டு. சாதனை நாட்களையும் ஆட்களையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்க எமக்கு எங்கே நேரம்? `ஹலோ நான் பேசுகிறேன்' என்று `கால்' போட்டு பாட்டு கேட்கவே நேரம் போதவில்லை என்று யாரோ அங்கலாய்க்கிறார்கள்.
சரி போகட்டும், ஏப்ரல் 12 மட்டும் 1968 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச விமான விண்வெளிப் பயணவியல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இன்று விண்வெளி ஆராய்ச்சிகள் உலகெங்கும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 2003 ஆம் ஆண்டு நத்தார் நாளில் ஐரோப்பிய `பீக்கிள்-2' விண்கலத்தின் செவ்வாய்ப் பயணம் தோல்வி. ஆயினும் அதன் திட்ட இயக்குநர் பேராசிரியர் கனன் பில்லங்கர் மனம் தளரவில்லை. அடுத்த `பீக்கிள்-3' தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் ஐரோப்பா அனுப்பிய `ஸ்மாட்' எனும் சந்திர விண்கலம் உள்ளபடியே சமர்த்துதான். `தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வுக்கான சிறிய பணி இலக்குகள்' (குட்ச்டூடூ –டிண்ண்டிணிணண் ஞூணிணூ அஞீதிச்ணஞிஞுஞீ கீஞுண்ஞுச்ணூஞிட டிண கூஞுஞிடணணிடூணிஞ்தூ கு–அகீகூ) என்பதன் ஆங்கிலச் சுருக்கமே ஸ்மாட்.
2004 நவம்பர் 15 அன்று சந்திரனுக்கு 5,000 கிலோ மீற்றர் தூரத்திற்கு அது பறந்து சென்றது. ஜனவரி மாதத்தில் சந்திரனின் தென்துருவப் பக்கமாக 300 கிலோ மீற்றரிலும், வடதுருவத்திற்கு அருகே 3,000 கிலோ மீற்றரிலும் நீள்வட்டப் பாதையில் சுற்றியது. இதில் முதன் முறையாக மின்சக்தியால் இயங்கும் உந்து பொறியொன்று கையாளப்பட்டது. அந்த பொறியில் செனன் எனும் சடத்துவ வாயுவே எரிபொருள்.
சீனாவின் சந்திர ஆய்வுத் திட்ட விஞ்ஞானி ஒயுயாங் சியுயான் கருத்துப்படி, 2007 ஆம் ஆண்டு செங்கே என்னும் சந்திரச் சுற்றுகலன் தயார் ஆகுமாம். அத்துடன், 2010 ஆம் ஆண்டில் சந்திரனில் இறங்கவும், 2017 ஆம் ஆண்டில் நிலாவில் மண்ணெடுத்து வரவும் மீண்டும் திட்டங்கள்.
100 தொன் எடையைத் தாழ்புவி சுற்றுப் பாதையில் கொண்டு சேர்க்கும் பளுதூக்கி ஏவுகலம், ரஷ்யா வசமுள்ளது. சந்திரனுக்குச் செல்ல அமெரிக்கா அதனை வாடகைக்கு வாங்கலாமே என்று இங்கிலாந்து நாட்டு மைக் ரிச்சட்சன் மற்றும் அன்டர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தென் அமெரிக்காவின் கயான பிராந்தியத்தில் பிரெஞ்சு நாட்டிற்குச் சொந்தமாகக் கூரு எனும் ஏவுதளமுள்ளது. அங்கு ரஷ்யா தனது `சோயுஸ்-2' விண்கல ஏவு நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது.
எது எப்படியாயினும், ஏப்ரல் மாதத்திற்கு உலக விண்வெளி ஏட்டிலும் மகத்தான முத்திரை நாட்கள் ஏராளமுள்ளன.
முதன் முதலாக இந்தியாவின் ஆரியபட்டா விண்ணகம் 1975 ஏப்ரல் 19 இல் விண் புகுந்தது.
இந்திய விண்வெளிப் படிகளில் டொக்டர் அப்துல் கலாம் தொடங்கி வைத்த எஸ்.எல்.வி-3 திட்டத்தின் இறுதிப் பயணம் (17-04-1983) `இன்சட் -1 ஏ' என்னும் முதல் தலைமுறை தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் அமெரிக்க நாட்டு டெல்டா ஏவுகலனால் 36 ஆயிரம் கிலோ மீற்றர் உயரத்தில் செலுத்தப் பெற்றது. (10-04-1982), ஐரோப்பிய ஏரியன் ஏவுகலனால் `இன்சட் -3 ஏ' விண்ணில் பறந்தது.(22-04-2003) இந்தியாவின் முதலாவது ஜி.எஸ்.எல்.வி ஏவுகலன் வெற்றி. (18-04-2001) இப்படிப் பல.
அவ்வளவு ஏன்? இந்திய நாட்டு ராகேஷ் சர்மா, ரஷ்யாவின் சோயுஸ் -டி 11 விண்கலத்தில் புவிசுற்றுப் புறப்பட்டதும் 1984 ஏப்ரல் மூன்றாம் திகதி தானே!
உலக சரித்திரம் இன்னும் விரிவானது. உலகின் முதலாவது விண்கப்பல் `சல்யுத்-1' விண்ணில் செலுத்தப்பட்டதும் 1971 ஏப்ரல் 19 இல் தான். அமெரிக்காவின் முதலாவது விண்வெளி ஓடம் எஸ்.டி.எஸ் - 1 அடுத்த பத்தாண்டுகளில் 1981 ஏப்ரல் 12 அன்று ஏவூர்தியாகக் கிளம்பி விமானமாகத் தரை இறங்கிற்று.
விண்வெளியில் 50 மைல்களுக்கு உயர பறந்த நூறாவது வீரர் பல்கேரிய நாட்டு கியார்கி இயனொவ், 10.04.1979 அன்று சோயுஸ் - 3 ஏவுகலனில் புவியைச் சுற்றித் திரும்பினார்.
நாம் இன்று இரு நாடுகளுக்கிடையே நல்லிணக்கப் பேரூந்து ஓடுவதைப் பெரிதாகப் பேசுகிறோம். ஆனால், ரஷ்ய நாட்டு சோயுஸ் ஏவுகலனில் கட்டணம் செலுத்தி முதன் முதலில் 2001 ஏப்ரல் 28 அன்று டெனிஸ் டிட்டோவ் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரர் செய்த விண்வெளிச் சுற்றுலாவை நினைத்துப் பார்க்கலாம்.
அவ்வாறே விண்வெளி சென்ற உலகின் முதல் அரசியல்வாதி கேக்கார்ன் என்னும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் 1975 ஏப்ரல் 12 அன்று பயணம் செய்தார்.
நம் நாட்டிலிருந்து எந்த அரசியல்வாதியையும் விண்வெளிக்கு அனுப்ப இயலாது. காரணம், இடப்பற்றாக்குறை. அத்தனைக் கறுப்பு, வெள்ளைப் பூனைப் படைகள் பரிவாரத்திற்கு எல்லாம் விண்கலத்தில் இடம்போதாது.
ஏப்ரல் விண்வெளி அத்தியாயங்களில் துன்பியல் நிகழ்வுகளுமுண்டு. 1967 ஏப்ரல் 23 அன்று சோயுஸ் கண்டது துக்கப் பயணம். விண்வெளியில் சுற்றியபடியே 18 சூரியோதயங்களைக் கண்டு திரும்பிய விளாடிமிர் கொமரொவ் வழியில் பரசூட் குடை சரிவர இயங்காமல் தரையில் மோதி உயிர் இழந்தார்.
முதல் முதலாக இரவில் புறப்பட்ட மனித விண்வெளிப் பயணம் இப்படி இருளாகவே முடிந்தது.
விண்வெளியில் முதலாவது இறந்த நாள் மட்டுமா?
முதிர்ந்த வயதில் 1994 ஏப்ரல் 27 அன்று தனது 52 ஆம் பிறந்த நாளை விண்வெளியில் கொண்டாடினார் அரைத் தாத்தா வாலெரி பாறயகொவ். இவர் ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு தன் 47 ஆவது பிறந்த நாளை அலெக்சாண்டர் வால்கொவ் என்னும் வீரருடன் இணைந்து விண்வெளியிலேயே கொண்டாடினாராம்.
இப்படியே பல்வேறு ஏப்ரல் விண்வெளி தினங்கள் இருக்கும் போது, முதலில் முட்டாள்கள் தினம் மட்டும் நினைவுக்கு வருவானேன்? எங்கட சனம் முட்டாளாவது ஏப்ரலில் மட்டும்தானா.
- தினமணி -

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->