09-22-2003, 06:48 AM
வரதட்சணை கொடுமை: பெண் போலீசாரால் அலைகழிக்கப்பட்ட பெண் தற்கொலை
மதுரை:
வரதட்சøக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வழக்கைப் பதிவு செய்யாமல் மகளிர் காவல் நிலையப் போலீசாரும், இன்னொரு காவல் நிலைய போலீசாரும் அலைகழித்ததால் நொந்து போன அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து கடமையைச் செய்யத் தவறிய சப்இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்னொரு பெண் சப்இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணை அவரது கணவர் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதை அவர் பொறுத்துக் கொண்டு இருந்தார். ஆனால், அடி உதை அதிகமானதால் வேறு வழியின்றி 'ஹெல்ப் லைன்' பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றார்.
(ஆபத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அவசர உதவி செய்ய உருவாக்கப்பட்ட போலீஸ் பிரிவு தான் ஹெல்ப் லைன். பெரும்பாலும் பெண் போலீசார் தான் இதில் உள்ளனர்.)
ஆனால், முருகேஸ்வரியிடம் லஞ்சம் எதிர்பார்த்த ஹெல்ப் லைன் பிரிவு பெண் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். இவரால் பணம் தர முடியாது என்பதால் வழக்கை வாங்காமல் மகளிர் காவல் நிலையத்துக்குப் போகுமாறு கூறினர்.
இதையடுத்து முருகேஸ்வரி மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கும் லஞ்சம் எதிர்பார்த்த பெண் போலீசார், இவர் பணம் தரும் நிலையில் இல்லை என்பதால் தரக் குறைவாக நடத்தினர். இங்கே எதுக்குடி வந்தே, ஹெல்ப் லைன் போலீஸ்கிட்ட போ என விரட்டியடித்தனர்.
மீண்டும் ஹெல்ப் லைன் போலீசுக்குப் போன முருகேஸ்வரியை பார்த்து எரிச்சலான பெண் போலீசார், நாங்க தான் மகளிர் காவல் நிலையம் போகச் சொன்னோம் இல்ல, ஏன் இங்கே வந்தே என்று கூறி மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதைத் தொடர்து மகளிர் காவல் நிலையத்துக்கு முருகேஸ்வரி மீண்டும் செல்ல, அங்கும் திட்டும் அவமரியாதையும் தான் கிடைத்தது.
இதனால் துவண்டு போய் தனது பெற்றோரிடம் சென்ற முருகேஸ்வரி தனக்கு கணவராலும், காவல் நிலையங்களிலும் ஏற்பட்ட கொடுமையைச் சொல்லி அழுதுள்ளார்.
அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனால், இந் நிலையில் முருகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர்.
இதனால் துடிதுடித்துப் போன பெற்றோர் சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மதுரை போலீஸ் கமிஷ்னரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும் இந்தத் தற்கொலை குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் விசாரணையும் நடந்தது. அதில் முருகேஸ்வரியை ஹெல்ப் லைன் பெண் போலீசாரும், மகளிர் காவல் நிலைய போலீசாரும் அலைகழித்ததும், அவமானப்படுத்தியதும் உண்மையே என்று தெரியவந்தது.
இதையடுத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸபெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹெல்ப் லைன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரு பெண் சப்இன்ஸ்பெக்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முருகேஸ்வரியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.thatstamil.com/news/2003/09/22/woman.html

Truth 'll prevail

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->