Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழப் புலிகளும் இந்தியப் பொடாவும்
#1
<img src='http://thatstamil.com/images13/kannappan-250.jpg' border='0' alt='user posted image'>
மத்திய அமைச்சர் கண்ணப்பன்

கண்ணப்பன் மீது பாய்கிறது பொடா: வாஜ்பாய்க்கு ஜெயலலிதா அதிரடி கடிதம்

மத்திய அமைச்சர் கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருவதால், அவர் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.

மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை கைவிட மாட்டேன். இதனால் பொடா சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவரை பொடாவில் கைது செய்யவும், அதற்குத் தேவையான ஆதரங்களைத் திரட்டவும் போலீசாருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் அவரைக் கைது செய்ய வசதியாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறைக்கு தமிழக உள்துறையில் இருந்து சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய்கே முதல்வர் ஜெயலலிதா நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அமைச்சர் எம்.கண்ணப்பன் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். மத்திய அமைச்சர் ஒருவரே இப்படிப் பேசி வருவது கடுமையான கண்டனத்துக்குரியது. எனவே, கண்ணப்பனை உடனடியாக மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

கடந்த 16ம் தேதி நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசியுள்ளார் கண்ணப்பன். மேலும், புலிகளுக்கு ஆதரவாக 26 முறை பேசியுள்ளதாகவும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவது நல்லதல்ல. அவரது செயல் பொடா சட்டத்தின் 18வது, 21வது பிரிவுகளின் கீழ் பெரும் தேச விரோதக் குற்றமாகும். அவரை மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து மத்திய அரசு நீக்காவிட்டாலும் அவர் மீது பொடா சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டத்தை மதிக்கும் மாநில அரசாகும். இதனால் இந்த அமைச்சரைக் கைது செய்வதே சரி என தமிழகம் நினைக்கிறது. மத்திய அமைச்சர் பதவியில் இருப்பதால் தன்னை யாரும் ஏதும் செய்துவிட முடியாது என நினைத்துக் கொண்டு தான் கண்ணப்பன் இவ்வாறு புலிகளை ஆதரித்து பகிரங்கமாகப் பேசி வருகிறார்.

உங்கள் தலைமையில் உள்ள அரசில் பதவி வகிக்கும் அமைச்சர் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசி, அரசியல் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கி வருவதை நீங்கள் தடுத்தாக வேண்டும். புலிகளை ஆதரித்தன் மூலம் அமைச்சராக இருக்கும் தகுதியையே அவர் இழந்துவிட்டார்.

இதனால் அவரை உடனே பதவியை விட்டு நீக்கி, நாட்டின் சட்டத்தை நிலை நிறுத்த உதவுமாறு பிரதமர் வாஜ்பாயைக் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் காரணங்களுக்காக கண்ணப்பனை பிரதமர் பதவி நீக்கம் செய்ய மறுத்தால், அதை தமிழக அரசு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுத்து கண்ணப்பனைக் கைது செய்யும்.

சட்டவிரோத செயலில் ஈடுபடும் மத்திய அமைச்சரை மாநில அரசு கைது செய்வதை எந்த சட்டம் தடுக்காது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

News directly copied from thatstamil.com...our thanks them.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
பார்ப்போம் என்ன நடக்கின்றது என.அப்படியாவது பொடாவிற்கு ஒரு விடிவு வருகிறதா என..
மத்திய அமைச்சரை கைது செய்வது இலகுவான காரியமல்ல.ஆனால் ஜெயலலிதாவிறகு இலகு!!
Reply
#3
இவர் கைது செய்யப்படவேன்டும் என்பது எனது மனோநிலை காரனம் சில பிரச்சினைகள் இறுக்கித்தான் தீர்வு பெறவேன்டும் அதாவது இவரும் கைது செய்யப்பட்டால் மக்கள் றோட்டிற்கு வருவார்கள் அதன்முதலம் எமக்கு சாதகமான பதில்வரும்.

இந்திய மக்கள் றோட்டிற்கு வந்துதான் போடா என்ற வைரசை கட்டுப்படுத்தவேன்டும்.
Reply
#4
தணிக்கை Wrote:இவர் கைது செய்யப்படவேன்டும் என்பது எனது மனோநிலை காரனம் சில பிரச்சினைகள் இறுக்கித்தான் தீர்வு பெறவேன்டும் அதாவது இவரும் கைது செய்யப்பட்டால் மக்கள் றோட்டிற்கு வருவார்கள் அதன்முதலம் எமக்கு சாதகமான பதில்வரும்.

இந்திய மக்கள் றோட்டிற்கு வந்துதான் போடா என்ற வைரசை கட்டுப்படுத்தவேன்டும்.
மக்கள் வருவதானால் எப்போதோ வந்திருப்பார்கள். ஒரு வருடத்திற்கு மேல் வராத மக்கள் கண்ணப்பனுக்குத்தான் ஆதரவு கொடுப்பார்களாக்கும் றோட்டிற்கு வருவார்களாக்கும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
மக்கள் வந்தா பிறகு மக்களும் பொடாவில எல்லே உள்ள போவினம்.....சும்மாவே பொலிஸ் எண்டாச் சனத்துக்குப் பயம்...அல்லது அராஜக நாயகி இவ்வளவும் கூத்துப்போட...சொத்துச் சொத்தா சனத்தட்டக் கொள்ளையடிக்க ...சாப்பாடில்லாமல் விசங்குடித்து தாங்களே தங்களை அழிக்கிற சனம்...இதுக்கு ரோட்டிற்கு வருமே...! அதுகள் மத்தியில இன்னொரு பாரதியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன் வந்தால் ஒழிய அதுகள் விசங்குடித்தே அழிய வேண்டியதுதான்...!
:evil: :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
இன்றைய செய்தியில் பாஜக சொல்லியுள்ளது யார் அமைச்சராகவிருக்கவேண்டும் யார் இருக்ககூடாது என்று சொல்ல தமிழ் நாட்டு அரசிற்கு உரிமையில்லை என...
இதற்கு ஜெ நாளை பதில் சொல்லக்கூடும்.
Reply
#7
சேது அண்ணை மக்கள் வருவினமோ?
தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் பதவியை பிடுங்கி அரைவாசிப்பேரை பொய் வழக்கு மூலம் உள்ள தள்ளின அம்மா... நாளை தமிழ்நாட்டைச்சுற்றி முட்கம்பி போட்டாலும் போடுவா....

கிட்டடியில் பால் தாக்கரே ஏதோ சொன்னமாதிரிக்கிடந்தது....அவருக்கு பொடா பாயாதாமோ?
Reply
#8
Kanani Wrote:சேது அண்ணை மக்கள் வருவினமோ?
தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் பதவியை பிடுங்கி அரைவாசிப்பேரை பொய் வழக்கு மூலம் உள்ள தள்ளின அம்மா... நாளை தமிழ்நாட்டைச்சுற்றி முட்கம்பி போட்டாலும் போடுவா....

கிட்டடியில் பால் தாக்கரே ஏதோ சொன்னமாதிரிக்கிடந்தது....அவருக்கு பொடா பாயாதாமோ?
தடா புடா வெண்டு பொடாவிலை போட்டாலென்ன.. போடாட்டாலென்ன.. அவர்களின் அரசியல் அவர்களது. இவனுக்காக அவன் கதைத்து அவன் உள்ளேபோனான். அவனோடு சேர்ந்து அழவேண்டிய இவன் அவனைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியேல்லை. அவன்தான் இவனைப்பற்றி கவலைப்படுறான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
வாஐபேய் வரும்போதே வரவேற்கப்போகாத ஜெயலலிதா இந்த கொசுறுத்தகவலிற்கு அடங்குவாரா ?

பார்ப்போம் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்பேட முடிவுசெய்துவிட்டார். (கதைக்க பயமாக இருக்கு பிறகு இங்கேயும் போடா பாயும். . )

யாழ்/yarl Wrote:இன்றைய செய்தியில் பாஜக சொல்லியுள்ளது யார் அமைச்சராகவிருக்கவேண்டும் யார் இருக்ககூடாது என்று சொல்ல தமிழ் நாட்டு அரசிற்கு உரிமையில்லை என...
இதற்கு ஜெ நாளை பதில் சொல்லக்கூடும்.
[b] ?
Reply
#10
""புலிகளுக்கு ஆதரவா பேசினதாச் சொல்லி, சிவனுக்கு கண் கொடுத்த நாயனார் மந்திரி மேல வழக்கு தொடர்ந்து, வர்ற வெள்ளிக்கிழமை கைது பண்றதா உத்தேசமாம்...

""வெளிநாட்டுக்கு போயிருக்கிற பிரதமர் வர்றதுக்கு நாளாகும்... அவரு வந்து, மந்திரி மேல "பொடா' வழக்கு போடுறதுக்கு எந்த காரணமும் இல்லைன்னு சொல்லிட்டாருன்னா, அப்புறம் கைவைக்க முடியாதுங்கிறதால தான் இந்த அதிரடி நடவடிக்கையாம்...

""இதுவரைக்கும் முதல் தகவல் அறிக்கை தயார் பண்ணலையாம்... அதைத் தயார் பண்ற வேலை தான் மும்முரமா நடந்துட்டு இருக்காம்... இந்த வழக்கை தொடரப் போறது "க்யூ' பிராஞ்ச் போலீஸார் தானாம்... சி.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்க இல்லையாம்...''
Reply
#11
சாமி Wrote:""புலிகளுக்கு ஆதரவா பேசினதாச் சொல்லி, சிவனுக்கு கண் கொடுத்த நாயனார் மந்திரி மேல வழக்கு தொடர்ந்து, வர்ற வெள்ளிக்கிழமை கைது பண்றதா உத்தேசமாம்...

""வெளிநாட்டுக்கு போயிருக்கிற பிரதமர் வர்றதுக்கு நாளாகும்... அவரு வந்து, மந்திரி மேல "பொடா' வழக்கு போடுறதுக்கு எந்த காரணமும் இல்லைன்னு சொல்லிட்டாருன்னா, அப்புறம் கைவைக்க முடியாதுங்கிறதால தான் இந்த அதிரடி நடவடிக்கையாம்...

""இதுவரைக்கும் முதல் தகவல் அறிக்கை தயார் பண்ணலையாம்... அதைத் தயார் பண்ற வேலை தான் மும்முரமா நடந்துட்டு இருக்காம்... இந்த வழக்கை தொடரப் போறது "க்யூ' பிராஞ்ச் போலீஸார் தானாம்... சி.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்க இல்லையாம்...''
தினமலர் கிசுகிசு எண்டு சொல்ல மறந்திட்டியள்போலை..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
ஆம் நன்றி மதிவதனன் (சுட்டிக்காட்டியமைக்)

நன்றி தினமலர் (செய்திக்கு)
Reply
#13
அதைவிட முக்கியம் இரவோடு இரவாக ஏன் கட்டிடங்களை இடிக்கிறா என்டதுதான்
[b] ?
Reply
#14
Karavai Paranee Wrote:அதைவிட முக்கியம் இரவோடு இரவாக ஏன் கட்டிடங்களை இடிக்கிறா என்டதுதான்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#15
நன்றி: தினமலர்
Reply
#16
<span style='font-size:25pt;line-height:100%'>குமுதத்தில் இப்படி வந்திருக்கிறது </span>


<img src='http://www.kumudam.com/kumudam/29-09-03/3t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/kumudam/29-09-03/3p.jpg' border='0' alt='user posted image'>

துரை. மாணிக்கம்,
சிவகாசி.

வைகோ எப்போது விடுதலையாவார்?

பொடா சட்டம் பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். புலிகளை ஆதரித்துப் பேசியதால் தானே சிறைக்கு வைகோ சென்றார்? சமீபத்தில் பால்தாக்கரே என்ன பேசினார்? "விடுதலைப்புலிகள் மிகப்பெரும் ராஜதந்திரிகள். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த கெட்டதும் செய்யவில்லை. பாகிஸ்தான் நமக்கு எதிராக ஆட்டம் போடுகிறது. அவர்களை நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. இருப்பது மாதிரி நமக்கும் ஒரு சக்தி வாய்ந்த உளவு அமைப்பு வேண்டும். அந்த அமைப்பு பாகிஸ்தானில் பல காரியங்களைச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு விடுதலைப்புலிகள்தான் சரியான ஆட்களாக இருப்பார்கள்" இப்போது சொல்லுங்கள். பொடா குறிப்பிட்ட சில பேர் மீது மட்டும்தான் பாயுமா?

நன்றி
29.09-03
Reply
#17
<img src='http://www.vikatan.com/jv/2003/oct/01102003/p13a.jpg' border='0' alt='user posted image'>
பி. கோபிநாத், தேனி.
கடலில் பயணம் செய்வதிலும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதிலும் போர்ச்சுக்கீசியர்கள் மட்டும் எப்படி கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள்?


போர்ச்சுகல் சிறிய நாடு. அதன் அரச குலத்தினரை மகிழ்விக்க மாலுமிகள் முயன்றிருக்கிறார்கள். பொதுவாகவே காலனி அமைக்கும் உத்தேசத்துடன் கடல் கடந்த இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், டச்சு நாட்டினர் திறமையான மாலுமிகள்தான்.
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர்கள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கடல் கடந்தனர். இப்போதுதான் கடல் பக்கமே காலைக் கூட நனைக்கமாட்டேன் என்கிறார்கள். அதுவும் தென்திசை? ம்ஹ$ம்!</span>

நன்றி
Reply
#18
<img src='http://www.dinamani.com/Images/sep03/28Adade.jpg' border='0' alt='user posted image'>

நன்றி: தினமணி
Reply
#19
[quote=Mullai]<img src='http://www.vikatan.com/jv/2003/oct/01102003/p13a.jpg' border='0' alt='user posted image'>
பி. கோபிநாத், தேனி.
கடலில் பயணம் செய்வதிலும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதிலும் போர்ச்சுக்கீசியர்கள் மட்டும் எப்படி கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள்?


போர்ச்சுகல் சிறிய நாடு. அதன் அரச குலத்தினரை மகிழ்விக்க மாலுமிகள் முயன்றிருக்கிறார்கள். பொதுவாகவே காலனி அமைக்கும் உத்தேசத்துடன் கடல் கடந்த இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், டச்சு நாட்டினர் திறமையான மாலுமிகள்தான்.
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர்கள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கடல் கடந்தனர். இப்போதுதான் கடல் பக்கமே காலைக் கூட நனைக்கமாட்டேன் என்கிறார்கள். அதுவும் தென்திசை? ம்ஹ$ம்!</span>

நன்றி


இந்தியாவில் பல சாம்ராஜ்யங்கள் தோன்றியிருந்தன.ஆனால் கடல்கடந்து தமது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தவர்கள் தமிழர்கள் மட்டுமே

தகவல் முன்னாள் பிரதமர் நேரு
கூறியதாகச்சொன்னவர் முன்னாள் எதிர்க்கட்சிதலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்கள்.
Reply
#20
<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் </span>

<img src='http://www.4to40.com/images/legends/nehru/jawaharlal_nehru.gif' border='0' alt='user posted image'><img src='http://www.abundantworld.com/ghandi.gif' border='0' alt='user posted image'>


ஒருமுறை மகாத்மா காந்தியும் நேருவும் சுற்றுப் பயணம் செய்தார்கள். ஓரிடத்திற்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. நேரு தன்னுடைய இளமைத் துடிப்பை வெளிப்படுத்த எண்ணி சற்றுப் பின்னோக்கிச் சென்று ஓடிவந்து கால்வாயைத் தாண்டினார். மகாத்மாவோ சற்றுத் து}ரம் சென்று வழிப்பாதைப் பக்கமாக நடந்து கால்வாயைக் கடந்தார். காந்தியைப் பார்த்த நேரு "என்னைப் போலவே நீங்களும் தாண்டியிருக்கலாமே" என்று புன்னகையோடு கேட்டார். அதற்கு காந்தி "இரண்டடி முன்னேற ஐந்தடி பின்னால் போவதா?" என்று நையாண்டியாகப் பதிலளித்திருக்கிறார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)