Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய கூத்துக்கள் ஆரம்பம் [இந்திய,அமெரிக்க].
#21
இலங்கைத் தீவில் விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை விரும்பவில்லை: எரிக் சொல்ஹெய்மிடம் இந்தியா!

இலங்கைத் தீவகத்தில் நோர்வே மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அதே நேரத்தில் இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் என்றும் அந்நாட்டரசு கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடில்லியில் தன்னை நேற்று புதன்கிழமை சந்தித்த நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் இந்திய வெளியுறவுத் துறைச்; செயலாளர் சியாம் சரண் இதனைத் தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையேயான சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தன.

சியாம் சரணை சொல்ஹெய்ம் சந்தித்து கலந்துரையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்;சந்திப்பின் போதுää அமைதி முயற்சிகள் குறித்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும் சொல்ஹெய்ம் விளக்கிய போதும்ää விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டதாக இந்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படை பலம் மற்றும் வான்படை பலம் குறித்த தனது அச்;சத்தையும் சொல்ஹெய்மிடம் இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இலங்கைத் தீவகத்தில் கடந்த வாரம் நான்கு நாட்கள் பயணத்தை இந்திய வெளியுறவுத் துறைச்; செயலர் சியாம் சரண் மேற்கொண்டிருந்தார்.

அப்போதும் சிறீலங்காவின் இறையாண்மையை பாதுகாப்பு குறித்த இந்திய கவலையை அவர் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
:evil: :twisted: :x
நன்றி: புதினம்
Reply
#22
சீனா பாக்கிஸ்தானைவிட ஈழத்துக்குத்தான் பயப்பிடுதோ...
அல்லது பழிக்கு பழிவாங்கலோ...
பார்க்கத்தானே போறோம்....
பாத்திடுவோம்...
:x :| Idea
Reply
#23
இதற்கெல்லாம் கவலைப் பட்டால் எப்படி? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#24
anpagam Wrote:சீனா பாக்கிஸ்தானைவிட ஈழத்துக்குத்தான் பயப்பிடுதோ...
அல்லது பழிக்கு பழிவாங்கலோ...
பார்க்கத்தானே போறோம்....
பாத்திடுவோம்...
:x :| Idea

அதுதானே பக்கத்தில் உள்ள சீனாவையும் பாகிஸ்த்தானையும் பங்களாதேசயும் விட்டிட்டு ஏன் சறம் கட்டின பஸ்சங்கள பாத்து பயப்படுகினம். அருண்டவன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேயாம்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#25
Mathuran Wrote:அதுதானே பக்கத்தில் உள்ள சீனாவையும் பாகிஸ்த்தானையும் பங்களாதேசயும் விட்டிட்டு ஏன் சறம் கட்டின பஸ்சங்கள பாத்து பயப்படுகினம். அருண்டவன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேயாம்.

தம்பி 1988டிலை நடந்ததுகளை இந்தியா தன்ரை வாழ்நாளில் மறக்கமாட்டுது சுன்னாகத்திலை கந்திரோடை எண்ட இடத்திலை பரமேஸ்வரன எண்ட IPKF தமிழ் மேயர் ஒருவர் சுடப்பட்டார் அவற்ரை போடி 8 மணித்தியாலத்தின் பின் புலிகள் அவ்விடத்தை விட்டு போய் விட்டார்கள் என்று அறிந்நபின் தான் வந்து எடுத்தார்கள். அவருக்கத்தான் பின்னர் இந்தியாவின் அதி உயர் விருது ஒன்று வழங்கப்பட்டது இதுகளை எல்லாம் எப்பிடி மறப்பார்கள்????
அப்ப இருந்த மாதிரியா புலிகள் இப்ப இருக்கிறார்கள்??????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவன் எண்டு நிக்கேக்க என்ன செய்வது.............................
<b> </b>
Reply
#27
பொதுக்கட்டமைப்புக்கு ஆதரவு: சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அறிவிப்பு

சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே பொதுக்கட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறீலங்காவிற்காக அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லான்ஸ்டெட் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பொதுக்கட்டமைப்பின் மூலம் ஆழிப்பேரலை நிவாரண உதவிகள் முழுவீச்சில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அத்துடன் இடைநிறுத்தத்திற்குள்ளாகியிருக்கும் அமைதிப் பேச்சுகள் சரியான திசையில் செல்ல இந்தக் கட்டமைப்பு உதவக் கூடும். அமைதிப் பேச்சுகளில் ஒருவகையிலான முன்னேற்ற நடவடிக்கையாகவே பொதுக்கட்டமைப்பை நாங்கள் எண்ணுகிறோம்.

கடந்த ஆண்டின் இறுதி வரையில் மொத்தம் 570 மில்லியன் டொலரை இலங்கைத் தீவகத்திற்கு வழங்க அமெரிக்கா முன்வந்தது.
மூன்று மீன்பிடித் துறைமுகங்களை சீரமைக்கவும் 14 தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றை உருவாக்கவும் அமெரிக்கா முன்வந்தது.
அத்துடன் கடலோர சுற்றுலா விடுதிக் கட்டுமானங்களையும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 விளையாட்டு மைதானங்களையும் உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது என்றார் அவர்.
நன்றி: புதினம்
Reply
#28
விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாக கூறவில்லை: இந்தியா விளக்கம்

இலங்கைத் தீவக ஆழிப்பேரலை மீளமைப்பிற்கான பொதுக்கட்டமைப்பில் சிறீலங்கா அரசுக்கு சமநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இடம்பெறுவதை இந்தியா எதிர்க்கிறது என்று வெளியான செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.

சிறீலங்காவிற்கான இந்தியத் தூதரக அதிகாரி நக்மா மாலிக் இதைத் தெரிவித்தார்.

புதடில்லியல் இந்திய வெளியுறவுத் துறைச்; செயலர் சியாம் சரணுக்கும் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கு இடையே நடந்த பேச்;சுகளின் போது பொதுக்கட்டமைப்பு அமைக்கப்படுவதில் இந்தியா உடன்படுவதாகவும் ஆனால் அதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கைத் தீவில் மேலாதிக்கம் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இச்செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் நம்கா மாலிக் கூறினார்.

சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகாவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகே பொதுக்கட்டமைப்பு குறித்த தனது நிலையை இந்திய அரசு தெரிவிக்கும் என்றும் இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: புதினம்
Reply
#29
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/May/14/moo.gif' border='0' alt='user posted image'>
நன்றி: தினக்குரல்
Reply
#30
இந்தியா பற்றிய குளப்பமான கருத்தோட்டங்களுக்கான அடிப்படை காரணக்கள் , எமது இந்தியா பற்றிய புரிதலில் இருந்து ஊற்றெடுக்கிண்றன.

1)இந்தியா என்பது, தேசிய இனங்களிலால் ஆன ஓர் கூட்டமைவு.

2)இத் தேசிய இனங்களை அடக்கி ஆள்வது ,மத்தியில் உள்ள ஆளும் கும்பல்.

3)அடக்கி ஆளப்படும் இத்தேசிய இனங்களின் விடுதலைக்கு வித்திடக்கூடிய கோட்பாடக சுயனிர்ணயம் விளங்குகிறது.

4)இச் சுயணிர்ணய கோட்பாடானது, ஈழ விடுதலைப்போரட்டத்தின் அடி நாதம் ஆக விளங்குகின்றது.

5)ஈழப் போராட்டமானது அடக்கபட்டுள்ள இத் தேசிய இனங்களை எழுச்சி நிலைக்கு இட்டுச் செல்லவைக்கக்கூடியது என இந்திய அரசானது
அச்சம்கொண்டுள்ளது.

6)வெற்றியடைந்து கொன்டிருக்கும் ஈழ விடுதலைப்போரை ,அனைத்து வழிகளிலும் முடக்க இந்திய பிராந்திய வல்லருசு முயலும்.

7)இத் தலைஈட்டை நாம் எவ்வாறு புறம் தள்ளுகுறோம் என்பது எமது அரசியல் மற்றும் இராணுவ முனைப்புக்களில் தங்கி உள்ளது.

8)இந்தியாவில் உள்ள எம் நேச சக்திகளை வளர்த்தெடுத்து அவர்களினூடக இந்திய மக்களிடை எம் போரட்டத்தின் நியாயங்களை எடுத்துரைத்தல்.

9)இன்னொரு இந்திய இரானுவ தலையீட்டை எதிர்பாத்து, எமது இரானுவவூயுகங்களை வடிவமைத்தல்.

10)இந்திய வல்லாதிக்க அடிவருடிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.

11)அரசியல்ரீதியாக இந்திய மேலாதிக்க முனைவுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.

12)குறிப்பாக கிழக்கில் மையம் கொண்டிருக்கும் இந்திய நகர்வுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.

13)இந்தியா வடக்கையும்,கிழக்கையும் பிரதேசவாதத்தால் பிருத்து தமிழீழத்தை துண்டாட முனைகிறது.
.
Reply
#31
சேது சமுத்திரத்திட்டம்: பின்னணி என்ன?

-தெய்வீகன்-


ஓவ்வொரு நாடும் தாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஏற்ப தமது படைவலுவில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் நேச நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்து கொள்வதும் ஆயுதக்கொள்வனவுகளை மேற்கொள்வதும் வழமையாக நடைபெற்றுவரும் இராணுவ சம்பிரதாயங்கள். அதாவது தமது எதிரிக்கும் தமக்கும் இடையிலான இராணுவ சமநிலையை குலைத்து அதன்மூலம் தமக்குரிய சாதகத்தன்மைகளை விரிவாக்கிக்கொள்வதுதான் இத்தகைய நடவடிக்கைகளின் மறைமுகத்தத்துவம்.

இத்தகைய படைவலு விரிவாக்கல் நடவடிக்கையில் ஒவ்வொரு நாட்டினதும் கடற்படை பாரிய பங்களிப்பு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்காகவே உலக நாடுகள் பலவும் கடலாதிக்கத்தை கையகப்படுத்திக்கொள்வதில் தத்தமது பிரதேசங்களில் அயல்நாடுகளிடமிருந்தும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடமிருந்தும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன. வெறுமனே எல்லைகள் மாத்திரம் நாட்டின் வேலிகளாக அமைகின்றபோதும் கடல் எல்லைகள் அதன் இருப்பை மேலும் உறுதி செய்கின்றன.

சர்வதேச தொடர்பாடல் மிக்க கடற்பரப்பை தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருக்கும் நாடுகள் பொருளாதார ரீதியில் கேந்திரத்தன்மையை பெற்றுக்கொள்வதுடன் வெளிநாடுகளின் பாதுகாப்பு கூட்டுறவுகளுக்கு பங்காளிகளாகவும் மாறி தமது இருப்பை உறுதிசெய்துகொள்கின்றன. உலக நாடுகளில் பெரும்பாலானவை இதற்கு விதிவிலக்கானவை அல்ல.

இந்த வகையில் இந்து சமூத்திர பிராந்தியம் உலகின் பார்வையில் மிகமிக முக்கியமான ஒன்று என்பதில் இரண்டாம் கேள்விக்கு இடமிருக்க முடியாது. சர்வதேச வர்த்தகத்தில் சரக்குகளை கொண்டுசெல்லும் அரைவாசி கொள்கலன்கள் இந்து சமுத்திரத்தின் வாயிலாகவே செல்கின்றன.

தெற்காசியாவின் பொருளாதாரப்புலியான சீனாவின் எண்ணைத்தேவையில் சுமார் 60 வீதமும் ஜப்பானின் எண்ணைய்த்தேவையில் 80 சதவீதமும் இந்து சமூத்திரத்தின் ஊடாகவே அந்நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சுருங்கக்கூறினால் தெற்காசிய நாடுகளுக்கான அனைத்து எண்ணைய்க்கப்பல்களும் மத்திய கிழக்கலிருந்து புறப்பட்டு இந்து சமுத்திரத்தின் வழியாகவே செல்கின்றன. உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியானவர்கள் இந்தப்பிராந்தியத்திலேயே வாழ்கின்றனர்.

இந்து சமுத்திரத்தின் பொருளாதார ரீதியான முக்கியத்துவம் இவ்வாறு ஒருபுறமிருக்க இதன் கேந்திர முக்கியத்துவம் தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுக்கான சிறந்த களமாக அமைந்துள்ளது என்பது இன்னொரு முக்கியவிடயம். இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் தெற்காசியாவில் பொருளாதாரம் அணு ஆயுதம் உட்பட பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிகண்டு வரும் நாடுகளை மறைமுகமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய சக்தியை பெற்றுக்கொண்டு விடலாம் என்பதும் அவற்றின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொள்ளலாம் என்பது எழுத்தில் இல்லாத தத்துவம்.

இதன்பொருட்டு இந்து சமுத்திரத்தின் பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியா இந்து சமுத்திரம் என்பது இந்தியாவின் சமுத்திரமே என்ற எண்ணத்துடன்தான் கடந்த காலங்களில் தனது இராஜதந்திர வலைகளை பின்னி வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் இந்த ஏகபோக உரிமைக்கு இடம்கொடுக்க அமெரிக்கா தயாரா என்றால் இந்த கேள்விக்குரிய பதிலில்தான் தெற்காசியாவில் இன்னமும் பல அரசியல் இராணுவ பிடுங்குப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தெற்காசிய நாடுகளிலுள்ள வளங்களை சுரண்டிக்கொள்ளவும் அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் மீட்பர்களாக நுழைந்து பிரச்சினைகளுக்கு எண்ணையூற்றி அதன்மூலம் தனது ஆயுத வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளவும் அணு ஆயுத உற்பத்தி நாடுகளின் மீதான கண்காணிப்பை அதிகரிக்கவும் அவற்றின் இராஜதந்திர நகர்வுகளை நோட்டமிடவும் மற்றும் பல காரணங்களுக்கும் அமெரிக்காவுக்கு இந்து சமுத்திரத்தின் மீதான அழுங்குப்பிடி அவசியமானதாகும். இதன் பொருட்டு இந்தியாவை பகைக்காமல இந்து சமுத்திரத்தில்; படிப்படியாக தனது ஆதிக்கத்தை அமெரிக்கா கடந்த காலங்களில் அதிகரித்து வந்திருக்கிறது. அமெரிக்கா மேற்கொண்ட அரசியல் சாணக்கியம் மிக்க நகர்வுகளும் தந்திரோபாய நடவடிக்கைகளும் இந்து சமுத்திரத்தை விட்டு அதனை நீக்கமுடியாத நிலைக்கு இந்தியாவை இன்று ஆளாக்கிவிட்டது.

இந்து சமுத்திரத்தின் மேற்கு புறத்தில் அரேபியன் கடல் மற்றும் பேசியன் குடா பகுதியிலுள்ள பஹ்ரெய்ன் குவைத் ஓமான் கட்டார் சவூதி அரேபியா ஐக்கிய அரபுகள் இராச்சியம் மற்றும் கென்யா எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பேணிய அமெரிக்கா அவற்றுடன் பாதுகாப்பு உடன்பாடுகளையும் மேற்கொண்டு அவற்றில் சிலதில் தனது படைகளையும் குவித்தது.

அதேபோல இந்த சமூத்திரத்தின் கிழக்கு பகுதியில் சிங்கப்பூர் அவுஸ்திரேலியாää நியூஸிலாந்து தாய்லாந்து ஆகியவற்றையும் தனது நேசநாடுகளாக்கி கூட்டு படைப்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்து சமுத்திரத்தின் இரண்டு பக்கங்களிலும் தனது இருப்புக்களை உறுதி செய்துகொண்ட அமெரிக்கா இந்தசமுத்திரத்தின் நடுவில் டியோ காசியாவில் கால்பதித்து அதனைத் தனது படைகளின் தளமாக்கிக்கொண்டதுதான் அதன்மிகப்பெரிய சாதனை எனலாம். வரலாற்று ரீதியாக எந்த உரிமமும் இல்லாத இத்தீவை கைப்பற்றிய பிரிட்டன் 1966 இல் அமெரிக்காவுடன் சேர்ந்து 50 ஆண்டுகால ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அதன்படி 2017 ஆம் ஆண்டு வரை இரு நாட்டுப்படைகளும் இராணுவ தேவைக்காக அத்தீவைப் பயன்படுத்தலாம்.

அமெரிக்காவை இந்த தளம் அமைக்கவிட்டதுதான் 1966 இல் இந்தியா விட்ட மிகப்பெரிய தவறாகும். பிராந்திய வல்லாதிக்க சக்தியாகத்திகழும் இந்தியாவின் கனவு அன்றே சுக்குநூறாகிவிட்டது. அதன்பின்னர் இடம்பெற்ற பல்வேறு அரசியல் இராணுவ மாற்றங்கள் அனைத்தும் இந்து சமுத்திரத்தை பொறுத்தவரை இந்தியாவுக்கு பாதகமாகவே அமைந்து வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அமெரிக்கா தனது பிடியை மேலும் இறுக்கமாக்கிக்கொண்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் டியோ காசியா தளத்துக்கு இணையான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திருகோணமலை ஆகும். ஆம். தமிழரின் தலைநகரான திருகோணமலையேதான். இதனை கையகப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் அமெரிக்கா மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கைகள் எதுவும் கடந்த காலங்களில் சாதக பலனளிக்கவில்லை.

இந்திரா காந்தி இந்தியப்பிரதமராக இருந்த காலப்பகுதியில்ää திருகோணமலையில் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலிக்கான கோபுரம் அமைக்கும் முயற்சி அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.பி.ஐயின் பின்னணியுடன் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று திருகோணமலையில் எண்ணைய்க்குதங்களை குத்தகைக்கு பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சி எல்லாமே அப்போதைய இந்தியப் பிரதமரால் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டன.

பிற்காலத்தில் ராஜீவ் காந்தி கொலையின் பின்னர் இலங்கை விவகாரத்தை கைகழுவிவிட்ட இந்தியாவின் வெளியேற்றத்தால் இலங்கையில் ஏற்பட்ட ஆதிக்க வெற்றிடத்தை நிரப்ப அமெரிக்கா பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டு வந்தமை ஒன்றும் புதிய விடயமல்ல.

ஆனால் 2002 இல் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமெரிக்க சார்பு நிலை அமெரிக்காவை இயல்பாகவே இலங்கையை நோக்கி பிரத்தியேக ஈர்ப்புக்கு உட்படுத்தியது. அசோக வனத்தில் அனுமன் போல இலங்கை விவகாரத்தில் ஆழக்கால் பதித்த அமெரிக்காவின் செயற்பாடுகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வந்தது.

பலாலி விமான ஓடுதளப்புனரமைப்பு அமைதி முயற்சிக்கான ஆக்கபூர்வ பயணங்கள் என்ற போர்வையில் அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகளின் தொடர் வருகைகள் அவர்களின் திருமலை விஜயங்கள் ஆகிய - இந்தியாவின் பார்வையில் வரம்பை மீறிய சகவாசமாக கருதப்பட்ட - அமெரிக்காவின் நடவடிக்கைகள் முயற்சிகள் ஆகியவை இந்தியாவை அவ்வப்போது உஷாராக்கிக்கொண்டிருந்தன. ஆனால் அண்மையில் விடுதலைப்புலிகளுடனான பொதுக்கட்டமைப்பு யோசனைக்கு அமெரிக்கா தெரிவித்த ஆதரவும் 'விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை அமெரிக்கா என்றுமே எதிர்க்கவில்லை" என்று இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் கிறிஸ்டினா ரொக்கா தெரிவித்த கருத்தும் இந்தியாவை இலங்கை விடயத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளிவிட்ட காரணிகளாகவே கருதவேண்டியுள்ளன.

அமெரிக்கா இலங்கையில் கொண்டுள்ள உடும்புப்பிடியை இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தளர்த்திக்கொள்ளலாம் என்று இந்தியா போட்ட கணக்கு கடந்த காலங்களில் சரிவரவில்லை. தி.முக. பா.மக. ம.தி.மு.க போன்ற ஈழத்தமிழர் ஆதரவுக்கட்சிகளின் பலத்தில் ஆட்சியமைத்துக்கொண்டு அவற்றின் எதிர்ப்பை மீறி இலங்கை அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ள முடியாது என்ற யதார்த்தத்தை இந்திய அரசு ஆத்மார்த்தமாக புரிந்து வைத்திருக்கிறது.

இவ்வாறிருக்கையில் அமெரிக்க ஆதிக்கப்பிடியை தளர்த்தி இலங்கையை தனது உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவருவதற்கு இந்தியா கையிலெடுத்திருக்கும் கடைசி துருப்புச்சீட்டுத்தான் சேது சமுத்திரத்திட்டம்.

1860 ஆம் ஆண்டு கப்டன் டெய்லர் என்பவரால் முன்மொழியப்பட்ட இந்த சேது சமுத்திரத்திட்டத்தை சுமார் 145 வருடங்களுக்கு பிறகு இன்று தனது இராஜதந்திர தேவைக்கான கைத்தடியாக தூக்கியிருக்கிறது இந்தியா.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் கடந்த வாரம் இந்திய அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. சேது சமுத்திரத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கொழும்பு காலி மற்றும் தென்னிலங்கை துறைமுகங்களுக்குரிய சர்வதேச முக்கியத்துவம் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் அலறிய இலங்கை அரசின் எதிர்ப்பையும் மீறி திட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த இந்தியாவின் அரசு மட்ட காரியங்கள் ஜரூராகியிருக்கின்றன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி அமெரிக்கா மீதான தனது பாய்ச்சலை நேரடியாக காண்பிக்காமல் இன்னொரு வழியாக அதை நெறிப்படுத்திய இந்தியாவின் காய்நகர்த்தல்கள் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளை இலக்கு வைத்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடல் தொடர்பை கொண்ட பல நாடுகளுக்கு மத்தியில் உலகிலேயே கடற்படையை கொண்ட ஒரே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு விடுதலைப் புலிகள். இந்த அமைப்பு போரிடும் தாயகப்பிரதேசம் இந்து சமுத்திரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுடன் கடல்தொடர்புகளை கொண்டிருப்பதுடன் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட சர்வதேச துறைமுகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை தெரிந்ததே. இந்து சமுத்திரத்தின் மத்தியில் இவ்வாறு ஒரு புரட்சி அமைப்பொன்று கடற்படை வலுவுடன் வளர்ச்சி பெறுவது பிராந்திய சக்தியாக துடிக்கும் இந்தியாவுக்கு ஜீரணிக்கக்கூடிய ஒன்றா?

தற்போது இழுபறிப்படும் பொதுக்கட்டமைப்பு அமைக்கப்பட்டுவிட்டால் அடுத்து விடுதலைப் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை பற்றிய பேச்சு ஆரம்பிக்கும். அமெரிக்காவின் அழுத்தம் இலங்கை அரசை இது விடயத்தில் புலிகளிடம் அடிபணிய வைத்துவிட்டால் அந்த அதிகாரசபையின் அனுபந்தங்களின் படி வடக்கு கிழக்கின் கடல்வளம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதுவரை பார்த்திருந்தால் அயலில் உள்ள ஆபத்து நாட்டுக்குள்ளும் வந்துவிடும் என்றஞ்சிய இந்தியா காரியத்தில் இறங்கியது.

;'விடுதலைப் புலிகளின் கடற்படையால் இந்தியாவின் இறைமைக்கு ஆபத்து. தற்போது அவர்கள் வான்படையையும் அமைத்துவிட்டார்கள். அது இந்தியாவுக்கு மேலும் ஆபத்து" என்ற கோஷங்களுடன் இந்தியா இலங்கையை நோக்கி சேது சமூத்திரத்திட்டம் என்ற பெயரில் மறைமுக இராணுவக்கரங்களை விரித்துள்ளது.

புலிகளின் கடற்படைää வான்படை அணிகள் ஆகியவை இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டவை. ஆனால் அவற்றால் தற்போது தான் தனக்கு ஆபத்து வந்துவிட்டது என்று அறிக்கை விடுத்திருப்பதன் மூலம் இந்தியா தனது உள்ளார்ந்த நோக்கத்தை புலப்படுத்திவிட்டது.

சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மன்னார் ஊர்காவற்றுறை காங்கேசன்துறை பருத்தித்துறை ஆகிய தமிழீழத்தின் துறைமுகங்கள் சர்வதேச தொடர்புகளை பெறவாய்ப்புண்டு. அதுவும் இந்தியாவின் நேரடித்தொடர்பை இவை பெற்றுக்கொள்ளும். இவற்றை புனரமைக்கும் திட்டத்துடன் இந்தியா இலங்கை அரசை அணுகியிருக்கிறது. முதலில் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து அமெரிக்கப்பிடியை கழற்றுவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள இத்திட்டம் அதன் பிராந்திய இராணுவச் சமநிலையில் எவ்வாறான மாற்றத்தை கொண்டுவரப்போகிறது?

அமெரிக்காவை இலக்கு வைத்து இந்தியா ஆரம்பித்துள்ள இந்த நகர்வு இந்து சமுத்திரத்தின் சிறந்த கடற்படையான ஜப்பான் மற்றும் சீனா ஆகியவற்றால் எத்தகைய சவால்களை சந்திக்கப்போகிறது?

இயல்பு நிலையே தோன்றாத தமிழர் பகுதிகளில் இப்படியான பாரிய பொருளாதார அபிவிருத்தித்திட்டங்கள் எத்தகைய பலனுக்கு வித்திடவுள்ளன?

இந்தியாவின் இந்த நகர்வுக்கு அமெரிக்காவின் பதில் நடவடிக்கை என்ன? ஆகிய கேள்விகள் இத்திட்டத்தின் பின்னணியில் இன்னமும் தொக்கி நிற்கின்றன.
நன்றி: தமிழ்நாதம்
Reply
#32
இந்தியாவே தமிழரின் முதற் பகைவன். தமிழர் இந்தியாவின் ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கவுடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்
Reply
#33
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமெரிக்காவில் அவசர கூட்டம்: ஸ்ரீலங்காவிற்கு அழைப்பில்லை!!


இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்கத் தலைநகர் வோசிங்டனில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் நிக்பான்ஸ் இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி நோர்வேயின் பிரதி வெளி விவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

2003ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ மாநாட்டின் பின்னரே இந்த உதவி வழங்கும் நாடுகளின் தலைவர்களின் சபை நியமிக்கப்பட்டது. பொதுக்கட்டமைப்பு சமாதான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் என்பன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12ம் திகதி நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறிலங்கா அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட மாட்டாது எனத் தெரியவருகின்றது.

-சங்கதி
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)