Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நில்லாமல் வா நிலாவே...! பகுதி-03
#1
[size=18]<b>நில்லாமல் வா
நிலாவே...!</b>


பகுதி-03


உலகில் உள்ள எல்லா...
உயிரினங்களும்
அறிமுகமாகும்போதே
பிரிவு என்ற
எல்லைக்கோட்டை வைத்தே...
அறிமுகம் ஆகின்றன...!

ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்
எல்லாமே பிரிந்துபோய்விடும்
அப்போதுதான்
மனது....
தாங்கமுடியாத கொடிய
மரண வேதனையைக் கொடுக்கும்
இதயத்தை...
இந்தப் பிரிவு என்ற
கொடிய தீ எரிக்கும்...!
நெஞ்சம் அழும்...!

வாழ்க்கையில் எத்தனையோ
அறிமுகங்கள்...!
எத்தைனையோ பிரிவுகள்....!
வீட்டைப்பிரிந்து
நாட்டைப்பிரிந்து
நண்பர்களைப் பிரிந்து
நண்பிகளைப் பிரிந்து
காதலைப் பிரிந்து
பள்ளியைப் பரிந்து
ஆசிரியரைப் பிரிந்து
இப்படியாக...
எத்தனையோ
பிரிவுகளுக்கூடாக
எத்தனையோ தடவை
என் மனம் மரணித்து
இன்று...
இவள் முன்னாலே நிற்கிறது...!
ஒரு நாள் இவளிடம் இருந்தும்
பிரியவேண்டிவரும் என்ற
இலக்கணத்தோடு...!!!

இந்த இளய நிலவைப்பற்றி
எனக்குள்ளே ஏற்கனவே
ஒரு அறிமுகம்....!
அது...
என் நெஞ்சுக்குள்
ஓவியமாக வரையப்பட்டு
பிரிக்கமுடியாத பசையால்
ஒட்டப்பட்டபின்...
கிழிக்கமுடியாதபடி
ஆணிகளால் அறையப்பட்டு
அதன் பின்
அவிழ்க்கமுடியாதபடி...
கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது...!

அவள்...
ஒரு யுகத்திற்கு
ஒரு முறை அவதரித்து
எனக்காகவென்றே...
பிரமதேவனால் சின்னப் பிறையாக
அனுப்பிவைக்கப்பட்டு
மண்ணில் வந்த
கறுப்பு நிலவாக...
வளர்ந்துவருகிறாள்....
"பகல்நிலா" என்ற பெயரோடு...!
இது
எனக்குள் இருக்கும்
அறிமுகம்...!

அவள்...
தன்னைப் பற்றி எனக்காகக்
கூறும் அறிமுகம் என்ன..?

தாயகத்தில் பிறந்து
தாய்மடியில்த் தவழ்ந்து
தங்கத்துக்குரிய
தன்மையைக்கொண்ட
தமிழ்மொழியைப் படித்து
மணம்வீசும் மலர்போன்ற
விழிகொண்ட மங்கை
'''மதனா'' என்ற பெயரோடு
இந்தப் புலம்பெயர் மண்ணில்
நடமாடுகிறாள்...!

ஆகா..................
அவள் பெயரைக்கேட்டாலே
அதிலிருந்து ஆயிரம்
கவிதைகள் பிறக்கிறதே.....!
இப்போது...
என் நஞ்சில் வரையப்பட்ட
அந்த...
காதல் ஓவியத்தின் பெயர்
கொஞ்சம் மாறுகிறது....
பகல்நிலா அல்லா...!
மதனநிலா....!!!


(நிலவு வரும்...)

த.சரீஷ்
17.09.2003 (பாரீஸ்)
sharish
Reply
#2
வணக்கம்
அன்பு நண்பன் த.சாPசின் ஆக்கம் நில்லாமல் வா நிலாவே ! அருமையாக இருக்கின்றது. ஏக்கங்களை உள்ளே சுமந்துசெல்கின்றுது. வாழ்த்துக்கள்.
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)