09-12-2003, 11:23 AM
<b>நிழல்பட(புகைப்பட) கலஞரின் அனுமதியின்றி சில புகைப்படங்களை வெளியிட்ட லேக்ஹவுஸ் நிறுவனம் அக் கலைஞருக்கு 10லட்சம் ரூபா நஸ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு.</b>
<img src='http://www.yarl.com/forum/files/1983.jpeg' border='0' alt='user posted image'>
இலங்கையின் புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான சந்திரகுப்த அமரசிங்க 1983ம் ஆண்டு கறுப்பு ஜுலை கால கலவர சமயத்தில் எடுத்த புகைப்படங்களை 1997ம் ஆண்டு ராவய எனும் இடதுசாரி பத்திரிகையில் வெளியிட்டிருந்தார். இவற்றை 1999ம் ஆண்டு அவரது அனுமதியின்றி மறுபிரதி செய்த லேக்ஹவுஸ் நிறுவனம் தமது தினமின மற்றும் Daily News பத்திரைகைகளில் வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நஸ்ட ஈடாக 10லட்சம் ரூபாவை வழங்க உத்தரவிட்டது.
அவர் இது தொடர்பாக பேசும் போது எண்ணற்ற கலைஞர்களது படைப்புகள் அவர்களது பெயர்கள் குறிப்பிடப் படாமலே சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன என்றும், இது ஒரு மாபெரும் பகற் கொள்ளை என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஒரு சிலர் மிகவும் சிரமப்பட்டுத் தேடிக் கொள்ளும் அல்லது தயாரித்து அனுப்பும் செய்திகள் மற்றும் படைப்புகள் சில ஊடகங்கள் அவற்றில் உள்ளவர்களது பெயர்களில் வெளியிட்டு சம்பந்தமே இல்லாத இவர்கள் புகழ் தேடிக் கொள்கிறார்கள் என்றும் தமது விசனத்தை தெரிவித்தார்.
இப்படியான நடவடிக்கைளுக்கு மௌனம் சாதிக்காது போராடியதால் கிடைத்த தமது வெற்றி ஏனைய கலைஞர்களுக்கு <b>விழிப்பு</b> உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடுகிறார்.
Thanks:BBC & REUTERS