05-05-2005, 12:09 AM
<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>
<b>கண்ணீர் கண்களுடன் அதிகம்
பேசுகிறது..??
காரணம் தெரியாது.
வேற்று உலகம்
வேறுபட்ட மனிதர்கள்.
பிடிக்காமல் போனபோது.
தெரியாத மாற்றங்கள்
இப்போது தெரிகிறது.
பாரமான கல் ஒன்றை
நெஞ்சம் சுமக்கிறது.
புரிகிறது.
கண்களை தண்டி
கன்னம் கழுவிச்செல்லும்
கண்ணீர் துளிகளில்
சுகம் இருப்பது
தெரிகிறது.
இரத்த நாளங்களும்
இதயத்துடிப்பும்
இயங்குவது
பெரிதாய் தெரிகிறது.
இவைகள் எனக்கு
பாரமாய் தெரிவதால்
நின்றுவிட்டால் விடியல்
வரும் என்ற எண்ணமும்
இடைக்கிடை வந்து போகாமல்
இல்லைத்தான்.
வாழ்க்கைக்கான தேடலுக்காய்
இடைவெளியில்லாத
ஓட்டம்
ஓடி ஓடி களைத்து விட்ட
உள்ளம் தான் சொல்கிறது.
போதும் இனியென
செல்லரித்துப்போனபின்னும்
கல்வெட்டுக்களாய் மாறிவிட்ட
நினைவுகள்.
சோகமான ராகம் மீட்டினாலும்
எங்கோ சுகமாயும் தெரிகிறது.
அந்த தழுவலில் தான்.
கண்ணீர் பேசுவதும் புரிகிறது.
பல ஜென்ம பாவம்.
என்னைச்சுற்றி ஏனோ..
சிறந்த உள்ளங்கள்.
என்னால் முடிந்தது.
துன்பங்கள் தான்
அவர்களிற்கு.
ஆறாய் அருவியாய்
வத்தாது பெருக்கெடுத்து வரும்
அன்பு வெள்ளத்தை நான்
அறியாமல் இல்லை..
அதில் மூழ்கிடும்
தகுதியும் எனக்கில்லை.
ஒன்றாய் இரண்டாய்
நினைவுகள் சுமந்த இதயம்
புதிசாய் எதையும் ஏற்றிட துணியவில்லை
மீண்டும் மீண்டும் துரோகங்கள்
வேண்டாம்
செதுக்காத கற்சிலையானாலும்
ஈரம் என் நெஞ்சில் இருப்பதால்
இன்றே தொலைந்து போகிறேன்.
நினைவுகள் மட்டும்.
என்னுடன் கூட வர...
அதிசய இராகங்கள்
மீட்டிடும் வீணையாய்
அது மட்டும் போதும் என
அதே இதயம் சொல்லிட
எங்கோ தொலைந்து போகிறேன்.....!</b>
யாவும் கற்பனை..
<b>கண்ணீர் கண்களுடன் அதிகம்
பேசுகிறது..??
காரணம் தெரியாது.
வேற்று உலகம்
வேறுபட்ட மனிதர்கள்.
பிடிக்காமல் போனபோது.
தெரியாத மாற்றங்கள்
இப்போது தெரிகிறது.
பாரமான கல் ஒன்றை
நெஞ்சம் சுமக்கிறது.
புரிகிறது.
கண்களை தண்டி
கன்னம் கழுவிச்செல்லும்
கண்ணீர் துளிகளில்
சுகம் இருப்பது
தெரிகிறது.
இரத்த நாளங்களும்
இதயத்துடிப்பும்
இயங்குவது
பெரிதாய் தெரிகிறது.
இவைகள் எனக்கு
பாரமாய் தெரிவதால்
நின்றுவிட்டால் விடியல்
வரும் என்ற எண்ணமும்
இடைக்கிடை வந்து போகாமல்
இல்லைத்தான்.
வாழ்க்கைக்கான தேடலுக்காய்
இடைவெளியில்லாத
ஓட்டம்
ஓடி ஓடி களைத்து விட்ட
உள்ளம் தான் சொல்கிறது.
போதும் இனியென
செல்லரித்துப்போனபின்னும்
கல்வெட்டுக்களாய் மாறிவிட்ட
நினைவுகள்.
சோகமான ராகம் மீட்டினாலும்
எங்கோ சுகமாயும் தெரிகிறது.
அந்த தழுவலில் தான்.
கண்ணீர் பேசுவதும் புரிகிறது.
பல ஜென்ம பாவம்.
என்னைச்சுற்றி ஏனோ..
சிறந்த உள்ளங்கள்.
என்னால் முடிந்தது.
துன்பங்கள் தான்
அவர்களிற்கு.
ஆறாய் அருவியாய்
வத்தாது பெருக்கெடுத்து வரும்
அன்பு வெள்ளத்தை நான்
அறியாமல் இல்லை..
அதில் மூழ்கிடும்
தகுதியும் எனக்கில்லை.
ஒன்றாய் இரண்டாய்
நினைவுகள் சுமந்த இதயம்
புதிசாய் எதையும் ஏற்றிட துணியவில்லை
மீண்டும் மீண்டும் துரோகங்கள்
வேண்டாம்
செதுக்காத கற்சிலையானாலும்
ஈரம் என் நெஞ்சில் இருப்பதால்
இன்றே தொலைந்து போகிறேன்.
நினைவுகள் மட்டும்.
என்னுடன் கூட வர...
அதிசய இராகங்கள்
மீட்டிடும் வீணையாய்
அது மட்டும் போதும் என
அதே இதயம் சொல்லிட
எங்கோ தொலைந்து போகிறேன்.....!</b>
யாவும் கற்பனை..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->