Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மழலையின் குரல்!
#1
நான் எழுதலைங்க..ஆனா என் குரல் இருக்குCry Cry Cry

பள்ளி விட்டுத் திரும்பியதும்
முத்தமொன்று தர
என் தக்காளிக்கன்னம் தேடி அலையும்
அக்காவின் அன்புக்குரல்
தீனமாய்க் கேட்கிறதே!

கையில் லாலிபாப்புடன்
வேலை முடிந்த வரும் அப்பா என்னை
பாப்பு என அழைக்கும்
பாசம் குழைத்த குரல்
அலையோசனையையும் மிஞ்சிக் கேட்கிறதே!

தொட்டிலில் தூங்கிடும் தம்பியை
அழாமல் பார்த்திட
என் அம்மா என்னை
கொஞ்சி அழைப்பதும்
தூரமாய் கேட்கிறதே!

என்னுடன் ஓடி விளையாட
பணிமுடியுமுன்னே ஓய்வுபெற்ற
பாசமுள்ள என் தாத்தா
பரமபதம், பாண்டியுடன்
அன்புடனேஎனை அழைப்பதுவும்
லேசாக என் காதில் விழுகிறதே!

காலையில் தோன்றிடும் சூரியனை
பக்திப் பணிவுடன் நான் வணங்க
நித்தம் உனை நோக்கி எனை நிறுத்தும்
என் ஆசைப் பாட்டியின் கணீர்க்குரல்
ஏனோ, சோகமாய் இன்று ஒலிக்கிறதே!

நாளை, என் நாலாம் பிறந்த நாளாம்
அம்மா சொன்னாங்க.
புதுச்சட்டை, பூவுடன், சடை பின்னிக்கட்டி
கோவிலுக்கு சென்று வந்த பின்னர்
கலர், கலராய் பலூன்கள் ஊதிக் கட்ட
விரைந்து நான் வீட்டுக்குப் போக வேணும்!

பாட்டியும், தாத்தாவும் தரும்
ஆசை முத்தம் எனக்கு வேணும்.
முட்டாயும், அம்மா செய்த அதிரசமும்
பக்கத்து வீட்டு கிச்சாவுக்கும்
எதிர்வீட்டு மீனாவுக்கும்
நானே கொண்டு கொடுக்க வேணும்!

நீயும் ஒரு தாய தான் என்று
முன்னர் என் தாய் சொன்ன குரல் நீ கேட்டு
இன்று, என்னையேவாரி இழுத்தணைத்து
உன் சேயாவே ஆக்கிவிட்ட
கடல் அம்மாவே,
கெஞ்சிக் கேட்கிறேன் உன்னிடம்.
யாரோ, உயிர் பறிக்கும் காலனாமே
அவனை, உன் அலைக்கைகளால்
காததூரம் தள்ளி விடு.
என் பெற்றோரும், உற்றாரும்
மகிழும் வண்ணம்
மீண்டும் என் தாயிடமே
என்னைக் கொண்டு சேர்த்து விடு!

_தார்சி எஸ்.பெர்னாண்டே

நன்றி: குமுதம்
" "
" "

Reply
#2
மழலையே சுட்டுப் போடும் அளவுக்கு மழலைக்கு தான் செய்யுறதுகள் ஞாபகம் இல்லையோ...! சுட்ட கவிதை நன்று...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குருவி அண்ணா உண்மையா அது என் கவிதையில்லை...மழலை கவிதை அதனால சுட்டுட்டன்....எழுதினவங்க யாரோ, நல்லா எழுதியிருக்கிறாங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#4
சொல்ல வார்த்தை இல்லை இங்கே
குளமல்ல அது என் கண் Cry Cry Cry

!
Reply
#5
நல்லாய் இருக்கு யாரே அனுபவிச்சு எழுதியிருக்காங்களோ..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
Quote:யாரே அனுபவிச்சு எழுதியிருக்காங்களோ

அதெப்படி முடியும் தமிழினி !
கவிதை இறந்து போன ஒரு குழந்தையின் வார்த்தைகளல்லவா.

!
Reply
#7
வாழத்துக்கள் செல்லம் இன்றைக்கு யாழ்களம் செல்லத்தின்ரை கைவண்ணம்தான்
கீப்பிற் அப்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#8
Quote:அதெப்படி முடியும் தமிழினி !
கவிதை இறந்து போன ஒரு குழந்தையின் வார்த்தைகளல்லவா.
_________________
குழந்தை பேசிறமாதிரி தானே.. இருக்கு..?? குழந்தையாய் தன்னை உருவகித்து.. அதை அனுபவித்து எழுத முடியாதா என்ன..?? அப்படி எழுதியிருக்காட்டால்.. அதை நீங்கள் அனுபவிச்சு வாசிச்சதால தான் குளம் அல்ல என் கண்கள் என்று.. கண்ணீரும் விட்டதாய்.. படம் போட்டிருக்கிறியள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
Quote:வாழத்துக்கள் செல்லம் இன்றைக்கு யாழ்களம் செல்லத்தின்ரை கைவண்ணம்தான்
கீப்பிற் அப்.
வணக்கம் அண்ணோய்.....மோகன் அண்ணா யாழை இன்றைக்கு மட்டும் தந்து இருக்கிறார்..(மோகன் அண்ணா கண்டுக்காதைங்க..சும்மா பீலா விடுறன்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .......அது தான் அழகாக்கியிருக்கு..நன்றியண்ணா ..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#10
Quote:சொல்ல வார்த்தை இல்லை இங்கே
குளமல்ல அது என் கண்
மழலையின் நிலை இது தான்.....
" "
" "

Reply
#11
ஆங்கிலத்தில feel பண்ணி என்பார்களே அந்த அனுபவிப்பா?அப்பசரி.. :wink: :wink: :wink:

!
Reply
#12
என்ன அழுத மாதிரி இருக்கு அதுக்குள் சிரிக்கிறியள்....
" "
" "

Reply
#13
சுட்ட கவிதை நன்றாக இருக்கிறது நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)