Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<img src='http://www.turtletrack.org/Issues01/Co07142001/Art/cherokeerose.jpg' border='0' alt='user posted image'>
உங்கள் எண்ணத்தில்
உதித்திடும்.
வார்த்தைக்கு
வண்ணம் கொடுத்து.
கவியால் பேசுங்கள்.
அரட்டையானாலும்
கவித்துவமாய் அமையட்டும். :wink:
(இந்தப்படத்தைப்பாக்கையில் என்னதோன்றுது.)
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கடந்ததுகள்
நினைவாக
தாய்மையின்
பரிசுக்கு
பத்திரந்தேடி
தன்னையே
காப்பரணாக்கும்
அன்னை..!
அவள் பாசத்
தொடுகைக்குள்
ஆயிரம் கனவுகளுடன்
பிஞ்சு
கண்மூடிக் கனவு
வளர்க்கிறது...!
கனவுகள்
நனவாக
உலகமே
உன் கரம் கொடுத்திடு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கண்ணாய் காத்திடு
கட்டியும் அணைத்திடு
காளையானால்
நாளையிது காலைவாரிவிட்டு
கடமையென உன்னை
முதியோர் இல்லம் சேர்க்கும்.
கன்னியானால் கண்ணீர்
ஆறாய் குளமாய்
கண்ணில் பெருக
கணவன் என்ற பெயரில்
இன்னொருவன் கைப்பிடிக்கும்.
பத்தே மாசம்
குந்திட இடம்
இலவசமாய் கொடுத்தாய்
கடைசில் உனக்காய்
இலவசமாய் பெட்டி தயாராகலாம்
அநாதை என்னும் பெயரில்....!
தெரிந்து கொள் :? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 536
Threads: 19
Joined: Jan 2004
Reputation:
0
தூங்கடா மகனே..... தூங்கு....!!
போர் படிந்த மார்பிலே
நீ குடிக்க பாலில்லை
தோளிலே தூங்க வைக்க
தேசம் காத்த உன் தந்தை இல்லை
தூங்கடா மகனே.... தூங்கு.....!!!!
விடிலை விழுங்கிய எம் இரவுகளின்
வரலாறு சொல்வேன் கேளடா......
நிலத்தின் களங்கம் துடைத்த
நித்திய காவலரின்
கதைசொல்வேன் கேளடா....
இதுதான் வாழ்க்கையென
அர்த்தமற்று வாழ்ந்தோமடா
விடுகதைக்கு விடைகாண
விடுதலை பெறவேண்டுமென
வீரமகன் வந்தானடா....
வீறு கொண்டவனது வீரப்படை
வெற்றி கொண்ட வரலாற்றை
காதோரம் பாடிட காலம் போதாதடா....
ஆனாலும்...
நாளை வரும் விடுதலை என
நம்பி;(க்) கை நீள்கிறது...
எம் காலம் கிடைகுமாவென
ஆதங்கம் சேருது....
முழித்திருக்கும் உன் தேவை
எதிர்காலம் வேண்டிடும்
இன்று மட்டும்....
அமைதியா தூங்கடா... என் மகனே...!!!
:: ::
-
!
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
தாய்மை தரும் உள்ளத்தை
என் தாயவள் என்ளை சுமக்கையில்
அறிந்திருக்கமுடியவில் அன்று...!
இன்று உன்னை என் தோள் மீது
தூங்க வைக்கிறேன் கண்ணே
என் தாய் என் கண்முண்னே...!
அன்றைய தாய்மையை
உணர வைத்தவன் நீ
என் பாச பைங்கிளியே.....!
உன்னை என்னுடன்
அரவணைக்கையில்
ஆயிரம் மலர்கள் என்
மனதில் பூத்துக்
குலுங்குகிறனவே....!
" "
" "
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:கண்ணாய் காத்திடு
கட்டியும் அணைத்திடு
காளையானால்
நாளையிது காலைவாரிவிட்டு
கடமையென உன்னை
முதியோர் இல்லம் சேர்க்கும்.
கன்னியானால் கண்ணீர்
ஆறாய் குளமாய்
கண்ணில் பெருக
கணவன் என்ற பெயரில்
இன்னொருவன் கைப்பிடிக்கும்.
பத்தே மாசம்
குந்திட இடம்
இலவசமாய் கொடுத்தாய்
கடைசில் உனக்காய்
இலவசமாய் பெட்டி தயாராகலாம்
ஆனாதை என்னும் பெயரில்....!
தெரிந்து கொள் :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
காளை
காலையும் வாரான்
முதியோர் இல்லமும் சேரான்
உன் மருவிய மகள்
அவனை வாராவிடில்...!
தாயே பெற்றது
மட்டும் போதாது
உன் மகளே
நாளை மருவிய மகளாயும்
உலகம் துலங்கவும்
வீடுகள் விளங்கவும்
வில்லங்கம் பெருகவும்
காரணமாய்...!
உன் கண்மணி இது
பெண்ணானால்
பாசத்தோடு புத்தியும்
நேசமும் கொடுத்து வள
வாரலும் கண்ணீரும்
பிறரையும் உன்னையும்
நாடா வகை செய்ய...!
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
பெற்றெடுத்த தன் சிசுவை
மார்போடு அணைத்து.
மாதம் பத்தும் என் கருவறையில்
பாதுகாப்பாக இருந்தாய்.
என் மரிக்கொழுந்தே
கொடுமைகள் நிறைந்த
மாபெரும் இவ்வுலகில்
அவதரித்தாய், ஆதலால்
என் மார்பினில் சாந்து ஆழ்ந்து
இன்று மட்டும் தூங்கிவிட்டு.
நாளை நீ அநீதியை எதிர்த்து
போரிட வேண்டும் என
தன் குழந்தையின் எதிர் காலம்
பற்றிய பயத்துடன்
நீண்ட நெடிய வானத்தினை பார்க்கின்றாளோ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=Malalai]தாய்மை தரும் உள்ளத்தை
என் தாயவள் என்ளை சுமக்கையில்
அறிந்திருக்கமுடியவில் அன்று...!
இன்று உன்னை என் தோள் மீது
தூங்க வைக்கிறேன் கண்ணே
என் தாய் என் கண்முண்னே...!
அன்றைய தாய்மையை
உணர வைத்தவன் நீ
என் பாச பைங்கிளியே.....!
உன்னை என்னுடன்
அரவணைக்கையில்
ஆயிரம் மலர்கள் என்
மனதில் பூத்துக்
குலுங்குகிறனவே....!
மகவொன்றைப்
பெற்றிட்ட
பெண்மையின்
நிலையிதுவோ...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
நேற்றிருந்த உன் தந்தை
போர்களத்தில் மடிந்திட்டான்
துணையென நம்பிய உறவுகளும்
வேற்றுவர் ஆகினரே!
நீயும் நானும்..
நிர்கதியாய் மகனே!
எப்படி நீ தூக்குகிறாய் கண்னே!
உனைத் தாங்க என் நெஞ்சுளது
எனைந்தாங் யாருளரோ? -உன்
எதிர்காலம பதில் சொல்லட்டும்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sOliyAn Wrote:நாளை ஒரு காலம் நலமாக விளைய நீயும்
தூங்கடா கண்ணே தூங்கு!
சீட்டுத்தான் போட்டு நீயும்
சீராக வளர்வாயோ?
'டிஸ்கோ'தான் அலைந்து நீயும்
'டிசிப்பிளீனை' மறப்பாயோ?
கோஸ்டிகளாய் மாறி நீயூம்
'கோர்ட்டுக்கு' போவாயோ?
தமிழனையே சுரண்டி நீயும்
தமிழனென்று சொல்வாயோ?
காதல் என்று காலமெல்லாம்
கனவில்தான் வாழ்வாயோ?
மோதல் என்று உருக்குலைந்து
வாழ்தல் என்று நினைப்பாயோ?
தூங்கடா கண்ணே தூங்கு!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வெறும்
காற்றடைத்த பையென்று
நானறிய முதலாய்
பெற்றிட்ட அன்னைக்காய்
பெருந்தவம் செய்யேன்..!
கனவு எனினும்
பெற்ற காதல்
புனிதம் காப்பேன்
உன்னையும் காப்பேன்
அன்னையே உன்
கருவறையில் வாழ்ந்ததற்காய்
இது சத்தியம்
இப்ப என்னை உறங்கவிடு...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்னவென்று சொல்வதம்மா..??
இப்படித்தான் சொல்லிவைப்பான்
காதலினின் புனிதமும் காப்பேன்
உன்னையும் காப்பேன் என..
நம்பிவிடாதே..
கன்னியவள் கைப்பிடித்து விட்டால்
காளையவன்
பொண்டாட்டி தாசனாய் மாறி
உன்னைக்கையேந்தவும் வைக்கலாம்
வார்த்தையைக்கேட்டு மயங்கிவிடாதே..
செய்வதற்கு காரண காரியம்
சொல்வான்.
மருவி வந்த மகள்
செய்துவிட்ட கொடுமையென.
இதுவும் ஒரு பேக்காட்டு.
கவனதம் தாயே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:என்னவென்று சொல்வதம்மா..??
இப்படித்தான் சொல்லிவைப்பான்
காதலினின் புனிதமும் காப்பேன்
உன்னையும் காப்பேன் என..
நம்பிவிடாதே..
கன்னியவள் கைப்பிடித்து விட்டால்
காளையவன்
பொண்டாட்டி தாசனாய் மாறி
உன்னைக்கையேந்தவும் வைக்கலாம்
வார்த்தையைக்கேட்டு மயங்கிவிடாதே..
செய்வதற்கு காரண காரியம்
சொல்வான்.
மருவி வந்த மகள்
செய்துவிட்ட கொடுமையென.
இதுவும் ஒரு பேக்காட்டு.
கவனதம் தாயே.. :wink:
அம்மா நான்
ஊருக்கு
புதிய உலகம் படைக்கவில்லை
எனக்குள்
புதுமைகள் வரவழைப்பேன்
அவை வாழ வாழ்ந்திடுவேன்..!
பொண்டாட்டிதாசன்
அது பழங்காலம்
பொண்டாட்டி ஆகாமல்
கூடி வாழுதல் இந்தக் காலம்
எந்தக் காலமும்
எனக்கு வேண்டாம்
நான் மனித விலங்கல்ல
உன் பிள்ளை
நீ காட்டிய வழியில்
எனக்காய்ப் சமைப்பேன்
தனி விதிகள்...!
மானுட தர்மம் காத்து
ஒழுகுவேன் அவ்வழியே
சான்றேன் என
நீ கேட்க...!
வருந்தாதே அம்மா
என்னைச் சுமந்ததற்காய்
ஏக்கங்கள் உனக்கு
பரிசாக வேண்டாம்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
காத்திரு தாயே..
சான்றோன் எனக்கேக்கிறியா
இல்லை..
நடுவீதியில நிக்கிறியா
என்று.. காலம் பதில் சொல்லும்
எதுக்கும் தூங்க விடு.
இப்போது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:காத்திரு தாயே..
சான்றோன் எனக்கேக்கிறியா
இல்லை..
நடுவீதியில நிக்கிறியா
என்று.. காலம் பதில் சொல்லும்
எதுக்கும் தூங்க விடு.
இப்போது. :wink:
காத்திரம்மா காத்திரு
நாளைய விடியல்
நல்ல செய்தி சேர்க்கும்
உன் செவி...!
அம்மா நான்
தூங்கவில்லை
கண் மூடிப் படிக்கிறேன்
உன் பாசத்தை
உள்ளத்தை
நாளை எனக்குள்
கொள்கை வகுக்க...!
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆஆஆஆ
அம்மா புரிஞ்சு கொண்டியா
உன் மகன் இப்பவே
கதை விடத்தொடங்கிவிட்டான்
இனி இவன் இப்படித்தான்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மன்னிக்கவும் தெரியாமல் வந்துட்டன், :roll: கவிதையெல்லாம் எனக்கு சரிவராது, ஒரு ஓரமாக இருந்து உங்கள் கவிதைகளை ரசிக்க அனுமதிப்பீர்களா?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கவிதை சரிவராது, என்று.. சொல்லாதீங்க.. அம்மாவைப்பற்றி எதுவும் தெரியாதா அதை எழுதுங்க. அது கண்டிப்பா கவிதையாய் இருக்கும். தாராளமாய் ரசிக்கலாம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (இல்லை நாங்க எழுதிறதை எல்லாம் கவிதை என்டிட்டியள் எல்லா பிறகென்ன) <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>