Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய கூத்துக்கள் ஆரம்பம் [இந்திய,அமெரிக்க].
#1
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போக்கினை அமெரிக்கா தற்போது கடைப்பிடித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் கிறிஸ்ரினா ரொக்காவின் இலங்கை விஜயத்தின் போது இந்த நிலைப்பாடு தெளிவாக தென்பட்டுள்ளதாக அவாதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாகவும் ஆனால் விடுதலைப் புலிகள் தமது வன்செயல்களை முற்றாக கைவிட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ரொக்கா குறிப்பிட்டுள்ளார்.

முதல் தடவையாக அமெரிக்கா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்குவதற்கு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளமை விடுதலைப்புலிகள் தொடர்பான அமெரிக்கா நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சமாதான பேச்சுக்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரே குரலில் பேச வேண்டும் என ரொக்கா குறிப்பிட்டுள்ளமை சமாதான முயற்ச்சிகள் ஆரம்பிக்கப்படாமைக்கு அரசாங்கமே காரணம் என்பதை மறைமுகாக சுட்டிக்காட்டுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று தமிழ் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்குரிய ஏற்பாடுகள் உரிய முறையில் அரசாங்க தரப்பால் மேற்கொள்ளப்படவில்லை என்பதை கிறிஸ்ரினா ரொக்கா ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த விடயங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான அம்சங்களாகவே நோக்கப்படுகின்றது.

இலங்கையில் இந்திய புலனாய்வு பிரிவு நேரடியாக தனது செயல்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இநதியா அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
---------------------- ------------------ --------------------------
அரசியல் பாதையில் தொடர்ந்தால் புலிகளுக்கு உதவவும் தயார்: கிரிஸ்ரினா றொக்கா

விடுதலைப் புலிகள் அரசியல் பாதையைத் தொடர வேணடும் அவ்வாறு அரசியல் பாதையில் அவர்கள் தொடர்ந்தால் அமெரிக்கா புலிகளுக்கு உதவி செய்யவும் தயாராகவிருப்பதாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜங்கச் செயலர் கிறிஸ்றீனா றொக்கா தம்மிடம் தெரிவித்ததாக - கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்றுக்காலை அமெரிக்கத் தூதரகத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் கிறிஸ்ரீனா றொக்காவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இந்தச் சந்திப்புக் குறித்து இரா. சம்பந்தன் கருத்து வெளியிடும் போது தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டு வருவதற்கு தற்போதைய பொதுகட்டமைப்பு முறை உதவுமென்று கிறிஸ்னா றொக்கா தெரிவித்தார். ஜே.வி.பி யை பொறுத்தவரையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகம் அறியும். எனவேää அந்த கட்சிக்கு மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை எனத் தெரிவித்த சம்பந்தன்.

கடந்த மூன்று வருடங்களாக போர்நிறுத்த உடன்பாட்டுக்குக் கீழ்; செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டுவருவதற்கான முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென தாம் தெரிவித்த கருத்தை கிறிஸ்ரீனா றொக்கா ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆயுதமேந்திப் போராட வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்ட இயக்கம் - யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி அரசியல் ரீதியாக ­ சமாதானமாக ஒரு தீர்வைக் காண்பதற்கு முன்வருகின்ற வேளையில் மற்றைய தரப்பாகிய இலங்கை அரசாங்கம் அந்த முயற்சியை ஊக்குவிப்பதற்கு எதையும் செய்யாமல் இருப்பதுää புலிகளுக்கு மாத்திரமலல் தமிழினத்துக்கே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் நாங்கள் கூறியபோதுää அவர்கள் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

விடுதலைப்புலிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான ஜே.வி.பி பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதைத் தீவிரமாக எதிர்த்துவருகின்றது. இதனால் உங்களுடைய செல்வாக்கைப் பயன் படுத்தி இந்த பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

சர்வதேச சமூகம் சமாதானப் பேச்சுக்களில் நல்ல வெற்றியைக் காணவேண்டும் என்று விரும்பினால் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்திää புலிகளை பங்காளிகளாக்கி சுனாமி சம்பந்தமான கருமங்களை முன்னெடுப்பதற்கு முயற்சியெடுக்கவேண்டும். இனியும் இதை பின் போடக்கூடாது.

சர்வதே உதவிகள் - ஆரம்பத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன. தற்போது அந்த உதவிகள் வருவது குறைவாக இருக்கின்றது. காரணம் - இந்த பொது கட்டமைப்புஏற்பட்ட பின்னர்தான் எல்லோரும் இந்தக் கருமங்களில் அக்கறை செலுத்தலாம். என கிறிஸ்னா றொக்காவுக்கு எடுத்து கூறியதாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அரசியல் பாதையைத் தொடர்வார்களாக இருந்தால் நாங்கள் விடுதலைப் புலிகளளுக்கு உதவி செய்;யத் தயாராக இருக்கிறோம். நீங்களும் முயற்சியெடுத்து பொதுக்கட்டமைப்பை எந்தவிதத்திலும் ஏற்படுத்தி அவர்கள் அரசியல் பாதையில் செல்லக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதைச் சேர்ந்து இதைச் செய்யக்வேண்டும் என றொக்கா தம்மிடம் தெரிவித்தாக கூறிய சம்பந்தன் தொடர்ந்து தெரிவிக்கையில்

அமெரிக்க பிரதி இராஜங்கச் செயலர் தமிழர்களின் நிலைப்பாட்டை கூடுதலாக புரிந்து கொள்ளக் கூடிய தன்மை உருவாக்கியிருப்பதை இந்தச் சந்த்திப்பின் போது அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகக் தெரிவித்தார்.

நன்றி: சங்கதி
Reply
#2
என்ன அமெரிக்க நீ ரொம்ப பொல்லாதா மோசம்.. :evil: இந்தியன் மாமாக்கள் என்ன கேனையங்களா அவங்களுக்கும் ஆசைதான், ஆனால் றோ தானே அடம்பிடிக்குது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
சோழியன் குடும்பி சும்மா ஆடாது பாருங்கோ
____________________________________________________________
____________________________________________[size=18]''ஆழம் அறியாமல் காலை விடக்கூடாது ''________________
Reply
#4
அமெரிக்கா உண்மையிலே ஈழ்த்தமிழ்களின் மேல் அனுதாபம் கொண்டுள்ளாதா? அல்லது அரசியல் நோக்கம் கொண்டதா. தற்போதுள்ள யுத்த நிறுத்தம்மூலம் விடுதலைப்புலிகள் இலங்கை அரசின் நிஐமான முகத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் அமெரிக்கா புலிகளின் மேல் உந்தப்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிகிறோம். வல்லரசு நாடுகளின் அழுத்தம் இலங்கை அரசை அசைய வைக்கின்றதா? JVP எனும் துரும்பு மூலம் இலங்கை அரசு நழுவ முயற்சிக்கின்றது, ஆதலால் தனித் தமிழ் ஈழத்தை நோக்கி புலிகள் தள்ளப்படுகிறாகள், இதனை வல்லரசு நாடுகள் நிச்சையம்மாக அங்கீகரப்பார்கள்!
Reply
#5
adithadi Wrote:அமெரிக்கா உண்மையிலே ஈழ்த்தமிழ்களின் மேல் அனுதாபம் கொண்டுள்ளாதா?

மற்றவர்களின் அனுதாபத்தையும் உதவியையும் என்றும் எதிர்பார்ப்பவர்களை மற்றவர்கள் மதிப்பது குறைவு. மேலும் அவர்கள் அனுதாபத்தையும் உதவியையும் வழங்கும் போது ஏன் உனக்கு எங்கள் அனுதாபம் தேவை? எங்கள் உதவியின்றி உன்னால் வாழ முடியாதா? நீ இப்படி செய்யவேண்டும் அப்படி செய்யக்கூடாது என்றெல்லாம் கட்டளை இடுவதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதே. .


adithadi Wrote:அல்லது அரசியல் நோக்கம் கொண்டதா.

எப்படி ஈழத்தமிழர்கள் தமது நாட்டு நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அப்படியே அமெரிக்கர்களும் தமது நாட்டு நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது எதிர்பார்க்கப்பட வேண்டியது. அமெரிக்க நலன்களுக்கு ஈழத்தமிழருடனான உறவு உதவுமானால் அமெரிக்கா அந்த உறவை நாடக்கூடும். அப்படியான உறவு ஈழத்தமிழர்களுக்கும் பயனுள்ளதாக அமையுமானல் அதனை ஏற்று வலுப்படுத்துவது சிறப்பானது.


adithadi Wrote:தற்போதுள்ள யுத்த நிறுத்தம்மூலம் விடுதலைப்புலிகள் இலங்கை அரசின் நிஐமான முகத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் அமெரிக்கா புலிகளின் மேல் உந்தப்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிகிறோம். வல்லரசு நாடுகளின் அழுத்தம் இலங்கை அரசை அசைய வைக்கின்றதா? JVP எனும் துரும்பு மூலம் இலங்கை அரசு நழுவ முயற்சிக்கின்றது, ஆதலால் தனித் தமிழ் ஈழத்தை நோக்கி புலிகள் தள்ளப்படுகிறாகள், இதனை வல்லரசு நாடுகள் நிச்சையம்மாக அங்கீகரப்பார்கள்!

ஒரு புறம் சுதந்திரம் வேண்டும் என்று போராடிக்கொண்டு, மறு புறம் வல்லரசுகளின் அங்கீகாரங்களுக்கும் அழுத்தங்களுக்கும் இடம் கொடுப்பது ஒன்றுக்கொன்று முரணானதாகும்.
Reply
#6
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/April/23/moo.gif' border='0' alt='user posted image'>
நன்றி: தினக்குரல்
Reply
#7
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் புறக்கணிக்க முடியாத ஆதிக்க சக்தியாக இந்தியா

<b>அயல் நாடுகளின் அரசியல் அமைப்புகளை கொத்தடிமைகளாக கருதும் சிந்தனையில் மாற்றம் ஏற்படுவது அவசியம்</b>

நம்மில் பலருக்கு இடியப்பம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இந்த இடியப்பத்தை பல பகுதிகளாக பிரித்துத் தரும்படி யாரிடமாவது வேண்டினால் அவர்கள் நிச்சயம் பின்னடிப்பார்கள். ஏனெனில் இடியப்பம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிணைந்திருப்பதனால் இடியப்பத்தை பிரித்து எடுப்பது மகா கடினங்களில் ஒன்றாக அமைந்திருப்பதனாலேயே இடியப்பத்தை பிரிக்க பின்னடிக்கிறார்கள் என்பது புலப்படும்.

சரி விடயத்துக்கு வருவோம். மேற்சொன்ன இடியப்பச் சிக்கல் போன்றதுதான் நம்நாட்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையும். ஒரு இனத்திற்கு தீர்வு கிட்டும் போது மற்றுமொரு இனம் பாதிக்கப்பட்டதாகக் கூறினால் அது நிச்சயம் நிரந்தரத் தீர்வாக அமையாது. அல்லது ஒரு இனத்திற்கு அதிகாரத்தை பங்கிடும் போது மற்றுமொரு இனம், தனது உரிமையும் சுதந்திரமும் அபகரிக்கப்பட்டதாகக் கூறினாலும் அல்லது போராட தயாரானாலும் தீர்வு நிலைத்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறான பல சிக்கல்கள் மலிந்த ஒரு நிலையில்தான் எமது நாட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. என்றாலும் இங்கு கவனிக்கத்தக்கது என்னவென்றால், பல வருடங்களாக உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி போராட்டம் நடத்தும் இனம் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முற்று முழுதான உரிமை பெற்றுள்ளது என்பதாகும்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற முயலுகையில், அயல்நாடான இந்தியா விரும்பியோ, விரும்பாமலோ இங்கு உள் நுழைய வேண்டிய தேவை இருந்து கொண்டிருக்கிறது.

அண்மைக்கால இந்தியாவின் மௌனம் பல ஊகங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில், பேரினவாதிகள் பலர் இந்தியாவின் பாரிய பங்களிப்பை இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் எதிர்பார்த்திருக்கின்றனர். இன்றைய நிலையில் இந்தியாவின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டுமென்ற பல வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பு எப்படியிருக்க வேண்டுமென்று நாம் சில முக்கிய பிரமுகர்களிடம் வினவிய போது, அப் பிரமுகர்கள் கூறியவற்றை இங்கு சுருக்கமாக தொகுத்து தருகிறோம்.

பேராசிரியர் சி.சிவசேகரம்

இலங்கையில் இந்தியத் தலையீடானது இந்தியாவின் அதிகார வர்க்கத்தின் நலன்களை மனதில் கொண்டே நடைபெற்று வந்தது. இது வேறு விதமாக அமையுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த நாட்டின் இனப்பிரச்சினை அயற் குறுக்கீடுகளின்றித் தீர்க்க வேண்டியதும், தீர்த்திருக்கக் கூடியதுமாகும். இந்த நாட்டின் அயற் குறுக்கீட்டை தமிழரசுக் கட்சி விரும்பியது. 1960 களில் அமெரிக்கா குறுக்கிட வேண்டும் என்ற விதமாகவும் 1970 களில் இந்தியா தலையிட வேண்டுமென்ற சிந்தனையும் அங்கிருந்தது. பிரித்தானியரின் குறுக்கீட்டை நம்பியவர்களும் இருந்தார்கள். அயற் குறுக்கீடு பற்றிய தெளிவான வரலாற்றுப் பார்வை இல்லாததாலேயே அது பற்றிய கனவுகள் ஊக்குவிக்கப்பட்டன. ஒரு பெரிய வல்லரசுக்கும் நமக்கும் ஒரு பொது எதிரியாகச் சிங்களப் பேரினவாதத்தை நிறுவுவதன் மூலம் தாம் வெல்ல இயலும் என்ற எண்ணம் அதன் அடிநாதம் எனலாம்.

இந்தியா பற்றிய எதிர்பார்ப்புகள் எழுவதற்கும் கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் உருவானது ஒரு தூண்டுகோலாயிருந்தது. இந்தியா எந்த வகையிலோ சிங்களவர்களை விட தமிழர்களுக்கு நெருக்கமும் விசுவாசமுடையது என்ற எண்ணம் அதை மேலும் வலுப்படுத்தியது. இந்தியக் குறுக்கீடு இலங்கைத் தமிழ் மக்கள் வேண்டிய போது நிகழவில்லை. அது இந்திய அரசுக்கு வாய்ப்பான ஒரு சூழலில் உருவாக்கப்பட்டது. தமிழ் விடுதலை இயக்கங்கள் வலுவான போராட்ட இயக்கங்களாக இந்தியாவால் வளர்க்கப்பட்டன. தமிழீழத்தை நிறுவுவதற்காக என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். என் மதிப்பீட்டில் இந்திய அரசின் நோக்கம் அதற்கு எதிர்மாறானது.

இலங்கை - இந்திய உடன்படிக்கையைக் கூர்ந்து கவனித்த யாருக்கும் இந்திய அரசின் நோக்கங்கள் விளங்காமலிருக்க முடியாது. இந்தியாவுக்குப் பகைமையான நிலையில் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு இசைவாக நடந்து கொண்ட ஒரு ஆட்சியை வழிக்கு கொண்டு வருவது இந்திய அரசின் தேவை. இந்தியாவைப் பயன்படுத்தி விடுதலை இயக்கங்களை ஒடுக்குவது இலங்கையரசின் தேவை. இந்தியாவின் போக்கும் தமிழ்த் தேசியவாதத்துக்கு எதிராக இருந்தது. இன்று சிங்களப் பேரினவாதிகள் இந்திய குறுக்கீட்டை எதிர்க்காது அதனை வேண்டி நிற்கின்றனர். இந்திய மண்ணில் தமிழ் விடுதலை இயக்கங்கள் என்று சொல்லப்பட்டவை நடந்து கொண்ட விதமும், அங்கு நடந்த அரசியற் படுகொலைகளும் ஈழத்தமிழர் பிரச்சினையில் விடுதலை இயக்கங்களுக்கெதிரான எண்ணங்களைக் கொண்டவர்களது கரங்களை வலுப்படுத்தின. ராஜீவ்காந்தியின் கொலை பாதகமான திருப்பு முனையாயிற்று. இலங்கையில் தமிழ்மக்கள் அதிகாரம் குறைந்த ஒன்றை பெறுவதையே அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தினை இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர் திருப்பிச் சொல்கின்றனர்.

தமிழ் மக்களின் போராட்டம் நீண்ட நாட்கள் தொடர சாத்தியங்களுண்டு. இலங்கை அரசைப் பேசுமாறு நிர்ப்பந்திப்பதற்கு மேலாக எந்தத் தீர்வையும் எந்த அயல்நாடும் வற்புறுத்தும் நிலைமை இன்று இல்லை. இந்திய நலன்களை முதன்மைப்படுத்தும் முறையில் நடந்து கொள்கிற சிங்கள, தமிழ் தலைவர்களது யோக்கியம் இந்திய அரச நிறுவனம் அறியாததல்ல. அதேவேளை, விடுதலைப்புலிகள் பேராட்ட தலைமையில் உள்ள வரை இந்தியாவிடமிருந்து அவர்கள் அதிகபட்சம் எதிர்பார்க்கக் கூடியது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்பது மட்டுமே. அநேகமாக அது நடக்கப் போவதில்லை.

கடல்கோள் அனர்த்தத்தின் பின்பு, இலங்கை பல்வேறு அயல்நாடுகளது குறுக்கீட்டுக்கும் ஆதிக்கத்துக்கும் கீழ்ப்பட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. என்றாலும், அயல்நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஒழிக்காமல் இந்த நாடு முன்னேற வழியில்லை. எனவே, இந்தியா என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யும்? முக்கியமாக இந்த நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த நாடு எந்த திசையில் போக வேண்டும்? என்ற கேள்விகளுக்கும் நாம் முகம் கொடுக்க வேண்டும். எமது பிரச்சினைகளை யாரும் வந்து தீர்க்கப் போவதில்லை. எந்தவிதமான அயற்குறுக்கீட்டுக்கும் ஒரு பெரிய விலையைக் கொடுத்தே தீருவோம் என்பதை நாம் மறக்கலாகாது.

லலித் அமரசிங்க (கொழும்பு பல்கலைக்கழகம்)

ஒவ்வொரு நாடும் எல்லாக் காலமும் ஒரே வெளிநாட்டுக் கொள்கையை கொண்டிருக்கப் போவதில்லை. இந்தியப் படைகள் இங்கு நிலை கொண்டிருந்த வேளையிலும், தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்கிய போதும் இந்தியாவைப் பற்றிய தப்பபிப்பிராயமும் வெறுப்புணர்வும் இலங்கையர்களிடம் இருந்தது என்பது உண்மை. இந்தியாவின் பொருட்களைக் கூட அன்று பகிஷ்கரித்தோம். இன்று நிலைமை முற்றிலும் மாறுபட்டு விட்டது. வல்லரசுப் பட்டியல் வரிசையில் இந்தியா பெரும் பங்கை வகிக்கின்றது. அத்துடன் இந்தியா எமது அயல்நாடு. எமது சிறுநாட்டுக்கு அந்தப் பெரிய நாட்டின் எல்லா உதவிகளும் தேவை. தமிழ் நாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு குறைந்து விட்டது. இலங்கையில் எல்லா இனங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை இந்தியாவின் உதவியோடு தீர்க்கலாம். வேறு நாடுகள் இங்கு வந்து மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய அவசியமில்லை. எமது நாட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தகைமை இந்தியாவுக்குண்டு. அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் அனுபவத்தினை சமஷ்டி முறையின் மூலம் ஏற்கனவே இந்தியா பெற்றுள்ளது. இலங்கையின் இறைமைக்கும் ஒருமைக்கும் பங்கமேற்படாத வகையில் அதிகாரப் பரவலாக்கலை இந்தியாவின் உதவியுடன் செய்வதனூடாக, இலங்கைப் பிரச்சினைக்கு இந்தியா உதவிட முடியும்.

எஸ்.எம்.ஆலிப் (சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானம் .தென்கிழக்கு பல்கலைக்கழகம்.)

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இந்தியா முன் அனுபவம் பெற்றுக் கொண்ட ஒரு நாடாகும். தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு வல்லரசாகத் திகழும் இந்தியா தனது தேசிய நலன் தொடர்பாகவே தனது வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிப்பதுடன் தனது அயல் நாடுகளுடனான உறவுகளையும் அது தொடர்பாகவே பேணி வருகின்றது. இந்த வகையில் 1980 களின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையின் இனப்பிரச்சினை தீவிரமடைந்த போது தனது தேசிய நலன் பேணும் நோக்கில் இலங்கையில் பிரிவினைவாதத்தை முன்வைத்துப் போராடிய ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுத உதவிகளும் வழங்கியதுடன் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் மத்தியஸ்தத்துடன் தீர்வினைக் காண்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதிலும் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வெற்றியும் கண்டது. இந்தவொரு பின்னணியிலேயே 1987 இல் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் என்ற வகையில் இலங்கையின் இன முரண்பாட்டுக்குத் தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இம்மாகாண சபை முறை மூலம் தனித்தனியாகக் காணப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தனித்துவமான கட்சியொன்று இல்லாததன் காரணமாகவும் தேசியக் கட்சிகளில் அங்கத்துவம் பெற்றிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் தற்காலிக வடக்கு - கிழக்கு இணைப்பை எதிர்க்கவோ கிழக்கு மாகாணத்திற்கு தனியாக ஒரு மாகாண சபையைக் கோரவோ சக்தியற்றவர்களாகவும் இருந்ததுடன் தமது சமூகம் பற்றி எந்தவித சிந்தனையுமின்றி மீளாத் தூக்கத்திலும் இருந்தனர். அதுமட்டுமல்லாது வடக்கு - கிழக்கு மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டதன் மூலம் தற்காலிக வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டதையே கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. அன்று முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாது இருந்திருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கலாம். ஆகவே அப்போது இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா வழங்கிய பங்களிப்பில் இலங்கை முஸ்லிம்களின் அபிலாசைகள் கவனத்தில் எடுக்காமல் செய்யப்பட்டமை இலங்கை வாழ் முஸ்லிம்களை விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் மேலாதிக்கத்தின் கீழ் வாழ்வதற்கு நிர்ப்பந்தித்துள்ளது.

ஆனாலும், பின்னைய காலங்களில் இலங்கை இனமுரண்பாட்டுத் தீர்வில் இந்தியா தலையீடு செய்யப்போய் அது பல கசப்பான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டது. அண்மைக் காலங்களில் இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் நேரடியான ஆர்வத்தினைக் காட்டாத போதும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பார்வையாளனாக இருந்து வருகின்றது. இந்தியா தற்போது இலங்கை விடயத்தில் நேரடியாக தலையிடாத போதும் கூட இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கை இன முரண்பாட்டுக்கு தீர்வு எட்டபட முடியாது என்பதை எல்லா இலங்கை அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு சிறுபான்மை முஸ்லிம், தமிழ் தரப்புகள் என எல்லா அரசியல் தரப்பினரும் இந்தியாவுக்கு அடிக்கடி விஜயம் செய்து இந்திய அரசியல் தலைவர்களுடன் இலங்கையின் இன, அரசியல் சமாதான விவகாரங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்வது இதனை நன்கு புலப்படுத்துகின்றது. தவிர, இலங்கை இன முரண்பாட்டுத் தீர்வு முயற்சியில் மத்தியஸ்தராகச் செயற்படும் நோர்வே தரப்பினர் கூட இந்திய அரசியல் தலைவர்களுடன் இலங்கை முரண்பாட்டுத் தீர்வு விவகாரம் குறித்து அடிக்கடி கருத்துகளைப் பறிமாறிக்கொள்வதும் இலங்கை முரண்பாட்டுத் தீர்வில் இந்தியாவின் முக்கியத்துவத்தை நன்கு புலப்படுத்துவதாகவே உள்ளது.

எனவே, இலங்கையின் இன முரண்பாட்டுக்கு இந்தியாவின் விருப்பத்திற்கு மாறான ஒரு தீர்வு எட்டப்பட முடியாது என்பதையும் இலங்கையின் முரண்பாட்டுத் தீர்வுகாண்கையில் இந்தியாவின் ஆசிர்வாதம் அவசியம் என்பதையும் எல்லாத் தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில்தான் இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசேடமாக வடக்கு, கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களின் முக்கியமான கடமை ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அதாவது இத்தலைவர்கள் வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர்களுக்கும் தனியான தீர்வு அவசியம் என்பதையும் இந்தியாவின் பார்வைக்கு முன்வைத்து இந்தியாவின் ஒத்துழைப்புடன் அவ்வாறானதொரு தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு முனைப்புக் காட்ட வேண்டும். தமிழ் மக்கள் அல்லது தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக தமது தீர்வுக்காக இந்திய அரசாங்கத்தைக் கோருவதுபோல் இலங்கை முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் ஏக குரலாக தமது செல்வாக்கினை இந்தியாவிடம் முன்வைத்தால் நிச்சயமாக இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒரு சிறந்த தீர்வு கிடைக்கும். ஏனெனில், இந்தியா மறைமுகமாக இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது என்பதே இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஓர் அம்சமாகும்.

குமரிமுத்து சுரேஷ்நாதன் (அரச சார்பற்ற நிறுவனம் - கண்டி)

இலங்கையுடனான இந்தியாவின் நெருக்கம் இந்தியப் படைகள் இலங்கையிலிருந்து தோல்வியுடன் வெளியேறிய பின் தொய்வு நிலையிலே காணப்பட்டது என்றாலும் ஏனைய அயல்நாட்டு சக்திகள் இலங்கையினுள் அகலமான காலூன்றல் செய்யாதிருக்க இலங்கையுடன் ஏதோவொரு வகையில் உறவினை கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அந்த வகையில் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பெரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய நிலை இந்தியாவை சார்ந்து விட்டது. இந்தப் பங்களிப்பானது முதலில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமையை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

முன்னைய காலங்களில் மலையக மக்கள் நலன் கருதி மேற்கொண்ட ஒப்பந்தங்கள் எந்தளவு அவர்களுக்கு நன்மையைப் பெற்றுத்தந்தது. என்பது கேள்விக் குறிகளாக உள்ளன. எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகான இந்தியா முயலும் போது இனிமேலும் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படாமலிருக்க இந்தியா உதவிடல் வேண்டும்.

மலையக பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காகவே இந்திய தோட்டத்தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று இலங்கையின் பொருளாதாரத்தை இயக்குகின்ற மாபெரும் சக்தியாக இவர்களே உள்ளனர். இன்றும் கூட தென்னிந்தியாவுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறவு தொடருகிறது. எனவேதான் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வின் போது மலையக மக்கள் புறக்கணிக்கப்படாது ஏனைய இலங்கை மக்களுடன் சகல கௌரவங்களும் பெற்று வாழக்கூடிய வகையிலான பங்களிப்பை இந்தியா வழங்க வேண்டுமென்கிறேன்.

சி.அ. யோதிலிங்கம் (அரசியல் ஆய்வாளர்)

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா என்ன பங்கினை நல்க வேண்டும் என்பதனை பல்வேறு கோணங்களில் இருந்து பார்ப்பது அவசியம் என்று நான் நினைக்கின்றேன். அதில் பிரதானமானது தமிழ் மக்களின் நிலையில் இருந்து பார்ப்பது ஆகும். ஏனெனில் இந்தத் தீர்வு முயற்சிகள் என்பதே தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாகத் தான் எழுச்சியடைந்துள்ளது. அப்போராட்டங்கள் வெறுமனே இரு தரப்பிற்கு இடையே நடைபெற்ற தெருச் சண்டையல்ல மாறாக வரலாற்று ரீதியாக ஆட்சி அதிகார கட்டமைப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு தேசிய இனம் தன்னுடைய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக நடாத்திய, நடத்துகின்ற போராட்டம்தான் இது.

எனவே முன்வைக்கப்படுகின்ற தீர்வுகள் தமிழ்மக்களினது அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்க வேண்டும் என்பது முன் நிபந்தனையாக இருக்கின்றது. இந்த தவிர்க்க முடியாத முன்நிபந்தனைகளைப் பொறுத்தவரைதான் இந்தியா தொடர்பாக இந்தியா பாரிய அதிருப்தியும் சந்தேகமும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

இந்தியாவின் பங்கு இரண்டு வகைகளில் பாதிக்கலாம் என தமிழ்த்தரப்பு அச்சம் கொண்டிருக்கின்றது. முதலாவது இந்தியா சிபார்சு செய்யவிருக்கின்ற அம்சங்கள் பற்றிய விடயம். இரண்டாவது புலிகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு.

இதில் முதலாவதைப் பொறுத்தவரை இந்தியா தனது நாட்டில் இருப்பது போன்ற ஒரு சமஷ்டி முறையினையே சிபார்சு செய்ய விரும்புகின்றது. அதற்கு மேலான அதிகாரம் கொண்ட கட்டமைப்பினை இந்தியா விரும்பவில்லை. இந்திய சமஷ்டிக்கு மேலான ஒரு கட்டமைப்பு இலங்கையில் அறிமுகமானால் அது இந்தியாவிலும் தாக்கத்தினை உருவாக்கி அங்கும் அமுலாக்க வேண்டிய நிலையினைக் கொண்டு வந்து விடும் என இந்தியா அஞ்சுகின்றது.

இந்திய சமஷ்டி அமைப்பு என்பதே மத்திய அரசிடம் அதிகாரத்தை குவித்துள்ள ஒரு அரைகுறைச் சமஷ்டியே ஆகும். பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் பலம் வாய்ந்த மத்திய அரசுடன் கூடிய ஒரு அரைகுறைச் சமஷ்டியே இந்தியாவின் ஐக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் உகந்தது என இந்திய ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்திய சமஷ்டி முறைமை இலங்கையின் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்க ஒரு போதும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாத அரச செயற்பாட்டின் வரலாற்று ரீதியான அனுபவம் ஒரு அதியுயர்ந்த அதிகாரப் பங்கீட்டினையே தமிழ் மக்களுக்கு வேண்டி நிற்கின்றது.

இங்கு இந்தியாவின் நலன்களுக்காக தமிழ் மக்கள் தங்களுடைய அபிலாஷைகளை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது. இந்த விடயத்தில் கைக்கு அளவாக மோதிரத்தை உருவாக்க வேண்டுமே தவிர மோதிரத்துக்கு அளவாக கையை வெட்ட முடியாது. இரண்டாவது விடயம் விடுதலைப் புலிகள் பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு இந்தியாவின் உழுத்துப்போன பழைமைவாத வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து பிறந்த ஒன்றாகும். தனது நாட்டிற்கு அயலிலுள்ள அரசியல் சக்திகளை வெறும் கொத்தடிமைத் தனத்துடன் இந்தியா பார்க்கின்றது. எந்தவித சுயாதீனமோ, தனித்துவமோ இல்லாமல் அயலிலுள்ள நாடுகளும் அரசியல் சக்திகளும் தனக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகின்றது.

இந்த கொள்கையில் இந்தியாவிற்கு பெரும்தோல்வியே தொடர்ச்சியாக கிடைத்தது. நேபாளம் தொடக்கம் பர்மா, பூட்டான், இலங்கை பங்களாதேசம் வரை இந்தியாவிற்கு தோல்வியே கிடைத்துள்ளது. இந்த நாடுகள் எல்லாம் இந்தியாவின் ஆதிக்க வீச்சியில் இருந்து விலகியிருக்கவே விரும்புகின்றன. அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக் கொள்கை என்பது சமத்துவமான நட்பின் அடிப்படையில் உருவாக வேண்டும். அப்போதுதான் இருதரப்பும் நட்பின் பொறுப்புணர்வை உணர்ந்து செயற்படக்கூடியதா இருக்கும்.

எவ்வாறு, அயல் நாடுகள் இந்தியாவின் ஆதிக்க வீச்சிலிருந்து விலகியிருக்கின்றனவோ அதுபோலவே இந்தியாவுடன் பிரச்சினைப் படாமல் விலகியிருக்கவே புலிகளும் விரும்புகின்றனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இந்தியா இருப்பது போலத் தெரியவில்லை. தான் முன்வைக்க விரும்புகின்ற அரைகுறைச் சமஷ்டிகூட புலிகளின் கைகளில் செல்வதை இந்தியா விரும்பவில்லை. இங்கு தங்களுடைய தலைமை யார் என்பதைத் தீர்மானிக்கும் ஜனநாயக உரிமை தமிழ்மக்களுக்கு இருக்கின்றது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்தியா தொடர்பாக மேற்கூறிய அச்சங்கள் காரணமாக இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா நேரடியாக பங்கு பெறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதற்காக இந்தியா நியாயமான வகையில் தனது நலன்களை இனப்பிரச்சினைத் தீர்வின்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முரண்படாத வகையில் முன்வைப்பது பிழையென நான் கூறவில்லை. இனப்பிரச்சினை தீர்வின்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கும், ஐக்கியத்திற்கும் தேவையான உத்தரவாதங்களை இரு தரப்பிடமும் இந்தியா கேட்கலாம். அயலிலுள்ள பெரிய நாடு என்ற வகையில் இந்தியாவிற்கு அந்த தார்மீக உரிமை இருக்கின்றது.

ஏனைய விடயங்களில் தற்போதுள்ள நோர்வே தலைமையினை சமாதானச் செயற்பாடுகள் தொடர்பாக முன்னெடுக்க விட்டு விட்டு, அதற்கு துணையாக செயற்படுவதுதான் இன்றைய நிலையில் ஆரோக்கியமானதாக இருக்கும்.

இந்தியா தனது ஐக்கியம் பாதுகாப்பிற்கு அப்பால் இலங்கையில் பொருளாதார ரீதியாகவும் தற்போது காலூன்றியுள்ளது. இதனால் இலங்கைத் தீவின் இரு தேசங்களின் ஒத்துழைப்பும் இந்தியாவிற்கு அவசியமாக இருக்கின்றது.

எனவே, இனப்பிரச்சினை தீர்வு விடயத்தினை பொறுத்தவரை சிங்கள தேசத்திற்கும், தமிழ்த் தேசத்திற்கும் இடையில் சமதூரத்தில் விலகியிருப்பதே இந்தியாவிற்கும் நல்லது. சிங்கள தேசத்திற்கும் நல்லது. தமிழ்த் தேசத்திற்கும் நல்லது. இதனை இந்தியா தற்போது புரிந்து கொள்ளாவிட்டால் வரலாறு இந்தியாவிற்கு அதனை விரைவில் புரியவைக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

கேதீஸ்வரன் லோகநாதன் (பணிப்பாளர் - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்)

இங்கு முதலாவது அடையாளப்படுத்தப்பட வேண்டும் - 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா தமிழ் மக்களுக்கும் அகதிகளுக்கும், தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் பாதுகாப்பளித்தது. இந்தியாவின் ஆதரவின் காரணமாக ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசாங்கம் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் படி வட, கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வசிப்பிடம் என்பதை ஏற்றுக் கொண்டது. இவ்வொப்பந்தத்தை அடுத்து துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளுக்கும், இந்திய படையினருக்கும் ஆயுத முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ரணசிங்க பிரேமதாஸ இந்தியப் படையினரை வெளியேறும் படி கேட்டதையடுத்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதையும் அடுத்து, இந்தியா இலங்கைப் பிரச்சினையில் தூரத்தில் நிற்பது என தீர்மானித்தது.

எப்படியிருந்த போதிலும் இந்தியா அண்மைக் காலத்திலிருந்து ஒரு தளர்வுப்போக்கை கடைப்பிடிப்பதுடன் நோர்வே ஏற்பாட்டாளர்களாக செயற்படுவதற்கு தமது ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை. நோர்வேயினால் இலங்கை சமாதான விடயங்கள் பற்றி இந்தியாவிற்கு தற்போது தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், தகவல்களை மட்டும். வழங்குகின்றவர்களாக மட்டும் இந்தியாவை வைத்திருக்காமல் நேரம் வரும்போது ஆலோசகர்களாகவும் உள்வாங்கப்பட வேண்டும் அமெரிக்கா உட்பட உலக வல்லரசுகள் கூட, பிராந்திய மட்டத்தில் பலம் வாய்ந்த நாடாக உள்ள இந்தியா, இலங்கை சமாதானப் முயற்சிகளில் பங்குபற்றுவதை சிறந்ததாக கருதுகின்றன.

இந்தியாவுக்கு ஒரு இக்கட்டான நிலையுள்ளது. ஏனெனில் விடுதலைப் புலிளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெறும் சமாதான முயற்சிகளில் இந்தியா பங்கேற்றால் அது விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடும். புலிகளிடமிருந்து இந்தியாவுடன் உறவு வைத்துக் கொள்வதற்கான பல சமிக்ஞைகள் தெரிகின்றன. காலம் தாழ்த்தியே இந்தியா புலிகளுடன் உத்தியோக பூர்வ உறவினை வைத்துக் கொள்ள விரும்புகிறதா? என்பது தெரிய வரும். மிக விரைவில் இது நடக்குமென்று எதிர்பார்ப்பது அசாதாரணமானது. இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிக்கும் வட, கிழக்கில் ஸ்திரமான சுயாட்சி முறையின் கீழ் ஆட்சி இடம்பெற வேண்டுமென எதிர்பார்க்கும் அதேநேரத்தில் இலங்கையின் சுய பாதுகாப்பு, சீர்குலையாதவாறு நடவடிக்கைகளை இந்தியா வற்புறுத்துவதோடு, மாற்றுக் கட்சிகளை வட கிழக்கில் ஊக்குவிக்கவும் இந்தியா முயலும். அதே நேரத்தில் இந்தியா மிக அவதானமாக விடுதலைப் புலிகளுடன் எவ்வாறு தொடர்பு வைத்துக் கொள்வது என்பது பற்றியும் ஆராயும்.

எம்.ரூபவதனன் (விரிவுரையாளர் - தமிழ்த்துறை - பேராதனைப் பல்கலைக்கழகம்)

இந்திய அரசானது இன்னுமே இலங்கை அரசாங்கத்தினுடையதும் விடுதலைப் புலிகளுடையதும் ஒரு விடயமாகவே இலங்கை இனப்பிரச்சினையை நோக்குகின்றது. ஆனால், உண்மையில் அவ்வாறல்ல, இலங்கை இனப்பிரச்சினையென்பது தமிழ் மக்களுடனும், ஏனைய தமிழ் சிறுபான்மை மக்களுடனும் சம்பமந்தப்பட்டது. இந்தியா இலங்கையின் அயல்நாடு என்ற வகையிலும் அங்கு பல இலட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றமையினாலும் இருநாடுகளினதும் உறவு தவிர்க்க முடியாத ஒன்றாகும். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காகவே போராடுகின்றனர். இலங்கை இனப்பிரச்சினை தீர்வின் போது விடுதலைப் புலிகளின் பங்களிப்பு பாரியதாகவே அமையும். ஏற்கனவே முரண்பட்டு நிற்கும் இந்தியா கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இனிமேலும் ஒதுங்கியிருக்க முடியாது. அத்துடன் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் இலங்கை வந்து தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக பகிரங்கமாகக் கூறவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் விடயத்தில் தமிழ்நாடும், இந்திய மத்திய அரசும் அக்கறை காட்ட வேண்டும். கடந்த பல வருடங்கள், பல்வேறு உரிமை மறுப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உட்பட்டு தமிழினம் வாழ்ந்து வருகின்றது. எனவேதான் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வுக்கு இந்தியா பங்களிப்பு வழங்க வேண்டும்.

எம்.எம்.ரமீஸ் (சட்டத்தரணி)

இன்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் நோர்வேயின் பங்களிப்பு பாரிய அளவில் காணப்பட்ட போதிலும் கூட இவ்விடயத்தில் ஆரம்ப காலந்தொட்டே இந்தியாவின் பங்களிப்பும் அக்கறையும் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இதன் உச்சக் கட்டமாக இலங்கையின் இறைமையையும் மீறி 1987 இலே விமானம் மூலம் உணவும் பொட்டலங்கள் போடப்பட்டமையையும் இதன் பின்னராக இலங்கை - இந்திய ஒப்பந்தம், இந்திய அமைதி காக்கும் படையினரின் வருகை போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

பின்னர் ராஜீவ் காந்தியின் படுகொலை, அமைதிப்படையினரை திருப்பி அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற கசப்பான அனுபவங்கள், வல்லரசுகளுக் கிடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்தமை போன்ற காரணங்களினால் இந்தியாவின் நேரடி ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இன்று வரை காணப்படுகின்றது.

தேர்தல் காலத்தின் போது நடைபெற்ற ராஜீவ் காந்தியின் படுகொலையானது இந்திய ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட நேரடித் தலையீடாகவே இந்தியா கருதுகின்றது என்பதுடன் அதன்பின்னர் புலிகள் விடயத்திலும் ஈழத்தமிழர் விடயத்திலும் இந்தியா இன்றுவரை கடுமையான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. மிக அண்மையில் கூட கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயம் இக் கொலை வழக்கில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தேடப்பட்டு வருவதாக இலங்கை பத்திரிகைகளில் அறிவித்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சமாதான நடவடிக்கைகளில் அமெரிக்கா, ஜப்பான் போன்று இந்தியா தனது அபிப்பிராயங்களை வெளிப்படையாக தெரிவித்த போதிலும் கூட தனது நிலைபாட்டை நோர்வேக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்தியுள்ளது. சமாதானம் தொடர்பான நடவடிக்கைகள் தனக்கு அவ்வப்போது அறியத் தரப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது.

எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிடுவது போன்று நோர்வேயினால் இலங்கைக்கு ஆலோசனைகளையும், உதவிகளையுமே வழங்க முடியுமே தவிர தீர்வை அமுல்படுத்த முடியாது. இவ்விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக எதிர்காலத்தில் அமையும்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை அமெரிக்க அரசு எதிர்க்கவில்லை!

விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கவில்லையென அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க உதவிச் செயலாளர் கிரிஸ்ரினா றொக்கா தெரிவித்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினம் மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இத்தகவலை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கடந்த வாரம் அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இத் தகவலை தம்மிடம் வெளியிட்டதாக தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் அமரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா றொக்காவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு சந்தித்தது. யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று ஆண்டுகளாகின்றன. இக்காலப் பகுதியில் அரசியல்தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் விடுதலைப்புலிகள் உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால்ää இம்மூன்று வருட காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுவந்துள்ள நடவடிக்கைகளோää விடுதலைப் புலிகளை இப்பாதையில் தொடர்ந்து செல்வதை ஊக்குவிப்பதாக அமையவில்லை என்பதை நாம் கிறிஸ்ரினா றொக்காவுக்கு தெரியப்படுத்தினோம். றொக்காவும் அதனை ஏற்றுக்கொண்டார்.

இன்று விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தைக் கொண்டுவந்தது விடுதலைப் புலிகளின் ஆயுத பலம்தான் என்பதையும் கிறிஸ்ரினா றொக்காவிடம் வலியுறுத்தினோம். அப்போதான் விடுதலைப்புலிகளின் வன்முறையைத்தான் நாம் எதிர்க்கின்றோம். தனிநாட்டுக் கோரிக்கையை அல்ல. அவர்கள் வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்தால்ää அவர்களுடன் நெருக்கமாக பணிபுரியமுடியும். என்றும் கிறிஸ்ரினா றொக்கா முதல் தடவையாக எம்மிடம் தெரிவித்தார். என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

நன்றி: சங்கதி
Reply
#9
தெற்கில் எண்ணெய்க் குதங்கள்
சீன அரசுக்கு குத்தகைக்கு!
இதனால் இந்தியா அதிருப்தி நிலை

அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய்த்தாங்கிகள் சீன அர சுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இதற் கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட சீன - இலங்கை அரசுகள் இணக்கம் கண்டுள் ளன.
அம்பாந்தோட்டையில் உள்ள எரிபொருள் தாங்கிகளைப் புனரமைத்து அவற்றில் எரி பொருளை நிரப்பி இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருளை நிரப்பும் திட்டத்தை சீன அரசு நடைமுறைப் படுத்தவுள்ளது. சீன அரசின் இந்தத் திட்டம் இந்தியத் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா வுக்குப் பொருளாதார ரீதியான இழப்புகள் ஏற் படும் என்று இந்தியப் பொருளாதார நிபுணர் களால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை அடுத்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு பாதிப்படையும் வாய்ப்பு உருவாகி இருப் பதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இலங்கை அரசு ஏற்கனவே இந்தி யாவுக்கு வழங்கியுள்ளது. இது போன்று வெளி நாடுகளுக்கு எண்ணெய்க் குதங்களைக் குத் தகைக்கு வழங்குவதனால் அதுபற்றி இலங்கை அரசு முன் கூட்டியே இந்தியத் தரப்புக்குத் தெரியப் படுத்தியிருக்கவேண்டும். இத்தகைய இணக்கப்பாட்டை மீறும் வகையில் சீனாவு டன் இலங்கை உடன்படிக்கை ஒன்றை எட்டி இருப்பது குறித்து இந்தியா அதிருப்தி அடைந் துள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

நன்றி: உதயன்
Reply
#10
புலிகளுடன் பொதுக்கட்டமைப்பு வேண்டாம் இலங்கை அரசை இந்தியா வற்புறுத்துகிறது !

நிலைமையை விளக்க ஜனாதிபதி புதுடில்லி செல்வார்

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென இந்தியா உத்தியோக பூர்வமாக இலங்கை வெளிநாட்டமைச்சிடம் தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

விடுதலைப் புலிகளுடன் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்தினால் அது இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் எல்லைப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் இலங்கை வெளிநாட்டமைச்சிற்கு இந்தியா எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதுடில்லியின் இந்த நிலைப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அண்மையில் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் ஏற்பாடுகளும் இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

நாளை செவ்வாய்க்கிழமை அல்லது இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க இந்தியாவுக்கான அவசர விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்து பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு கண்டியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடர்பாகவும் ஜனாதிபதி இந்தியத் தலைவர்களுக்கு விளக்கவுள்ளார்.

இதேநேரம் இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமா ராவ் டில்லியின் அவசர அழைப்பையேற்று இந்தியா சென்றுள்ளதாகவும் அது இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடாக இருக்கலாமென்றும் தெரியவருகிறது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஷியாம் சரண் ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான குழுவினரை கொழும்பில் சந்தித்த போது

இந்தியாவைப் போன்று மாநில ஆட்சிமுறைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் மத்திய அரசாங்கத்திடமே முக்கிய பொறுப்புகள் இருப்பதாலும் அதுவே பகிர்ந்தளிக்கப்படுவதால் இந்த முறையே இலங்கைக்கு ஏற்றதெனவும் அதைவிடுத்து சுயாட்சி முறையை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் ஷியாம் சரண் தெரிவித்ததாகவும் அறிய வருகிறது.
நன்றி: தினக்குரல்.
Reply
#11
இவ்வளவு போர்க்கால நிலைமைக்கும் இந்தியா தானே காரணம்.எப்படியாவது புலிகளைக் கொண்டு சண்டையைத் தொடக்கினால் எந்த ஒரு கட்டமைப்பும் தேவையில்லை என்பதில் இந்தியா உறிதியாக நிற்கிறது
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#12
இவைமட்டும் அல்ல... நாம் நினைத்துப்பார்க... முடியாத சுயநலத்தில் நிக்கிறார்கள்...(தமிழரும் ஏன் உலகமும்) :roll: மீண்டும்.. ஏதும் நடக்கலாம்... நடக்கும்... :| தலையெழுத்து எமக்கும் இந்தியாவுக்கும் அப்படி இருந்தால் அதை யாரால் மாத்தமுடியும் :| Idea காலம் தக்க பதில் யாவருக்கும் தரும் இதுஉலக இயற்கை Idea :| அதில் தமிழர் நியாயம் வெல்லட்டும்.... வெல்லும். அல்லது என்னவளியிலும் வெல்லசெய்யணும் Idea :| நான் தமிழன் என்பதற்காக அல்ல.... இது..
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#13
பாரதநாடு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்படும்போது, தமிழும், தமிழர்களின் நலங்களே எங்கள் உயிர்மூச்சு என்று கூறும் திராவிடகட்சிகள் எங்கே?
Reply
#14
அவர்கள் எல்லோரும் தேர்தலில் பிஸி பாருங்கொ........
<b> </b>
Reply
#15
இந்தியா பயந்துவிட்டது. தமிழீழத்துக்கு வந்தபோதே ஒரு சில சாரம் கட்டிய தமிழ் பெடியளையே சரிக்கட்ட முடியவில்லையே... தற்பொழுது கடற்படை விமானப்படை ஆட்லறி டாங்கி மல்ரிபெரல் எல்லாத்தையும் வச்சிருக்கேக்க எப்படி சும்ம விட்டுட்டு இருக்கமுடியும்??

இதைவிட என்னொமொரு பகிடியை பாருங்க. ஒரு வல்லரசு எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிற இந்தியாவுக்கு, புலிகள் எப்படி எப்ப விமானத்தின் உதிரிப்பாகத்தை தமிழீழத்துக்குள்ள கொண்டுவந்தார்கள் எண்டே தெரியேல்லை,, எத்தனை எத்தனை சட்லைட்டுகளை சொந்தமா வச்சிருந்தும் கோட்டை விட்டுப்போட்டு, இப்ப சிங்கள அரசு சொல்லிமுடிய கொக்கரிச்சுக்கொண்டு இருக்கிறானுங்க.. :x :evil:
[b]

,,,,.
Reply
#16
இவனுகள் இப்படி தான்.........
<b> </b>
Reply
#17
ஈழத்தமிழரும்... இந்தியதமிழரும்சொல்வதை ஒருகாலமும் கவனத்தில் கொள்ளார் இந்திய ஆளும் வர்க்கம்....கவத்தில் கொள்வதாக கவனமாக அறிக்கைகள் விடுவார்கள் அங்கும்... எமக்கும்... இது எமக்கும்... இந்தியதமிழருக்கும் இந்தியாவுக்கும் ஏன்... சிங்களத்துக்கும் விளங்கும் அதைவிட... எமது பிரச்சனைகளை நன்கறிந்த நாடுகளுக்கும் அது நன்கு விளங்கும்.... :|

ஐயா... உண்மை என்னவாக இருக்கும்... உண்மையாகவே... Idea
தாங்கள் கவனமில்லாமல் இருந்ததை இப்போ எண்ணலாம்... (அன்ரன் அண்ணாவின் இரசதந்திரம்)Idea
எல்லா நாடுகளும் இப்படி எம்தீவில் அக்கறை கொள்ளும் என எதிர்பார்திரார்... :|

<b>ஒருசின்ன தீவு ஈழம் அல்லது ஏன் இலங்கை நம்மை முந்திவிடுமோ என்ற பொறாமைகலந்த கலக்கம்தான் இன்றைய இந்தியாவின் நிலமை. :| </b>
(தங்கள் உள்நாட்டு பல பிரச்சனைகளையும்... எம்மோடு சேர்த்து எண்ணி.... பலநூறு மொழிகளை வைத்துக்கொண்டு... தென் ஆசியாவில் எப்படி இவர் எஐமான் ஆவது.... அவர்களுக்கே தெரிந்ததுதானே.... ஐயா இது அரசியல் இல்லை... யதார்தம்... )

அரசியல்வாதிமாதிரி விளக்கம் தருவதைவிட நம் வீட்டுபிரச்சனைமாதிரி விளக்கம் தந்துள்ளேன்... (பிரச்சனைகள்... நம்வீட்டுக்குள் நடப்பதுபோல்.. பின்... கிராமம்...பின் நகரம்.... பின் நாடு... பின் நாட்டுக்கு நாடு... மொழிக்கு மொழி.. சமயத்துக்கு சமயம் இல்லையா... etc..etc...)
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#18
யசூசி அகாசி நாளை வருகிறார்

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி ஒருவார விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரவுள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகள் புனர்வாழ்வு மற்றும் நிர்மானப் பணிகளுக்காக ஜப்பான் அரசினால் விசேட தூதவராக நியமிக்கப்பட்ட பின்னர் அகாசி இலங்கைக்கு மேற்கொள்ளும் பத்தாவது விஜயம் இதுவாகும்.

இலங்கையில் இவர் எதிர்வரும் 18ம் திகதிவரை தங்கி நிற்கையில் ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கவிருக்கும் அதே நேரம் கிளிநொச்சிக்கும் சென்று விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.

இம்முறை தனது விஜயத்தின் போது அகாசி சமாதான முயற்சிகள் மற்றும் பொதுக்கட்டமைப்பு தொடர்பாகவும் சகல தரப்பினருடனும் பேசவுள்ளார்.
Reply
#19
இந்தியா செல்லும் சொல்ஹெய்ம் இந்திய அரசின் அண்மைக்கால முரண்பட்ட கருத்துக்கள் குறித்து பிரஸ்தாபிப்பார்!

ஆழிப்பேரலை நிவாரண பொதுக்கட்டமைப்பொன்றை விடுதலைப்புலிகளுடன் இணைந்து சிறீலங்கா அரசு ஏற்படுத்தக்கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு அண்மைக்காலத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை விட தனது பிராந்திய அரசியல் ஆதாயங்களுக்கே முன்னுரிமை கொடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது.

இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான எந்த முயற்சிகளையும் எடுப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டுவரும் அடிப்படைவாத இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்னர் கருத்துக்கூறிய இந்திய வெளிவிவகார செயலாளர் சியாம் சரண் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களது ஆகாய மற்றும் கடற் பலம் அதிகரித்து வருவதை இந்தியாவுக்கான ஒரு அச்சுறுத்தலாகவும் பார்ப்பதாகவும் கருத்துக் கூறியிருந்தார்.

அத்துடன் பல ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைப் பலிகொண்ட ஆழிப்பேரலையின் பாதிப்பினால் அழிந்துபோயுள்ள தமிழர் தாயகப்பகுதிகளில் அத்தியாவசிய நிவாரணப் பணிகளை முன்னெடுக்க விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று சர்வதேச நாடுகள் பரிந்துரைத்துள்ள திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கவும் சியாம் சரண் தவறவில்லை.

சிறீலங்கா அரசின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. ஆறுமுகம் தொண்டமான் முஸ்லிம் கட்சிகள் உட்பட சிஹல உறுமய போன்ற கட்சி உறுப்பினர்களையும் சந்தித்த பின்னர் சியாம் சரண் இவ்வாறு கூறியுள்ளமை இந்தியாவின் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

விரைவில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் கருத்துக் கூறுகையில் விடுதலைப் புலிகள் அமைத்துள்ளதாக நம்பப்படும் விமானத்தளத்தையும் அவர்களிடம் இருப்பதாகக் கருதப்படும் இரு விமானங்கள் குறித்தும் தனது கண்டனத்தை வெளியிட்டார். இந்த விடயங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிறீலங்காவிற்கு வருகை தரவுள்ள சமாதான சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இந்தியாவிற்கு விசேட பயணமொன்றை மேற்கொண்டு அங்கு பல முக்கிய அரசியல் தலைவர்களுடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளார்.

ஆசிய பிராந்தியத்தியத்தில் தனது சொந்த நலன்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் இந்தியா ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர்களது நிரந்தர சமாதானத்திற்கான முயற்சிகளில் சிறீலங்கா அரசின் அசமந்தப் போக்கை எதுவிதத்திலும் கண்டுகொள்ளாது இருப்பதுடன் சிறீலங்கா அரசின் ஏமாற்று நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருவது தமிழீழ விடுதலை ஆர்வலர்களையும் சமாதான விரும்பிகளையும் கவலை கொள்ள வைத்துள்ளது.

இந்தியா செல்லவுள்ள எரிக் சொல்ஹெய்ம் தனது முன்னைய பயணங்களின்போது ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று சர்வதேச அனுசரணையாளர்களுக்கு இந்தியா வழங்கிய உறுதிமொழியை மதிக்காது அண்மைக் காலத்தில் இந்தியா திடீரென முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருவது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரணையும் எரிக் சொல்ஹெய்ம் இந்தியாவில் சந்திக்கவுள்ளார் என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய வெளியுறவுச் செயலாளர் தனது இலங்கை விஜயத்தின்போது திருகோணமலைக்கும் கண்டிக்கும் விஜயம் செய்திருந்தார்.

சொல்ஹெய்முக்கும் சியாம் சரணுக்கும் இடையிலான சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் பற்றிய இந்திய நிலைப்பாடு மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பிரதேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் ஒன்றிணைந்து பணியாற்றக் கூடியவகையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் பொதுக்கட்டமைப்பு குறித்தும் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமாதான நடவடிக்கைகள் குறித்து நோர்வே தரப்பு இந்தியாவிற்கு அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறுகிறதா என ஊடகம் ஒன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அதிகாரி ஒருவர் நோர்வே தரப்பு தங்களுக்கு 95 வீத விடயங்களையே கூறுவதாகவும் 5 வீத விடயங்களை மறைப்பதாக தாங்கள் எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த 5 வீத விடயங்களையும் அறிந்து கொள்ளும் வழி தங்களுக்குத் தெரியும் என்றும் தாங்கள் அந்த 5 வீத விடயங்களையும் அறிந்து கொள்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி உத்தேச பொதுக்கட்டமைப்பு விவகாரம் தொடர்பாக உரையாடுவதற்காக சனிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிலையிலேயே சொல்ஹெயிமின் விஜயம் புதன்கிழமை இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்.
Reply
#20
ம்......... இந்த லட்சணத்திலை ஜக்கிய நாடுகள் சபையில் நிரந்தர அதுவும் வீட்டோ பவருடன் கூடிய உரிமை வேண்டுமாம்.குரங்கு கையில் கிடைத்த மாலை தான்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)