Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவுக்கு ஒரு ஓ
#1
<b>சிறீலங்கா அரசிற்கு ஏற்பட்ட புதிய தலைகுனிவு! </b>

ஞாயிற்றுக்கிழமை 17 ஏப்பிரல் 2005 6:30 ஈழம்

சிறீலங்கா அரசாங்கத்தால் புதிய தூதுவராக கனடா நாட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சந்திரானந்தா டி சில்வாவின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்திடீர் முடிவை இவ் வாரப்பகுதியில் கனடிய அரசாங்கம் சிறீலங்கா அரசிற்குத் தெரிவித்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளராக சந்திரானந்த டி சில்வா பணியாற்றிய காரணத்தால் அக்கால கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது விட்டாலும் கூட கனடிய குடிவரவு குடியகல்வுச் சட்டம் 2002 இன் பிரகாரம் கனடாவிற்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர் என கனடிய அரசாங்கம் சிறீலங்கா அரசிற்கு அறிவித்துள்ளது.

இலங்கையில் நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு விடுதலைப்புலிகளே காரணம் என வெளி உலகத்திற்கு காட்ட முயன்று வரும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நல்ல பாடம் ஒன்றை கனடிய அரசாங்கம் புகட்டியுள்ளது.

சந்திரானந்தா டி சில்வா பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்கும் முன்னர் தேர்தல் ஆணையாளராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய அரசியல் மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் ரொறொன்ரோ வாழ் தமிழர்கள்தான் கனடிய அரசின் இம் முடிவிற்குக் காரணம் என கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் விசனம் வெளியிட்டுள்ளன.


சுட்டது புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#2
அவுஸ்திரேலியா செய்யாததை கனடா செய்திருக்கிறது. நிறுத்துவதற்காக முயற்சிகள் எடுத்த அனைவருக்கம் நன்றிகள்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#3
ஆஆஆ....... கனடா வாழ் எம் இன தமிழர்களே... தலை தாழ்த்திய வணக்கங்கள் அத்தோடு உங்களின் ஆதங்கத்தை செவிமடுத்து அதை நிறைவேற்றிய கனடிய அரசாங்கத்திற்கும் நன்றிகள்.....
""
"" .....
Reply
#4
கனடாவுக்கு ஒரு ஓ..!!

கனடா நாடு எடுத்துள்ள முடிவைப் பாராட்டி ஒரு ஓ போட்டுத்தான் ஆகவேண்டும்.

என்ன முடிவு என்கிறீர்களா?இலங்கை கனடாவுக்கான தனது புதிய தூதராக சந்திரானந்த டீ சில்வாவை நியமித்திருந்தது.ஆனால் கனடா அந்நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று நிராகரித்திருக்கிறது.
காரணம்
இதே சந்திரானந்த டீ சில்வா பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த நேரத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்,மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமற் போனவர்களுக்கு பொறுப்புள்ளவர் எனத் தாம் அவரைக் கருதுவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கனடா அரசு அறிவித்திருக்கிறது.

இந்த மனித உரிமை மீறல்களுடன் சந்திரானந்த டீ சில்வாவுக்கு நேரடித்தொடர்பு இல்லாவிட்டாலும் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற முறையில் அவரும் பொறுப்பாளர் என்கிறது கனடா அரசு.அதுமட்டுமா கனடாவின் குடிவரவு குடியகல்வுச் சட்டப்படி அவர் கனடா நாட்டுக்குள்ளே நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இது தேவையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.ஏனென்றால் இலங்கை அரசின் வழக்கப்படி இராணுவத்தில் உயர் அதிகாரி தரத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்களே இதுவரைகாலமும் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டு வந்தார்கள்.அவ்வாறான நியமனத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்திய நியமனம் அவுஸ்திரேலியா தூதுவராக முன்னாள் படைத்தளபதி ஜானக பெரேரோ நியமிக்கப்பட்டமையாகும்.

இதே சந்திரானந்த டீ.சில்வா பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஓய்வுபெற்றபின் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றியவர்.இதிலிருந்து இலங்கைத் தேர்தல்களின் ஜனநாயகத் தன்மையையும் உய்த்தறிந்து கொள்ளலாம்.

இப்போது கனடா மேற்கொண்டுள்ள முடிவுக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்ததற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று தோன்றினாலும் கனடாவின் முன்மாதிரி வரவேற்கப்படவேண்டியதே.இனி கனடாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளும்.இராணுத் தளபதிகளை தூதுவர்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் என எதிர்பார்க்கலாம்.

கனடாவின் இந்த முடிவுக்கு அங்கு வசிக்கு 5 லட்சம் தமிழ் மக்களும் ஒரு காரணம் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

கனடாவில் இருப்பவர்கள் ஒருமுறை கை தட்டுங்கள்

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
பழைய கருத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
Reply
#6
...
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)