Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விமர்சகர் தில்லைக்கூத்தனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது...!
#1
அரசியல் விமர்சகர் தில்லைக்கூத்தனுக்கு நாட்டுப்பற்றாளர் விருது

மேல் மாகாண மக்கள் முன்னணியின் அரசியல் ஆலோசகரும், தமிழ்த் தேசியப் பணிக்குழுவின் தலைவரும், பிரபல அரசியல் விமர்சகரும், முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் சவூதி அரேபியா, சிங்கப்பூர், தொற்காசியாவிற்கான துறைமுக தரவியல் விஞ்ஞான துறையியல் ஆலோசகருமான மறைந்த தில்லைக்கூத்தன் (இளையதம்பி நடராஜா) அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை நேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழீழ தாயகத்தையும் தமிழ்த் தேசியத்தையும் தமிழீழ தேசியத் தலைவரையும் பற்றோடு மதித்து வாழ்ந்த ஒரு நாட்டுப்பற்றாளரை இழந்துவிட்டோம்.

தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்ற உயரிய உணர்வோடு எப்போதும் இயங்கிவந்தவர் நாட்டுப்பற்றாளர் இளையதம்பி நடராஜா (தில்லைக்கூத்தன்) அவர்கள்.

எத்தகைய இடையூறுகள், அச்சுறுத்தல்கள் எல்லாம் வந்தபோதும் தனது நிலைப்பாட்டில் எந்தத் தளர்வும் இன்றி உறுதியாக நின்று தமிழ்த் தேசியத்தின் பக்கம் குரல் கொடுத்தவர் தில்லைக்கூத்தன்.

தனது வாழ்களத்தைப் பொருட்படுத்தாமல் தமிழின விடுதலையை விரும்பி அதனை மதித்து, அதற்காக தனது எழுத்தையும் பேச்சையும் செயற்பாடுகளையும் ஒழுங்கமைத்து இயங்கி வந்தார் இவர்.

தமிழர் தாயகத்தை திட்டமிட்டு சிங்கள ஆட்சியாளர்கள் சிதைக்க முற்பட்டபோதேல்லாம் தில்லைக்கூத்தன் அவர்களின் எழுத்துக்கள் அதனை வன்மையாகக் கண்டித்தன. அதேவேளையில் தமிழினத்தை விழிப்பூட்டி எதிரிமீதான எச்சரிக்கையையும் கவனத்தையும் ஏற்படுத்தியது இவருடைய பேனா. இதற்கு இவருடைய கட்டுரைகளும் நூல்களும் சாட்சியாக இருக்கின்றன.

சிறந்த கல்வியாளராக இருந்த தில்லைக்கூத்தன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மீது பற்றும் மதிப்பும் கொண்டு அவருடைய தலைமையில் தனது விடுதலைப் பணியை மகிழ்வோடும் பெருமையோடும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மக்களின் பிரச்சினையையும் தமிழீழ போராட்டத்தையும் உலக அரங்கில் எடுத்துச் செல்லுவதிலும் தில்லைக்கூத்தன் தீவிரமாக உழைத்தார்.

தனது முதுமைக்காலத்திலும் கூட அவர் எந்தச்சோர்வுமின்றி தனது தமிழ்த்;தேசிய நிலைப்பாட்டில் நின்று ஒருதந்தைக்குரிய அரவணைப்போடும் உரிமையோடும் தனது பங்கையும் பலத்தையும் வழங்கினார்.

எல்லோரையும் தமிழீழ விடுதலைப் போராட்த்தில் இணைத்து போராட்டத்தைப் பலப்படுத்துவதில் அக்கறை கொண்டிருந்த தில்லைக்கூத்தன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் நாட்டுப்பற்றாளராக கௌரவித்துள்ளோம்.

இத்தகைய பெருமைகளுக்கும் மதிப்புக்குரிய பற்றாளர் தில்லைக்கூத்தன் அவர்களுக்கு எமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாட்டுப்பற்றாளர் தில்லைக்கூத்தன் அவர்களின் குடும்பத்தாருடைய துயரில் தமிழீழ மக்களுடன் நாமும் பங்குகொள்கிறோம்.

இவ்வாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - புதினம்..!

சமீபகாலமாக இவர் தினக்குரல் வீரகேசரிப் பத்திரிகைகளில் தரமான அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...!- our view
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தில்லைக்கூத்தனின் கட்டுரை களைப் படித்திருக்கிறேன் நன்றாக எழுதுவார்.நான் இவர் ஒரு பத்திரிகையாளர் மட்டும் தான் என்று நினைத்து விட்டேன்.க
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#3
Cry
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)