Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவுக்கு காதல் காரணமாகவே மிரட்டல்
#1
புலிகளின் பெயரில் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன்? பட்டதாரி பெண் பரபரப்பு தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய பட்டதாரிப் பெண், பொலிஸ் விசாரணையில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் "இமெயில்" மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், பட்டதாரிப் பெண் கலைவாணி. சென்னை ரெட்ஹில்சைச் சேர்ந்த இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின், "சைபர் கிரைம்" பொலிஸார் கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் சென்னை சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். பொலிஸ் விசாரணையில், இவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. விளையாட்டாக இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாகவும் பொலிஸாரிடம் கலைவாணி தெரிவித்திருந்தார்.

இருந்தாலும், இது பற்றி மீண்டும் தீவிரமாக விசாரணை நடத்த பொலிஸ் அத்தியட்சர் நடராஜ் உத்தரவிட்டார். துணை அத்தியட்சர் ராஜேந்திரன் மேற்பார்வையில், "சைபர் கிரைம்" உதவி பொலிஸ் அத்தியட்சர் பாலு இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தினார்.

கலைவாணியின் தந்தை ஜெயராமன். தாயார் மற்றும் சகோதரனிடம் விசாரணை நடந்தது. கலைவாணியிடமும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஒரு நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தார்கள்.

விசாரணையின் போது, கலைவாணி மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன்? என்பதற்கு புதிய காரணத்தைச் சொல்லி பொலிஸாரையே திகைக்க வைத்தார். அத்துடன், ஒரு கண்ணீர் காதல் கதையையும் சொல்லி கலங்க வைத்தார். இது தொடர்பாக கலைவாணி பொலிஸாரிடம் கொடுத்த வாக்குமூலம் விபரம் வருமாறு:

எங்கள் குடும்பம் தி.மு.க. குடும்பமாக இருந்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதா மீது எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை. மிரட்டல் கடிதம் அனுப்புவதற்கு எனது காதல் தோல்விதான் காரணமாகும்.

ரெட்ஹில்ஸ் பவானி நகரைச் சேர்ந்த திலீப்குமார் என்ற கதிர்வேல்ராஜனை நான் உயிருக்குயிராக காதலித்தேன். ஆனால், அவர் முதலில் காதலிப்பதாகச் சொல்லி விட்டு பின்னர் ராணி என்ற இன்னொரு பெண்ணுடன் பழக ஆரம்பித்தார்.

இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு உலகில் வாழப் பிடிக்கவில்லை. வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். ஆனால், தூக்கில் தொங்கியோ, தீக்குளித்தோ, தற்கொலை செய்ய பயமாக இருந்தது.

ஒரு பக்கம் திலீப்குமாரை பழி வாங்கும் எண்ணமும் இருந்தது. இன்னொரு பக்கம் உயிர் வாழவும் எனக்குப் பிடிக்கவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திலீப்குமாரின் பெயரிலும், விடுதலைப் புலிகள் பெயரிலும் மிரட்டல் கடிதங்களை `இமெயில்' மூலம் அனுப்பி வைத்தேன்.

இதன் மூலம் திலீப்குமாரை பொலிஸார் கைது செய்வார்கள் என்று நினைத்தேன். ஆனால், பொலிஸார் புத்திசாலித்தனமாக விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்து என்னைக் கைது செய்து விட்டனர்.

திலீப்குமாரை இன்னும் உயிருக்குயிராக நான் காதலிக்கிறேன். அவர் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது. இந்த வழக்கில் என்னை தூக்கில் போட்டால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்.

பெரிய பதவியில் இருக்கும் முதலமைச்சருக்கு எனது காதல் விவகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டல் கடிதம் அனுப்பியது தவறுதான். அதற்காக வருந்துகிறேன்.

இவ்வாறு கலைவாணி தனது வாக்குமூலத்தில் கூறினார். விசாரணை முடிந்து கலைவாணி மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கலைவாணி காதலித்த வாலிபர் திலீப்குமாரிடமும் விசாரணை நடந்தது. அவர் கலைவாணி அனுப்பிய 10 இற்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

அந்தக் கடிதங்களில் "காதல் ரசம் சொட்டும்" விதத்தில் தனது உள்ள உணர்வுகளை கலைவாணி அள்ளிக் கொட்டி இருந்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டதாகவும், கலைவாணி மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் பொலிஸார் கூறினார்கள்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
இந்த கலைவாணி என்ன பண்ண ..??? Cry Cry Cry
இப்படி சீப்பான விடயங்களுக்கு எல்லாம் விடுதலைப்புலிகள் தான் கிடைச்சார்களா..?? :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
இதைவிடச் சீப்பாத்தான் தமிழ்நாட்டு இளைய வட்டம் புலிகளைப் பார்க்குது...அவர்கள்... ஜனநாயகத்தின் பெயரால் பத்திரிகைச் சுதந்திரம் கூட மட்டுப்படுத்தப்பட்டு இந்திய சாக்கடை அரசியல்வாதிகளால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் வேதாந்தம் சொல்லிக் கொடுக்கப்பட்டு பலி ஆடுகளாக வளர்க்கப்படுகின்றனர்.....! இளைய வட்டமும் அவர்களுக்கு ஆமா போட்டு சுயநலத்துக்கும் பதவிக்கும் பணத்துக்கும் அந்தஸ்துக்கும் என்று அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கிறது...எதையும் சுயமா ஆராய்ந்து பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை..இதையே இச்சம்பவமும் எடுத்துக்காட்டுகிறது...! Idea

கலைவாணிகள் எல்லாரும் இப்படித்தானோ...???! இது கில்லாடி போல...சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துது....! பாவம் பையன்...! தன் வினை தன்னைச் சுடும் பழைய மொழி என்றாலும் வகையாப் பொருந்தி இருக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
¾Á¢ú ¿¡ðÊÄ «Ãº¢Âø ¿¼ò¾¢Èиû ¾¡ý ¨Àò¾¢Âõ ±ñÎÀ¡÷ò¾¡ø ÀÊòÐ Àð¼õ ¦ÀüÈ ÁÉ¢¾÷¸ÙìÌ «¨¾Å¢¼ ܼô§À¡Ä.

«¾¢ø ÌÈ¢ôÀ¢¼ôÀð¼ ¦Àñ½¢ý Å¡ìÌãÄò¨¾À¡Õí¸û ¾¡ý ¾¢Ä¢ôÌÁ¡÷ ±ñ¼ ¬¨½ Å¢ÕõÒž¡¸×õ «Å÷ ¾ý¨É ¸¡¾Ä¢òÐÅ¢ðÎ ¾ü¦À¡ØÐ §ÅÈ ¦Àñ¨½ ¸¡¾Ä¢ôÀ¾¡¸×õ «¾É¡ø ¾¡ÉìÌ Å¡ú쨸 ¦ÅÚòÐ ¾ü¦¸¡¨Ä ÓÊ×ìÌ §À¡¸ô§À¡É¾¡¸×õ À¢ýÒ àìÌô§À¡ðÎ ¦¸¡ûǧš ¾£ìÌÇ¢òЦ¸¡ûǧš ÀÂÁ¡õ. ¬É¡ø À¢ýÒ ¾ý¨É à츢ø §À¡ð¼¡ø «¨¾ ºó§¾¡ºÁ¡ ²üÚ¦¸¡ûž¡¸×õ ¦¾Ã¢Å¢òÐûÇ¡÷. þó¾ ÓʨŠӾ§Ä ±Îò¾¢Õì¸Ä¡§Á.

þ¦¾øÄ¡õ ¦ƒÂÄÄ¢¾¡Å¢ÉÐõ «Åâý Å¡ÉÃí¸Ç¢ý Á¢¸×õ Òò¾¢ºÄ¢ò¾ÉÁ¡É §Å¨Ä (±É «Å÷¸ÙìÌ ¿¢¨ÉôÒ) :evil: :oops:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Reply
#5
<!--QuoteBegin-¸ÅâÁ¡ý+-->QUOTE(¸ÅâÁ¡ý)<!--QuoteEBegin-->¾Á¢ú ¿¡ðÊÄ «Ãº¢Âø ¿¼ò¾¢Èиû ¾¡ý ¨Àò¾¢Âõ ±ñÎÀ¡÷ò¾¡ø ÀÊòÐ Àð¼õ ¦ÀüÈ ÁÉ¢¾÷¸ÙìÌ «¨¾Å¢¼ ܼô§À¡Ä.

«¾¢ø ÌÈ¢ôÀ¢¼ôÀð¼ ¦Àñ½¢ý Å¡ìÌãÄò¨¾À¡Õí¸û ¾¡ý ¾¢Ä¢ôÌÁ¡÷ ±ñ¼ ¬¨½ Å¢ÕõÒž¡¸×õ «Å÷ ¾ý¨É ¸¡¾Ä¢òÐÅ¢ðÎ ¾ü¦À¡ØÐ §ÅÈ ¦Àñ¨½ ¸¡¾Ä¢ôÀ¾¡¸×õ «¾É¡ø ¾¡ÉìÌ Å¡ú쨸 ¦ÅÚòÐ ¾ü¦¸¡¨Ä ÓÊ×ìÌ §À¡¸ô§À¡É¾¡¸×õ À¢ýÒ àìÌô§À¡ðÎ ¦¸¡ûǧš ¾£ìÌÇ¢òЦ¸¡ûǧš ÀÂÁ¡õ. ¬É¡ø À¢ýÒ ¾ý¨É à츢ø §À¡ð¼¡ø «¨¾ ºó§¾¡ºÁ¡ ²üÚ¦¸¡ûž¡¸×õ ¦¾Ã¢Å¢òÐûÇ¡÷. þó¾ ÓʨŠӾ§Ä ±Îò¾¢Õì¸Ä¡§Á.  

þ¦¾øÄ¡õ ¦ƒÂÄÄ¢¾¡Å¢ÉÐõ «Åâý Å¡ÉÃí¸Ç¢ý Á¢¸×õ Òò¾¢ºÄ¢ò¾ÉÁ¡É §Å¨Ä (±É «Å÷¸ÙìÌ ¿¢¨ÉôÒ) :evil:  :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இவைக்குத்தான் தலைக்கனம் அதிகமாச்சே...அதில என்ன செய்யுறதென்று புரியாமச் செய்வினம்...! அவைக்கென்ன..காதலிக்க..பெட்டை பிடிக்க..இல்ல பொடி பிடிக்கவா பட்டம் கொடுக்கிறது...இல்லையே...! அவர்கள்...அதை தப்பாமல் துஸ்பிரயோகம் செய்கிறார்கள்...தலைக்கனத்தில் மதியிழந்து நடக்கிறார்கள்..உலகில் உண்மையான முட்டாள்களைக் காண வேண்டின் பல்கலைக்கழகம்...அல்லது காலேஜ் வாசலுக்குப் போங்கள் தாராளமாக் காணலாம்...! அவை அவை அவையின்ர செயலுக்கு விளக்கம் மட்டும் பிரமாதமா அளிப்பினம்...ஆனா அர்த்தமிருக்காது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
Quote:புலிகளின் பெயரில் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன்? பட்டதாரி பெண் பரபரப்பு தகவல்


மவளே நீ மட்டும் என் கையில மாட்டினே :evil: :evil: :twisted: :x
Reply
#7
Quote:மவளே நீ மட்டும் என் கையில மாட்டினே
அமைதி அமைதி வசி. காகம் திட்டி மாடு சாகுமா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
vasisutha Wrote:
Quote:புலிகளின் பெயரில் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது ஏன்? பட்டதாரி பெண் பரபரப்பு தகவல்


மவளே நீ மட்டும் என் கையில மாட்டினே :evil: :evil: :twisted: :x

சபாஸ்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)