Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்பிடியும் பாக்கலாம் தானே?
#1
இப்பிடியும் பாக்கலாம் தானே?

கறுப்பி புலிக்கு எதிரானவ, போராட்டத்துக்கு எதிரானவ, தேசியவிடுதலையில அக்கறை இல்லாதவ எண்டு சிலர் பல இடங்களில துள்ளிக் குதிக்கிறத பாத்துக்கொண்டுதான் வாறன். கறுப்பிக்கு விதம் விதமாச் சாப்பிட வேணும். அனேகமா கனடாவில இருக்கிற எல்லா நாட்டு ரெஸ்ரோறண்டுக்கும் போய் ஒரு பிடி பிடிச்சிருக்கிறன். விதம் விதமா உடுப்புப் போட விருப்பம். கனடாவில என்னென்ன சௌபாய்க்கியங்கள் எல்லாம் இருக்கோ ஒரு ரவுண்டு போய் வர விருப்பம். வாழ்க்கை வாழத்தானே. இப்பிடிச் சுயநலமா உலாவிக்கொண்டிருக்கிற கறுப்பி பொங்கி எழு தமிழா ஈழம் எமது கையில் எண்டு கவிதையும், கட்டுரையும் எழுதினால் யாராவது பின்னால நிண்டு ஓங்கி உதைய மாட்டீனம் எண்டு என்ன நிச்சயம்.
கறுப்பிக்கு(ம்) மனச்சாட்சி இருக்கு. அந்த வெய்யிலுக்க கல்லு, முள்ளுப் பத்தைக்க எப்ப வெடிவெடிக்கும், உடல் சிதறும், தலை விழும் எண்டு தெரியாமலும் பெத்த அம்மாவை அப்பாவைச் சகோதரங்களை இனிப் பாப்பனா எண்டும் தெரியாமல் தலைமைக்கும், கடமைக்கும், உத்தரவுகளுக்கும் தலைவணங்கித் துவக்குத் தூக்கிற எங்கட இளைஞர்களையும், யுவதிகளையும் பற்றி ஏதாவது கருத்துச் சொல்ல கறுப்பிக்கு என்ன அருகதை இருக்குச் சொல்லுங்கோ. உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கையில காசிருந்ததால பிளேன் ஏறி இப்ப பிளானா வாழுற கறுப்பிக்கு என்ன யோக்கியதை இருக்கு போராட்டதைப் பற்றிக் கதைக்க. மனச்சாட்சி உறுத்துததால அப்ப அப்ப கொஞ்சம் காசை போரால பாதிக்கப்பட்ட யாருக்காவது கொடுத்து கறுப்பி தன்ர மனச்சாட்சிக்குத் தீனி போட்டுக் கொண்டு இருக்கிறா. அப்பதான குற்றஉணர்வு இல்லாமல் படங்களுக்கும் கலைநிகழ்சிகளுக்கும் போய் வரலாம்..

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் பிளேன் ஏறி வந்து முற்று முழுதான லௌகீக வாழ்க்கை வாழந்து தொலைக்கிற எங்கட தேசியபற்றுக்காறரிலும் விட கறுப்பி எவ்வளவோ மேல். லௌகீகத்தில் திளைத்த படியே வீரவசனங்கள எழுதிக் குவித்தும் குரல் உயத்திக் கத்தியும் ரீல் விடுகிற ரகம் இல்லக் கறுப்பி. சுயநலம் துலைந்தால் நிச்சயம் தளத்தில நிக்க வேணும். இல்லாட்டிக் கம்மெண்டு இருக்க வேணும். நல்லாத் திண்டு கொழுத்து எல்லா டாம்பீகங்களையும் அனுபவிச்சுக் கொண்டு யாருக்குப் படம் காட்ட வீரவசனமா எழுதித் துலைக்கிறியள். பேசாமல் தளத்தில போய் அந்தப் பிள்ளைகளுக்குத் தோள் குடுங்கோவன்.

ஐயோ ஐயோ ஐயோ.. அப்ப ஆர் காசு சேக்கிற பொறுப்பை ஏற்கிறது. வெளிநாட்டு உதவிய ஆர் பெற்றுக்குடுக்கிறது எண்டு கறுப்பியக் கவிக்கப் பாக்கிறீங்களாக்கும். கறுப்பி போல எத்தினை சுயநலவாதிகள் புலம்பெயர்ந்து வாழீனம் அவையளிட்ட அந்தப் பொறுப்பைக் குடுங்கோவன் (என்ன நம்பிக்கை இல்லையே- கறுப்பி கொஞ்சம் உருவினா என்ன? கண்டுகொள்ளாதேங்கோ) ஒரு குடும்பத்தில எத்தின பேர் இருப்பீங்கள் ஒருத்தர் இஞ்ச இருந்து உதவலாம் மற்றாக்கள் தளத்தில போய் நிண்டு எங்கள ஆட்டிப்படைக்கிற ஆராஜக அரசாங்கத்தை ஒளிக்கலாமே..

அட திடீரெண்டு "ஃபரனைட் 911" திரைப்படத்தின்ர கடைசிக் காட்சி மனதில ரீலா ஓடுது. "மைக்கல் மோர்" அதுதான் அந்தப்படத்தின்ர இயக்குனர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிட்ட நேராப் போய் உங்கட பிள்ளைகள ஆமியில சேக்கிறதுக்கு விண்ணப்பத்த நிரப்பித்தாங்கோ எண்டு கேக்க அவையள் துண்டக்காணம் துணியக் காணம் எண்டெல்லோ ஓடீனம். பின்ன என்ன சேத்து வைச்ச காசில பிள்ளைகள கேம்பிறிச்சுக்கும், கார்வேட் யூனிவேர்சிட்டிக்கும் அனுப்பிப் படிப்பிச்சு டாம்பீக வாழ்க்கையை பரம்பரை பரம்பரையாகத் தொடருவீனமா? இல்லாட்ட அப்பாவிப் போராளிகளோட தங்கட பிள்ளைகளையும் விட்டு அந்தக் கொடூரத்தை தங்கட பிள்ளைகள் அனுபவிக்க வைச்சு ஐயோ பெத்த மனசு பத்தியெல்லே எரியுது.. அவையின்ர பிள்ளைகள மட்டும்தான் தாய் பெத்ததாம் அப்பாவி போராளிகளைப் பெத்தது உணர்வற்ற இயந்திரமாம். (புஸ்சின்ர பெட்டைகளைப் பாத்தாலே தெரியுதே)

எப்ப புலம்பெயர்ந்தியளோ அப்பவே பேசாமல் கம்மெண்டு இருந்திட்டால் நல்லது. உண்மையிலையே உணர்சியால கொந்தளிச்சா வீட்டில ஒருத்தரை மட்டும் உதவிக்கு எண்டு இஞ்ச விட்டிட்டு மற்றாக்கள் தளத்துக்குப் போறது மேல். அதவிட்டிட்டு எத்தின மணித்தியாளங்களை புளொக்கிள விரையம் செய்யிறியள் அங்கை எங்கட பிள்ளைகள் செத்து மடியுதுகள். இந்த காதிலபூச்சுத்துற வேலைய விட்டிட்டு ரீல் விடுறாக்கள் உங்கட சொத்துப் பத்தை வித்திட்டு சொந்தங்களோட போய் தளத்தில இறங்கினால் எப்பவோ ஈழம் கிடைச்சிருக்கும். சத்தியமாச் சொல்லுறன். யாரோ ரெத்தம் சிந்தி, உடல் சிதற, உயிர் இழந்து, எடுத்த ஈழத்தை லௌகீக வாழ்க்கை வாழ்ற மானம் கெட்டு பிளேன் ஏறி வந்த கறுப்பி ஒருநாளும் சொந்தம் கொண்டாட மாட்டாள். அந்த எங்கட மாங்கொட்டைத் தீவில இருந்து கிடைக்கிற குட்டி ஈழம் ரெத்தம் சிந்தின அந்த அப்பாவிகளுக்கு மட்டும் தான் சொந்தம்.

இவ என்னைத்தான் சொல்லுறா எண்டு தலையச் சொறியாதேங்கோ. தொப்பி அளவா இருந்தா ஆரும் போட்டுக் கொள்ளலாம்

கறுப்பி
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
கறுப்பிக்கு எல்லாளலின் பதில்

கறுப்பி!

ஒராள் இங்க இருங்கோ மற்றாக்கள் தளத்துக்கு போங்கோ என்பது எனக்கு பொருத்தமாய் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லுவதுபோல் குடும்பத்தில் ஒருவர் இங்கு இருக்க மிகுதியானோர் ஊருக்குப்போனால் காசு சேர்ப்பது யாரிடம்? அப்படிச் சேர்த்தாலும் எவ்வளவு பணம் சேர்ப்பீர்கள்? சர்வதேச அளவில் சுனாமிக்குப் பின்தானே தமிழன் பலம் தெரியவந்தது. ஈழப்பிரச்சனை என்பது வெறுமனே இலங்கையில் சிங்களவருடன் மோதல் மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் எங்கள் நிலை குறித்து அறிவிப்பதும் தான். இதை அங்கிருந்தபடி யாரும் செய்துவிட முடியாது. சுனாமி காலத்தில் இங்குள்ள புலம்பெயர்ந்தோர் செய்த காரியங்களை அங்கிருந்து யாராலும் செய்திருக்க முடியுமா?.

அதைவிட வெளிநாடுகளுக்கு வந்தபடியினால் நீங்கள் "கம்மெண்டு" இருங்கள் என்பதுஇ வீட்டில் இருக்கு மட்டும் வீட்டைக் குறித்து அக்கறையாக இரு வெளியூர் சென்றுவிட்டாயா வீட்டைப்பற்றிக் கவலைப்படாமல் "கம்மெண்டு" இரு என்பதைப்போல இருக்கிறது. சில விடயங்கள் எங்களுடன் இருக்கிறபோது அதன் அருமை எங்களுக்குத் தெரிவதில்லை. தூரச்செல்லும் போதுதான் அதன் தார்ப்பரியம் எமக்குப் புரியும். அதுதான் இங்குள்ளவர்கள் இவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்கள்.

லக்சறி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு என்ன போராட்டத்தைப் பற்றிப் பேச்சு என்கிறீர்கள்இ நீங்கள் பாதிக்கப்பட்டோருக்குப் பணம் கொடுத்து மனச்சாட்சிக்கு தீனி போடுகிறீர்கள். இவர்கள் நீங்கள் சொல்வதுபோல் வீரவசனம் எழுதுகிறார்கள் போராட்டம் பற்றி எழுதுகிறார்கள் பேசுகிறார்கள் அது அவர்கள் மனசாட்சிக்குத் தீனியாக இருக்கலாம் அல்லவா!.

9ஃ11பரனைட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பரனைட் விவரணப் படம் அமெரிக்காவில் இருந்து எங்கோ ஒரு நாட்டுக்கு தங்கள் இராணுவத்தினை அனுப்புவது குறித்த சர்ச்சை. எங்களுடையதுஇ போராடிக்கொண்டு இருக்கிறவர்களுக்காக இங்குள்ள நாங்கள் கொடுக்கும் ஆதரவு. அதையும் இதையும் ஒப்பிடுவது தவறுஇ முட்டாள்த்தனமும் கூட!

அதைவிட இதற்காக எத்தனை மணித்தியாலம் புளொக்கில நேரத்தை விரயம் செய்கிறீர்கள் என்று எழுதுகிறீர்கள் ஆனால் பிரபாகரனுக்கு எதிரானவர்கள் அதாவது சிறிரங்கன் எழுதிய ஒரு ஆக்கத்திற்கு (அவர் எழுதுவதெல்லாம் புலிக்கு எதிரானதுதானே) பாராட்டுத் தெரிவித்து இருந்தீர்களே? நீங்களும் "கம்மெண்டு" இருந்திருக்கலாம் தானே!. எதற்காக வாழ்த்தினீர்கள்? அதை என்னால் நிரூபிக்க முடியாது ஆனால் உங்களுக்குத் தெரியும். (சிறிரங்கனும் ஈழமதியும் இப்போ தமிழ்மணத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது. அவர்கள் புலிகளை எதிர்த்து மட்டுமே ஆக்கங்கள் எழுதியது காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம்)

போராட்டத்தை எதிர்ப்பவர்கள் கையாளுகிற யுக்தியைத்தான் நீங்களும் கையாளுகிறீர்கள். அதாவது "போராடுபவர்கள் தலைமைக்கும் உத்தரவுகளுக்கும் தலைவணங்கி துவக்குத் து}க்கி" என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்

அப்படியெனில் தலைமைக்கும் உத்தரவுக்கும் என்று இன்னொரு பகுதி இருக்கிறது. அதாவது பிரபாகரன் தன்னுடைய நோக்கத்திற்காக இவர்களைப் பயன்படுத்துகிறார் என்பது. (இப்படித்தான் புலியை எதிர்ப்பவர்கள் மக்களிடம் நன்மதிப்பைப் பெற எழுதுவார்கள்).

நீங்கள் புலி எதிர்ப்பாளர் என்பதை நான் உங்கள் பின்னூட்டம் மூலம்தான் அறிந்தேன். ஆனால் அதில்ப் பிரச்சனை இல்லை! அது உங்கள் சுதந்திரம். ஆனால் அதற்காக

'சத்தியமாச் சொல்லுறன். யாரோ ரெத்தம் சிந்திஇ உடல் சிதறஇ உயிர் இழந்துஇ எடுத்த ஈழத்தை லௌகீக வாழ்க்கை வாழ்ற மானம் கெட்டு பிளேன் ஏறி வந்த கறுப்பி ஒரு நாளும் சொந்தம் கொண்டாட மாட்டாள். அந்த எங்கட மாங்கொட்டைத் தீவில இருந்து கிடைக்கிற குட்டி ஈழம் ரெத்தம் சிந்தின அந்த அப்பாவிகளுக்கு மட்டும் தான் சொந்தம்". இப்பிடி எழுதி ஏதோ நல்லபேர் சம்பாதிக்க நினைக்காதீர்கள். அது உங்கள் மனசாட்சிக்குத் தீனி போடாது. உங்களுக்குப் போடுதோ தெரியாது!???

அதற்கு கறுப்பியின் பதில்

எல்லாளன் நீண்ட பின்னூட்டம். வாசித்தேன்.
நான் எழுதியதன் அர்த்தத்தை நீங்கள் உண்மையிலேயே புரியவில்லையா இல்லாவிட்டால் பாவனை பண்ணுகின்றீர்களா? நான் குடும்பத்துடன் போகலாமே என்று கூறியது "சவுண்டு" விடுறவர்களை மட்டும்தான். அமைதியான எமது நாட்டிற்கும் போராட்டத்திற்கும் பல உதவிகளைச் செய்து கொண்டு தமக்கென்றொரு வாழ்க்கை இங்கே அமைத்திருப்பவர்களை அல்ல. (இப்படியானவர்கள் தான் கனடாவில் அதிகம்)
பரணைட் 911 ஐ ஏன் உதாரணத்திற்கு எடுத்தேன் என்று கேட்டிருந்தீர்கள். நான் நினைக்கின்றேன் "சவுண்டு" விடுகின்றவர்கள் ஒருவரும் தமது குழந்தைகளை அனுப்பமாட்டார்கள் என்பதைக் கூறுவதற்குத்தான். இதற்காக அந்தத் திரைப்படத்திற்கும் எமது போராட்டதிற்கும் சாயல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
மேலும் ப.வி. சிறீரங்கன் நல்ல எழுத்தாளர், நல்ல ஆய்வாளர் அவருக்கு பின்னூட்டம் இட்டதை நான் மறுத்தேனா? மறுத்தது மாதிரி தாங்கள் உறுதிப்படுத்த முனைகின்றீர்களே. ஜனநாயகம் என்பது மக்களின் தனிப்பட்ட சுதந்திரம். அதை மறுக்கும் எந்த ஒரு இடமும் எனக்கும் தேவையில்லை. அதென்ன "தூக்கி" விட்டார்கள் என்று மிகவும் கொச்சையாக எழுதியிருக்கின்றீர்கள். தூக்குவது என்பதன் பொருள் நிச்சயம் தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நம்புகின்றேன்.

சுனாமியில் மக்களின் முக்கியமாக தமிழ் மக்களின் பங்களிப்பு என்ன என்பது எனக்கும் தெரியும். அதை மக்களுக்கு போய்ச் சேர்ந்தது எவ்வளவு என்பதும் எனக்குத் தெரியும்.
எமது நாட்டில் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல. லௌகீக வாழ்வில் திளைத்த படியே போராட்டத்தையும் அதன் அழிவுகளையும் உபயோகித்துத் தமக்குச் சொத்துச் சேர்ப்பவர்களைத் தான் நான் விமர்சித்தேன்.

நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது கறுப்பியின் எண்ணமாக இருந்தால். இந்தத் தலைப்பில் கை வைத்திருப்பேனா? சிறிது யோசியுங்கள்.


எல்லாளன் மற்றும் கறுப்பிக்கு வன்னியன் எழுதியது

<b>எல்லாளன்!</b>
ஸ்ரீரங்கனின் பதிவுகள் தூக்கப்படவில்லை. அவரே முன்வந்து ஈழம் பற்றிய தனது பதிவுகளை அழத்துவிடுவதாகவும் இனி எழுதப்போவதில்லை எனவும் சொன்னார். அதன்படியே சிலவற்றை அழித்தும் விட்டார். இப்போதும் கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். மேலும் விடுதலைப்புலிகளை எதிர்த்து எழுதுவதற்காக தமிழ்மணத்திலிருந்து யாரையும் நிப்பாட்டும் அளவில் இல்லை. (அவர்களை மட்டும் விமர்சித்தாலும் கூட).

<b>கறுப்பி!</b>
நீங்கள் புலிகளுக்கு எதிரானவரோ ஆதரவானவரோ என்பது பிரச்சினையில்லை. புலிக்கு எதிரானவ, போராட்டத்துக்கு எதிரானவ, தேசியவிடுதலையில அக்கறை இல்லாதவ எண்ட காரணத்தைக் காட்டி
உங்களுக்கு எதிராக எழுதியதைக் காட்ட முடியுமா? ஈழத்துப்பாடல்களைத் தடைசெய்ய வேண்டுமென்று நீங்கள் சொன்னபோது கூட அது மற்றைய விசயங்களுக்கும் பொருந்தும் என்பதோடு இது அளவுக்கு மீறிய பயம் என்பதையும் சுட்டிக்காட்டித்தான் நான் எழுதினேன்.

சரி அதை விடுவோம்.
வெளியில் வந்தவர்களுக்கு போராட்டத்தை ஆதரித்து எழுதவோ பேசவோ அருகதையில்லையென நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். (நீங்கள் கூறும் வகைக்குள் நான் அடங்கவில்லையென்றாலும்) அவரகளில் பலர் வெளிவேசம் போடுகிறார்கள் என்பதில் உண்மை இருக்கிறதை வன்னியிலும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். மேலும் உங்கட பதிவில் போராட்டத்துக்கு ஆதரவாக் கதைக்காததால நீங்கள் தூற்றப்படுகிறீர்கள் என்ற தொனி இருக்கு. இதில நீங்கள் நேரடியா பேரச் சொல்லிறதுகூட பிரச்சினையில்லை. ஏனெண்டா நீங்கள் சொல்லிறபடி பொளக்கில நேரம் சிலவழிக்கிறது ஒரு கைவிரலுக்குள்ள எண்ணக்கூடிய ஆக்கள்தான்.

இன்னொரு விசயம், ஸ்ரீரங்கன் இவ்வளவு எழுதியும்கூட நான் நேரடியா அவர ஒருபோதும் எதிர்கொள்ளவேயில்ல. ஆனா நீங்கள் கதைச்சபோது உங்கள எதிர்கொண்டிருக்கிறன். ஏனெண்டா ரெண்டுபேரயும் நான் ஒண்டாப் பாக்கேல.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நன்றி.......... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
ஈழநாதன் பதில்


இப்படியும் சவுண்டு விடலாமே
நம்ம கறுப்பி இல்ல கறுப்பி அவ இப்படியும் பேசலாமே என்று தனது அங்கலாய்ப்பை கொட்டோ கொடென்று தனது பதிவிலை கொட்டிவிட்டுப் போயிருக்கிறா.அவவின்ரை பார்வையிலை படாத சில அரஜாகங்களையும் அட்டூழியங்களையும் எடுத்துக் கொடுக்கிறதுக்குத் தான் இந்தப் பதிவு.

அவ போராட்டத்திற்குச் சார்பாகப் பேசுறவர்களையும் ஆதரவாளர்களாகத் தங்களை வெளிக்காட்டிக்கொள்பவர்களையும் பார்த்து நீங்களெல்லாம் ஒண்ட வந்த நாட்டிலை நிண்டு கொண்டு எதுக்கு வீரவசனம் பேசுறியள் நாட்டிலை போய்ப் போராடுங்கோவன்,மற்றவன் பிள்ளை உயிரைக் கொடுக்க நீங்கள் இஞ்சை சுகம் அனுபவிக்கிறீங்கள் என்று சொல்லியிருக்கிறா.
கனடாவிலையும் ஜேர்மனியிலையும் பிரான்சிலையும் இருந்துகொண்டு ஐயோ அங்கை எங்கடை சகோதர சாகிறார்களே என்று சொல்லுறவையைப் பற்றி அவ ஒண்டும் சொல்லேலைத்தான் எண்டாலும் அவைக்கும் இது பொருந்துமெண்டு நினைக்கிறன்


தான் சுயநலவாதிதானாம்.அங்கை இருக்கிற வசதிகளை அனுபவிச்சுக் கொண்டு ஈழத்திலை நடக்கிற பிரச்சனைகளைப் பற்றிப் பேசப்போறதில்லையாம்.ஆமி அடிச்சாலும் புலி அடிச்சாலும் அந்த அப்பாவி மக்கள் தங்கடை பாட்டிலை எதுவும் செய்யட்டுமாம்.தான் தன்ரை பாட்டிலை இருப்பாவாம் அப்பப்ப மனச்சாட்சி உறுத்தினா ஆருக்கும் உதவி செய்வாவாம்.

அம்மாவானை நான் என்ன செய்யிறனோ அதைத்தான் கறுப்பி தானும் செய்யுறதாச் சொல்லியிருக்கிறா.நானும் சரியான சுயநலவாதி.நாங்களெல்லாம் அதைப் பற்றிப் பேசாமல் படமும் பார்த்து புளொக்கும் எழுதி இடைக்கிடை நாலைஞ்சு பதிவுக்கு தாளமும் தட்டினாப் போதும்.அப்பப்ப மிஸ்டர் மனசாட்சி உறுத்தினா அஞ்சோ பத்தோ ஆரும் போராலை கஷ்டப்பட்டவைக்கு கொடுத்து மன உறுத்தலை தவிர்த்தாப் போதும்.அப்படிக் குடுக்காட்டிலும் பர்வாயில்லை யாருக்கும் தெரியவே போகுது குடுத்ததெண்டு சொன்னாலே போதும்.

என்னாலை அங்கை நிண்டு அடிபட ஏலாது நானுண்டு என்ரை பாடுண்டு எண்டு இஞ்சை ஓடிவந்திட்டன்.இஞ்சை வந்து பார்த்த எனக்கு முன்னாலை நிறையப் பேரெல்லாம் இங்கை வந்து நிண்டு கொண்டு எங்களுக்கு தமிழீழம் கிடைக்கவேணும் எண்டு எழுதினம்,அரசாங்கம் செய்யுற அட்டூழியங்களை எழுதினம்,போராட்டத்தின்ரை வரலாறை புட்டுப் புட்டு எழுதினம்.பார்க்க எரிச்சலாகத் தான் இருக்குது.

இவையெல்லாம் அங்கை நிண்டு அடிப்பட்டிருந்தால் இவையள் கேட்கிற ஈழம் கிடைச்சிருக்குமே.சமாதானம் கிடைச்சிருக்குமே என்கிறா கறுப்பி எனக்கும் அப்பிடித்தான் தோன்றுது.இவை மட்டுமல்ல புலி பாசிசம் அடக்குமுறை அரஜாகம் என்று சொல்லுற அத்தனை பேரும் வெளிநாடுகளிலை இருந்து எழுதிக் கிழிக்காமல் ஒத்து நிண்டு அடிப்பட்டிருந்தா இண்டைக்கு முழுப் புலியளையும் ஒழிச்சுக் கட்டியிருக்கலாமே.

இல்லை எங்களுக்கு புலியளிலை எதிர்ப்பில்லை பாழாப்போன போரிலைதான் கோபமெண்டா அவங்களோடை நிண்டு அடிப்பட்டிருந்தா இண்டைக்கு ஈழம் கிடைச்சு சமாதானம் வந்திருக்குமே.அதென்ன போராட்டத்துக்கு ஆதரவா எழுதுறவைதான் போய்ப் போராட வேணும்.போரை நிறுத்த என்ன வழி போராடி முடிக்கிறதுதானே எல்லாருமாச் சேர்ந்து போராடி முடிச்சா போர் முடிஞ்சு போயிடுமே.

இல்லை ஆர் என்ன கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை அங்கை உயிரைக் குடுத்துப் போராடுற இளஞர்கள் பாவமெண்டா அங்கை போய்நிண்டு அவங்களுக்கு உதவி செய்யலாமே.முன்னுக்குப் போய் நிண்டு சன்டைபிடிக்க பயமாயிருந்தா பின்னுக்கு நிண்டு சாப்பாடு செய்து குடுக்கலாம் காயக்காரருக்கு மருந்து கட்டலாம்.

சவுண்டு விடுறாக்களைப் பற்றி கறுப்பி சொன்னாவே ஒரு சொல்லு.ஏன் அந்தப் பதிவுக்கு ஆரும் வந்து வாழ்த்துக்கள் சொல்லேலை எண்டுதான் எனக்கு ஐமிச்சமாக் கிடக்கு.

நானும் கறுப்பியோடை சேர்ந்து சவுண்டு விடுறாக்களைக் கேட்கிறன்.

ஈராக்கிலை அமெரிக்காவும் அங்கிலாந்தும் அநியாயம் பண்ணுது எண்டு ஐரோப்பாவிலை நிண்டு கொண்டும் அமெரிக்காவிலை நிண்டு கொண்டும் சவுண்டு விடுறவை,கனடாவிலை நிண்டு கொண்டு பத்தி எழுதிறவை,அட இலங்கையிலும் இந்தியாவிலையும் கண்டனப் பேரணி நடத்துறவை.நீங்கள் எல்லோரும் இனி சவுண்டு விடுறதை நிப்பாட்டுங்கோ அடுத்த பிளேனைப் பிடிச்சு ஈராக்கு போய் அமெரிக்காவோடை சண்டைபிடிச்சு ஈராக்கைக் காப்பாத்துங்கோ.

இந்தியாவிலை லஞ்சம் ஊழல் மலிவெண்டுறவை,அரசாங்கத்திலை பிழை சொல்லுறவை,நாட்டைத் திருத்தோணும் எண்டுறவை எங்கடை நாடு வளர்வேணும் எண்டுறவை.உடனை பிளேன் பிடிச்சு ஊருக்குப் போங்கோ வெளிநாட்டிலை நிண்டு சவுண்டு விட்டா இப்பிடி புளொக்கிலை திட்டுவம்.

சோமாலியாவிலை பிள்ளைகள் பசியிலை சாகுதெண்டு பரிதாபப் படுறவை அதை புளொக்கிலை எழுதியே நேரத்தைப் போக்காட்டுறவை கையிலை இருக்கிற சொத்துப் பத்தை வித்திட்டு அதுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு சோமாலியா போங்கோ அல்லது வாயை மூடிக்கொண்டு கம்மெண்டு இருங்கோ.

எங்கேயோ அடக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லிம் பென்ணுக்கு இஞ்சை இருந்து போலிக்கண்ணீர் வடிக்காதிங்கோ. முக்கியமா எழுதிக் கிழிக்காதையுங்கோ அங்கை போய் முடிஞ்சா அந்தப் பெண்ணுக்கு உதவப் பாருங்கோ.இல்லாவிட்டால் வாயைப் பொத்திக்கொண்டு கம்மெண்டு இருங்கோ.

எங்களுக்குத் தமிழீழம் கிடைக்கவேணும்,எங்கலுக்கு விடிவு வரவேணும்,அரசாங்கம் எங்களை கொடுமைப் படுத்துது எண்டு வெளிநாட்டிலை டாம்பீகமாகவும் பகட்டாகவும் வாழ்ந்துகொண்டு புளொக்கிலையும் போரத்திலையும் எழுதுறாக்களே உங்களுக்கு விடிவு இல்லை மற்றாக்களுக்கு முந்தி நீங்கள்தான் ஊருக்குப் போகவேணும்.எங்கடை நாட்டிலை சமாதானம் வரவேணும் சாந்தி நிலவவேணும் தமிழன் சிங்களவனையும் முஸ்லிமையும் சிங்களவன் தமிழனையும் மதிக்க வேண்டுமெண்டுறவை உங்களுக்குப் பின்னாலை வருவினம்.

நல்லகாலம் லெனினோ ஹோசிமினோ சுபாஷ் சந்திரபோசோ உயிரோடை இல்லை.இருந்திருந்தா உங்கடை சகோதரர் உள்நாட்டிலை கஷ்டப்பட்டுச் செத்துக்கொண்டிருக்க நீங்கள் பிரான்சிலையும் சிங்கப்பூரிலையும் இருந்துகொண்டு எழுதிக்கிழித்துக்கொண்டும் கூட்டத்திலை பிளந்து கட்டிக்கொண்டும் இருக்கிறியள் எண்டு அவையைப் பார்த்தும் சவுண்டு விட்டிருக்கலாம்.

கறுப்பி சொன்னமாதிரி புலியின்ரை ஆதரவு ஆதரவு எண்டு சொல்லிச் சொல்லியே நிறையப் பேர் சொத்துப் பத்துச் சேர்த்துப் போட்டினம்.அதைவிட புலியை எதிர்த்து எதிர்த்தே வெளிநாடுகளிலை நிறையப் பேர் பெரியாக்களாகிட்டினம் இதெல்லாம் பொறுக்க முடியாமல்தான் சொல்லுறம்.கறுப்பி ஏற்கனவே இதை சொன்னதாலை என்னையும் கறுப்பியையும் தவிர்த்து ஆருக்காவது தொப்பி அளவாயிருந்தால் போட்டுக்கொள்ளலாம்.

இந்த உலகம் அரஜாகத்தாலை நிரம்பியிருக்கு மனிதாபிமானம் குறைஞ்சுபோச்செண்டு புளொக்கிலை புலம்பாதையுங்கோ இதுக்கு எங்கை போய் அடிபடுறதெண்டு எனக்குத் தெரியேலை.வேணுமெண்டா சந்திரமண்டலக்காரரோடை அடிபடலாம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
:roll: :roll: Confusedhock: Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
என்னா தமிழினி ஒரேயடியாக குளப்பிறீங்க :roll:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#7
நான் குழப்பவில்லை... பாத்ததை போட்டிருக்கிறன். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
tamilini Wrote:நான் குழப்பவில்லை... பாத்ததை போட்டிருக்கிறன். :wink:

¼Á¢ú À¡÷ò¾¨¾ §À¡ðÎþÕ츢ȢÂû ºÃ¢.. ¿¡Ûõ 10,15 ¾¼¨Å Å¡º¢òÐÅ¢ð§¼ý.. «¾¢ø «Å÷¸û ±ýÉò¨¾¦º¡øÖÈ¡÷¸û ±ýÀ¾¨É Å¢Çí¸ÓÊÂÅ¢ø¨Ä.. §º¡ ¿£í¸û ±ýÉ ¦ºö¢ȢÂû ±ñ¼¡ø. ¯í¸ÙìÌ Å¢Çí¸¢ÂÅü¨È þí§¸ Å¢ÇìÌí¸û. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
பிளளை தமிழ் உவன் டக் சொன்ன மாதிரி இந்த வயசுகட்டைகளுக்கு விளங்கிற படி எழுதலாம்தானே....நாங்கள் எல்லாம் உங்களை மாதிரி எங்கை படிச்சம் ஒருஆள் சொன்னதான் விளங்கும்....தம்பி டண் நீயே பெரிய போஸ்டுகளிலை இருக்கிறய் உனக்கும் விளங்கேலை எண்டால் சிக்கல்தான்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
டக்கு இது தானே வேண்டாம் என்கிறது பாத்ததைப்போட்டன்.. விளங்கித்தான் போட்டன் என்று சொன்னனா..??? :mrgreen: :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
tamilini Wrote:டக்கு இது தானே வேண்டாம் என்கிறது பாத்ததைப்போட்டன்.. விளங்கித்தான் போட்டன் என்று சொன்னனா..??? :mrgreen: :mrgreen: :mrgreen:
¬¸ ¦Á¡ò¾ò¾¢Ä ¡ú¸Çò¾¢Ä þôÀÊ ¯í¸ÙìÌ Ü¼ Ò⡾¨¾ ±øÄ¡õ ¦¸¡ñÎÅóÐ ¦¸¡ðʦ¸¡ñÎ þÕ츢ȢÂû ±ýÀ¨¾ ´òЦ¸¡ûÙÈ£í¸ «ôÀÊ¡?? :evil:

ºÃ¢ ºÃ¢ ¸Š¼ôÀ¼¡§¾í§¸¡.. «ðģР«Ð¡÷ ¸ÚôÀ¢ ±ñ¼¨¾ ÁðÎõ ¦º¡øÄ¢Îí¸.. :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
இந்த தமிழ்மணத்தில சுட்டது.. தான்
www.thamizmanam.com இங்க போனால்.. நிறைய விடயங்கள் எடுகு;கலாம். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
tamilini Wrote:இந்த தமிழ்மணத்தில சுட்டது.. தான்
www.thamizmanam.com இங்க போனால்.. நிறைய விடயங்கள் எடுகு;கலாம். :wink:

±ÉìÌ «í¸ §À¡¸ ±øÄ¡õ Å¢ÕôÀÁ¢ø¨Ä Àð ¿£í¸û 7000 ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅòÐõ þôÀÊÂ¡É ¾ÅÚ¸¨Ç Ţθ¢ýÈ£÷¸û ±ýÀо¡ý Å¢Çí¸Å¢ø¨Ä..

:evil: þôÀ Å¢ð¼ À¢¨Æ¨Â ¯í¸Ç¢ý ¦º¡ó¾ ¸ÕòÐãÄõ ¿¢Å÷ò¾¢ ¦ºöÔí¸û.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
என்ன பிழைவிட்டன் டக்கண்ணா..?? :wink: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
tamilini Wrote:என்ன பிழைவிட்டன் டக்கண்ணா..?? :wink: :evil:

´ñÎÁ¢ø¨Ä Å¢Îí¸ «¨¾... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
தயவு செய்து சொல்லுங்கள் டக் அண்ணா.. அதை இங்க இணைச்சதை தப்பு என்கிறீங்களா..?? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
tamilini Wrote:தயவு செய்து சொல்லுங்கள் டக் அண்ணா.. அதை இங்க இணைச்சதை தப்பு என்கிறீங்களா..?? :roll:

«ôÀÊ¦ÂøÄ¡õ ¦º¡øÖ§Å½¡?? ±ÉìÌò¾¡ý Å¢Çí¸Å¢ø¨Ä ¦¸¡ñÎÅóÐ þí§¸ §À¡ð¼ ¯Á측ÅÐÅ¢Çí̾¡ ±ñÎôÀ¡÷ò§¾ý.. «Ð¾¡ý, «¨¾Å¢¼ «¨¾ Å¡º¢ì¸¢ÈÅ÷¸û ±ø§Ä¡Õ¨¼Â Ó¸í¸¨Ç À¡÷ìÌõ¦À¡ØÐÀ⾡ÀÁ¸ ¯ûÇÐ... ºÃ¢Â¡¸ ¸Š¼Àθ¢È¡÷¸û.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
Danklas Wrote:«ðģР«Ð¡÷ ¸ÚôÀ¢ ±ñ¼¨¾ ÁðÎõ ¦º¡øÄ¢Îí¸.. :roll:

கறுப்பி (சுமதி ரூபன்?) சொந்த வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து எழுதி வருகின்றார். இவருடைய கருத்துக்கள் பொதுவாக ஈழ போராட்டத்திற்கு எதிரானவை என்பது பலரின் கருத்து.

அண்மையில் புலத்தில் சுகவாழ்க்கையில் இருந்து போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் சுயநலவாதிகள் அவர்களுக்கு உண்மையில் போராட்டத்திற்கு ஆதரவளிக்க விரும்பம் இருந்தால் ஈழம் சென்று போராட்டத்தில் இணையவேண்டும் என்ற தொனிப்பட பதிவு ஒன்றை இணைத்து இருந்தார், அந்த பதிவையும் அதற்கு எல்லாளன், வன்னியன், ஈழநாதன் போன்றோர் எழுதிய பதில்களையுமே தமிழினி மேலே இணைத்துள்ளார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
KULAKADDAN Wrote::roll: :roll: Confusedhock: Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நம்ம முளிசலுக்கு இதில போட்டது விளங்கேல்லை என்டதல்ல....... :wink: Idea :|
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#20
மதன் இது டக்குக்கு விளங்கவில்லை என்று.. விளக்கிக்கொண்டு இருக்கிறியளா..?? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)