Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவ தளபதியின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி என்ன?
#1
கிழக்குப் பிராந்திய இராணுவ தளபதியின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி என்ன?

விசாரணைகளிலிருந்து பாதுகாக்கவா? புலிகள் அச்சுறுத்தல் காரணமாகவா?

கிழக்குப் பிராந்திய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இராணுவ தலைமையகத்திற்கு இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளார். வெலிக்கந்தைக்கு அப்பால் தீவுச்சேனை கிராமத்தில் கருணா குழுவினரின் முகாமிருந்தது அம்பலத்திற்கு வந்ததையடுத்து இவர் அவசர அவசரமாக இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளார். எனினும்ää இவரது இந்த இடமாற்றத்திற்கு மேலும் பல காரணங்களிருப்பதாகவே கருதப்படுகிறது.

கிழக்குப் பிராந்திய இராணுவ தலைமையகம் மின்னேரியாவிலுள்ளது. பொலநறுவை மாவட்டத்திலுள்ள இப்பிரதேத்திலிருக்கும் 23 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இருந்தார். கருணாவின் கிளர்ச்சியை தொடர்ந்து கருணாவுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவித்தன.

கருணா கொழும்பில் இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பிலிருந்த போது கருணாவை இவர் அடிக்கடி சந்தித்ததாகக் கூட தகவல்கள் வெளியாகின. இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்ää தற்போது கிழக்கில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புபட்டவரென்பது புலிகளுக்கு நன்கு தெரியும்.

கருணா குழுவினருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர் ஆதரவளித்து வந்ததை அரசு தரப்பும் நன்கறியும். புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் இவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

வெலிக்கந்தையிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு முகாமே இந்த நிழல் யுத்தத்தின் மையத் தளமென புலிகள் ஆரம்பத்திலேயே இனங்கண்டு விட்டனர். இந்த நிலையிலேயே கருணா குழுவினரின் செயற்பாடும் வெலிக்கந்தையையும் அதன் சுற்றுப்புறங்களையும் மையமாகக் கொண்டு செயற்படää இராணுவத்தினருக்கும் கருணா குழுவினருக்குமிடையிலான தொடர்புகள் அம்பலத்திற்கு வந்தன.

புலிகளுக்கெதிரான தாக்குதல்களின் போதெல்லாம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தொடர்புகள் குறித்து புலிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியதுடன் தங்களுக்கெதிரான நிழல் யுத்தத்தில் இராணுவத்தினரின் தொடர்புகள் குறித்து ஆதாரங்களுடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் முறைப்பாடு செய்து வந்தனர்.

கருணாவின் கிளர்ச்சியைத் தொடர்ந்து கருணா குழுவின் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரந்துபட்டுக் காணப்பட்ட போது புலிகளின் அதிரடித் தாக்குதல்கள் பலவற்றில் கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் அந்தக் குழுவின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிடவேää கருணா குழுவின் செயற்பாடு மட்டக்களப்பில் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் மட்டுநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் புலிகள் மீது பரவலாகத் தாக்குதல் நடைபெற்றது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தங்கள் அரசியல் நடவடிக்கைக்காகச் செல்லும் புலிகளின் போக்குவரத்துக்கள் குறித்த பூரண விபரங்களை இராணுவச் சோதனை நிலையங்களிலிருந்து பெற்றே கருணா குழுவினர் தங்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதாக புலிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வந்தனர்.

கருணா குழுவினர் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட எஞ்சியவர்களை பாதுகாக்க வேண்டியதொரு தேவை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்பட்டது. அதேநேரம்ää எஞ்சியிருந்தவர்களை பயன்படுத்தி புலிகள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவையுமிருந்தது.


இந்த நிலையில் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதியில் இவர்களது நடமாட்டமும் நடவடிக்கையும் பெருமளவில் குறைந்த அதேநேரம் மட்டக்களப்பு நகரில் இவர்களது தாக்குதல்கள் அவ்வப்போது இடம்பெற்றன. எனினும்ää பின்னர் அதனையும் புலிகள் கட்டுப்படுத்தியதுடன் வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்த இராணுவ உளவாளிகளையும் அடுத்தடுத்து இலக்கு வைக்கää இவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டதுடன் இவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்த வேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டது.

இந்நேரத்தில் தான் வெலிக்கந்தையிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தை அண்டிய பகுதிகளில் வைத்து இவர்களை இயங்க வைக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு தீர்மானித்ததாக புலிகள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கேற்ப அப்பகுதிகளில் படை முகாம்களுக்கு சற்று அப்பால் தமிழ்ää முஸ்லிம்ää சிங்களக் கிராமங்களுக்குள் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டு இவர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவு இயக்கி வந்தது. இவர்களும் பொலநறுவை - மட்டக்களப்பு எல்லையோரத்தில் செயற்பட்டு அவ்வப்போது புலிகள் மீதான தாக்குதலை நடத்தி வரும் அதேநேரம் கருணா குழு பற்றி சிங்களää ஆங்கில ஊடகங்களும் அரச ஊடகங்களும் பெரிதளவில் செய்திகளை வெளியிட்டு கருணா குழு பற்றி சிங்கள மக்கள் மத்தியில் மாயை ஒன்றை தோற்றுவித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு முன்னர் பொறுப்பாகவிருந்த கப்டன் பண்டார என்பவரே தற்போது வெலிக்கந்தையில் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ளார். இவரே கருணா குழுவை இயக்கி வருவதாக பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

இதேபோன்றே அம்பாறை மாவட்டத்தில்ää அப்பகுதிக்கான இராணுவ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கப்டன் கருணாரத்ன புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தின் பின்னணியிலிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தனவின் ஆசியுடன் இவர்கள் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால்ää இவர்களை புலிகளும் இலக்கு வைக்கக் காத்திருக்கின்றனர். தங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடனேயே நடப்பதையும் புலிகள் பல தடவைகள் சுட்டிக்காட்டியுமுள்ளனர்.

கௌசல்யனின் படுகொலை மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்தனர். வெலிக்கந்தை பிள்ளையாரடியில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் மூலம் வெலிக்கந்தை பகுதியில் கருணா குழுவினர் இருப்பது உறுதியாகி விட்டதையும் புலிகள் சுட்டிக் காட்டினர். ஆனாலும்ää இது குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றது.

கருணா குழுவில் எஞ்சியிருப்பவர்களில் முக்கியமானவர்களான மங்களன்ää இனியபாரதிää ஜெயம்ää மார்க்கன்ää பிள்ளையான்ää சின்னத்தம்பிää றியசீலன் ஆகியோரைப் பயன்படுத்தியே இராணுவ புலனாய்வுப் பிரிவு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை தொடர்கிறது. மார்க்கன் கடந்த வருட பிற்பகுதியில் கொழும்பில் வெள்ளவத்தையில் இடம்பெற்ற தாக்குதலிலும் மங்களன் அண்மையில் தீவுச்சேனையில் இடம்பெற்ற தாக்குதலிலும் படுகாயமடைந்தனர்.

தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமில் 12 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் காவல் கடவையிலிருப்பதன் மூலம்ää சிறுவர்களையாவது தங்கள் குழுவில் சேர்த்துவிட இவர்கள் முயல்வது தெரிகிறது. இதை விட இந்த ஏழு பேரும் கிழக்கில் வேறு வேறு பகுதிகளிலிருந்தே செயற்படுகின்றனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே இவர்களது வேலையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம்ää வெலிக்கந்தைக்கு அருகே தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமிருப்பது அம்பலத்திற்கு வந்ததால் அரசுக்கும் படைத் தரப்பிற்கும் நெருக்கடி ஏற்பட்ட போதிலும் புலிகள் கூறுவது போல் அக் குழுவில் ஒரு சிலர் தான் எஞ்சியிருக்கிறார்களென்பது பொய் முகாம் அமைத்து அதன் பாதுகாப்புக்கு காவலரண்கள் அமைத்து பெருமெடுப்பில் செயற்படக் கூடிய வல்லமையுடன் கருணா குழு இருப்பதாக வெளியுலகுக்கு காட்டுவதில் தாங்கள் வெற்றியடைந்து விட்டதாகவே படைத்தரப்பு கருதுகிறது.

கடந்த வாரம் மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்குமிடையே செங்கலடியிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில்ää புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வீரயன்ää வெளிக்குளம் பகுதியில் ஊடுருவியவர்கள் இரவு நேரத்தில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் இரு அப்பாவிகள் உயிரிழந்தனர். இதேபோன்றதொரு தாக்குதல் அன்றைய தினம் செங்கலடிக்கு அப்பாலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நிகழ்ந்துள்ளது.

வாகனமொன்றில் வந்து கொண்டிருந்த இரு புலி உறுப்பினர்களைää மற்றொரு வாகனத்தில் வந்து வழி மறித்தோர் வெட்டிக் கொலை செய்து விட்டு தாங்கள் வந்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். மேஜர் குறளமுதன்ää லெப்.இசைமாறன் ஆகியோர் இதில் உயிரிழந்தனர். இவ்விரு தாக்குதலையும் ஒரே நாளில் இராணுவ விசேட படையணியே மேற்கொண்டதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருணா குழுவினர் புலிகளின் பகுதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதல்களில் பல புலிகள் கொல்லப்பட்டதாக மறுநாள் சிங்களää ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன. வெலிக்கந்தைப் பகுதியுடன் கருணா குழுவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டு வந்த போதுää கருணா குழு மட்டக்களப்பில் புலிகளின் பகுதிக்குள்ளும் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தது என்பதை காண்பிக்கவே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தச் சு10ழ்நிலையிலேயே கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது இடத்திற்கு பிரிகேடியர் திஸ்ஸ ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கப்டன் பண்டார மற்றும் கப்டன் கருணாரட்ன ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்குமாறு வலியுறுத்தப்பட்ட போதும் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன மட்டுமே இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக் காலங்களில் கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன சாட்சியமளிக்க வேண்டிய சு10ழ்நிலை ஏற்பட்டதால் அவர் திடீர் இடமாற்றஞ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் சாட்சியமளிக்கச் சென்றால் ää தீவுச்சேனை முகாம் குறித்த விடயம் மேலும் அம்பலமாகிவிடலாமென்பதுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் கருணா குழுவிற்குமிடையிலான தொடர்பும் அம்பலமாகிவிடலாமெனவும் கருதப்படுகிறது.

ஆனாலும்ää தன்னைக் கொல்ல புலிகள் முயல்வதாக மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன கூறியிருந்தார். பொலனறுவையில் புகையிரத நிலையமொன்றில் அண்மையில் கிளேமோர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிளேமோர்ää இவரை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் இராணுவ தரப்பில் கூறப்பட்டதும் இவ்வாறானதொரு சு10ழ்நிலையிலேயே இவரது பாதுகாப்பு கருதி இவர் இடமாற்றஞ் செய்யப்பட்டதாக படைத்தரப்பில் கூறப்படுகிறது.

கிழக்கில் தினமும் கொலைகளும் துப்பாக்கிச் சு10ட்டுச் சம்பவங்களும் தொடர்கையில் அங்கு புலிகள் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றனர். தங்கள் நிர்வாகச் செயற்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் முழு அளவில் விஸ்தரித்து வருகின்றனர். அதுபோல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் புலிகளின் நிழல் நிர்வாகம் நன்கு செயற்படத் தொடங்கிவிட்டது.

கருணா குழுவினரின் இன்றைய இலக்கெல்லாம் கிழக்கில் சுமுக நிலையை குழப்புவதேயாகும். இராணுவப் புலனாய்வுப் பிரிவு இவர்களைப் பயன்படுத்தி இதனைச் செய்ய முயல்கிறது. கருணா எங்கிருக்கின்றாரெனத் தெரியாத நிலையில் எஞ்சிய ஆறுபேரும்ää தங்களுடன் இருக்கும் சிலரைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால்ää இவற்றையும் விரைவில் கட்டுப்படுத்தி விட முடியுமென புலிகள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் புலனாய்வுத்துறை முழு அளவில் செயற்படுவது படையினருக்கு நன்கு தெரியும். கருணா குழுவினரதும் ஏனைய தமிழ்க் குழுவினரதும் பெரும்பாலான செயற்பாட்டை புலிகள் நன்கு அவதானித்தே வருகின்றனர். ஒரு புறம் தங்களுக்கெதிரான நிழல் யுத்தத்தை முறியடிக்க முனைப்புடன் செயற்படும் புலிகள்ää மறுபுறம் தங்கள் பிடியை மேலும் இறுக்க இப் பகுதியில் நிழல் நிர்வாகத்தையும் விஸ்தரித்து வருகின்றனர்.
வாiயெமரசயட.உழஅ
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#2
¾Á¢Æ¢ÆÅ¢Î¾¨ÄÒÄ¢¸û ¾ü§À¡Ð ¾í¸Ç¢ý ¸¡ö ¿¸÷ò¾¨Ä ¯û¿¡ÊÖõ ¦ÅÇ¢¿¡ðÊÖõ Á¢¸×õ «ÛÀÅõ Å¡öó¾ ´Õ «¨ÁôÀ¡¸ ÅÖôÀÎò¾¢¦¸¡ñÎ ÅÕ¸¢È¡÷¸û, ¬É¡ø «¾üÌÁ¡È¡¸ þÄí¨¸ þáÏÅõ ¾í¸Ç¢ý ¸¡ö¸¨Ç ±ùÅ¡Ú ¿¸÷òÐÅÐ ±ýÀÐ ¦¾Ã¢Â¡Áø ¾¢½Ú¸¢ÈÐ ±ýÀ¨¾ ¸ðΨà ±Îòи¡ðθ¢ÈÐ. :?:

¿ýÈ¢ ¿¼¡. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]

,,,,.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)