Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாள், எந்நாளோ!
#1
<b>நாள், எந்நாளோ!</b>


என்னுயிர்த்தாய் ஈன்றெடுத்த ஈழத்துச் சோதரனின்
எண்ணமெலாம் ஈடேறும் நாள் எந்நாளோ!
கண்ணிடையே நீர்பெருகக் காத்திருக்கும் அன்னவனின்
கனவெல்லாம் நனவாகும் நாள் எந்நாளோ!

வாழையடி வாழையென வாழ்ந்திருந்த யாழ்தரணி
வண்டமிழார் வசமாகும் நாள் எந்நாளோ!
ஈழமகன் வீறுடனே எழுந்தருள, இப்புவியின்
எண்டிசையும் புகழ்முழங்கும் நாள் எந்நாளோ!

சமன்செய்து சீர்தூக்கும் தமிழனுக்குத் தாய்மண்ணில்
சமஉரிமை வாய்க்கின்ற நாள் எந்நாளோ!
அமைதியெனும் நதிவெள்ளம் பெருக்கெடுக்க, அந்நதியில்
அருந்தமிழர் நீராடும் நாள் எந்நாளோ!

நெஞ்சினிலே ஈழமெனும் நெடியதொரு குடியிருப்பு
நிரந்தரமாய் வேரூன்றும் நாள் எந்நாளோ!
நஞ்(சு)இனத்தை வேரறுக்கும் நற்றமிழர்க் குடிப்பிறந்த
நம் சினத்தை ஊரறியும் நாள் எந்நாளோ!

கச்சத்தீ(வு) என்பதொரு தமிழ்நெய்தல் மண்ணின்கண்
காடையனைப் பழிதீர்க்கும் நாள் எந்நாளோ!
உச்சிவரை எதிரிகளை உதறலுற வைத்திடத்தான்
ஒருதருணம் நமக்குவரும் நாள் எந்நாளோ!

பீடுடைய தமிழருக்குப் பிழைசெய்த தீயவர்தம்
பிடரிமிசைப் பேரிடிவீழ் நாள் எந்நாளோ!
நாடுடையோம் நாமென்னும் நற்செய்தி கோலோச்ச,
நாற்புறமும் தமிழ்மணக்கும் நாள் எந்நாளோ!

அந்நியனாய் அலைந்துழலும் நிலைமாறி அருந்தமிழன்
அரசாட்சி புரிகின்ற நாள் எந்நாளோ!
பொன்ஈழம் மலர்கின்ற பொழுதொன்று கருக்கொண்டு,
புதுக்காற்று எமைத்தீண்டும் நாள் எந்நாளோ!

இறப்புதனை முத்தமிட்டும் இறவாதார் சந்ததியார்
ஈழத்தை முத்தமிடும் நாள் எந்நாளோ!
மறப் படையார் மாற்றார்முன் இறப்படையார் என்பதொரு
மணிமகுடம் வென்றெடுக்கும் நாள் எந்நாளோ!

தென்னிலங்கை மண்டலத்தில் செந்தமிழன் குரலுக்குத்
தென்றலும்தன் செவிசாய்க்கும் நாள் எந்நாளோ!
தன்இளங்கை தனைத்தன்றன் தாய்பிடிக்க, சுதந்திரமாய்த்
தமிழ்மழலை நடைபயிலும் நாள் எந்நாளோ!

என்தாயும் என்சேயும் எனைச்சார்ந்த எல்லாரும்
ஈழத்தைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ!
குன்றாத பொலிவோடு பறக்கின்ற யாழ்நாட்டின்
கொடிவணங்கி மெய்சிலிர்க்கும் நாள் எந்நாளோ

தொ.சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
Reply
#2
சுசைமிக்கேல் ஐயா அவர்கள், கள உறவுகளுக்கு தனது வணக்கத்தை தெரிவிக்ÌõÀÊ §¸ðÎ즸¡ñ¼¡÷!

அனைவருக்கும் அவர் சார்பாக வணக்கங்கள்!
Reply
#3
பாராட்டுக்கள். நான்பாராட்டி எழுதிக்கொண்டிருக்கும்போது இணைப்பு அறுந்துவிட்டது. மீண்டும் எழுத முன்பு இதனை அனுப்பு கிறேன்
Reply
#4
நன்றி மன்னரே.. கவிதை இணைப்புக்கு.. அவரின் தனிச்செய்தியை இப்படி பப்ளிக்காய் போடலாமா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
ஏக்கத்தின் உணர்வுகளை கவி
ஆக்கத்தில் தந்தீர்கள்;
முதல் எருதியதெல்லாம் மறந்தே போச்சு
கவிவரத்த தொ.ஞ10சைமிக்கேல் அவர்களுக்கும் கரிக்கும் நன்றி.
மீண்டும் ஊரு நேரத்தில் எனது எண்ணத்தை வெளியிடுகிறேன்.குறை கொள்ளவேண்டாம்.
எனது ஈமெயில் silanthy@yahoo.co.uk
Reply
#6
எழுத்துப்பிழைக்கு குறை கொள்ளவேண்டாம்
Reply
#7
கனவெல்லாம் நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#8
இணைத்தமைக்கு நன்றி மன்னா...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->நன்றி மன்னரே.. கவிதை இணைப்புக்கு.. அவரின் தனிச்செய்தியை இப்படி பப்ளிக்காய் போடலாமா..??  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தங்கையே அதில ஏதும் மறைக்கிறதுக்கு ஒன்றுமில்லை போல இருந்தது அதனால் அப்படியே அவரின் மடலை போட்டுவிட்டேன்! சரி ஏன் வீண் வம்பு அதை நீக்கிவிட்டுள்ளேன்!
Reply
#10
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தங்கையே அதில ஏதும் மறைக்கிறதுக்கு ஒன்றுமில்லை போல இருந்தது அதனால் அப்படியே அவரின் மடலை போட்டுவிட்டேன்! சரி ஏன் வீண் வம்பு அதை நீக்கிவிட்டுள்ளேன்!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
இணைத்தமைக்கு நன்றி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)