Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரேஜஸ் கப்பல்: சீன உதவிபெற அமெ. ஆட்சேபம்
#1
தான் வழங்கிய போர்க் கப்பல் தொடர்பாக சீனாவின் உதவியை இலங்கை நாடுவதற்கு அமெரிக்கா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையினருக்கு அமெரிக் காவினால் வழங்கப்பட்ட கரேஜஸ் போர்க்கப் பலுக்கு சுடுகலன்களைப் பொருத்துதல், கப்பலைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் என்பவற்றுக்காக சீன அரசுடன் இலங்கைக் கடற்படை யினர் ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளனர்இந்த ஒப்பந்தத்திற்கே அமெரிக்கா கடுமையான ஆட் சேபனையைத் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆயுத விவகாரம் தொடர்பில் சீனா குறித்து அமெரிக்கா கொண்டிருக்கும் கொள்கைரீதியான தீர்மானமே இதற்குக் காரணமெனக் கூறப்படு கிறது.
கரேஜஸ் கப்பல் தொடர்பில் மேற்கொள்ளப் படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அமெ ரிக்காவிடமிருந்தே ஆலோசனைகளும், ஒப்பந் தங்களும் பெறப்படவேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
ஏற்கனவே இந்தக் கப்பலில் பணியாற்றுவ தற்காக இலங்கைக் கடற்படைக் குழுவொன்றுக்கு அமெரிக்கா பயிற்சியளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Jaffna Uthayan
Reply
#2
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Idea
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)