Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உடலில் மின்சாரம்!
#1
பார்வையில் இருந்து மின்சாரம் பாய்வதும், உடலைத் தொட்டதும் மின்சாரம் பாய்வதும் கவிதையில் பார்த்திருக்கிறோம். இதுநடைமுறையில் சாத்தியமானதா?. ஆம். இது முழுவது நடக்கக்கூடியதே.

ஒவ்வொருவரின் உடலிலும் நிலைமின்சாரம்(Static Electricity) உண்டு. பல நேரங்களில் அது மிகக்குறைந்த அளவாய் இருப்பதால் உணர இயலுவதில்லை. குறைந்த படசம் 500 ஓல்டுக்கு மேல் இந்த நிலைமின்சாரம் தேங்கியிருந்தால் அதைத் தெளிவாக உணர முடியும். ஐநூறு ஓல்ட் என்றவுடன் புருவத்தை உயர்த்த வேண்டாம். நம் உடலில் சில சமயங்களில் 20,000 volt-க்குமேல்கூட நிலைமின்சாரம் தேங்குவது சாத்தியமானதுதான். இந்த அளவுக்கு மின்சாரம் உடலில் தேங்கும்போது நீங்கள் உடலிலிருந்து தீப்பொறி பறப்பதையே காண இயலும்.

சிலநாட்களுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் தனது டி-சர்டை வேகமாகக் கழற்றினால் தீப்பொறி பறப்பதாய்க் கூறினார். இதுவும் குறிப்பிட்ட ஒரு டிசர்டுக்கு மட்டும்தான் இது நடக்கிறதாம். இது முழுக்கவும் நிலைமின்சாரத்தால் நிகழ்வதுதான்.

கார் கதவைத் திறக்கக் கையை நீட்டும்போது ஷாக் அடித்த அனுபவமோ அல்லது விரல்களில் இருந்து தீப்பொறி பறந்த அனுபவமோ யாருக்காவது உண்டா ?. இது கடுங்குளிர் சமயத்தில் நடக்கூடியது. மிகக்காய்ந்த, மிகக்குளிரான தட்பவெப்பம் உள்ள நாளில் ஷூவைத் தரைவிரிப்பில் வேகமாகத் தேய்க்கும்போது உடலில் பல்லாயிரக்கணக்கான வோல்ட் நிலைமின்சாரம் தேங்குகிறது. பொதுவாக நம்மூரில் இது நடப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. ஏனென்றால் அந்தளவுக்குக் காய்ந்த(dry weather), குளிரான தட்பவெப்பம் பொதுவாய் இருப்பதில்லை.

பட்டாசுத் தொழிற்சாலைகள் பற்றிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இதுபோன்ற நிலைமின்சாரத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விதிகள் உள்ளன. பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிமருந்தினைத் தொட்டுவேலை செய்பவர்கள் வெளியே அங்குச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் உலோகத்தகட்டில் தனது கைகளைத் தேய்த்துவிட்டு நுழைவார்கள்.

நமது உடை நிலைமின்சாரத்தைத் தேக்கிக்கொள்வதில் முன்னிலை வகிக்கிறது. கீழே சில வகை உடைகள் நம் உடலில் தேக்கும் நிலைமின்சாரத்தின் உச்சஅளவு.

பருத்தி - 7,000 வோல்ட்ஸ்
கம்பளி - 9,000 வோல்ட்ஸ்
நைலான் - 21,000 வோல்ட்ஸ் - இந்த நேரத்தில் நாம் நிஜமாகவே இரும்புக்கை மாயாவிதான் ;-)

எனது இன்னொரு நண்பர் ஒரு குறிப்பிட்ட ஷூவை அணிந்திருக்கும் நாட்களில் எதையாவது எடுக்கக்கையை நீட்டும்போது "ஷாக்" அடிக்கும் திகில் அனுபவத்தை அடிக்கடிப் பெற்றார். காரணம் அந்த ஷூ செய்யப்பட்டிருந்த செயற்கைப் பாலிமரின் கைங்கர்யம்தான்.

நண்பர்களே, உங்களில் யாருக்காவது இதுபோன்ற நிலைமின்னதிர்ச்சி அனுபவம் உண்டா ?.

நன்றி முத்து

இந்த அனுபவம் எனக்கு அடிக்கடி நிகழ்வது உண்டு! பல மணித்தியாலங்கள் கணனியுடன் இருந்துவிட்டு கதவை தொட்டால் கைவிரலில் இருந்து நெருப்பு பொறி பறப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன்! இது கொஞ்சம் முத்தி ஒரு தடவை கதவுடன் கை உரசுப்பட்டு கையில் உள்ள உரோமம் எரிந்து அவ்விடம் இப்பவும் கருமையாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக இதற்கு காரணம் தெரியாமல் குழம்பிபோய்யிருந்தனான், இந்த கட்டுரையை பார்த்த பின் கொஞ்சம் தெளிவு ஆனால் எப்படி இதை இல்லாமல் செய்வது ? இதனால் உடலுக்கு ஏதேனும் ஆபத்து வருமா?
Reply
#2
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Confusedhock: :?
Reply
#3
எனக்கு ஓடும் படியின் கைப்பிடியில் கை வைக்கும் போது அடிக்கடி இவ்வாறான அனுபவங்கள் நிறைய தடவை நடந்துள்ளது.
.
.!!
Reply
#4
[quote=hari]
இந்த அனுபவம் எனக்கு அடிக்கடி நிகழ்வது உண்டு! பல மணித்தியாலங்கள் கணனியுடன் இருந்துவிட்டு கதவை தொட்டால் கைவிரலில் இருந்து நெருப்பு பொறி பறப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன்! இது கொஞ்சம் முத்தி ஒரு தடவை கதவுடன் கை உரசுப்பட்டு கையில் உள்ள உரோமம் எரிந்து அவ்விடம் இப்பவும் கருமையாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக இதற்கு காரணம் தெரியாமல் குழம்பிபோய்யிருந்தனான், இந்த கட்டுரையை பார்த்த பின் கொஞ்சம் தெளிவு ஆனால் எப்படி இதை இல்லாமல் செய்வது ? இதனால் உடலுக்கு ஏதேனும் ஆபத்து வருமா?

எனக்கு இந்த அனுபவம் உண்டு. கதவிவின் கைபிடியை அல்லது கார் கதவை தொடும்போது இது நடக்கின்றது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்று எனக்கு தெரியாது. நான் தொட்டதனால் சிறிய மெமறி மின்ணணு சாதனங்கள் பழுதடைந்திருக்கின்றன.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
Quote:நான் தொட்டதனால் சிறிய மெமறி மின்ணணு சாதனங்கள் பழுதடைந்திருக்கின்றன.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
என்ன சிரிக்கிறீர்கள்! அவர் உண்மையைதான் சொல்கிறார்!
Reply
#7
[quote="Mathan" நான் தொட்டதனால் சிறிய மெமறி மின்ணணு சாதனங்கள் பழுதடைந்திருக்கின்றன.[/quote]ஜயய்யோ மறந்தும் ஆட்களைத் தொட்டுவிடாதீர்கள்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#8
Mathan Wrote:நான் தொட்டதனால் சிறிய மெமறி மின்ணணு சாதனங்கள் பழுதடைந்திருக்கின்றன.

eelapirean Wrote:ஜயய்யோ மறந்தும் ஆட்களைத் தொட்டுவிடாதீர்கள்
தம்பி ஈழப்பிரியன் ஆட்களை ஆரப்பு மின்னனு சாதனங்களுக்கு ஒப்பிட்டது...பொம்பிளை பிள்ளைகளை பாத்து எப்பிடியெல்லாம் சொல்லுறாங்கள் இப்பத்தைய பெடிசுகள் (காய்,, செமகட்டை... நாட்டுக்கட்டை...விடகோழி.....இன்னும் நிறைய) இந்த லச்சனத்திலை இவையளை மதன் தொட்டால் அவருக்கு கரண்ட் அடிக்காம இருக்க வேணும்...அவ்வளவுதான்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)