03-21-2005, 07:54 PM
நவீன தொழில்நுட்ப நஞ்சூட்டல் மூலமே யசீர் அரபாத் கொல்லப்பட்டார் - இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கருத்து
Monday, 21 March 2005
--------------------------------------------------------------------------------
பலஸ்தீனத்தின் முன்னாள் அதிபர் யசீர் அரபாத் நவீன தொழில்நுட்ப நஞ்சூட்டல் முறை மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அத்தலா குய்பா இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அரபாத் நோய் வாய்ப்பட்ட தினத்தன்று அவரைச் சந்தித்த இரு இஸ்ரேலியர்களும் லேசர் கருவி மூலம் யசீர் அரபாத் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்தே அரபாத் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனேடிய கடவுச் சீட்டை வைத்திருந்த இவர்கள் அரபாத் மீது லேசர் தாக்குதல் நடத்திய பின் தப்பி செல்ல முற்பட்ட வேளை பலஸ்தீன பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் பலஸ்தீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து உடனடியாக இஸ்ரேலிய அரசுக்கு தாங்கள் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யசீர் அரபாத்தின் குருதி மாதிரிகள் 16 நாடுகளில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கைகள் அனைத்திலும் உயர் தொழில்நுட்ப நஞ்சூட்டல் மூலமே அரபாத் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் குயூபா தெரிவித்தார்.
நன்றி சூரியன்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
þÉ¢ ±ýÉ ¿¼ì¸ô §À¡Ì§¾¡?