Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கில் கருணா குழு
#1
<b>உயிர் தப்ப வெளிநாடுகளுக்குச் சென்ற புலனாய்வாளர்களுக்கு அவசர அழைப்பு</b>

கிழக்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொல்லப்படுபவர்கள் யார் எனத் தெரியாதளவிற்கு கொலைகள் இடம்பெறுகின்றன. புலிகள் மீதான தாக்குதல்கள் நடைபெறும் அதேநேரம் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி கிழக்கில் புலிகளைப் பலவீனப்படுத்தி விட இராணுவ புலனாய்வுப் பிரிவு முயல்கிறது. அதேநேரம் இராணுவ புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத்தினரின் இந்த நோக்கத்திற்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு புறம் புலிகளுக்கெதிராக அரசு அரசியல் ரீதியில் எதிர்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகையில் மறு புறம் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கிழக்கில் குழப்பங்களை உருவாக்கி அதன் ஸ்திர நிலைமையை சீர்குலைக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கருணாவின் கிளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்கள் அவரது கட்டுப்பாட்டிலிருந்தன. மட்டக்களப்பிலிருந்து கருணாவின் வெளியேற்றத்தையடுத்து மட்டக்களப்பு நகர்ப்புறப் பகுதியில் கருணா குழுவினரின் நடவடிக்கைகள் சில காலங்களிருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் கருணா குழுவினரின் செயற்பாடு மிகவும் பலவீனமடைந்தது.

போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு போர்நிறுத்தம் அமுலிலிருக்கையில் சமாதான முயற்சிகளை முன்னகர்த்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த போதிலும், பலவீனமடைந்த கருணா குழுவை பயன்படுத்தி, அதாவது கருணா குழுவென்ற பெயரில் புலிகள் மீதான நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், புலிகளுக்கெதிரான இந்த நிழல் யுத்தத்தில் கருணா குழுவென்ற பெயரில் வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையே இராணுவ புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தியது. புலிகளும் இதனை நன்கறிந்திருந்தனர். இதனால் கருணா குழுவினருடன் ஏனைய தமிழ்க் குழுக்கள் மீதும் புலிகள் இலக்கு வைத்தனர். இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் தப்பியோடி விட்டனர். ஆனாலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது செயற்பாட்டை கைவிடவில்லை.

கருணா குழுவுக்கு எதிரான புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் பல வெற்றியளித்தன. மட்டக்களப்பிலும் கொழும்பிலும் கொழும்பின் புறநகர்ப் பகுதியிலும் வைத்து கருணா குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்படவே, கருணா குழுவென்ற பெயரில் தொடர்ந்தும் அதனை இயங்க வைக்கவும் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தவும் வேண்டிய தேவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்பட்டது.

இதனால், இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையும் கருணா குழுவென்ற பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு களமிறக்கியது. ஆனால், அது, எதிர்பார்த்த பலனை விட மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியது.

கருணா குழுவில் எஞ்சியிருந்தவர்களுக்குள்ளும் புலிகள் ஊடுருவியிருந்ததால் தமிழ்க் குழுக்களதும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரதும் நடவடிக்கைகளை புலிகள் நன்கறிந்து அதற்கேற்ப செயற்பட்டனர். இது இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், கிழக்கில் மீண்டும் புலிகள் ஸ்திர நிலையை உருவாக்குவதை தடுக்கும் நோக்கில் அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டனர்.

அத்துருகிரிய மிலேனியம் சிற்றி பாதுகாப்பு இல்லம் வெளியுலகிற்கு அம்பலமானதையடுத்து இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களது முழு விபரமும் எப்படியோ வெளிவந்தது. இந்தப் பட்டியல் புலிகளுக்கு கிடைத்து விடவே, இராணுவ புலனாய்வுப் பிரிவின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவில் தமிழ் உளவாளிகளே இல்லாது போய்விடுவார்களோ என அஞ்சுமளவிற்கு தமிழ்க் குழு உறுப்பினர்கள் தாக்குதல்களுக்கிலக்காகவே, இவர்களைப் பாதுகாப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு இரகசிய திட்டமொன்றை வகுத்தது. அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசுக்குத் தெரியாமல் தங்கள் இரகசியத் திட்டத்தை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நிறைவேற்றினர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்தியங்கும் தமிழ் உளவாளிகளுக்கு வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்து விமானத்திற்கான பயணச் சீட்டையும் வழங்கி அவர்களில் பலரை, பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இவ் வேளையில் தான் படையினருக்கு கருணா கைகொடுத்தார். அவரைப் பயன்படுத்தி கிழக்கை முற்றாகவே குழப்பி விட புலனாய்வுப் பிரிவு பெரும் திட்டங்களை தயாரித்திருந்த போதிலும், பின்னர் அவையெல்லாம் பகற்கனவாயின.
கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் அடுத்தடுத்து கொலையுண்டனர். எஞ்சியவர்களை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் இல்லாது போகவே இவர்களை வழிநடத்துவதற்காக, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு புலனாய்வுப் பிரிவினரால் அனுப்பி வைக்கப்பட்ட சில முக்கிய தமிழ் உளவாளிகள் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.

இதில் புளொட் மோகன் மிக முக்கியமானவர். இவரைப் பயன்படுத்தி கருணா குழுவை வழிநடத்தி கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களைத் தொடுக்க திட்டங்கள் தீட்டப்பட்ட போது புளொட் மோகன் கொல்லப்பட்டதுடன், இவரைப் போன்று மீண்டும் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்ட வேறு சிலரும் கொல்லப்படவே இராணுவ புலனாய்வுப் பிரிவு தடுமாறிப் போனது.

தமிழ் உளவாளிகளை இழக்காது கருணா குழுவின் பெயரில் கிழக்கில் தொடர்ந்தும் எவ்வாறு தாக்குதல்களை நடத்துவதெனவும் படைத்தரப்பு சிந்தித்தது. புலிகளின் சாதாரண போராளிகள் சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட போது, அது மக்களை குழப்பமடையச் செய்யும் வெற்றிமிகு தாக்குதல்களாக உணரப்படாததால் புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசியல் பணிகளில் ஈடுபடும் புலிகள் நிராயுதபாணிகளாகவே நடமாடுவர். அதேநேரம் இராணுவ சோதனைச் சாவடிகளூடாக பயணம் செய்யும் போது புலிகளின் விபரங்கள் பதிவு செய்யப்படுவதால் புலிகளின் நடமாட்டங்கள் குறித்த பூரண விபரங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிய வந்தன.

இந்த நிலையிலேயே புலிகளின் மட்டு.-அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கொல்லப்பட்டார். கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக படைத் தரப்பு கூறியதுடன், புலிகளின் முக்கிய தலைவர்களைக் கூட தாக்கும் வல்லமை கருணா குழுவிடமிருப்பதாகவும் தொடர்ந்தும் பிரசாரம் செய்தது.

கருணா குழுவென்ற பெயரில் தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தியே இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் கடுமையாகக் குற்றஞ் சாட்டினர். கருணா குழுவில் எஞ்சியிருப்பவர்களை புலிகளுக்கு நன்கு தெரியுமென்பதால் எஞ்சியிருக்கும் அவர்களது செயற்பாடுகள் குறித்த பூரண புலனாய்வுத் தகவல்களை புலிகள் பெற்றும் வருகின்றனர்.

தங்கள் மீதான தாக்குதல்களை தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவினரே மேற்கொண்டு வருவதாக புலிகள் நோர்வே தரப்பிடமும் கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளதுடன் இராணுவ துணைப்படையாக செயற்படும் இவர்களது நடவடிக்கை, போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது எனவும் கூறியுள்ளனர்.

தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் கிழக்கில் குழப்பங்களை தோற்றுவித்து ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவே முக்கிய காரணமென்பதை புலிகள் நன்குணர்ந்திருந்தாலும் இதுவரை படைத்தரப்புக்கெதிராக புலிகள் எவ்வித தாக்குதலையும் தொடுக்கவில்லை. பொறுமை காத்தே வருகின்றனர்.

கௌசல்யனின் கொலையை அடுத்து அரச தரப்பு கூட நோர்வே அனுசரணையாளர்களூடாக <b>புலிகளின் கோபத்தை தணிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. படை அதிகாரிகள் மீதோ அல்லது அரசுத் தலைவர்கள் மீதோ பதில் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாமென நோர்வேயூடாக அரசுத் தலைவர்கள் கேட்டது யாவருமறிந்த உண்மை.

[b]இதன் மூலம் கௌசல்யன் மீதான தாக்குதலில் படைத்தரப்பின் பங்களிப்பு எவ்வளவென்பதை அரச தரப்பு நன்கறிந்துள்ளது தெளிவாகியது. அரசின் இந்த வேண்டுகோள் மூலம், படைத்தரப்பிற்கும் இதில் தொடர்பிருப்பதை நோர்வே அனுசரணையாளர்களும் புரிந்து கொண்டதுடன் புலிகளைச் சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தியதுடன் படை அதிகாரிகள் மீதோ அரசுத் தலைவர்கள் மீதோ பதில் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாமெனவும் கேட்டிருந்தனர்.</b>

ஆனாலும் இந்தத் தாக்குதலையடுத்து இராணுவ புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. தமிழ் குழுக்களைச் சேர்ந்தவர்களும், இராணுவ உளவாளிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். படைத்தரப்பை விட படையினருடன் சேர்ந்து செயற்படும் உளவாளிகளே தற்போது அடுத்தடுத்து இலக்கு வைக்கப்படுகின்றனர்.

அதேநேரம் கருணா குழுவின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டு, இன்று பொலனறுவை வெலிக்கந்தையிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தின் அருகிலுள்ள பகுதிகளிலேயே இவை நடைபெறுகின்றன. இதனால் தற்போது, மட்டக்களப்பு மாவட்ட எல்லையிலுள்ள வெலிக்கந்தைப் பகுதி கொந்தளித்துப் போயுள்ளது.

கருணா குழுவின் பெயரால் புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதே புலனாய்வுப் பிரிவினரின் நோக்கமாகும். அதே நேரம் மட்டக்களப்பிற்கும் வன்னிக்குமிடையிலான புலிகளின் முக்கியஸ்தர்களது தரைவழிப் போக்குவரத்தும் வெலிக்கந்தை ஊடாகவே நடைபெறுகின்றது.

மட்டக்களப்பில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அல்லது ஓமந்தைக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் வந்துவிட்டால் அது படைத்தரப்பிற்கு தெரிந்து விடும்.

இது புலிகளின் நடமாட்டம் குறித்த விபரங்களை எவருக்கும் வழங்கப் போதுமானது. அத்துடன் புலிகளின் சாதாரண உறுப்பினர்களை தாக்க மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் தமிழ்க் குழுக்களை புலிகள் சுலபமாக இலக்கு வைத்துவிடுவதால் ,மட்டக்களப்பில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் இந்த தமிழ்க் குழுக்கள் வெலிக்கந்தை பகுதியில் வைத்தே புலிகளை இலக்கு வைக்க முயல்கின்றன.

இதனால் அண்மைக் காலங்களில் வெலிக்கந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அடுத்தடுத்து பல கொலைகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் அப்பகுதியில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டமும் அதிகரித்து, முன்னர் அமைதியாக இருந்த வெலிக்கந்தை இன்று இரத்தக்களரியாகி விட்டது.

இந்தப் பகுதியிலுள்ள ஆயுதக் குழுக்களை வெளியேற்றக் கோரி கடந்த வாரம் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கருணா குழுவினருக்கும் தமிழ் குழுக்களுக்கெதிராகவும் சுலோக அட்டைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் இக் குழுக்களால் தாங்கள்படும் இன்னல்கள் குறித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

வெலிக்கந்தையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இந்த ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதால் இவர்கள் படையினரின் ஆதரவுடனேயே இங்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அந்த மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெலிக்கந்தை இன்று செய்திகளில் அடிபடும் பகுதியாகி விட்ட நிலையில், பாதுகாப்பிற்காக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு அண்மையில் அவசர அவசரமாக திருப்பியழைக்கப்பட்டிருந்த இரு உளவாளிகள் அண்மைக் கால தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

தங்களுக்கெதிரான நிழல் யுத்தத்தை புலிகள் வெற்றிகரமாகவே எதிர்கொண்டு வருகின்றனர். நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்களும் திருப்பியழைக்கப்பட்டு அந்த நிழல் போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனாலும், அவர்கள் சுலபமாக இலக்கு வைக்கப்பட்டு விடுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் கருணா குழுவினரை இழந்தது போல் இராணுவ புலனாய்வுப் பிரிவு தமிழ்க் குழு உறுப்பினர்களையும் இழக்கத் தொடங்கியுள்ளது. புலிகளின் நடவடிக்கைகள் கிழக்கில் தீவிரமடையத் தொடங்கியுள்ளதால் சில வேளைகளில் நிழல் யுத்தமும் விரைவில் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படலாம்...

¿ýÈ¢ Å¢ÐÃý.. ¾¢ÉìÌÃø..
----------------------------------------------------------------------

®À¢ÊÀ¢ ¬Éó¾ ºí¸Ã¢ ®À¢¬÷ ±ø ±ù Åþ÷ «½¢ §ÁÖõ ÀÄ Ð§Ã¡¸ ÌõÀø¸û ¯Ä¸ ¿¡Î¸Ç¢¼õ Ţξ¨ÄÒÄ¢¸û Á¡üÚ ¸ÕòЦ¸¡ñ¼ ¾õ þÉò¾Å¨Ã§Â À¡Ã Àðºõ þøÄ¡Áø ¦¸¡¨Ä ¦ºöÐÅÕ¸¢È÷¸û «Å÷¸Ç¢ý þó¾ ¦ºÂ¨Ä ¸ñÊì¸ §ÅñÎõ ±ýÚ °¨Ç þðÎ ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸û..

¬É¡ø ¾Á¢ú Áì¸Ç¢ý ;ó¾¢ÃÁ¡É ´Õ ÅÇÁ¡É ´Õ ¿¡ð¨¼ ¯ÕÅ¡ì¸ ¾Á¢ú þ¨Çï»÷¸û Ôž¢¸û ¾í¸Ç¢ý ¯Â¢¨Ã ÐîºÁÉ Á¾¢òÐ ¸Çò¾¢Ä §À¡Ã¡Ê¸¢ýÈÉ÷. ¬É¡ø º¢Ä ЧḢ¸û «ýÉ¢Âý Å£Íõ ±ÖõÒ ÐñÎìÌ ¬¨ºôÀðÎ ¾Á¢Æ÷¸Ç¢ý §À¡Ã¡ð¼ò¨¾ À¢ý §¿¡ì¸¢ ¿¸÷ò¾À¡÷츢ýÈ¡÷¸û.. «ôÀÊ Àð¼Å÷¸û ±ÁÐ ¾Á¢Æ¢Æ §¾ºò¾¢üìÌ §¾¨Å¡?? «Å÷¸û ÓüÈ¡ì ¸¨ÇÂôÀ¼§ÅñÎõ. «Å÷¸ÙìÌ «¾¢¸ À𺠾ñ¼¨É¸û ÅÆí¸ôÀ¼ §ÅñÎõ.. :evil: :oops:
[b]

,,,,.
Reply
#2
<b>இராணுவ பிரதேசத்தில் கருணா குழு: ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியது ஆங்கில சஞ்சிகை!!</b>

<img src='http://img91.exs.cx/img91/1011/pic2003051nj.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழத் தேசிய இயக்கத்திற்கு துரோகமிழைத்து சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவின் முகாம் ஒன்று சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டிற்குட்பட்ட பிரதேசமான வெலிக்கந்தை தீவுச்சேனையில் அமைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த இராணுவ பிரதேசத்தில் தமிழ்ச்; சிறுவன் ஒருவன் ஆயுதங்களுடன் இருப்பதை வெளியிட்டுள்ள அந்த சஞ்சிகைää தங்கள் அமைப்பில் சிறுவர்களை சேர்த்துவருவதாக புலிகள் மீது குற்றம்சாட்டி வருகிற சிறீலங்கா அரசாங்கமே 12 வயதிற்கும் குறைவான தமிழ்ச்;சிறுவன் இராணுவ பிரதேசத்தில் கருணா குழு என்ற பெயரில் நடமாடுவதை அனுமதித்துள்ளது என்பதையும் பிரதமானமாகச்; சுட்டிக்காட்டியுள்ளது.
சண்டே லீடர் அம்பலப்படுத்திய தகவல்கள்: கடந்த ஏழு மாத காலமாக குறிப்பிட்ட இந்த முகாம் தீவுச்சேனையில் செயற்படடு வருகின்றது.

மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதி செவனப்பிட்டியவிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த முகாம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் ஒரு பக்கம் முஸ்லிம்களும் மறுபக்கம் தமிழர்களும் வசிக்கின்றனர்.கிராமத்திற்குள் எமது செய்தியாளர்கள் நுழைந்தபோது பதுங்குழியொன்று இருந்தது.

அதில் காவற் கடமையில் நவீன ரக துப்பாக்கியுடன் 12 வயது தமிழ்ச் சிறுவன் காணப்பட்டான். அச்சிறுவனின் தகவல் படி மங்களம் மாஸ்டர் என்பவர் தலைமையில் இந்த முகாம் இயங்குகின்றது.
அவரை சந்திப்பதற்காக நாம் முயற்சிகள் மேற்கெண்ட போதிலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு தனக்கு அனுமதி இல்லை என மற்றுமொரு உறுப்பினர் ஊடாக அவர் கூறிவிட்டார்.
பொதுமக்கள் மற்றும் படைத்தரப்பு தகவலின் படி இந்தக் குழுவினரே விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலையின் பின்னணியில் இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இங்கு இருப்பதை கிராம மக்கள் விரும்பவில்லை. ஆனால் படையினரின் ஒத்துழைப்பு இவர்களுக்கு இருக்கின்றது. இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளோ அல்லது கருத்துக்களோ வெளியிட்டால் கொலை அச்சுறுத்தலை எதிர்நோக்கி வாழ்கின்றனர் அப்பாவி கிராம மக்கள்.

கடந்த மார்ச் 14 ஆம் திகதி இரவு இப்பகுதியில் உள்ள ஹரபொல கிராமத்தைச்; சேர்ந்த இரண்டு இளைஞர்களை கருணா குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர்.
(இந்த இளைஞர்கள் படுகொலை குறித்தும் இந்த படுகொலைக்கு மங்களம் மாஸ்டர் என்பவர்தான் காரணம் என்றும் புதினம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தது)
இப்பகுதி மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்கின்றார்கள்.
இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழு என்று யாராவது இருக்கின்றார்களா என கேட்டால் கண்டும் காணாதவர்கள் போல் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் அப்படி இருக்கிறார்கள் என்றுதான் கேள்விப்படுகிறோம் என்று இரகசியமாக கூறுகிறார்கள்.

கருணா தரப்பினருக்கு சிறீலங்கா அரசு ஆதரவளித்து வருவதாக விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தபோதும் சிறீலங்கா அரசு அதை நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
[b]

,,,,.
Reply
#3
கெடுகுடி சொல் கேளாது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
பெரீய்ய முகாமாம். நெருங்கவே முடியாதாம் எண்ணு பீத்திக்கிறாங்க. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#5
இந்த 12 வயசு சிறுவனை யுனிசெவ்காரர்தானாக்கும் புலனாய்வு பிரிவோடை சேர்த்துவிட்டதாக்கும். அவையள் இதை தட்டிக்கொடுப்பினம். ஏனெண்டால் அரசாங்கம் செய்தால் தப்பில்லை. :oops: :oops: :oops:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#6
ஏன் இங்க பிரித்தானியாவில் 16 வயதில் இராணுவத்திற்கு சேர்க்கிறார்கள். அவர்கள் பயிற்சி முடித்து வெளியில் வர 18 வயது ஆகிவிடுமாம். இதற்கு uncef என்ன செய்கிறது.....?
<b> </b>
Reply
#7
<b>'அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா அணியின் முகாம்'</b>

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பலிருந்து பிரிந்து சென்று செயற்படும் கருணா அணியின் முகாமொன்று அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வாரப் பத்திரிகையான "சண்டே லீடர்" இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்சேனையில் இந்த முகாம் அமைந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள இப் பத்திரிகை, கருணா அணியினரின் காவலரண் ஒன்றின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளது.

மங்கள மாஸ்டர் என்பவர் தலைமையில் இந்த முகாம் கடந்த 7 மாதங்களாக அங்கு இயங்கி வருகின்றது என்றும், அவரை சந்திக்க முயற்சி எடுத்த போதிலும் அனுமதியின்றி ஊடகவியலாளர்களை சந்திக்க முடியாது என்று மற்றுமொரு கருணா அணி உறுப்பினர் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் என்றும் அந்த பத்திரிகை கூறுகின்றது.

கருணா அணியின் முகாமில் சுமார் 60 பேர் வரை இருக்கலாம் என தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ள அந்த பத்திரிகை, முன்னணி காவலரண் பகுதியில் ஆயுதம் தரித்த 12 வயது என்று கூறப்படும் சிறுவனொருவனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

<b>ராணுவம் மறுப்பு</b>

இந்த முகாம் தொடர்பாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்காவிடம் கேட்டபோது, இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எந்தவொரு பகுதியிலும் கருணா அணியினரின் முகாம்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு, இந்த செய்தியை நிராகரித்துள்ளார்.

இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா அணியினர் இடையில் மோதல் நடந்துவருகிறது, ஆதலால் இப்பகுதிக்குள் அவர்கள் வந்துபோவது நடக்கத்தான் செய்கிறது. ஆனால் முகாம் எதுவும் இல்லை என்பதை தங்களால் உறுதிபடக் கூறமுடியும் என்று தயா ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.


நன்றி. BBC தமிழோசை
<b> . .</b>
Reply
#8
வெலிக்கந்தையில் கருணா குழு மீது தாக்குதல்

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசம் தீவுச்சேனை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் கருணா குழு மீது இன்று காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை அப்பகுதியிலிருந்து பரவலான வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கி;ன்றன.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள ஆரம்ப தகவல்களின் படி கருணா குழுவுக்குப் பொறுப்பாளரான மங்களம் மாஸ்டர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் உள்ளிருந்தே மேற்கொள்ளப்பட்;டதாக ஒரு தகவலும்ää மற்றுமொரு தகவல் அந்தப் பகுதியில் நடமாடியவர்கள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவுதவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பிரதேச மக்களின் தகவலின் படி துப்பாக்கிச் சூடுகள் மக்கள் குடியிருப்புக்களிலும் விழுந்துள்ளன. இதன் காரணமாக சிறுமியொருவரும் காயமடைந்துள்ளார்.

இந்;த சம்பவத்தையடுத்து தற்போது மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கு விரைந்துள்ளார்கள். பதட்டமான சூழ்நிலை அங்கு காணப்படுகின்றது.

அப்பகுதியில் கருணா குழுவின் முகாம் எதுவும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்னாயக்க நேற்றைய தினம் மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுட்டது புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#9
கருணா குழுவின் முகாம் பற்றிய மேலதிக தகவல்களை அம்பலப்படுத்துகிறார் புத்திக வீரசிங்க

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்சேனை கிராமத்தில் கருணா குழுவின் முகாமில் அவரது சகாக்கள் சுமார் 60 பேர் வரை இருப்பதாகவும்ää அதற்கு மேலதிகமாக ஆயுதப்பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களும் இருப்பதாகவும் ஹரபொல கிராமவாசிகளின் தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது என 'சண்டே லீடர்" பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளர் புத்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட முகாம் தொடர்பான செய்தியை வெளியிட்ட 'சண்டே லீடர்" பத்திரிகையின் செய்தியாளர் குழுவில் இடம்பெற்றிருந்த புத்திக வீரசிங்க இதுபற்றி மேலும் கூறுகையில்

மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் செவனப்பிட்டிய சந்தியிலிருந்து வடக்குப் பக்கமாக பயணம் செய்யும்போது மூன்று கிலோ மீற்றர் தொலைவில் முத்துக்கல் கிராமம் உள்ளது. இந்த முகாமிலுள்ள இராணுவ சோதனைச்சாவடியில் எமது சகல உடமைகளும் கடுமையாக சோதனைக்குள்ளாக்கப்பட்டது.

கடமையிலிருந்த இராணுவ சிப்பாய்களிடம் கருணா குழுவின் முகாம் இருப்பது பற்றிக் கேட்டபோது இதுபற்றி தமக்கு தெரியாது என்றனர்.

இந்த கிராமம் ஒரு முஸ்லிம் கிராமமாகும்.

முத்துக்கல்லிலிருந்து உள்ளே 100 மீற்றர் தொலைவில் தீவுச்சேனை கிராமம் உள்ளது. அங்கு ஆயுதம் தாங்கிய இளைஞரொருவர் பதுங்குக்குழிக்குள் இருந்ததை காணமுடிந்தது. அவர் கருணா குழுவைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிந்தது.

வாகனத்தை நிறுத்தி நாங்கள் பத்திரிகையாளர்கள். மங்களம் மாஸ்டரை சந்திக்க முடியுமா என அவரிடம் கேட்டபோது

மங்களம் மாஸ்டர் இல்லை என்று அவர் கூறாமல் காத்திருங்கள் என்று பதிலளித்து விட்டு மற்றுமொருவர் மூலம் இதுபற்றிய தகவல் அனுப்பினார்.

சைக்கிளில் சென்று அரை மணி நேரத்தில் திரும்பிய அந்நபர் இப்போது அவர் இல்லை. இன்னொரு தடவை முற்பகலில் வந்தால் சந்திக்க முடியும் என்றார்.

கருணா குழுவினரை வெளியேறக்கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தான் அந்த முகாமிற்கு பொறுப்பானவர் மங்களம் மாஸ்டர் என்பதை ஹரபொல கிராமத்து மக்கள் மூலம் அறிய முடிந்தது.

அண்மையில் இந்த கிராமத்தில் இடம்பெற்ற இரண்டு இளைஞர்களின் படுகொலைக்கும் அவர்தான் பொறுப்பு என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
வெலிகந்தையில் கருணா குழுவின் மீதான தாக்குதல் தொடர்பான பிபிசி செய்தி

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4367227.stm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
வெலிகந்தை கருணா குழுவின் முகாம் மீது திங்கள் அதிகாலை 3 மணியளவில் புலிகள் என சந்தேகிக்கப்படுவோரோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலை 9 மணியளவில் காயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அப்போது வைத்தியசாலையில் அவர்களுடைய பெயர் அய்யாத்துரை சதீஸ், சின்னமுத்து ரவீந்திரராஜா, மற்றும் கந்தசாமி தேவராஜ் என்று கூறியுள்ளார்கள், பொலனறுவ இராணுவ தரப்பு காயமடைந்தவர்களில் ஒருவரான மங்களம் மாஸ்டருக்கு சிறு காயமே என்றும் புலிகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் வைத்தியசாலை தரப்பில் கடுமையான காயங்களுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, அது மட்டுமன்றி பொலிஸ் தரப்பு செய்திகளின்படி கொல்லப்பட்ட இருவ்ரும் கருணா குழுவை சேர்ந்தவர்கள்.

செய்தியை முழுமையாக படிக்க http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14512
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
வெலிக்கந்தையில் இராணுவம் பொலிஸ் குவிப்பு

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசம் தீவுச்சேனை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் கருணா குழுவினர் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அப்பிரதேசத்தில் தற்போது மேலதிக இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்னர்.

இந்த தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த மங்களம் மாஸ்டர் உட்பட மூவர் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரபொல கிராமத்தில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியொன்றும் தற்செயலாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட குழுவினருக்கும் கருணா குழுவினருக்குமிடையில் பரிமாறப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இந்த குழந்தை காயமடைந்துள்ளது.

அந்த பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட இராணுவத்தினராலும் பொலிசாராலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் தாக்குதலில் ஈடுபட்ட தரப்பினருடையது என பொலிசார் தெரிவித்தனர்.

அடையாளம் காண்பதற்காக வெலிக்கந்தை வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
என்னமோ நடக்குது..மர்மமாய் இருக்குது.. :roll: :roll:
Reply
#14
தீவுச்சேனை மோதலில் இருவர் பலி

இலங்கையின் பொலுன்நறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான தீவுச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

அங்கிருந்த கருணா அணியினர் என்று கூறப்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்திய அணியைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் மங்கள மாஸ்டர் என்பவர் உட்பட கருணா அணியைச் சேர்ந்த மூவரும் மற்றும் ஒரு 5 வயதுக் குழந்தையும் அடங்கும் என்றும் இலங்கை இராணுவத் தரப்பு கூறுகின்றது.

இந்த சம்பவத்தின் போது தற்செயலாக காயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை பொலன்நறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து இராணுவம் மற்றும் பொலிஸிடம் இருந்து முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இருந்தபோதிலும் காலை 6.20 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், அங்கு விரைந்த இராணுவத்தினர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து இரண்டு சடலங்களை மீட்டதாகவும் இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று வெலிக்கந்தை பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக புலிகள் தரப்பில் இருந்து எதுவும் இதுவரை கூறப்படவில்லை.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்த பிரதேசத்த்pலுள்ள தீவுச்சேனையில் உள்ள கருணா குழுவினர் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மூவரில் ஒருவரான மங்கள மாஸ்டர் எனபப்டும் ஐயாத்துரை சதீஸ் என்பவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

பலத்த பாதுகப்புடன் பொலன்னறுவை வைத்தியசாலையிலிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் இன்று மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்

ஏனையவர்களான சின்னமுத்து ரவீந்திரராஜா மற்றும் கந்தசாமி தேவராஜா ஆகியோர் தொடர்ந்தும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட அணியினரைத் தவிர வேறு எவரும் இவர்களை பார்க்க முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் மங்கள மாஸ்டரை புகைப்படம் எடுப்பதற்க ஊடகவியலாளர்கள் முயற்சித்த போதிலும் அவர் தனது முகத்தைக் காட்ட மறுத்து விட்டார்.

இதே வேளை இலங்கைப் போர் நிறுத்த கண்கானிப்புக் குழு பிரதிநிதிகள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விசாரனைகளை மேற் கொண்டு இன்று மாலை மட்டக்களப்பு திரும்பியுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் எத்தகைய கருத்துக்களையும்சயெ;தியாளர்களிடம் வெளியிட மறுத்து விட்டார்கள்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
:?: :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
<b>வெலிக்கந்தையில் கருணா குழுவின் முகாம் இருப்பது உண்மையே:</b>
<i>ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கண்காணிப்புக்குழு</i>

சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வெலிக்கந்தை பிரதேசத்தில் கருணா குழுவின் முகாமொன்று இருப்பதாக இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பிரதிநிதி பி.ஆர்.ஸ்டீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கும் மார்ச்; மாதம் இரண்டாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் பின்னணி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி நாள் விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்றது.

<i>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் தலைமையிலான இவ் ஆணைக்குழு முன்னிலையில் அவர் அளித்த சாட்சியம்:</i>

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் தவிர ஏனைய ஆயுதக் குழு நடமாட்டத்தைப் பொறுத்த வரை எனக்குத் தெரிந்தவரை கருணா குழுவின் நடமாட்டம் உள்ளது.

அதுவும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் உள்ளது.

எனக்குத் தெரிந்தவரை வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாம் உள்ளதாக அறிகின்றேன்.

இக்குழுவிற்கு இராணுவ உதவி இருப்பது குறித்து எனக்குத் தெரியாது. இதற்கான ஆதாரங்களும் இல்லை.

கருணா குழுவின் முகாம் இருப்பது போர் நிறுத்த உடன்படிக்கை மீறலாகும். துணைப்படை என்பதற்கான சரியான அர்த்தம் எனக்கும் தெரியாது.

ஆனால் கருணவின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் இருக்கின்றார்கள்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் படி துணைப்படைகளின் ஆயுதங்களை களைய வேண்டியது அரசின் கடமை.

கருணா குழுவினரின் ஆயுதக்களைவ குறித்து எனது தலைமையகத்திற்கு மார்ச்; மாதம் 21 ஆம் திகதி அறிவித்துள்ளேன்.

அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது.

விடுதலைப்புலிகள் மீது இப்படியான தாக்குதல் தொடர்வது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது குறித்து என்னால் கருத்துக்கூற முடியாது.

எதிர்காலத்தில் இப்படியான தாக்குதல்களை தவிர்ப்பது என்றால் எனது அபிப்பிராயப்படி சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான தொடர்புகள்ää உரையாடல்கள் மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்றார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான லெப். கேணல் கௌசல்யன் படுகொலை சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் பின்வருமாறு கூறினார்.

அவர் கூறியதாவது:

சம்பவதினமிரவு 10.00 மணியளவில் இது குறித்த தகவல் கிடைத்தது. உடனே புறப்பட்டு பொலனனறுவை வைத்தியசாலையை சென்றடைய அதிகாலை 2.00 மணியாகிவிட்டது.

அங்கு ஐந்து சடலங்களை கண்டேன்.

மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்குச்; சென்று சடலங்கைள எடுத்து வருவதற்கு எங்களால் வழித்துணை வழங்கப்பட்டது.

இது குறித்து பொலிஸ் விசாரனை அறிக்கை எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுவரை இச்சம்பவமானது போர் நிறுத்த உடன்படிக்கை மீறலா? இல்லையா? என்பது குறித்து கூற முடியாது.

விடுதலைப்புலிகளின் பயணத்திற்கு பாதுகாப்பு வழங்குவது பொலிசாரும் இராணுவத்தினரும் தான். நாம் வழங்குவது வழித்துணையாகும்.

நான் அறிந்த வரை குறிப்பிட்ட பயணத்திற்கு விடுதலைப்புலிகள் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்று இதுவரை கண்டறியப்படாத காரணத்தினால் இச்சம்பவமானது போர் நிறுத்த உடன்படிக்கையை பாதிக்குமா? இல்லையா? என்பது குறித்து எத்தகைய கருத்துக்களையும் இப்போது கூற முடியாது என்றார் அவர்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#18
வெலிக்கந்தையில் கருணா குழுவின் முகாம் இருப்பது உண்மையே: ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கண்காணிப்புக்குழு

சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வெலிக்கந்தை பிரதேசத்தில் கருணா குழுவின் முகாமொன்று இருப்பதாக இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பிரதிநிதி பி.ஆர்.ஸ்டீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கும் மார்ச்; மாதம் இரண்டாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் பின்னணி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி நாள் விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்றது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் தலைமையிலான இவ் ஆணைக்குழு முன்னிலையில் அவர் அளித்த சாட்சியம்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் தவிர ஏனைய ஆயுதக் குழு நடமாட்டத்தைப் பொறுத்த வரை எனக்குத் தெரிந்தவரை கருணா குழுவின் நடமாட்டம் உள்ளது.

அதுவும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் உள்ளது.

எனக்குத் தெரிந்தவரை வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள தீவுச்;சேனையில் கருணா குழுவின் முகாம் உள்ளதாக அறிகின்றேன்.

இக்குழுவிற்கு இராணுவ உதவி இருப்பது குறித்து எனக்குத் தெரியாது. இதற்கான ஆதாரங்களும் இல்லை.

கருணா குழுவின் முகாம் இருப்பது போர் நிறுத்த உடன்படிக்கை மீறலாகும். துணைப்படை என்பதற்கான சரியான அர்த்தம் எனக்கும் தெரியாது.

ஆனால் கருணவின் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் இருக்கின்றார்கள்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் படி துணைப்படைகளின் ஆயுதங்களை களைய வேண்டியது அரசின் கடமை.

கருணா குழுவினரின் ஆயுதக்களைவ குறித்து எனது தலைமையகத்திற்கு மார்ச்; மாதம் 21 ஆம் திகதி அறிவித்துள்ளேன்.

அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது.

விடுதலைப்புலிகள் மீது இப்படியான தாக்குதல் தொடர்வது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது குறித்து என்னால் கருத்துக்கூற முடியாது.

எதிர்காலத்தில் இப்படியான தாக்குதல்களை தவிர்ப்பது என்றால் எனது அபிப்பிராயப்படி சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான தொடர்புகள்ää உரையாடல்கள் மிக நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்றார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான லெப். கேணல் கௌசல்யன் படுகொலை சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் பின்வருமாறு கூறினார்.

அவர் கூறியதாவது:

சம்பவதினமிரவு 10.00 மணியளவில் இது குறித்த தகவல் கிடைத்தது. உடனே புறப்பட்டு பொலனனறுவை வைத்தியசாலையை சென்றடைய அதிகாலை 2.00 மணியாகிவிட்டது.

அங்கு ஐந்து சடலங்களை கண்டேன்.

மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்குச்; சென்று சடலங்கைள எடுத்து வருவதற்கு எங்களால் வழித்துணை வழங்கப்பட்டது.

இது குறித்து பொலிஸ் விசாரனை அறிக்கை எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுவரை இச்சம்பவமானது போர் நிறுத்த உடன்படிக்கை மீறலா? இல்லையா? என்பது குறித்து கூற முடியாது.

விடுதலைப்புலிகளின் பயணத்திற்கு பாதுகாப்பு வழங்குவது பொலிசாரும் இராணுவத்தினரும் தான். நாம் வழங்குவது வழித்துணையாகும்.

நான் அறிந்த வரை குறிப்பிட்ட பயணத்திற்கு விடுதலைப்புலிகள் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்று இதுவரை கண்டறியப்படாத காரணத்தினால் இச்சம்பவமானது போர் நிறுத்த உடன்படிக்கையை பாதிக்குமா? இல்லையா? என்பது குறித்து எத்தகைய கருத்துக்களையும் இப்போது கூற முடியாது என்றார் அவர்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)