03-20-2005, 03:41 PM
<b>உயிர் தப்ப வெளிநாடுகளுக்குச் சென்ற புலனாய்வாளர்களுக்கு அவசர அழைப்பு</b>
கிழக்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொல்லப்படுபவர்கள் யார் எனத் தெரியாதளவிற்கு கொலைகள் இடம்பெறுகின்றன. புலிகள் மீதான தாக்குதல்கள் நடைபெறும் அதேநேரம் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி கிழக்கில் புலிகளைப் பலவீனப்படுத்தி விட இராணுவ புலனாய்வுப் பிரிவு முயல்கிறது. அதேநேரம் இராணுவ புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத்தினரின் இந்த நோக்கத்திற்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு புறம் புலிகளுக்கெதிராக அரசு அரசியல் ரீதியில் எதிர்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகையில் மறு புறம் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கிழக்கில் குழப்பங்களை உருவாக்கி அதன் ஸ்திர நிலைமையை சீர்குலைக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கருணாவின் கிளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்கள் அவரது கட்டுப்பாட்டிலிருந்தன. மட்டக்களப்பிலிருந்து கருணாவின் வெளியேற்றத்தையடுத்து மட்டக்களப்பு நகர்ப்புறப் பகுதியில் கருணா குழுவினரின் நடவடிக்கைகள் சில காலங்களிருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் கருணா குழுவினரின் செயற்பாடு மிகவும் பலவீனமடைந்தது.
போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு போர்நிறுத்தம் அமுலிலிருக்கையில் சமாதான முயற்சிகளை முன்னகர்த்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த போதிலும், பலவீனமடைந்த கருணா குழுவை பயன்படுத்தி, அதாவது கருணா குழுவென்ற பெயரில் புலிகள் மீதான நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், புலிகளுக்கெதிரான இந்த நிழல் யுத்தத்தில் கருணா குழுவென்ற பெயரில் வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையே இராணுவ புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தியது. புலிகளும் இதனை நன்கறிந்திருந்தனர். இதனால் கருணா குழுவினருடன் ஏனைய தமிழ்க் குழுக்கள் மீதும் புலிகள் இலக்கு வைத்தனர். இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் தப்பியோடி விட்டனர். ஆனாலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது செயற்பாட்டை கைவிடவில்லை.
கருணா குழுவுக்கு எதிரான புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் பல வெற்றியளித்தன. மட்டக்களப்பிலும் கொழும்பிலும் கொழும்பின் புறநகர்ப் பகுதியிலும் வைத்து கருணா குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்படவே, கருணா குழுவென்ற பெயரில் தொடர்ந்தும் அதனை இயங்க வைக்கவும் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தவும் வேண்டிய தேவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்பட்டது.
இதனால், இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்தவர்களையும் கருணா குழுவென்ற பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு களமிறக்கியது. ஆனால், அது, எதிர்பார்த்த பலனை விட மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியது.
கருணா குழுவில் எஞ்சியிருந்தவர்களுக்குள்ளும் புலிகள் ஊடுருவியிருந்ததால் தமிழ்க் குழுக்களதும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரதும் நடவடிக்கைகளை புலிகள் நன்கறிந்து அதற்கேற்ப செயற்பட்டனர். இது இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், கிழக்கில் மீண்டும் புலிகள் ஸ்திர நிலையை உருவாக்குவதை தடுக்கும் நோக்கில் அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டனர்.
அத்துருகிரிய மிலேனியம் சிற்றி பாதுகாப்பு இல்லம் வெளியுலகிற்கு அம்பலமானதையடுத்து இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களது முழு விபரமும் எப்படியோ வெளிவந்தது. இந்தப் பட்டியல் புலிகளுக்கு கிடைத்து விடவே, இராணுவ புலனாய்வுப் பிரிவின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவில் தமிழ் உளவாளிகளே இல்லாது போய்விடுவார்களோ என அஞ்சுமளவிற்கு தமிழ்க் குழு உறுப்பினர்கள் தாக்குதல்களுக்கிலக்காகவே, இவர்களைப் பாதுகாப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவு இரகசிய திட்டமொன்றை வகுத்தது. அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசுக்குத் தெரியாமல் தங்கள் இரகசியத் திட்டத்தை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நிறைவேற்றினர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்தியங்கும் தமிழ் உளவாளிகளுக்கு வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்து விமானத்திற்கான பயணச் சீட்டையும் வழங்கி அவர்களில் பலரை, பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இவ் வேளையில் தான் படையினருக்கு கருணா கைகொடுத்தார். அவரைப் பயன்படுத்தி கிழக்கை முற்றாகவே குழப்பி விட புலனாய்வுப் பிரிவு பெரும் திட்டங்களை தயாரித்திருந்த போதிலும், பின்னர் அவையெல்லாம் பகற்கனவாயின.
கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் அடுத்தடுத்து கொலையுண்டனர். எஞ்சியவர்களை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் இல்லாது போகவே இவர்களை வழிநடத்துவதற்காக, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு புலனாய்வுப் பிரிவினரால் அனுப்பி வைக்கப்பட்ட சில முக்கிய தமிழ் உளவாளிகள் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.
இதில் புளொட் மோகன் மிக முக்கியமானவர். இவரைப் பயன்படுத்தி கருணா குழுவை வழிநடத்தி கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களைத் தொடுக்க திட்டங்கள் தீட்டப்பட்ட போது புளொட் மோகன் கொல்லப்பட்டதுடன், இவரைப் போன்று மீண்டும் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்ட வேறு சிலரும் கொல்லப்படவே இராணுவ புலனாய்வுப் பிரிவு தடுமாறிப் போனது.
தமிழ் உளவாளிகளை இழக்காது கருணா குழுவின் பெயரில் கிழக்கில் தொடர்ந்தும் எவ்வாறு தாக்குதல்களை நடத்துவதெனவும் படைத்தரப்பு சிந்தித்தது. புலிகளின் சாதாரண போராளிகள் சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட போது, அது மக்களை குழப்பமடையச் செய்யும் வெற்றிமிகு தாக்குதல்களாக உணரப்படாததால் புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அரசியல் பணிகளில் ஈடுபடும் புலிகள் நிராயுதபாணிகளாகவே நடமாடுவர். அதேநேரம் இராணுவ சோதனைச் சாவடிகளூடாக பயணம் செய்யும் போது புலிகளின் விபரங்கள் பதிவு செய்யப்படுவதால் புலிகளின் நடமாட்டங்கள் குறித்த பூரண விபரங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிய வந்தன.
இந்த நிலையிலேயே புலிகளின் மட்டு.-அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கொல்லப்பட்டார். கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக படைத் தரப்பு கூறியதுடன், புலிகளின் முக்கிய தலைவர்களைக் கூட தாக்கும் வல்லமை கருணா குழுவிடமிருப்பதாகவும் தொடர்ந்தும் பிரசாரம் செய்தது.
கருணா குழுவென்ற பெயரில் தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தியே இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் கடுமையாகக் குற்றஞ் சாட்டினர். கருணா குழுவில் எஞ்சியிருப்பவர்களை புலிகளுக்கு நன்கு தெரியுமென்பதால் எஞ்சியிருக்கும் அவர்களது செயற்பாடுகள் குறித்த பூரண புலனாய்வுத் தகவல்களை புலிகள் பெற்றும் வருகின்றனர்.
தங்கள் மீதான தாக்குதல்களை தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவினரே மேற்கொண்டு வருவதாக புலிகள் நோர்வே தரப்பிடமும் கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளதுடன் இராணுவ துணைப்படையாக செயற்படும் இவர்களது நடவடிக்கை, போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது எனவும் கூறியுள்ளனர்.
தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் கிழக்கில் குழப்பங்களை தோற்றுவித்து ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவே முக்கிய காரணமென்பதை புலிகள் நன்குணர்ந்திருந்தாலும் இதுவரை படைத்தரப்புக்கெதிராக புலிகள் எவ்வித தாக்குதலையும் தொடுக்கவில்லை. பொறுமை காத்தே வருகின்றனர்.
கௌசல்யனின் கொலையை அடுத்து அரச தரப்பு கூட நோர்வே அனுசரணையாளர்களூடாக <b>புலிகளின் கோபத்தை தணிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. படை அதிகாரிகள் மீதோ அல்லது அரசுத் தலைவர்கள் மீதோ பதில் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாமென நோர்வேயூடாக அரசுத் தலைவர்கள் கேட்டது யாவருமறிந்த உண்மை.
[b]இதன் மூலம் கௌசல்யன் மீதான தாக்குதலில் படைத்தரப்பின் பங்களிப்பு எவ்வளவென்பதை அரச தரப்பு நன்கறிந்துள்ளது தெளிவாகியது. அரசின் இந்த வேண்டுகோள் மூலம், படைத்தரப்பிற்கும் இதில் தொடர்பிருப்பதை நோர்வே அனுசரணையாளர்களும் புரிந்து கொண்டதுடன் புலிகளைச் சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தியதுடன் படை அதிகாரிகள் மீதோ அரசுத் தலைவர்கள் மீதோ பதில் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாமெனவும் கேட்டிருந்தனர்.</b>
ஆனாலும் இந்தத் தாக்குதலையடுத்து இராணுவ புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. தமிழ் குழுக்களைச் சேர்ந்தவர்களும், இராணுவ உளவாளிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். படைத்தரப்பை விட படையினருடன் சேர்ந்து செயற்படும் உளவாளிகளே தற்போது அடுத்தடுத்து இலக்கு வைக்கப்படுகின்றனர்.
அதேநேரம் கருணா குழுவின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டு, இன்று பொலனறுவை வெலிக்கந்தையிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தின் அருகிலுள்ள பகுதிகளிலேயே இவை நடைபெறுகின்றன. இதனால் தற்போது, மட்டக்களப்பு மாவட்ட எல்லையிலுள்ள வெலிக்கந்தைப் பகுதி கொந்தளித்துப் போயுள்ளது.
கருணா குழுவின் பெயரால் புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதே புலனாய்வுப் பிரிவினரின் நோக்கமாகும். அதே நேரம் மட்டக்களப்பிற்கும் வன்னிக்குமிடையிலான புலிகளின் முக்கியஸ்தர்களது தரைவழிப் போக்குவரத்தும் வெலிக்கந்தை ஊடாகவே நடைபெறுகின்றது.
மட்டக்களப்பில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அல்லது ஓமந்தைக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் வந்துவிட்டால் அது படைத்தரப்பிற்கு தெரிந்து விடும்.
இது புலிகளின் நடமாட்டம் குறித்த விபரங்களை எவருக்கும் வழங்கப் போதுமானது. அத்துடன் புலிகளின் சாதாரண உறுப்பினர்களை தாக்க மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் தமிழ்க் குழுக்களை புலிகள் சுலபமாக இலக்கு வைத்துவிடுவதால் ,மட்டக்களப்பில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் இந்த தமிழ்க் குழுக்கள் வெலிக்கந்தை பகுதியில் வைத்தே புலிகளை இலக்கு வைக்க முயல்கின்றன.
இதனால் அண்மைக் காலங்களில் வெலிக்கந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அடுத்தடுத்து பல கொலைகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் அப்பகுதியில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டமும் அதிகரித்து, முன்னர் அமைதியாக இருந்த வெலிக்கந்தை இன்று இரத்தக்களரியாகி விட்டது.
இந்தப் பகுதியிலுள்ள ஆயுதக் குழுக்களை வெளியேற்றக் கோரி கடந்த வாரம் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கருணா குழுவினருக்கும் தமிழ் குழுக்களுக்கெதிராகவும் சுலோக அட்டைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் இக் குழுக்களால் தாங்கள்படும் இன்னல்கள் குறித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
வெலிக்கந்தையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இந்த ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதால் இவர்கள் படையினரின் ஆதரவுடனேயே இங்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அந்த மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வெலிக்கந்தை இன்று செய்திகளில் அடிபடும் பகுதியாகி விட்ட நிலையில், பாதுகாப்பிற்காக இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு அண்மையில் அவசர அவசரமாக திருப்பியழைக்கப்பட்டிருந்த இரு உளவாளிகள் அண்மைக் கால தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்களுக்கெதிரான நிழல் யுத்தத்தை புலிகள் வெற்றிகரமாகவே எதிர்கொண்டு வருகின்றனர். நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்களும் திருப்பியழைக்கப்பட்டு அந்த நிழல் போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனாலும், அவர்கள் சுலபமாக இலக்கு வைக்கப்பட்டு விடுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் கருணா குழுவினரை இழந்தது போல் இராணுவ புலனாய்வுப் பிரிவு தமிழ்க் குழு உறுப்பினர்களையும் இழக்கத் தொடங்கியுள்ளது. புலிகளின் நடவடிக்கைகள் கிழக்கில் தீவிரமடையத் தொடங்கியுள்ளதால் சில வேளைகளில் நிழல் யுத்தமும் விரைவில் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படலாம்...
¿ýÈ¢ Å¢ÐÃý.. ¾¢ÉìÌÃø..
----------------------------------------------------------------------
®À¢ÊÀ¢ ¬Éó¾ ºí¸Ã¢ ®À¢¬÷ ±ø ±ù Åþ÷ «½¢ §ÁÖõ ÀÄ Ð§Ã¡¸ ÌõÀø¸û ¯Ä¸ ¿¡Î¸Ç¢¼õ Ţξ¨ÄÒÄ¢¸û Á¡üÚ ¸ÕòЦ¸¡ñ¼ ¾õ þÉò¾Å¨Ã§Â À¡Ã Àðºõ þøÄ¡Áø ¦¸¡¨Ä ¦ºöÐÅÕ¸¢È÷¸û «Å÷¸Ç¢ý þó¾ ¦ºÂ¨Ä ¸ñÊì¸ §ÅñÎõ ±ýÚ °¨Ç þðÎ ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸û..
¬É¡ø ¾Á¢ú Áì¸Ç¢ý ;ó¾¢ÃÁ¡É ´Õ ÅÇÁ¡É ´Õ ¿¡ð¨¼ ¯ÕÅ¡ì¸ ¾Á¢ú þ¨Çï»÷¸û Ôž¢¸û ¾í¸Ç¢ý ¯Â¢¨Ã ÐîºÁÉ Á¾¢òÐ ¸Çò¾¢Ä §À¡Ã¡Ê¸¢ýÈÉ÷. ¬É¡ø º¢Ä ЧḢ¸û «ýÉ¢Âý Å£Íõ ±ÖõÒ ÐñÎìÌ ¬¨ºôÀðÎ ¾Á¢Æ÷¸Ç¢ý §À¡Ã¡ð¼ò¨¾ À¢ý §¿¡ì¸¢ ¿¸÷ò¾À¡÷츢ýÈ¡÷¸û.. «ôÀÊ Àð¼Å÷¸û ±ÁÐ ¾Á¢Æ¢Æ §¾ºò¾¢üìÌ §¾¨Å¡?? «Å÷¸û ÓüÈ¡ì ¸¨ÇÂôÀ¼§ÅñÎõ. «Å÷¸ÙìÌ «¾¢¸ À𺠾ñ¼¨É¸û ÅÆí¸ôÀ¼ §ÅñÎõ.. :evil: :oops:

[b]
,,,,.
,,,,.