Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்னைபூபதிக்காய்..!
#1
<img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/poopathi_memorial_1_190402.jpg' border='0' alt='user posted image'>
அகிம்சையின் நாயகியாய்
அன்னையவள்
ஆண்டுகள் பல சென்றபின்னும்
அழியாது நிலையாகி
அன்னையவளாய் யாவர்க்கும்

கணவன் என்றும்
பிள்ளைகள் என்றும்
தமக்காய் வாழந்த
பெண்களின் வாழ்வில்
தாய் மண்ணிற்காய்
தன்னை உருக்கி
விதையாகி
நினைவுகளில் விருட்சமாய்.

தெய்வங்கள் பற்றி இங்கு
ஆராய்ச்சி நடக்கிறதாம்
இதில் என்ன ஆச்சரியம்
உம்மைப்போன்ற
அற்பணிப்புள்ள ஆத்மாக்கள்
தெய்வத்தை விட
பல படிகள் மேல் அல்லவா..??

எத்தனை தியாகம்
எம் மண்ணிற்காய்
தன்னுயிர் உருக்கி
தியாகச்செம்மலாய்
இதயங்களில் நுழைந்துவிட்ட
தெய்வத்தாய் என்பதில்
மறுப்பென்னா..??

சமையல் அறையும்
அகப்பையும் தானா..??
பெண்ணின் ஆயுதம்
அகிம்சை எனும்
அற்புத மருந்தும்
எம்மவர்க்கு தெரியும்
என இடித்துக்கூறுவதில்
இறங்கிய வீரங்கனையல்லவா..??

காந்தியின் அகிம்சைப்போராட்டம்
விடுதலையில் முடிந்ததாம்
கோடிமக்கள் இன்னும்
இன்றும் போற்றுகிறார்.
உன் மைந்தனுக்கும்
உனக்கும் நடந்த
கதை அவர்களிற்கு
தலைகுனிவாய் தெரியவில்லையாம்.
நீதியின் வாழ்விடம் என
அவர்களே பிதற்றிக்கொள்ள
வேண்டியது தான்.!

வெறுமனவே வார்த்தையால் வாழாது
உயிர் போன தரணத்திலும்
செயலாலும் வாழ்ந்து காட்டிய
சத்தியம் நிறைந்த
வீரத்தமிழ்த்தாய் நீயம்மா.
நீ எமக்கு தந்துவிட்டுச்சென்றது
கண்ணீர் நிறைந்த
உண்மைகள் புதைந்த
வீரகாவியம் அல்லவா..??

எமக்கும் காலம் வரும்
எட்டி உதைத்தவர்
எண்ணற்ற உயிர்களை
கொண்டு குவித்தவர்
ஊனங்களாய் தமிழரை
ஆக்க நினைத்தவர்
உங்கள் உயிர்கள்
மெழுகாய் ஆகையில்
நகைத்தர்
பதில் சொல்லும் நேரம் வரும்..!
எத்தனை நினைவு தினங்கள் தான்
எம்மைத்தாண்டிச் சென்றாலும்
உங்களது உணர்வுகலந்திட்ட
உண்மைக்காவியம்
உங்களுக்கு இழைக்கப்பட்ட
துரோகங்கள்
உங்கள் நிலை கண்டும்
பாராமுகமாய்
பரிகசித்தவர் குணங்கள்
பசும்புண்ணாய் மனதில்
புதைந்து போய் இருக்கும்
வீரவரலாறாய் வீரகாவியமாய்
போய்விட்ட தமிழன் வரலாற்றில்
உயிர் கொண்டு எழுதிய
பல பக்கங்கில்
உங்கள் பகுதியையும்
நிறைத்துச்செல்லும்...!

தியாகதீபம் அன்னை பூபதியின் 17 ஆம் ஆண்டு நினைவாக..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#3
Quote:வீரவரலாறாய் வீரகாவியமாய்
போய்விட்ட தமிழன் வரலாற்றில்
உயிர் கொண்டு எழுதிய
பல பக்கங்கில்
உங்கள் பகுதியையும்
நிறைத்துச்செல்லும்...!
Reply
#4
8) 8) 8)

கணவன் என்றும்
பிள்ளைகள் என்றும்
தமக்காய் வாழந்த
பெண்களின் வாழ்வில்
தாய் மண்ணிற்காய்
தன்னை உருக்கி
விதையாகி
நினைவுகளில் விருட்சமாய்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#5
அன்னை பூவதி பற்றி காலம் அறிந்து இட்ட கவிதைக்கு நன்றி
[b][size=18]
Reply
#6
கவிதைக்கு நன்றி.
அன்னைக்கு அஞ்சலி...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
Cry Cry Cry Cry தாய்க்கு தலை வணங்குவோம்...
" "
" "

Reply
#8
தருணமறிந்து தந்த கவிதைக்கும் தமிழினிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
Reply
#9
கருத்துக்களைக்கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
கவிதைக்கு நன்றி.
அன்னைக்கு அஞ்சலி..
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)