Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
காதலை தீண்டாதஇ காதலின் கனவுச்சுவையை தராதஇ அதன் கற்பனை ஃபாண்டஸிக்கு வித்திடாத ஒரு தமிழ் சினிமா இருக்கமுடியாது. இத்தனை விதமாய் பேசப்பட்டும்இ காட்டப்பட்டும் இன்னும் அலுக்கவில்லை. இனியும் அலுக்கபோவதில்லை.
80 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாய் இயங்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் ஒரு உன்னத சாதனை என்று ஒன்று உண்டெனில்இ அது காதலை சமூகத்தில் லெஜிடிமைஸ் செய்ததுதான். இன்னும் குடும்ப தளத்தில் காதல் முழுவதும் அங்கீகரிக்கபடவில்லை எனினும்இ சமூகத்தின் ஊடகங்கள்இ நிறுவனங்கள் அத்தனையிலும் காதல் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஒரு நூற்றாண்டு காலத்தில் இது ஒரு பெரிய சமூக மாற்றமாகவே தெரிகிறது. இதற்கு மிக பெரிய உந்தும் சக்தியாய் தமிழ் சினிமா விளங்கி வருவதை மறுக்க முடியாது.
விஷயம் ஒன்றும் இல்லை. இணையத்திலிருந்து இறக்கி 'காதல்' படம் பார்தேன். வலைப்பதிவிலே பலரும் பாரட்டிவிட்ட படம். நண்பர் கார்திக் மட்டும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு கடைசியில் வருகிறேன்.
எனக்கு என்னவோ இது சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் குறிப்பிட தகுந்ததாகவே தெரிகிறது. தமிழ் வெகுஜன சினிமாவின் வெளி அளிக்கும் சாத்தியங்களை மிக திறமையாய் பயன்படுத்திஇ மிக குறைந்த அளவு சொதப்பி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகிறது. முக்கியமான விஷயம் இப்படி ஒரு படம் ஹிட்டாவது. இது ஒரு ட்ரெண்ட் அமைத்து மேலும் இது போன்ற படங்கள் வெளிவர வழி வகுக்கும்.
கதை ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாய் கொண்டதாகவும்இ ஒரு ரயில் பிரயாணத்தில் இந்த (தன்) கதையை சொன்ன மனித நேயம் மிக்கவரின் அனுமதியோடு படமாக்கப் பட்டதாகவும்இ படமுடிவில் எழுத்துக்கள் மேலே போகின்றன. இதையும் கதை புனைவின் ஒரு பகுதியாக கருதி வாசிக்க முடியும். அப்படி ஒரு வாசிப்பின் சாத்தியம் படம் பார்க்கும் அனைவருக்குமே இருக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நம் மக்கள் "அப்படின்னு சொல்லுதான். எவனுக்கு தெரியும்! படம் ஓடணும்னு நேக்கா இப்படி சொல்லுதானே என்னவோ!" என்று தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பேசக்கூடும்.
உண்மையிலேயே உண்மை கதையின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில்இ அச்சாக அதை அப்படியே எடுக்கவில்லை என்பது தெளிவு. அதற்கு பாராட்டவேண்டும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அச்சாக எடுத்திருந்தால் படம் இத்தனை பேரால் பார்க்கபட்டிருக்காது.
படத்தின் சிறப்பாக தெரிவது அதன் கச்சிதமான திரைக்கதைஇ மற்றும் யதார்த்தபடுத்துதல். சற்றும் தொய்வில்லாமல்இ எந்த இடத்திலும் அலுப்பு தராமல்இ தொடர்ந்து ஒரு ஆர்வத்தை தக்க வைத்துகொண்டே செல்லும் திரைக்கதை. எந்த கலைப்படைப்பினாலும் யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்க இயலாது என்பது இன்று ஒப்புகொள்ளப்படும் உண்மை. முடிந்தவரை துல்லியமும்இ நம்பபகத்தன்மையை ஏற்படுத்துவதையுமே யாதார்த்தபடுத்துதல் என்கிறேன். அது சிறப்பாகவே செய்யபட்டிருப்பதாக தெரிகிறது. யதார்த்தமாய் எடுக்கிறேன் பேர்வழி என்று மாடு சாணி போடுவதையும்இ வைக்கோல் தின்பதையும்இ மனிதன் சாம்பார் சாதம் சாப்பிடுவதையும் நிமிடக்கணக்கில் காட்டும் இந்திய 'கலைப்படம்' போல் இல்லாமல்இ ஒரு வெகுஜன திரைப்படத்தின் சுவாரசியத்தையும். மேலோட்டத்தையும் தக்கவைத்தபடியே இதை செய்திருப்பதே தனித்தன்மை.
படத்தின் தொடக்கம் தமிழக எண்ணெய் பலகாரக்கடைஇ சர்வோதயா இலக்கிய பண்ணைஇ கோவில்இ சர்ச்இ மசூதி என்று மதுரைக்கு எளிதில் அழைத்து செல்ல படுகிறோம். படம் முழுக்க அப்படி ஒரு மிகை காட்டாதஇ சொதப்பாத ஒரு நடிப்பை அனைவரும் தந்திருக்கின்றனர். காதநாயகி நிஜமாகவே காதலிக்கிறார். உணர்ச்சி வசப்படுகிறார். அலைமோதுகிறார். காதலை பற்றியே எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படங்களில்இ 80களின் கதாநாயகிகள் காதலிக்கும் நடிப்பை ஒப்பிடும்போதுஇ எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டதாக தோன்றுகிறது. (அவர் அழகாய் இருப்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.) இனிவரும் வருடங்களில் இவர் எப்படி எக்ஸ்ப்ளாயிட் பண்ண படுவார் என்று நினைக்க மட்டும் கொஞ்சம் கவலையாய் இருக்கிறது.
காதாநாயகன் இதைவிட இயல்பாய் நடித்திருக்கவே முடியாது. படத்தில் வரும் ஏனைய அனைவருமே அந்த பாத்திரத்தை மிகையின்றி உணர்விக்கின்றனர். மிக எளிதாக இவர்களை நடைமுறை வாழ்வில் சந்திக்கலாம் -"உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?" என்று கேட்கும் சகமாணவியை ஒரு பஸ் நிலயத்தில் சந்திக்கமுடியும். கதாநாயகனின் அம்மாவின் முருகபக்தை வேடம் தமிழ் சினிமாவில் புதிது. கதாநாயகனின் அம்மாவென்று ஒரு 'ஷ்பெஷல்'தன்மை எதுவும் தராமல் ஒரு ஸபால்டர்ன் அம்மாவை காண்பித்திருக்கிறார்கள்.
தமிழில் எத்தனையோ படங்களில் கலக்கியது போல் இந்த படத்திலும் ஒரு சின்னபையன் வந்து கலக்குக்கிறார். புரியவே இல்லை. காஜா ஷெரீஃப்இ தவக்களை தொடங்கி இந்த உதாரணக்கள் எல்லாம் என்னவானார்கள்? இவரும் என்னவாவார் என்று தெரியவில்லை.
அப்பத்தா போன்ற அப்படியே உயிர்கொண்ட பாத்திரங்களை பாரதிராஜா படங்களில்தான் பார்க்கமுடியும். ஆனால் அவர் படத்தில் கதாநாயகிஃநாயகன் அசடு வழிவார்கள். சமீப கால திரைப்படங்களில் ஒரு டெரெண்டாக அமைந்துள்ள (திலி தமிழ்போல்) மதுரை தமிழ் அப்படியே எல்லோராலும் (க.நாயகஃநாயகி முதல் சீன் உட்பட) பேசப்பட்டாலும்இ திடிரெனெ கதாநாயகனின் தோழன் ஒரு கட்டத்தில் மட்டும் 'ஏலேஇ வாலே'யை மதுரை தமிழுடன் கலந்தடிக்கிறார். ஒருவேளை அவர் ராமநாதபுரம் பக்கத்திலிருந்து வந்ததாக உணர்துகிறார்களோ?
ஒரு சடங்கு நிகழ்ச்சி அத்தனை யதார்த்தங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது போன்ற வைபவங்களில் தவறாமல் நடைபெறும் சண்டையும் காண்பிக்கபடுகிறது. கதாநாயகியின் ஜாதியை குறிப்பால் உணர்த்திவிடுகிறார்கள். மற்றபடி கதை பெரிய விஷயமில்லை. இந்த சம்பவ கோர்வையை போட்டுஇ ஏற்கனவே சொல்லப்பட்ட சாதாரண கதையைஇ மனதை பாதிக்கும் விதமாய் எடுத்ததே படத்தின் சிறப்பு. படத்தை பார்த்த எவரும்-பொதுவாய் உணர்சிவசப்படும் தமிழ் சினிமா பார்க்கும் வெகுமனம்- ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என்று தோன்றுகிறது.
படத்தின் பல்வேறு சிறப்பை ஏற்கனவே பலர் எழுதியிருப்பதால் இத்தோடு ஜகா வாங்கிகொள்கிறேன். நான் பார்த்தது ஒரு இணணய காப்பி. இடையில் கொஞ்ச நேரம்இ இருட்டாகி ஒலிச்சித்திரமாய் கேட்க வேண்டியிருந்தது. மொத்தத்தில் தமிழ் சினிமா உலகில் உற்சாகத்தை அளிக்கும் படமாகவே என்னால் இதை பார்க்கமுடிகிறது. இனி கார்திக் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு வருகிறேன்.
கதாநாயகனுக்கு புத்தியில்லாததாக சித்தரிக்கபட்டிருப்பதாக கார்திக்கை போல என்னால் வாசிக்க முடியவில்லை. ஆனால் கார்திக்கின் வாசிப்பை மறுக்கவும் வாதங்களில்லை. கதாநாயகன் வேறு வழியின்றியே நாதியற்ற தன் சென்னை தோழனை நாடி போகிறானே ஒழியஇ புத்திகுறைவினால் அல்ல என்று தோன்றுகிறது. அதே போல கிரிமினல் மூளையுடய சித்தப்பாவை நம்புவது பொதுவாய் (காதலிக்கும் ஒருவனுக்கு தேவையான) வெகுளித்தனமும்இ அப்பாவித்தனமுமே அன்றிஇ முட்டாள்தனமாய் எனக்கு தெரியவில்லை. இப்படி பார்ப்பது சரியா என்பதை விட படம் பார்த்து துய்க்க அது உதவும் என்று தோன்றுகிறது. துய்பது முக்கியமானது என்று நான் நினனக்கிறேன். அது தவிர கார்திக் நோண்டி பார்த்து சொல்லும் பல குறைகள்இ தமிழ் வெகுஜன சினிமாவை பற்றி பேசும்போது பெரிதுபடுத்த தேவையில்லாத விஷயங்களாக எனக்கு தோன்றுகிறது. அதனால் இரண்டு கருத்துக்களை அவர் சொல்வதில் முக்கியமாய் கருதி அதை மட்டும் எதிர்கொள்கிறேன்.
"இப்படம் காதல் என்பது பண்க்காரனுக்கும் ஏழைக்கும் வரவே கூடாது என்பது போல் தான் எடுக்கப்பட்டுள்ளது. அது நம் சமூகத்தில் பிச்சிகிட்டு ஓடி வெற்றி பெறுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை."
முதலில் எந்த ஒரு கலைப்படைப்பும் ஒரு குறிப்பிட்ட நோக்கதுடன் எடுத்தாலும்இ அப்படி அது திகழ்வதாய் தெரிந்தாலும்இ அது நிறைவேறாது என்பது முக்கியமானது. நண்பர் ஒருவர் 50களில் வந்த ஒரு திரை விமர்சனத்தை பல வருடங்கள் முன்னால் காட்டினார். படம் பெயர் எதுவும் நினைவிலில்லை. அது இங்கே தேவையும் இல்லை. அந்த விமர்சனம் "மோசமான காட்சிகள் கொண்ட படம் என்றாலும்இ நல்ல கருத்துள்ள முடிவு" என்பதாக ஒரு தொனியுடன் நிறைவு பெறும். அதாவது படம் சற்று தூக்கலாக ஸெக்ஸ் காட்சிகள் கொண்டதுஇ ஆனால் படமுடிவில் கதாநாயகன் தனது 'லீலை'களுக்கு பாடம் கற்றுகொண்டு திருந்துவதாய் கதை இருக்கலாம்.
இப்போ விஷயம் என்னவெனில் படம் பார்க்கும் யாரும் இந்த நீதிபோதனைத்தனமான முடிவிற்காக பார்க்கபோவதில்லை. அதை கண்டுகொள்ளவே போவதில்லை. படம் பார்த்த கூட்டம் அத்தனையும் பாலியல் காட்சிகளுக்காக மட்டுமே படம் பார்த்திருக்கும். ஆக படத்தின் நோக்கம் என்று ஒன்றை சொல்லகூடும் என்றாலும்இ அது யாராலும் கண்டுகொள்ள போவதில்லை.
இதுவரை எடுக்கப்பட்ட காதல் படங்கள் பல காதல் தோல்வியை அடிப்படையாய் கொண்டாலும்இ அது காதலை போற்றுவதாகவும் காதல் குறித்த கற்பிதத்தை இன்னும் தீவிரமாக்கவுமே பயன்பட்டிருப்பதாய் தோன்றுகிறது. இது போன்ற படங்கள் மேலும் வர காதலிப்பவர்கள் இன்னும் அதிகமாக கூடுமே ஒழியஇ இது அவர்களை நம்பிகை இழக்க வைக்காது என்றே நினைக்கிறேன்.
"மேலும் சாதி விட்டு சாதி கல்யாணம் பற்றி கதை இருந்தும் கூடஇ அதை ஆதரிப்பது பற்றி ஒரு டயலாக் கூட இல்லாதது பாலாஜி சக்திவேலின் சமூகச் சிந்தனையின் அளவை தெரிந்து கொள்ள உதவுகிறது."
ஓரளவு நியாயமான விமர்சனம் என்றாலும்இ நம் வெகுஜன சினிமாவின் முக்கிய நோக்கம் படம் பிரச்சனையில்லாமல் ஒடுவதும்இ அதை ஹிட்டாக்குவதும் மட்டுமே. இதற்கு நடுவிலேயே மற்ற விஷயங்கள் பேசப்படும். அவைகள் எந்த வித தீவிரத்தன்மை அற்றதாய் இருப்பினும்இ இத்தகைய பிரம்மாண்டமான வெளியில் பிரச்சனை தொடப்படுவது முக்கியமானது.
இந்த படத்தில் ஜாதி குறித்த தகவலை முழுவதும் மறைத்து எடுத்திருக்க முடியும். ஆனால் அது சாமர்தியமாய் பேசப்படுகிறது. மெல்லியதாய் அந்த பிரச்சனையும் தொடப்படுகிறது என்பதே நல்ல விஷயம்தான். குறிப்பாய் ஒரு இடைநிலை ஆதிக்க ஜாதியின் (என்ன வென்று சொல்லவும் வேண்டுமோ) வெறி கோடிட்டு காட்டபடுகிறது. பொதுவாய் நிலப்பிரபுத்துவ ஜாதி அடையாளங்கள் மறைக்கப்பட்டு கிராம சினிமாக்கள் கூட எடுக்கப்படும் (அதில் தலித்தாக வாசிக்க கூடிய பாத்திரங்கள் கேவலப்படுத்த படும்) சூழலில்இ பாரதி கண்ணம்மா போன்ற (உண்மையில் தேவர் ஜாதிக்கு சார்பாக எடுக்கப்பட்ட ஒரு) திரைப்படத்தையே ஒடவிடாமல் செய்த பிறகும் இந்த அளவாவது பிரச்சனை தொடப்படுவது நல்லது என்றே தோன்றுகிறது.
'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ளஇ தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!
நன்றி....http://rozavasanth.blogspot.com
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
காதல் + கல்யாணம் - உறவு = ?
எனது காதல் குறித்த கடந்த பதிவு, படம் பார்த்த மறுதினம் அவசரத்தில் எழுதப்பட்டது. மூன்று நாட்கள் முன்பு தற்போக்கு சிந்தனையில் ஏதோ பொறிதட்ட, படத்தை இறக்கி, கவனமாய் கடைசி சில காட்சிகளை பார்த்த பிறகு, நான் எழுதியதில் உள்ள ஒரு தவறு தெரிந்தது. (இதற்கு முன் முதல் பாதி படத்தை ஒரு பத்து முறையாவது இறக்கி பாத்திருபேன். ) அது குறித்து பேசும் முன், இப்போதும் காதலை முன்வைத்து இப்படி ஒரு படம் வருவதை, ஹிட்டாவதை ஆரோக்கியமானதாகவும், கலையம்சம் என்பதாக படம் குறித்து சொன்னவைகளையும் மீண்டும் வலியுறுத்தி கொள்கிறேன்.
கடந்த பதிவு படம் குறித்த விமர்சனமாக எழுதப்படவில்லை. படம் குறித்து பலர் நல்லவிதமாய் எழுதியுள்ளதை பொதுவாய் ஒப்புகொண்டு எழுதப்பட்டது. படம் காதல் குறித்தது எனினும், கதை காதலோடு கல்யாணம் என்ற சமூக கருத்தாக்கத்தையும் யதார்த்தமாய் தொட்டுசெல்கிறது. இதற்கு மாறாக உறவு, அதாவது பாலியல் உறவு என்பது குறித்து படக்கதை யதார்தத்திற்கு முரணாக மௌனம் சாதிக்கிறது.
எண்ணிக்கையில் அடக்கவியலாத வகைகளில் பேசப்பட்டும், இன்னும் இந்த காதல் என்பது குறித்து குண்ட்ஸாக கூட வரையருக்க முடிவதில்லை. திருமணமும், பாலியல் உறவும் மிக தெளிவான வார்த்தைகளில் விளக்க கூடியவை, வரையரைக்குள் அடங்க கூடியவை. அதற்கு பின் எந்த கற்பித தன்மையும் இல்லை. இவை இரண்டுடன் மிக நெருங்கிய தொடர்புடையதெனினும், இவற்றின் அடிப்படையில் மட்டும் காதல் என்ற ரொமாண்டிக் கற்பிதத்தை விளக்க இயலவில்லை. குறைந்த படசம் விளக்க நமக்கு விருப்பமில்லை. இது குறித்து விவாதிப்பதல்ல இப்போதய நோக்கம்.
கடந்த பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.
"'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. இந்த படத்தில் (தெளிவாக அடையாளங்கள் சொல்லபடவில்லை எனினும்) ஒரிரு நாள் சேர்ந்து வாழ்கிறார்கள். பார்போம்!"
படம், நம்ம கதாநாயகி/நாயகன் ஓடிவந்து சென்னையில் வீடு தேடும் காட்சிகளில், சமூகத்தில் கல்யாணம் என்ற கருத்தாக்கத்திற்கு வைத்திருக்கும் அதீதமான மரியாதையை காட்சிபடுத்துகிறது. ஆனால் அதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே தூக்கிபிடிக்கிறது. வீட்டை விட்டு ஒடி வந்து இன்னும் பெண் கழுத்தில் தாலி ஏறாத நிலையில், வாடகைக்கு வீடு கிடைப்பது மட்டுமல்ல பிரச்சனை. காதலர்களாய் இருக்கும்வரை மேன்ஷன் வாலிபர்கள் 'ஃபிகரை தள்ளி கொண்டு வந்ததாய்' பார்கிறார்கள். துப்பறிய முயலுகிறார்கள். கல்யாணம் என்ற ஓற்றை நிகழ்வு அவர்கள் பார்வையை தலை கீழாக்குகிறது. அதுவரை 'சான்ஸ் கிடைக்குமா' என்று நாக்கை தொங்க போட்டு ஆர்வம் காட்டுபவர்கள், ஒரு மஞ்சள் தாலி தெருவோர குட்டி கோவிலில் கட்டப்பட்ட உடன் 'ஸிஸ்டராக' பார்கின்றனர். இன்றைய திரைப்படங்களில் தாலியை தூக்கிகாட்டி கதாநாயகியை வசனம் பேச வைக்காவிட்டாலும், தாலி மகிமை இப்படி வேறு வகைகளில் பேசப்படுகிறது.
இதை படத்தின் மீதான விமர்சனமாக இதை சொல்லவில்லை. சமுதாய மதிப்பீடுகளை -அதுவும் பார்வையாளருக்கு பிரச்சனை உண்டு பண்ணாத உவப்பான மதிப்பீடுகளை - சற்று மிகைபடுத்தி, பார்வையாளரை நெகிழ வைப்பதாக, ஒரு வெகுஜன சினிமா பொதுவாய் செய்ய கூடியதுதான் இங்கே படமாகியிருக்கிறது.
என் நண்பர்கள் இருவர் (அதாவது கணவன் மனைவி அல்லது துணைவன் துணைவி) பதிவு திருமணம் செய்தவர்கள். ஆனால் (ஏதோ கொள்கை பிடிப்பாய்) தாலி கட்டி கொள்ளவில்லை. சென்னையில் 'டீஸன்டாய்' வீடு கிடைக்க அவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நேரடியாக 'கல்யாணம் ஆச்சுங்கறீங்க, தாலியில்லையே!' என்று கேட்பார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனை - இதை ஒரு பிரச்சனையாய் காண்பிக்காமல், தாலி ஏறியவுடன் மற்றவர்கள் காட்டும் பாசத்தை நெகிழவைப்பதாக கட்டமைத்து காட்டியிருப்பினும் - யதார்தத்துடன் காட்டபட்டுள்ளது. ஆனால் யதார்தத்திற்கு முரணாக கல்யாணம் ஆனவுடன் இயல்பாகவும் மரபாகவும் இறங்கவேண்டிய காரியம் குறித்து மட்டும் மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனம் தற்செயலானதாக தெரியவில்லை.
படத்தில் என்ன நடக்கிறது? முந்தய நாள் தாலி ஏறாத காரணத்தால் தங்க வீடு கிடைக்கவில்லை. இரவை தியேட்டரிலும், பஸ் பயணத்திலும் செலவழித்துவிட்டு, மறுநாள் காலை தோழன் ஏற்பாடு செய்த பணத்தில் பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்துகொண்டு, நடுரோட்டில் ஒரு கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டிகொண்டு, அதை ஒரு மேன்ஸன் மேட் பார்த்து, மேன்ஸனில் எல்லோரும் பணம் பிரித்து, 'ரிசப்ஷனுக்கு' ஏற்பாடு செய்து, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, புதுவீட்டில் எவர்சில்வர் பாத்திரங்கள் ஜமுக்காளம் சகிதமாய் பால் காய்ச்சி குடியேறி . . . . . . இத்தனைக்கு பிறகு என்னய்யா நடக்கும்? இயல்பாக இருந்தாலும் சரி, அல்லது மரபு கலாச்சார ரீதியாகவும், வழக்கமான சினிமாத்தனமாக கூட என்ன நடக்க வேண்டும்? சாந்தி முகூர்த்தம் முதலிரவு என்று பல வார்த்தைகளால் அழைக்கபடும் ஜல்சாதானே!
இங்கேதான் அவ்வளவு யதார்த்தமாய் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சித்தரிக்கப்பட்டதாய் சொல்லப்பட்ட படம் பார்வையாளனை டபாய்கிறது. கதாநாயகன் இதற்கு பிறகு ஒரு வொர்க் ஷாப்பில் தனக்கு தெரிந்த மெகானிக் வேலைக்கு ( ஒரு மேன்சன்காரன் சிபாரிசு சொல்லி) போகிறான். அதாவது இரண்டு நாட்களாய் ஓயாத அலைச்சலில் இருப்பவர்களை, அன்றய தினம்தான் திருமணமானவர்களை ஒரு நல்ல சாப்பாடு போட்டு ஒய்வெடுத்து ஜல்ஸாவில் ஈடுபட உதவாமல் மொத்த மேன்சன் கூட்டம் போய்விட, யதார்த்தமாய் மறுநாள் ஏற்பாடு செய்து ஹீரோ போகவேண்டிய வேலைக்கு அன்றே போகிறான். கதாநாயகி வாசலில் குழாயடியில் குடம் நீரை தூக்க முடியாமல் தூக்கி கீழே போட்டு, முருகன் (ஹீரோ பேரு) ஸ்டோர்ஸ் பாத்திரத்தை செல்லமாய் சிணுக்கி சமைக்க தொடங்குகிறாள்.
இதற்கு நடுவில் மதுரையிலிருந்து ஓடிப்போன பெண்ணை தேடி துப்பறிந்து அவர் சித்தப்பா கோஷ்டி அடியாட்களுடன் கிளம்பி சென்னை வருகிறது. நல்ல வார்த்தை நைச்சியம் பேசி காதலர்களை மதுரைக்கு திரும்ப கூட்டி போகிறது. போகிற வழியெல்லாம், மதுரை போய் சேரும்வரையிலும் சேர்ந்த பின்னும் ஒரே வெளிச்சம். அதாவது காட்சிகள் பகலிலே நிகழ்கின்றன. இவ்வளவு துல்லியமாய் யதார்தத்தை காண்பித்த கதை சொல்லல் இடையில் ஒருநாள் இரவை முழுசாய் முழுங்கியிருப்பதை காணலாம்.
இப்படி ஒரு லாஜிக்கல் பிரச்சனையாக பார்க்காவிட்டால் கூட, கதை இயக்குனரின் முழு ஆளுகைக்கு உட்பட்டது. சித்தப்பா ஒரு நாள் தாமதமாய் தேடி வந்திருக்க முடியும். இயல்பாக நடந்திருக்க வேண்டிய முதலிரவு நடந்திருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது இயக்குனருக்கு காதலர்கள் உறவு கொள்வது ஒப்புதலில்லை, குறைந்த பட்சம் அப்படி ஒரு காட்சியமைக்க மனசில்லை என்பதாகவே தெரிகிறது.
எவ்வளவு பெரிய வாய்ப்பை அவர் தவறவிட்டிருக்கிறார்! சேரனும், சரி பாலாஜி சக்திவேலும் சரி, யதார்த்தமாக சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற ஒரு செய்கையை, சினிமாவில் எந்த தற்செயல் தன்மையின்றி மிகவும் சுய நினைவுடன் தணிக்கை செய்திருப்பது குறித்து ரொம்பவே யோசிக்க வேண்டியுள்ளது.
உலகம் முழுமையும் எல்லா சமூகத்திற்கும் தனது இனமானத்தை மதிப்பீடு செய்யும் சமாச்சாரமாக பெண்களின் கற்பு திகழ்ந்து வருகிறது. மேற்கும், மேற்கின் தாக்கத்தில் மற்றவையும் இதில் மாற்றங்கள் கண்டிருப்பினும், நம் சூழலில் இந்த மதிப்பீடு, ஒரு 'வாழ்வா சாவா' கேள்வியாக பிரச்சனைகளை கிளப்பிவருகிறது. தலித்கள் மீதான பல கலவரங்கள்/தாக்குதல்களுக்கு இப்படி ஒரு பிண்ணணி பொதுவாக இருக்கிறது.
சமூகத்தின் மீதான கருத்தியல் வன்முறையில் முதலிடம் வகிக்கும் பார்பனியம் இது குறித்து ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்களை உலகின் எந்த சமூகத்திலும் காணமுடியாது. இன்றைக்கும், திராவிட இயக்கத்தின் 70 ஆண்டுகளுக்கு மேலான பாதிப்பிற்கு பிறகும், தமிழ் சமூகத்தில் 'அய்யர் பொண்ணை தொட்டா விளங்காம' போய்விடும் நம்பிக்கை இருப்பதை கேட்கமுடியும். மனித இனம் சிந்திக்க தொடங்கியபின் உருவாக்கிய பிரதிகளில், மனவக்கிரத்தில் எதனுடனும் ஒப்பிடமுடியாத பிரதியாகிய மனுதர்மம் விலாவாரியாய் இது குறித்து பேசுகிறது. பார்பன பெண்ணை மற்றவர் தொடுவதன் பாவத்தன்மை குறித்து பேசும் போதே, மற்ற சமூகத்து பெண்கள் பார்பனனின் விந்தை 'வாங்கி கொள்ளும்' புண்ணியம் குறித்தும் பேசுகிறது. (கேரளாவில் இன்னும் அந்த வழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சுமதி ரூபன் 'மாயா' படம் குறித்து எழுதியதையும், இந்த கருத்தாக்கம் பேசப்படும் இன்னொரு இடமாக 'சம்ஸ்காரா' நாவலையும் பார்கலாம்.) மனுதர்மத்தின் பல சட்டங்கள் பார்பன பெண்களின் இந்த 'நெறி பிறழ்தலை' தடுப்பதை அடிப்படையாய் கொண்டிருப்பதை காணமுடியும். அம்பேத்கார் 'சாதிகளின் தோற்றம்' குறித்த நூலில், சதி போன்ற பழக்கங்கள் கூட இந்த (சாதிகளுக்குள்ளான ) அகவுறவை கட்டிகாப்பதை முன்வைத்தே தோன்றியவையாக தர்க்க ஆதரங்களுடன் நிகழ்த்தி காட்டுகிறார். மனு தர்மத்தை ஏற்று கொள்ளவில்லை என்று சொல்லி, அதற்கு எதிரானதாக ஜெயமோகன் போன்றவர் தூக்கி பிடிக்கும் கீதையிலேயே அர்ஜுனன் போருக்கு எதிரான முக்கிய காரணமாய் இதை கூறுகிறான். அதாவது போரினால் ஏற்படப் போகும் ஆண்களின் இறப்பினால், தன் குலபெண்கள் நெறி தவறி போய் *தர்மத்திற்கு* கேடு வரப் போவதை ஒரு முக்கிய காரணமாய் போர் புரிய மறுப்பதற்கு சொல்கிறான்.
இந்த நம்பிக்கைகளின் பாதிப்பு இன்றும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்கிறது. கலப்பு மணம் ஓரளவு பரவலான பின்னும் கூட, அய்யர் பொண்ணை சைட் அடிக்கவும், ஜொள் விடவும் தயாராயிருந்தும், 'கை வைத்தால்' ஏற்படும் 'பாவம்' குறித்த நம்பிக்கை உயிர்ப்புடன் தொடர்வதை அறியமுடியும். ஆனால் தமிழ் சினிமா இதை உடைத்திருக்கிறது. வேதம் புதிதில் கதாநாயகன் காலி பண்ணபட்டாலும், பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் (எனக்கு தெரிந்து) முதல் முறையாக (கடைசியாகவும்?) இந்த 'புரட்சி' நடக்கிறது. (அரங்கற்றம் படத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை இத்தகையதாய் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, அது ஒரு முக்கியமான படம் எனினும்.)
தேவர் என்ற ஜாதி பாலியல்ரீதியாக தலித் பெண்கள் மீது (அதன் பாதிப்பை அந்த சமூகத்தின் மீது) நிகழ்த்தும் வன்முறையை நேரடியாக திருநெல்வேலியில் பார்த்திருக்கிறேன். (90களில் தலித்களின் எதிர் தாக்குதலுக்கு பின் இது இல்லாமலாயிருப்பதாக அல்லது பெருமளவிற்கு குறைந்திருப்பதாகவே அறிகிறேன்.) ஆனால் ஒரு சினிமாவில் தேவர் பெண் தலித்தை காதலிப்பதையும், இறந்த பின் எரிந்துகொண்டிருக்கும் பிணத்தை உடன் கட்டையேறி ஒரு தலித் 'புணர்தல்' சைகைகள் செய்வதாலும், பாரதி கண்ணம்மா திரைப்படம் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் ஓட அனுமதிக்க படவில்லை.
இத்தனைக்கும் பாரதி கண்ணம்மா தேவர் என்ற அடையாளத்தை glorify செய்வதாகவே எடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாய் சொல்ல 'அய்யா தேவரய்யா' என்று கும்பிட்டபடி தலித்தான பார்திபன் பாடும் ஒரு பாட்டும், ஒரு கட்டத்தில் 'எவன் தேவன்?' என்ற கேள்வியை கேட்டு மாற்றி மாற்றி விஜயகுமார் 'தேவனு'க்கான இலக்கணமாய் அடுக்கும் வசனங்களை சொல்லலாம். அந்த வசனங்களை எழுதியவனை செருப்பை கழட்டி அடிக்க தோன்றும். அந்த அளவு ஜாதி பெருமை பேசும் வசனங்கள்!
கிராம யதார்தத்தை செல்லுலாயிடில், ரொமாண்டிஸிஸம் கலந்து, கொண்டு வந்த பாரதிராஜாவின் படங்களில் தேவர் அடையாளம் பெரிதுபடுத்த பட்டிருப்பினும், தேவர் அடையாளத்தை முழுமையாய் கொண்டாடும் விதமாய் தேவர்மகன் படமே முதலில் வெளிவந்தது. கதை தேவர்களின் அடையாளமான 'அறுவாள், வெட்டு குத்து' குறியீடுகளை எதிர்த்து எடுக்க பட்டதாய் காட்டிகொண்டாலும், அப்படி ஒரு நோக்கம் உணமையிலேயே கதைக்கு இருந்தாலும், படம் தேவர்களால் தங்கள் அடையாளமாய் பார்க்கப்பட்டது. தேவர் வீட்டு வைபவங்களில் மீண்டும், மீண்டும் அந்த படம் காட்டப்பட்டது. தேவர் சாதி சங்கத்தவர்கள் கமலை போய் பார்த்தார்கள். சமூகத்தில் தேவர்களின் சாதி பெருமையை, அதன் மூலமாக சாதிவெறியை தூண்டி எரியவிடுவதாகவே இருந்தது. இதன் பிண்ணணியிலேயே கிருஷ்ணசாமியின் 'சண்டியர்' படத்திற்கான எதிர்ப்பை பார்க்கவேண்டும். அதை பிறகு இன்னொரு பதிவில் பார்போம்.
இதற்கு பின் வந்த பாரதிகண்ணம்மா தேவர் மகனின் அணுகுமுறையையே (தேவன் என்ற ஜாதி அடையாளத்தை தூக்கி பிடித்து கொண்டாடிவிட்டு, அவர்களிடம் உள்ள குறையாய் ஜாதிபிரச்சனையை சொல்வதையே) கொண்டிருந்தாலும், தேவர் ஜாதியினரின் பலத்த எதிர்பிற்கு உள்ளனது. இத்தனைக்கும் தலித்களாக சித்தரிக்கபடும் பல பாத்திரங்கள் மிகவும் கேவலபடுத்த பட்டிருக்கும். (உதாரணமாய் பொண்ணை வடிவேலுவிடம் 'செட்டப்' பண்ணிகொள்ள சொல்லும் ஒரு அப்பன்.) இத்தகைய சித்தரிப்புகள் வருடபோக்கில் மாறி வந்திருப்பதை காணமுடியும். 'கில்லி' படத்தில் கூட மதுரைவாழ் வில்லன் பிரகாஷ் ராஜின் ஜாதி நுட்பமாய் குறிக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் 'காதல்' திரைப்படம் (சடங்கு வைபவத்தில் வரும் பாடலின் வரிகள் தவிர்த்து) எங்கேயும் தேவர் அடையாளம் ஜாதி பெருமையாக கொண்டாடப் படாமல், அதற்கு மாறாக ஜாதி வெறியாக எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. மிக குறைவான காட்சிகளிலானாலும் தீவிரமான முறையில் சித்தரிக்க பட்டிருக்கிறது. கடைசி காட்சியில் 'அவளை வெட்டுரா, ராஜேந்திரா!' என்று கத்தும் அப்பத்தா, கதநாயகியை கூடி அடிக்கும் பெண்கள்! ஆண்களை விட பெண்களிடம் ஜாதிவெறி வெளிப்படும்போதே அதன் நோய்கூறு தன்மையை விளங்கிகொள்ள முடியும். கதாநாயகியை உறவுக்கார பெண்கள் கூடி அடிக்கும் அந்த காட்சி மிகுந்த அர்த்தமுள்ளதாகும்.
இத்தனை இருந்தும் ஒரு இயல்பாய் நடந்திருக்க வேண்டிய ஒரு முதலிரவை வலிந்து தடுத்தன் மூலம் பாலாஜி சக்திவேல் ஒரு பெரிய வாய்ப்பை இழந்திருக்கிறார். படத்தில் ஜாதி பிரச்சனை சாமர்த்தியமாக பேசபடுகிறது. ஒரு முதலிரவு காட்சியை புகுத்துவதன் மூலம் எந்த பிரச்சனையும் இயக்குனருக்கு வர வாய்பில்லை. 'கட்டாயத்தின் பேரில்' புகுத்தப் படும் கிளர்ச்சி பாடலான 'கிறு கிறு கிறு வென ..' என்ற பாடலை ஒரு முதலிரவு பிண்ணணியில் படமாக்கியிருக்க முடியும். மேன்சனில் தனித்திருக்கும் போது இடை புகுவதை விட, ஒரு முதலிரவு காட்சியாய் அது பொருத்தமாக வந்திருக்கும். ஆனால் இயக்குனருக்கு அதை செய்ய மனம் வரவில்லை. இதற்கு பின்னுள்ள தனிப்பட்ட மற்றும் உளவியல் காரணங்கள் மிகவும் ஆராயபட வேண்டும்.
பெண்களை உறவு கொள்வதை முன்வைத்து ஒரு சமூக பிரச்சனையை அணுகுவது குறித்து கேள்விகள் சிலருக்கு இருக்க கூடும். ரவி ஸ்ரீனிவாஸ் திண்ணையில் அப்படி ஒரு கேள்வியை ('காடு' நாவல் குறித்து) முன்வைத்து, அது சுத்தமாய் திரிக்கப்பட்டு வேறு திசையில் போய்விட்டது. அப்படி பட்ட கேள்விகளை கைவசம் வைத்துகொண்டிருக்க வேண்டும். அதை கேட்டுபார்த்து பார்வை எந்த திசையில் போகிறது என்று விழிப்புடன் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் இங்கே பேசியிருப்பது ஒரு யதார்த்தம் எவ்வாறு திரிக்க படுகிறது, திரிக்க படுவதன் பிண்ணணியில் என்ன கருத்தாக்கங்கள், மதிப்பீடுகள் இருக்கின்றன என்பதும், அத்தகைய மதிப்பீடுகள் மீறப்படுவதன் அரசியல் குறித்தும்.
இப்போதய நிலமை இதுதான். 'பாரதி கண்ணம்மா' திரைப்படத்தில் ஒரு தேவர் ஜாதி பெண்ணுடன் உறவு கொள்ள, தலித் ஆண் 'உடன்கட்டை' ஏறி சாகவேண்டி வந்தது. காதல் படத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் யதார்த்தமாய் உறவு கொள்ள இயக்குனரால் அனுமதிக்க படுவதில்லை. மாறாக யதார்த்தமாய் அந்த தலித் அடித்து பைத்தியமாக்க படுகிறான்.
காதல் படத்தை இப்போழுதும் தமிழின் குறிப்பிட தகுந்த படங்களில் ஒன்றாக நினைத்தாலும், அதற்கு தொடர்ந்து கொண்டிருக்கும் பாராட்டுகள் கொஞ்சம் ஓவராய் தெரிகிறது. அதனால் பிரச்சனை எதுவும் பெரிதாய் வரப் போவதில்லை. இந்த படத்தினால் ட்ரண்ட் அமைந்து எடுக்கபட போகும் எதிர்கால படங்களில் என்ன வருகிறது என்று பார்போம்.
நன்றி....http://rozavasanth.blogspot.com
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
காதலில் கண்ணாய் தான் இருக்கிறியள் குழைக்காட்டான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->காதலில் கண்ணாய் தான் இருக்கிறியள் குழைக்காட்டான்.... :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கவிதன் நீர் கவிதாவை தேடிப்பிடித்த மாதிரி, குளக்கட்டனும் ஒரு குளக்கட்டியை தேடிப்பிடிக்கட்டுமே!
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin-->காதலில் கண்ணாய் தான் இருக்கிறியள் குழைக்காட்டான்.... :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கவிதன் நீர் கவிதாவை தேடிப்பிடித்த மாதிரி, குளக்கட்டனும் ஒரு குளக்கட்டியை தேடிப்பிடிக்கட்டுமே!<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அட நான் காதல் படத்தை சொன்னேன் மன்னா,,.. குழக்கட்டிகளையே பிடிக்கட்டன் எனக்கென்ன <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குளக்காட்டான். காதல் படம் நிஜக்கதை தானாம்.. நேற்று ஒரு றேடியோவில போச்சு கேட்டன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இல்ல நீங்க அத தெரிஞ்சு வச்சு என்ன பண்ண போறீக..... :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உண்மையில் ' காதல்' படத்தில் சொல்லப்படுவது காதல்தானா? பாலின ஈர்ப்பு மட்டுந்தானே?
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/KATHAL02.GIF' border='0' alt='user posted image'>
வளரிளம் பருவம் என்று சொல்லப்படும் விடலைப்பருவம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். முளைத்திராத மீசையை திருகிப் பார்ப்பதிலும், தாவணிகள் காற்றில் பறக்க நடக்கும் போது தேவதையாய் உணர்வதும் இக்கால்த்தில்தான். ஆண், பெண், இருபாலருக்கும் பொறுப்புகளைச் சுமக்கச் செல்லும் முன்பான கூட்டுப்புழுப் பருவம். இதனை பத்திரிகைக் கதைகளும், டிவி மீடியாக்களும் எப்படிக் கையாள்கின்றன? விடலைப் பருவம் பற்றிய எத்தகைய பார்வையை அவை முன்வைக்கின்றன என்ற கேள்விக்குப் பதில்?
சினிமா என்ற பெரிய மாயத்திரையின் கைகளில் இந்த ணீபீஷீறீமீsநீமீஸீt பருவம் படும் பாடு கொஞ்சமல்ல. தமிழ்சினிமா பார்த்து வளர்ந்த இளைஞனின் தோற்றமும், மனஓட்டமும் வாழ்க்கை மீதான அவனது பார்வையைத் தரும். அதிலும் சமீபத்திய இளைஞர்களுக்கு மன்மதன் சிம்புவும், 7ஜி ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணாவின் சிரிப்பும் தான் ஆதர்சம்.
செக்ஸ், அதற்கான முயற்சிகள், நட்பு என்ற போர்வையில் எந்த செயலுக்கும் அங்கீகாரம் அளித்தல் இது மட்டுமே வாழ்க்கையின் பிரதானம் என்றே சமீபத்திய தமிழ்சினிமாக்கள் காட்டுகின்றன. அதிலும் காதல் என்ற உணர்வைப் பற்றி இவர்கள் கூறவிட்டால், எடுத்த பிலிம்ரோலில் பிளேடால் குதறிவிட்டாற்போல் வலிவரும் போல.
முதற்காதல் எனப்படும் புரியாத உணர்வுகளுக்கு கட்டம் கட்ட ஆசைப்படும் உள்ளங்களுக்கு இந்த மாதிரி தமிழ்சினிமாக்களே தாஜ்மஹால்.
சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளியான காதல் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. நேர்த்தியான திரைக்கதையும், அதைச் சொல்லிய பாங்கும் அருமை. ஆனால் உண்மையில் அந்தப்படத்தில் சொல்லப்படுவது காதல்தானா? அது பாலின ஈர்ப்பு மட்டுந்தானே? இந்தக் கேள்வி சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் இயக்குநர் ரா. பார்த்திபன் கேட்டது. இக் கேள்வி சமூகப் பொறுப்புள்ள,விடலைப் பருவம் கடந்து வந்த ஒவ்வொருவருக்குள்ளும் நியாயமாக எழுவது.
இப்படத்தில் மதுரை செயிண்ட் ஜோசப் பெண்கள் பள்ளியின் பெயர் படத்தில் ஆறுமுறை வருகிறது. படத்தின் நாயகி இப்பள்ளியின் மாணவி என்று காட்டப் பட்டதால், உண்மையிலேயே இது போன்ற சம்பவம் இங்கு நடந்துள்ளதா என்று பலர் கேட்கின்றனர். இது படிக்கும் மாணவிகளின் மனதை பாதிப்பதாக இப்பள்ளியின் தாளாளர் ஜெயராணி காதல் படத்திற்கெதிராக வழக்கு தொடுத்துள்ளார். அது சரி- படத்தின் முடிவில் உண்மைக் கதை என்றல்லவா போடுகிறார்கள். காதல் படத்தில் வர்ற மேன்ஷன்ல தான் நான் தங்கியிருக்கேன், என்று ஒருவர் பெருமையோடு சொல்லும்போது இதுபோன்ற சந்தேகங்களும் வரத்தான் செய்யும். ஏன்னா, நம்மாளுங்க விவரம் அப்படி.
இப்படிப்பட்ட காதல் படங்களில் நடிக்கும் தனுஷ், பரத், ரவிகிருஷ்ணா என்ற நாயகர்களுக்கான லிஸ்ட் தொடர்கிறது. இவர்களது சிறப்பம்சம் அடுத்த
வீட்டுப் பையன் போன்ற தோற்றம். இப்படித்தான் இவர்கள் விளம்பரம் செய்யப்படுகிறார்கள். படத்தில் இவர்களது சேட்டைகளை பார்க்கின்றனர் இன்றைய அப்பாக்கள். பெண்களைப் பெற்ற அப்பாக்கள் பெரும்பாலோனோருக்கு பக்கத்தில் வீட்டுப் பையன்களை இதனாலேயே பிடிப்பதில்லை.
இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு துள்ளுவதோ இளமை சினிமா வந்தவுடன் சகமாணவியிடம் இது போன்று சீண்டுவதுதான் இவ்வயதுக்கான தர்மமா? என்ற கேள்வி பல மாணவர்களுக்குள் எழுந்தது. இதைத்தான் இளமைச் சினிமாக்கள் வெவ்வேறு வடிவங்களில், தருணங்களில் வெளிப்படுத்துகிறது. இது போன்ற உந்துதல்களின், இளவயது மனப்போராட்டங்களின் அடுத்த கட்ட வடிவம்தான் இருபாலருக்குள்ளான பாலியல் சீண்டல்களும் அதைத் தொடர்ந்து வரும் காதல்களும்.
தமிழ் சினிமாவில் சமீபத்தில்தான் இது போன்ற விடலைப்பருவத்தை முன்நிறுத்தும் சினிமாக்கள் வருகிறது என்பதும் உண்மையல்ல. பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், பாரதி வாசுவின் பன்னீர் புஷ்பங்கள் போன்றவை விடலைப் பருவ உணர்வுகளை முன்நிறுத்துபவை. அந்தக்காலத்தில் அவை சில சலசலப்புகளை உண்டாக்கின. ஆனால், இன்றைய சினிமாக்களின் அணுகுமுறை எப்படிப்பட்ட உள்வட்டங்களை நமக்குள் உண்டாக்குகின்றன?
கற்பழிப்புக் காட்சியில் கைதட்டுவதும், பாலியல் சீண்டல்களை உற்சாகமூட்டுவதும் ரசிகனின் மனநிலையை, அவனது சமுதாயப் பார்வையை கேள்விக்குறிக்கு உள்ளாக்குகிறது. இது யாருடைய தவறு?
சினிமாவை அப்படியே வரிந்து கட்டிக் கொள்ளும் தமிழனின் மனப்பாங்கிலும் பெரும் குறை இருக்கிறது. தனது தலைமுறை ஹீரோவைப் போல் ஸ்டைலாகத் தலை சீவும் அப்பாவுக்கும், 'சிம்ரன் சேல' என்று தேடிப்பிடித்து சேலை வாங்கும் அம்மாவுக்கும் பிறந்த தமிழ் குழந்தை ஜன்னல் வழியே பக்கத்து வீட்டுப் பெண்ணை எட்டிப் பார்ப்பதற்கு இளமைச் சினிமாக்கள் தான் காரணம் என்று குற்றம் சொல்வதில் என்ன தவறு? அவன் பார்த்த சினிமா அப்படிப் பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த, மணிரத்னத்தின் அலைபாயுதே படம் பார்த்துவிட்டு, அதுபோலவே கல்யாணமான கல்லூரி மாணவர்கள் எத்தனைபேர்? மக்களின் இயல்புகளைப் பார்த்துத்தான் நாங்கள் படமெடுக்கிறோம் என்பார்கள் திரைத்துறையினர். இங்கு எப்போதும் காற்று வந்ததும் கொடி அசைந்ததா கதைதான்.
அயலானைப் பார் என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கைகாட்டி நமது குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் ஒதுக்கித் தள்ள முடியும். ஆனால் நாம் இன்னும் தாமிரபரணி பாயும் நெல்லைச்சீமைக்கும், மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டாய் பறக்கும் மதுரைச்சீமைக்கும்தானே நமது படங்களைக் கொண்டு போகிறோம். கட்டுப்பெட்டித்தனம் என்று சிலர் சொல்லும் அந்தக் கலாச்சாரக் கோட்டிற்கு உள்ளேயே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு வாழும் விடலைப் பருவத்தினருக்கு இந்த சினிமாக்கள் தவறான ஆப்பிள்களைச் சுட்டிக்காட்டும் சாத்தான்களாக மாறலாம்.
இளைஞர்கள், இளமை, காதல் என்று இன்றைய இளந்தளிர்களுக்கு நம் தமிழ்சினிமா காட்டும் முன்னிறுத்தல்கள் எத்தகையவை? காதல் படத்தைப் பார்த்த பிறகும் சென்னைக்கு வரும் முருகன்களும், ஐஸ்வர்யாக்களும், எத்தனை ஆயிரம்? தெரியவில்லை. ரயில்வே ஸ்டேஷன்களிலும், பஸ்-ஸ்டாண்டுகளிலும் களைப்பாகக் காத்திருக்கும் 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண்ணைப் பார்த்தவுடன் பதைபதைப்புதான் வருகிறது. அவர்களைப் பார்த்துச் சிரித்தபடி ஜோடிஜோடியாக அணிவகுக்கின்றன வளரிளம் பருவப் பட்டாம் பூச்சிகள்.
தமிழ்சினிமாக்கள் இளம் பருவத்தினருக்கு அதிகமான இறக்கைகளைக் கட்டி, பறிக்கும் சக்தியை பறித்து விட்டதோ என்று சந்தேகம் வருகிறது நமக்கு. அடுத்த விளம்பரம் பளிச்சிடுகிறது. தேவதையைக் கண்டேன் படப் பாணியில் காதலியைப் பற்றி புகார் செய்த காதலன், காதலியின் கரம் பிடித்தார். போட்டோவுடன் செய்தியைப் படிக்கும் பெரியவர் வாய்க்குள் ஏதோ முணுமுணுக்கிறார்.
கூர்ந்து கவனித்துப் பார்த்தால் புரிகிறது, திருந்தாத சென்மங்க.
Tamil Cinema
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 11
Threads: 1
Joined: Nov 2004
Reputation:
0
காதல் திரைப்படம் பார்த்தவர்கஏள ஒங்கள் கருத்தை தருவீர்களா?
Posts: 11
Threads: 1
Joined: Nov 2004
Reputation:
0
காதல் திரைப்படம் பார்த்தவர்களே உங்கள் கருத்தை தருவீர்களா?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பொருத்தமான களபிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 91
Threads: 5
Joined: Feb 2005
Reputation:
0
உண்மைக்கதை என்று தொடங்குகிறது! குறைந்த செலவில் கூடுதலாக காட்சிக்குக் காட்சி யதார்த்ததாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இளவயதில் எப்படி எங்கே காதல் முளை விடும் எனத் தெரியாமல் அந்தஸ்து பார்க்காமல் முளைவிட்டுக் கிளை விட்ட ஒரு காதல் சோடி ஊரை விட்டு ஓடிப் போய் படும் அவஸ்தைகளையும் திருமணமான அன்றோ அல்லது மறுநாளோ வேலைக்குப் போகும் பொறுப்புணர்வையும் அன்பை காட்டி அழைத்துச் சென்று அடித்து நொருக்கும் அவலத்தையும் காதல் கணவன் உயிர் பிழைத்தால் போதும் எங்கேயாவது நல்லாக வாழட்டும் என்று தாலியைத் தூக்கி எறிந்து தான் உறைந்து போவதும் காலஓட்டத்தில் மீண்டும் திருமணம் செய்து கணவன் குழந்தையுடன் வாழும் போது கழற்றியெறிந்த தாலியைக் கையில் சுற்றிக் கொண்டு பைத்தியமாய் அவன் அலைவதுமாக கதை நகர்கின்றது. இல்லை ஓடுகின்து. உன்னோடுதான் இனி நான் வாழ்வேன் என்று ஓலமிட்டுக்கதறும் நாயகியை குழந்தையின் அழுகுரல் ஒருகணம் நிறுத்தவும் பின் கணவனே அவனையும் அவளையும் அழைத்துச் செல்வதாகப் படம் முடிகின்றது! ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவளையும் குழந்தையையும் ஒரு காப்பகத்தில் இந்த மனிதாபிமானமுள்ள கணவன் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றான் எனும் எழுத்தோட்டத்துடன் படம் நிறைவடைகின்றது!! நீண்ட நாட்களின் பின் நம்பகத்தன்மையுடைய ஒரு சினிமா பார்த்த திருப்தி! வடிவேலுவின் சாயலில் வரும் சிவகுமார் இலங்கையர் என்று கேள்வி! நாயகன் பாரத்தும் புதுமுக நாயகி சந்தியாவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர்! சாதியால் அந்தஸ்தால் பிளவுபடும் காதல் கதையைக் கொண்ட திரைப்படங்கள் பல ஏற்கனவே வந்திருந்தாலும் இந்தக் காதல் நெஞ்சை நிறைத்துக் கண்களைக்கசியச்செய்து விட்டது! பாடல்களும் அருமை!! இன்னுமொருமுறை பார்க்கலாம் என்றுள்ளேன்! பார்த்து விட்டு வேறு ஏதாவது கண்ணில் பட்டால் சொல்கின்றேன்!!!! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
!!
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
தை வணக்கம், வாங்கோ நீங்கள் களத்துக்கு புதிசா? தமிழ் படங்கள் எல்லாத்திலயும் காதல் இருக்கு. சங்கர் தயாரித்த காதலைச் சொல்லுறீங்களா? என்னமோ தெரியல்லங்க சங்கரின் படத்தில ஒரு குறிப்பிட்ட சமூகத்த தாக்கியே கதை பின்னப்பட்டிருக்கும். அவர் சார்ந்த சமூகத்தை எப்பவுமே தூக்கலாகத்தான் காண்பிப்பார். ஏன் அவங்கள் தப்பே பண்ணுவதில்லையோ? எல்லாம் பகவத்கீதை செய்யும் வேலைதான் பாருங்கோ.
:wink: :wink: :wink:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Mathuran Wrote:சங்கரின் படத்தில ஒரு குறிப்பிட்ட சமூகத்த தாக்கியே கதை பின்னப்பட்டிருக்கும். அவர் சார்ந்த சமூகத்தை எப்பவுமே தூக்கலாகத்தான் காண்பிப்பார்
:roll: சங்கர் எந்த சமூகத்தை தாக்கியுள்ளார்? எந்த சமூகத்தை தூக்கலாக காண்பிக்கின்றார்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
உயர் தட்டு வர்க்கத்தினரை அவர் சாடியதாக நான் அவரின் திரைகளில் காணவில்லை. கூடவே பிராமணர்களை தூக்கி பிடிப்பவர்தான் சங்கர்.
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
Mathuran Wrote:உயர் தட்டு வர்க்கத்தினரை அவர் சாடியதாக நான் அவரின் திரைகளில் காணவில்லை. கூடவே பிராமணர்களை தூக்கி பிடிப்பவர்தான் சங்கர். காதல் படத்தின் தயாரிப்பாளர் தான் சங்கரே தவிர இயக்குனர் அவர் அல்ல. சங்கர் பிராமணரைத் தூக்கிப் பிடிப்பதாகக் கூறியிருந்தீர்கள். எந்தப் படத்தில் அவர் அப்படிச் செய்துள்ளார் என்பதைக் கூறுவீர்களா? நான் சங்கர் இயக்கிய நான்கு படங்கள் பார்த்துள்ளேன்(இந்தியன் முதல்வன் ஜீன்ஸ் மற்றும் Boys) அந்தப் படங்களில் அவர் பிராமணர்களை தூக்கிப் பிடித்ததாகத் தெரியவில்லை.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
சங்கர் கே ரீ குஞ்சுமோன் தயாரிப்பில் வந்த யெண்டில் மேன் என்னும் படம் பார்க்கவில்லையோ? அதை விட. ஏன் சங்கர் மற்ற சமூகங்களைச் சாடும் அளவுகு பிராமணர் சமூகத்தைச் சாடுவதில்லை? சில வேளைகளில் அவர்கள் தவறே செய்வதில்லையோ. காதல் படம் இயக்கியது சக்திவேலாக இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளரான சங்கரின் கை ஓங்கி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லையே. சாதிகளை கேலி செய்யும் இவர்கள். சாதிகள் உருவாகக் காரணமாகிய கீதையை கேலிசெய்வதில்லையே ஏன்? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலயும் ஆட்டுவது என்பது இதுதான்.
Posts: 439
Threads: 2
Joined: Oct 2004
Reputation:
0
காதல் திரைப்படம் பற்றி ஏற்கனவே இருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஜென்டில் மேன் படத்தில் இட ஒதுக்கீடு காரணமாகவும் லஞ்சம் காரணமாகவும் தகுதியிருந்தும் வசதி இல்லாமையினால் தொடர்ந்து உயர்கல்வி படிக்க முடியாததை காட்டியிருந்தார், அதை வைத்து நீங்கள் மற்றய சமுக்ங்களை குறை கூறுகின்றார் என்று சொல்ல முடியாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|